நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Saturday, March 29, 2014
4 மூன்று முஸ்லிம் பெண்களின் சந்திப்பு...
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
அனுபவம்,
இட ஒதுக்கீடு,
இனப்படுகொலை,
குஜராத்,
சரியான புரிதல்,
சீட்
Wednesday, August 14, 2013
29 ஜனநாயகவிரோதிகளா நீங்கள்..?
பல்வேறு குண்டுவெடிப்பு/துப்பாக்கிச்சூடு நாச வேலைகள் செய்தவனை 'பயங்கரவாதி' என்று அறிவித்து, { 'dead-or-alive' bounty of £10,000 on his head என்று } பிரிட்டன் அரசால் தலைக்கு விலை வைக்கப்பட்ட மெனிச்சம் பெகின் என்ற கொடியவனைத்தான் இஸ்ரேலின் பிரதமராக அந்நாட்டு மக்கள் பிந்நாளில் தேர்ந்தெடுத்தனர்.
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'இனப்படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ராஜபக்சேவை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'அநியாய ஆக்கிரமிப்பு போர்கள் நடத்தி அப்பாவி மக்களை கொன்ற கொடூர கொலைகாரன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ஜார்ஜ் புஷ்ஷை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'தமது கட்சி + கூட்டணி குண்டர்கள் மூலம் மதவெறி படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... மோடியை அம்மாநிலத்தின் மக்கள் மீண்டும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்தனர்
---- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
ஆனால்...
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'இனப்படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ராஜபக்சேவை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'அநியாய ஆக்கிரமிப்பு போர்கள் நடத்தி அப்பாவி மக்களை கொன்ற கொடூர கொலைகாரன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ஜார்ஜ் புஷ்ஷை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'தமது கட்சி + கூட்டணி குண்டர்கள் மூலம் மதவெறி படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... மோடியை அம்மாநிலத்தின் மக்கள் மீண்டும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்தனர்
---- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
ஆனால்...
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
அரசியல்,
எகிப்து,
நிகழ்வுகள்,
ஜனநாயகம்
Wednesday, July 3, 2013
1 '#பயங்கரவாதம்' - ஏன்? எதற்கு? எப்படி? எதனால்?
'#பயங்கரவாதம்'
# - மத/இன/சாதி/மொழி/கொள்கை
# - மத/இன/சாதி/மொழி/கொள்கை
நான் அறிந்தவரை எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்ய சொல்லி பயங்கரவாதத்தை போதிக்கவில்லை. ஆனால்... இன்று உலகில் 'பயங்கரவாதிகள்' இருக்கிறார்கள் என்றால்... அதற்கு எந்த மதமும் காரணம் அல்ல..! எனில், 'மத/இன/சாதி/மொழி/கொள்கை பயங்கரவாதம்' எல்லாம் எப்படி முளைக்கிறது...?
அநீதமான ஆட்சியாளர்களால்தான்..!
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
அரசியல்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
நிர்வாகம்,
பயங்கரவாதம்
Sunday, June 9, 2013
3 நம்மிருவரில் யார் மிகப்பெரிய தீயவன்?
"நம்ம
ரெண்டு பேர்லே எவன் மிகப்பெரிய கெட்டவனோ அவந்தான் தலைவனா வரணும், இதுதான்
ரூல்ஸ். குறுகிய காலத்தில் நாந்தான் மிகப்பெரிய கெட்டவன் ஆகிருக்கேன். ஸோ,
நீ ரிடயர்ட் ஆகிறு..."
"தப்பு... தப்பு..! இந்த ரூல்ஸ் படி
பார்த்து இருந்தால்... நானல்லவா 3 முறையும் தலைவர் ஆகி இருந்திருக்கணும்..?
13 நாள், 13 மாசம், 5 வருஷம்ன்னு தொடர்ச்சியா படாபாய்க்கே வழி
விட்டுகொடுத்தேன்லே..? யூ மஸ்ட் ஃபால்லோ தட் சேம் ரூல்ஸ்".
Saturday, March 30, 2013
5 நம் நாட்டில் மரண தண்டனை சட்டம் சாதித்தது என்ன..?
கொலைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் மரணதண்டனை என்பது சரியான சட்டம்தான், அப்போதுதான் அக்குற்றம் செய்வோரின் மனதில் பயத்தை உண்டாக்குவதன்மூலம் அக்குற்றங்கள் குறையும், பாதிக்கப்பட்டவருக்கு சரியான நீதியாகவும் அமையும் என்கிற வாதமும் சரியே..! இதை அப்படியே 100% ஏற்கிறேன்..!
ஆனால்... நம் நாட்டில் கொலைக்கு மரண தண்டனை சட்டம் பல்லாண்டுகளாக இருந்தாலும்... கொலைகள் ஏன் குறையவில்லை..? எப்படி அதிகரிக்கிறது..? எதற்கு மக்கள் மனதில் பயம் வரவில்லை..?
பாலியல் வல்லுறவுக்கு புதிதாக மரண தண்டனை சட்டம் வகுத்தாலும்... பாலியல் வல்லுறவு குறையுமா..? அல்லது கொலை போலவே அதுவும் கூடுமா..?
நம் நாட்டில் மரண தண்டனையே கூடாது என்று போராடுவோருக்கும்... அப்படி போராடுவோரை 'அது வேண்டும்' என கடுமையாக எதிர்ப்போருக்கும் இதில் ஒரு தெளிவான புரிதல் அவசியம் வேண்டும். அதை நோக்கியே இப்பதிவு..!
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
அரசியல்,
இனப்படுகொலை,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
மரண தண்டனை சட்டம்
Friday, March 8, 2013
6 தேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்
இன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதிவு.
நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!
வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரய்யா தியாப்ஜி.
ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி.
( பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
இந்திய தேசிய கொடி வடிவமைப்பு,
தியாப்ஜி,
நிகழ்வுகள்,
மகளிர் தினம்
Monday, February 25, 2013
4 அடுத்து, பீஹாரில் குண்டுவெடிப்பு - 8 பேர் பலி
இன்னாலில்லாஹி....
சில நாள் முன்பு ஹைதராபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு - பலியானோருக்கும் காயமடைந்தோருக்கும் எனது இரங்கலும் வருத்தமும் தெரிவிக்கிறேன்.
இந்த பயங்கரவாதத்துக்கு எனது கடும் கண்டனம். மிகச்சரியாக துப்பு துலங்கி இதில் ஈடுபட்டோரை கண்டு பிடித்து, நீதி விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி மரண தண்டனை தர அரசை கோருகிறேன்.
"அஜ்மல் கசாப், அப்சல் குரு தூக்குக்கு பழிவாங்கும் நடவடிக்கையா?" என்று பாஜக வெங்கையா நாயுடுவுக்கு குண்டு வெடித்த உடனேயே சந்தேகமாம்..! உண்மையில் பழி வாங்குபவனாயின் வெடி குண்டை யார் யாரின் காலுக்கு கீழே வைப்பான் என்று கூட இவருக்கு தெரியாதா..? தெரியும்..!
சில நாள் முன்பு ஹைதராபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு - பலியானோருக்கும் காயமடைந்தோருக்கும் எனது இரங்கலும் வருத்தமும் தெரிவிக்கிறேன்.
இந்த பயங்கரவாதத்துக்கு எனது கடும் கண்டனம். மிகச்சரியாக துப்பு துலங்கி இதில் ஈடுபட்டோரை கண்டு பிடித்து, நீதி விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி மரண தண்டனை தர அரசை கோருகிறேன்.
"அஜ்மல் கசாப், அப்சல் குரு தூக்குக்கு பழிவாங்கும் நடவடிக்கையா?" என்று பாஜக வெங்கையா நாயுடுவுக்கு குண்டு வெடித்த உடனேயே சந்தேகமாம்..! உண்மையில் பழி வாங்குபவனாயின் வெடி குண்டை யார் யாரின் காலுக்கு கீழே வைப்பான் என்று கூட இவருக்கு தெரியாதா..? தெரியும்..!
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
குண்டுவெடிப்பு,
தவறான புரிதல்,
நிகழ்வுகள்,
பயங்கரவாதம்
Tuesday, February 19, 2013
20 சவூதி மன்னர் தந்த 4 கோடி ரூபாய் நஷ்டஈடு..!
நான் சவூதிக்கு அடிமை அல்லன். சவூதிக்கு ஆதரவாளனும் அல்லன். ஆனால்...
