முக்கிய அறிவிப்பு :- (21-12-2011)இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சகோ. அதனை தரவிறக்க விரும்புவோர் இங்கே >>>"கிளிக்"<<< சுட்டுங்கள் சகோ..!
========================================================================
'அரவாணி' என இதிகாச புராணம் சார்ந்த பெயரிலும், 'திருநங்கை' என திரித்தும் 'பொன்னைக்கா' அல்லது 'அலி' அல்லது 'ஒம்போது' என்று கண்ணியமற்ற, பொருளற்ற வார்த்தைகளாலும், ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்று அறிவியல் அறியாமல் தவறாகவும் அழைக்கப்படும் "இவர்கள்" பற்றி நம்மில் பலருக்கு சரியான முழுவிபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். உண்மையை சொன்னால், நமக்கு அறிந்துகொள்ள ஆர்வம் இல்லை. ஏன் அப்படி?
'அவர்களை'-க் குறித்து நேர்மையான நோக்குடன் அணுகாமல், அவர்களை பிச்சைகாரர்களாகவும் பணம் பறிப்பவர்களாகவும் மற்றும் விபச்சாரம் செய்பவர்களாகவுமே ஊடகங்கள் மூலமும், சமுதாயத்தில் சிலசமயம் நேரடியாகவே அவர்களில் பெரும்பாலோரின் நடவடிக்கைகளை நாம் கண்ணுற்றோ செவியுற்றோ அறிவதினாலும்தான் இந்த ஆர்வமற்ற நிலை. மேலும்... 'மிகப்பெரும்பான்மையான நாம் அவர்களாய் இல்லை...!
ஓர் ஆண்,
தன் 23 ம் ஜோடி பாலின குரோமோசொமில் குறைபாடு கொண்டால்... அவன் ஒரு "ஆண் மாற்றுத்திறனாளி". அதேபோல...
ஒரு பெண்,
தன் 23 ம் ஜோடி பாலின குரோமோசொமில் குறைபாடு கொண்டால்... அவள் ஒரு "பெண் மாற்றுத்திறனாளி".
இவர்களுக்கு மாற்றுத்திரனாளி கோட்டாவில் தனி இட ஒதுக்கீடு தந்து அரசும் நீதி மன்றமும் ஊக்குவிக்க வேண்டும்.
அதை விடுத்து...
இவர்களை முட்டாள்த்தனமாக "மூன்றாம் பாலினம்" என வகைப்படுத்தி அரசும் நீதி மன்றமும் ஊடகமும் சமூக சிந்தனையாளர்களும் அறிவியல் புரிதல் இன்றி கேவலமாக சொல்வதும் கணக்கெடுப்பு எடுப்பதும் அக்கிரமம். அராஜகம். அநீதி. மனிதத்தன்மையற்ற மாபாதக சொல் & செயல் அது.
நரம்பியல் மண்டல குரோமோசோமில் குறைபாடு உள்ள மனிதனை "பைத்தியம்" வருது... "லூசு" போகுது... "கிறுக்கு" சாப்டுது... என்று அஃறிணையில் சொல்லும் அசிங்கத்துக்கு சமானமானது "மூன்றாம் பாலினம்" எனும் சொல்வழக்கு..!
உலகில் இதுவரை ஒரு 'மூன்றாம் பாலின குழந்தை' (?!) பிறந்ததாக எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு காட்டிலும் எந்த ஒரு மருத்துவமனையிலும் சரித்திரமோ பூகோளமோ சயின்சோ இல்லவே இல்லவே இல்லை..!
தன் 23 ம் ஜோடி பாலின குரோமோசொமில் குறைபாடு கொண்டால்... அவன் ஒரு "ஆண் மாற்றுத்திறனாளி". அதேபோல...
ஒரு பெண்,
தன் 23 ம் ஜோடி பாலின குரோமோசொமில் குறைபாடு கொண்டால்... அவள் ஒரு "பெண் மாற்றுத்திறனாளி".
இவர்களுக்கு மாற்றுத்திரனாளி கோட்டாவில் தனி இட ஒதுக்கீடு தந்து அரசும் நீதி மன்றமும் ஊக்குவிக்க வேண்டும்.
அதை விடுத்து...
இவர்களை முட்டாள்த்தனமாக "மூன்றாம் பாலினம்" என வகைப்படுத்தி அரசும் நீதி மன்றமும் ஊடகமும் சமூக சிந்தனையாளர்களும் அறிவியல் புரிதல் இன்றி கேவலமாக சொல்வதும் கணக்கெடுப்பு எடுப்பதும் அக்கிரமம். அராஜகம். அநீதி. மனிதத்தன்மையற்ற மாபாதக சொல் & செயல் அது.
நரம்பியல் மண்டல குரோமோசோமில் குறைபாடு உள்ள மனிதனை "பைத்தியம்" வருது... "லூசு" போகுது... "கிறுக்கு" சாப்டுது... என்று அஃறிணையில் சொல்லும் அசிங்கத்துக்கு சமானமானது "மூன்றாம் பாலினம்" எனும் சொல்வழக்கு..!
