அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, July 27, 2012

6 பிறை : பார்ப்பது எப்படி..? (Advanced tips)

கண்ணால் காணப்பட்ட 27 மணி நேர பிறை ~Time 8:07 pm EDT Date April 9, 2005 Location: Batsto, NJ, USA
இதற்கு முந்திய பதிவில் பிறை குறித்த Basics பார்த்தோம்..!

அதாவது, பூமியில் பூர்ண அமாவசை எந்த நேரத்தில் ஏற்படுகிறது, அதே இடத்திற்கு பூர்ண பெளர்ணமி எந்த நேரத்தில் ஏற்படுகிறது, வளர் பிறை, பவுர்ணமி & தேய்பிறை ஆகியன எங்கே எப்போது எப்படி உதிக்கின்றன,  எங்கே எப்போது எப்படி மறைகின்றன, சூரிய கிரகணம், சந்திரநாள், சந்திரமாதம், சந்திர சுருள் சுற்றுவட்டப்பாதை, பிறையை உறுதியாக கணிக்க முடிந்த அறிவியலுக்கு பார்ப்பதற்கு உறுதி தர இயலாமை... குறித்தெல்லாம் பார்த்தோம். 

இனி கொஞ்சம் Advanced stage..! இதில் முதலில் பிறை பார்ப்போருக்கான குறைந்தபட்ச அத்தியாவசிய புரிதல்கள் பற்றி பார்த்து விட்டு "எல்லோப் பிறை வரைபடங்கள்" பற்றி பார்ப்போம். ஏனெனில், அந்த முன்னேற்பாட்டோடு சென்றால்தான்... ஒரு தலைப்பிறை, அம்மக்களின் கண்களுக்கு தெரியும் வாய்ப்புகள் பற்றியும், அதை எப்படி பார்க்க வேண்டும் என்றும் இந்த வானியல் ஆய்வாளர் பெர்னார்ட் டேவிட் எல்லோப் கூறுவதை பற்றியும் இன்னும் தெளிவாக விளங்க முடியும்..!

Tuesday, July 24, 2012

15 பிறை : - அப்டீன்னா...? (for dummies)
பிறை : ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் வந்துவிட்டால் வருஷத்துக்கு இரண்டு பிறை மட்டும் பார்க்கும் மக்கள் வாய்களில் பிறக்கும் ஒரு வார்த்தை அல்ல இது..! 

அல்லது...  

ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் முடியும் நேரம் நெருங்கி விட்டால் முஸ்லிம்களுக்கு "ரம்ஜான் பண்டிகை என்றைக்கு..?" என்று ஊடகங்கள் வாய்களில் தப்பிப்பிழைக்கும் ஒரு வார்த்தையும் அல்ல இது..!

மாறாக, மாசாமாசம்... அதாவது ஒவ்வொரு மாதமும்... மேற்கில் சற்றுமுன்னர் மறைந்த சூரியனின் ஒளி அடுத்த சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரத்தில் மேற்கில் மறையப்போகும் சந்திரனின் பக்க-அடிப்பகுதியில் ஏற்படுத்தும் ஒரு ஒளிக்கீற்று தான் பிறை எனப்படுவது..!


Monday, July 16, 2012

17 கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............16 வருடங்களுக்கு முன்னர் நான் எனது முந்தைய தொழிற்சாலையின் Training Period இல் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த Industrial Hygiene & First Aid வகுப்பில் இரண்டு மருத்துவர்களின் இரண்டு மணி நேர lectures செவிமடுத்து விட்டு அது முடிந்ததும் கேள்வி நேரத்தில் அமர்ந்து இருக்கிறேன். அந்த வகுப்பில் இரு டாக்டர்களுமே இரவில் விரைந்து தூங்கி அதிகாலை விரைந்து எழுந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டு... என் இயல்பான வாழ்க்கை(systematic life) பற்றி  அதை வலியுறுத்தி கூறினர். இதனைக்கேட்ட... அறைத்தோழன் நந்தகுமார் எழுந்தார்; கேள்வி நேரத்தில் இந்த கேள்வி கேட்டார்:-
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...