சவூதியில் குறையாக தெரிவதை மட்டும் ஒரு விஷயத்தில் பூதாகரபடுத்தி சொல்வோர், அதே போன்றதொரு மற்றொரு விஷயத்தில் அதன் எளிதாக தெரியும் நிறையையும் அதேபோல சொல்லத்தான் வேண்டும் அல்லவா..? அதுதானே நியாயம்..? ஆனால், அப்படி சொல்வது இல்லை என்பது அவர்களின் அப்பட்டமான நேர்மையின்மையைத்தான் காட்டுகிறது..! இது அநீதியன்றோ..? அராஜமன்றோ..?
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
அரசியல்,
ஊடகங்கள்,
சரியான புரிதல்,
சவூதி அரேபியா,
நிகழ்வுகள்
Thursday, January 31, 2013
26 முஸ்லிமல்லாதோருக்காக...
நாம் சொல்லும் கருத்தை பிறர் தவறாக சித்தரிக்கும் ஒரு துர்சூழ்நிலை,
நாம் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் போன ஆற்றாமை,
நம்மை வைத்தே தனது அரசியல் வியாபாரத்தை செய்வோரின் சூழ்ச்சி,
இவற்றுக்கு நடுவே...
//அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சினிமா & ஒலி/ஒளி/எழுத்து ஊடகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்..? தேவையா முஸ்லிம்களின் இந்த விஸ்வரூப எதிர்ப்புகள்..?//
...என்று இன்னமும் கேட்டுக்கொண்டு இருப்போருக்காக கனத்த மனநிலையில்தான் இந்த இடுகையை எழுதுகிறேன் சகோஸ்.
தேடுகுறிச்சொற்கள் :-
அமெரிக்கா,
அரசியல்,
ஊடகங்கள்,
சமூகம்,
சரியான புரிதல்
Sunday, December 30, 2012
29 தாலிபானாக மாறும் சீன அமெரிக்க கூட்டணி
சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டு புத்தர் சிலையை ஆப்கானில் இடிக்க கிளம்பிவிட்டன...! அதாவது தாலிபான் செய்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டன..! ஆனால்... இடிப்பு பின்னணியை பார்த்தால்... தாலிபான் எவ்வளவோ தேவலை என்பீர்கள்..!
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
அமெரிக்கா,
அரசியல்,
ஆப்கன்,
சரியான புரிதல்,
சீனா,
பாமியன் புத்தர்
Thursday, September 27, 2012
27 Supreme Court : அதிரடி தீர்ப்பில் நெத்தியடி கருத்து..!
| H.L. Dattu --- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் --- C.K. Prasad |
"சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்காதீர்" என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில் குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது. குஜராத்துக்கு மட்டுமல்ல... இது அனைத்து மாநில அரசு , காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும் சேர்த்தே பொருந்தும்..!
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
சட்டம்,
நிகழ்வுகள்,
நீதிமன்றம்,
நெத்தியடி
Friday, September 21, 2012
15 ஓட்டரசியலில் காவிரி ஓர் அநாதை
1980கள்- அது ஒரு பொற்காலம் சகோ..! என்னதான் கடுங்கோடை ஆனாலும், வீதிக்கு வீதி - வீட்டுக்கு வீடு... கையால் அடிக்கும் ஒரு இரும்பு பம்பு (எங்க ஊரு பக்கம் -தஞ்சை மாவட்டம் பாபநாசம்/பண்டாரவாடை/ராஜகிரி- 'வேம்பா' என்று சொல்வோம்) ஒன்று ஆங்காங்கே இருக்கும். அப்போது அதன் உயரம் கூட நான் இருக்கமாட்டேன். ஒரு கையால் கைப்பிடியை பிடித்து நான் இழுத்தாலே அதன் வாய் நிறைய தண்ணீர் கொட்டும். அத்தனை தெளிவான சுவையான குடி நீர் வரும்..! இப்போது... அதெல்லாம் அது ஒரு கனாக்காலம் சகோ..! ஏன் இந்த நிலை..? பதில் :- காவிரி..! இப்போதெல்லாம் போர் போட்டாலே சில இடங்களில் தண்ணீர் வருவது இல்லை என்பது ஒரு புறமிருக்க... வறண்ட காவிரி ஆற்றில் மணலைக்கூட காண முடியவில்லையே சகோ..! :-(( என்ன காரணம்..? யார் காரணம்..?