உலகில் இதுவரை ஒரு 'மூன்றாம் பாலின குழந்தை' (?!) பிறந்ததாக எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு காட்டிலும் எந்த ஒரு மருத்துவமனையிலும் சரித்திரமோ பூகோளமோ சயின்சோ இல்லவே இல்லவே இல்லை..!
நீங்களே யோசியுங்களேன்... இவ்வுலகில் இதுவரை எந்த ஒரு குழந்தை பிறந்தபோதும் “ஆண் குழந்தைங்க” அல்லது “பெண் குழந்தைங்க” என்றுதான் பெற்றோருக்கும் உறவினருக்கும் தகவல் தரப்படுமே அன்றி, ஒருபோதும் “உங்களுக்கு 'மூன்றாம் பாலின' குழந்தை பிறந்திருக்குதுங்க(!?)” "அரவாணி பிரத்திருக்கு" "அலி பிறந்திருக்கு" "திருநங்கை பிறந்திருக்கு" என்ற தகவல் தரப்பட்டதாக ஏதும் உங்களிடமோ உலக மீடியாவிலோ தகவலுண்டா? அப்புறம் எப்படி.. எங்கிருந்து.. எப்போது.. இவர்கள் திடீரென்று இவர்கள் முளைத்தார்கள்?
முழுமையாக 'ஆண்' எண்றோ அல்லது 'பெண்' என்றோ இல்லாமல் இருவரது புற பண்புகளையும் உள்ளடக்கிய இடைநிலை பாலினம் போல (Intersex) தோற்றம் அளிக்கும் ‘இவர்கள்’... "மூன்றாம் பாலினத்தவராக" (Third Sex) தற்போது தமிழ்நாடு உட்பட பல நாடுகளிலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறார்கள். இது சரியா? இவர்கள் ஆனா? அல்லது பெண்ணா? அல்லது இரண்டுமா? அல்லது இரண்டும் இல்லையா?
அது பற்றிய தெளிவான தீர்க்கமான புரிதலை நோக்கி நேர்மையான வழியில்தான் இந்த பதிவுத்தொடர் பயணம்..!
வாருங்கள் சகோ... நீங்களும் சரியான புரிதலின் பால் இணையுங்கள் சகோ.
முழுமையாக 'ஆண்' எண்றோ அல்லது 'பெண்' என்றோ இல்லாமல் இருவரது புற பண்புகளையும் உள்ளடக்கிய இடைநிலை பாலினம் போல (Intersex) தோற்றம் அளிக்கும் ‘இவர்கள்’... "மூன்றாம் பாலினத்தவராக" (Third Sex) தற்போது தமிழ்நாடு உட்பட பல நாடுகளிலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறார்கள். இது சரியா? இவர்கள் ஆனா? அல்லது பெண்ணா? அல்லது இரண்டுமா? அல்லது இரண்டும் இல்லையா?
அது பற்றிய தெளிவான தீர்க்கமான புரிதலை நோக்கி நேர்மையான வழியில்தான் இந்த பதிவுத்தொடர் பயணம்..!
வாருங்கள் சகோ... நீங்களும் சரியான புரிதலின் பால் இணையுங்கள் சகோ.
=> 'இவர்கள்' பற்றி அறிவியல் என்ன கூறுகிறது?
மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் உண்டு என்பது நாம் பள்ளிப் பருவத்திலேயே அறிந்ததுதான். அதைப்பற்றி இப்போது கொஞ்சம் நினைவு கூர்ந்தால்தான் ‘அவர்களை’ப்பற்றி பூரணமாய் புரிந்து கொள்ள முடியும்.
மனிதனின் பல்வேறு உறுப்புகளுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் அதன் குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை (Genes)
கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் 'குரோமோசோம்'. மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு கோடானகோடி செல்லிலும் 46 குரோமோசோம்கள் உள்ளன. இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக காணப்படும். இவற்றில் 22 ஜோடிகள், பால் சம்பந்தப்பாடாத உடலின் மற்றஅனைத்துப்பண்புகளையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துபவை. கடைசி 23-வது ஜோடி குரோமோசோம்கள் மட்டும் பாலினம் (Sex) சம்பந்தப்பட்டவை. அந்த ஜோடி பார்க்க ஒரே மாதிரி என்று பெண்களிலும் (அதனால் XX-என்று குறிப்பிடுகின்றனர் ), பார்க்க வேறுபட்டு (XY) என்று ஆண்களிலும் காணப்படும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது X மற்றும் Y ஆகவும், பெண்களில் 2 தனித்தனி Xகளாகவும், அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும்.