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
இந்தியா,
கர்நாடகா,
காவிரி,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்
Tuesday, February 21, 2012
36 இடைத்தேர்தல் வெற்றிக்கு இலவச டிப்ஸ்..!
தமிழக அரசியலில் பொதுத்தேர்தலை பொருத்தமட்டில் பல காரணிகள் வெற்றி தோல்வியை நிர்ணயித்தாலும், இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகளுக்கு மட்டும் ஒரு மகத்தான இடம் உண்டு..! அப்படித்தான் இப்போதைக்கு முந்திய பொதுத்தேர்தலில்.... இலவச சைக்கிள், இலவச டிவி, இலவச Gகேஸ் ஸ்டவ், ரெண்டு ரூபா அரிசி (கிட்டத்தட்ட இலவசம்தானே இது?) என, இதுமாதிரி வாக்குறுதிகளை அள்ளி வீசியவுடன், பெரும்பான்மையான மக்கள் இலவசங்களுக்கு மயங்கி திமுகவுக்கு வாக்குகளை அள்ளி வழங்கி அதை அமோக வெற்றி பெற வைத்தார்கள். அதனாலேயே 2006ல், 'க.'தமிழக முதல்வர் ஆனார்.
அதேபோல, அதுவரை வழங்கப்பட்டு வந்த இலவசங்களை கன்னாபின்னா என்று திட்டித்தீர்த்த எதிர்க்கட்சித்தலைவர் ஜெ. கடந்த பொதுத்தேர்தலில், மக்களின் நாடியை புரிந்தவராக, தானும் தன் இஷ்டத்துக்கு இலவச லாப்டாப், இலவச மிக்சி, இலவச கிரைண்டர், இலவச ஃபேன்...என்று அடிச்சு விட்டார். வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்துவிட ஆட்சியை பிடித்தார் 'ஜெ'..!
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
இடைத்தேர்தல்,
இலவசம்,
சங்கரன்கோவில்,
நகைச்சுவை,
நிகழ்வுகள்,
மின்தடை
Sunday, January 8, 2012
73 பாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..!
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
சாதனை,
நிகழ்வுகள்,
போலி தேசியம்,
ஹிந்துத்வா
Tuesday, January 3, 2012
36 இங்கிலாந்தின் இஸ்லாமோஃபோபியா..!
இங்கிலாந்து பாராளுமன்ற வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ் வளாகத்தினுள்ளே 23 உணவகங்கள் உள்ளன. அங்கே இஸ்லாமிய விதிமுறைப்படி அறுக்கப்பட்ட 'ஹலால்' இறைச்சிகள் உண்ணக்கிடைத்து வந்தன. இந்நிலையில், "பாராளுமன்ற வளாகத்தினுள் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனி எந்த உணவு விடுதிகளிலும்... 'ஹலால்' உணவை உண்ண முடியாது என்றும், 'ஹலால்' முறையில் விலங்கு அறுக்கப்படுவது முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது" என்றும் லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் தன்னுடைய பத்திரிகையில் அரசு சார்பாக வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகை அறிவிப்பை மேற்கோள் காட்டி இச்செய்தியை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டுள்ளது.
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
அரசியல்,
இஸ்லாம்,
நிகழ்வுகள்
Saturday, December 31, 2011
47 தனுஷ்-பிரதமர்: 'கொலவெறி' விருந்தின் பின்னணி
3 நாட்களுக்கு முன்னர்... இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவு-க்கு இந்தியப்பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் தனுஷ் அழைக்கப்பட்டு இருந்தது தனுஷ் உட்பட பலருக்கு ஆச்சரியமாகவும், ஏகப்பட்டோருக்கு எரிச்சலாகவும் இருந்தது..! எனக்கும்தான்..! காரணம்..?
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
பங்கு வர்த்தகம்,
பொருளாதாரம்,
ஜப்பான்
Sunday, December 18, 2011
7 முல்லை பெரியாறு: அமைச்சர் ப.சிதம்பரம் வலுக்கட்டாய வாபஸ்..!
நேற்று.....
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
நிகழ்வுகள்,
ப.சிதம்பரம்,
பிரவோம்,
முல்லை பெரியாறு
Sunday, December 11, 2011
32 முல்லை பெரியாறு - கேரளாவின் ராமஜென்மபூமி..!
இனவாதம் / இனவெறி என்றால் என்ன தெரியுமா சகோ..?
"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று முஹம்மது நபி(ஸல்)யவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை. தனது சமுதாயம் (என்ற காரணத்தால் அவர்கள்) புரியும் கொடுமைகளுக்கு துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்)
அப்படித்தான், பாபர் மசூதி விவகாரத்தில் பெரும்பான்மை நடுநிலை இந்து மக்கள் முதல்... உ.பி.போலிஸ், இந்திய ராணுவம், மத்திய அரசு... வரை, கரசேவை கொடுமைகளை மவுனமாக வேடிக்கை பார்த்தது..! அலஹாபாத் ஹைக்கோர்ட் சொன்ன தீர்ப்பும் இதைத்தான் உணர்த்துகிறது..! காரணம்... 'ராமஜென்ம பூமி அரசியல்' என்பது தனது சமுதாயக்கடவுளுக்கு சாதகம் என்பதால்..! இது மதவெறி..!
இதேபோலத்தான்... முல்லை-பெரியாறு விவகாரமும். நடுநிலை மக்களுக்கு நன்கு புரியும். என்றாலும், தாங்கள் கேரளாக்காரர்கள் என்பதால் அவர்கள் கேரள அரசும், மலையாள ஊடகமும் செய்து வரும் கொடுமைகளுக்கு துணை போகிறார்கள். காரணம்... முல்லை-பெரியாறு ஒழிந்தால் அது தனது மொழிக்காரர்களுக்கு சாதகம் என்பதால்..! இது மொழிவெறி..!
நான், தமிழ் மொழி பேசுகிறேன் என்பதால் தமிழர்களுக்கு ஆதரவாக இங்கே எழுதவில்லை சகோ..! எனக்குப்பட்ட நியாயத்தை மட்டுமே எழுதுகிறேன்..!
தேடுகுறிச்சொற்கள் :-
mullai periyaru dam,
அரசியல்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
பிரவோம்,
முல்லை பெரியாறு
Friday, December 9, 2011
8 முஸ்லிம் நிரபராதிகளுக்கு ரூ.70 லட்சம் நஷ்டஈடு--அரசு அறிவிப்பு
2007-மே மாதம் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஹைதராபாத் நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இக்குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இத்துயர சம்பவம் நிகழ்ந்து மறுதினம் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த ஆந்திர போலீஸ்... "ஹர்கத்துல் ஜிஹாதுல் இஸ்லாமி (HUJI), லஷ்கர்-இ-தய்யிபா (LeT), இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (SIMI), ஆகிய இயக்கத்தை சார்ந்தவர்கள்தான் இவர்கள்" என்றும் "இவர்கள்தான் குண்டு வைத்த 'இஸ்லாமிய பயங்கரவாதிகள்'...!" என்றும் பழிசுமத்தி குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது.
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
இழப்பீடு,
சரியான புரிதல்,
சாதனை,
நிகழ்வுகள்
Monday, December 5, 2011
26 பாபர் மசூதி : ஹிஸ்ட்-ஜியோ டேட்டா
ஃப்ளாஷ் பேக்
![]() |
| 1992 December - 6 அதிகாலை |
1949 டிசம்பர் 22 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் 'இஷா' எனும் இரவுத் தொழுகையை தொழுதுவிட்டு வீடுகளுக்கு சென்றனர். வைகறை ஃபஜ்ர் தொழுகைக்காக அன்று பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி..! கதவு உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. 'ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார்' என்று ஒரு கும்பல் வெளியே கலாட்டாவில் இறங்கியது.
"வன்முறைக்கும்பல் ஒன்று பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக" ஃபைஸலாபாத் காவல் நிலையத்தில் 'முதல் தகவல் அறிக்கை' (FIR) பதிவு செய்யப்பட்டது. அப்போது, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத்தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
தேடுகுறிச்சொற்கள் :-
RSS,
அயோத்தி,
அரசியல்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
பாபர் மசூதி
Subscribe to:
Posts (Atom)