மிகச்சில வேளைகளில் (ஆயிரத்தில் இரண்டு) இந்த 23-ம் ஜோடி இவ்விதம் முறைப்படி இரண்டாக பிரிந்து இணைவதில்லை. உதாரணமாக, உருவாகும் கருவில் X அல்லது Y என்ற ஒற்றை குரோமோசோம் மட்டுமே காணப்படலாம். அதனால், இவர்கள் 45Y ஆகவோ (ஆண்பண்புகள் குறைவான ஆண்கள்-சாத்தியமில்லை அல்லது இந்த கரு நிலைக்காது) அல்லது 45X (பெண்பண்புகள் குறைந்த பெண்கள்-மிக அரிது) ஆகவோ இருப்பர்.
சிலநேரம், இதுபோன்று உருவாகும் கருவில் இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோசோம்களும் காணப்படலாம். இவர்கள் 'பெண்பண்புகள் அதிகம் கொண்ட பெண்கள்' (47XXX), அல்லது 'ஆண்பண்புகள் அதிகம் கொண்ட ஆண்கள்' (47XYY) அல்லது 'பெண்பண்புகள் கொண்ட ஆண்கள்' (47XXY) என வித்தியாசமானவர்களாக இருப்பர். இவ்விதம் குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் குறைவைப் பொறுத்தும் இவற்றில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்தும் அந்த கருவானது வளர்ச்சியடையும் போது அதில் உட்புறமான மற்றும் வெளிப்புறமான பாலின இன உறுப்புக்கள் உருவாகுவது தீர்மாணிக்கப்படுகிறது.
ஆக இங்கே பிரச்சினைக்குரிய Genotype எது என்றால்... " 47-XXY " --தான்..! இவர்கள்தான் இந்த பதிவிற்கு உரியவர்கள். ஆண்களுக்கு XY என்று இருக்க வேண்டியதற்கு பதிலாய்... 23-வது "ஜோடி" குரோமோசோம்கள் " XXY " என்று இருந்தால் அது ஒரு "பிறவிக் குறைபாடு" (genetic birth defect) என்று இதை 'Klinefelter syndrome' என்றும் கண்டுபிடித்து சொன்னவரின் (1942-ல்...Dr. Harry Klinefelter) பெயரை வைத்து அழைக்கின்றனர் அறிவியலாளர்கள்.
ஆக, இந்த ‘மூன்றாம் பாலினத்தவர்’ வேறு யாரும் அல்ல. ஆண்கள்தான். ஆண்கள்தான். குறையுள்ள ஆண்கள்தான். அவர்களுக்கு அறிவியல் கொடுத்திருக்கும் பெயர்: 'XXY MALE'..! இவர்கள்தான் "இப்பதிவின் நாயகர்கள்". அறிவியலுக்கு எதிராக இவர்களை "மூன்றாம் பாலினம்" ("THIRDSEX") என்பது மூடத்தனம் அல்லவா?
அப்புறம் ஏன் அவர்கள் பெண்கள் போல நடந்து கொள்ள வேண்டும்..?
ஒருவரை ஆண் என்றோ அல்லது பெண் என்றோ வெளித்தோற்றத்தை வைத்து, எளிதாக அடையாளம் கண்டு விடுகிறோம். ஆனால், அது சாத்தியமில்லாத சூழ்நிலையில், ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பல்வேறு பால் வேறுபாடுகள் பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.
ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பால் வேறுபாடுகள் அடிப்படையில் பால் என்பதை கீழ்கண்டவாறு 4 முக்கிய வகையாக பிரிக்கலாம்:
1. மரபணு பால் (Genetic Sex) :
இதன் படி ஒருவரின் உடலில் 23-ம் ஜோடி குரோமோசோமில் Y காணப்பட்டால் அவரை ஆண்(XY) என்றும், அது காணப்படவில்லையெனில் பெண்(XX) எனவும் கூறுகிறோம்.
இதன்படி இந்த பதிவின் நாயகர்கள் "XXY-ஆண்கள்" குரோமோசோமில்-Y இருப்பதால் அவர்கள் ஆண்கள்..!
2. இன உறுப்புகள் பால் (Gonadal Sex) :
உருவாகும் கருவில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்து உட்புற மற்றும் வெளிப்புறமான பாலின உறுப்புக்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வளர ஆரம்பிக்கும். எனவே இந்த இன உறுப்புகள் பால் உருவாக அடிப்படையானது, மரபணு பால் எனலாம். ஆக இதன்படி Y இருப்பதால் ஆண்களுக்கான உட்புற பாலின உறுப்புக்களும், வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகளும் மட்டுமே 'XXY-MALE' களுக்கு வளரும்.
இதன்படியும் இந்த பதிவின் நாயகர்கள் "XXY-ஆண்கள்"-ன் குரோமோசோமில் Y இருப்பதால் ஆண்பாலின உறுப்புகள் கொண்ட ஆண்கள் தான்..!
3. புறத்தோற்ற பால் (Phenotype Sex) :
இதில் பாலினஉறுப்புக்கள் வளர்வது மாத்திரமல்ல, அதற்கேற்ப அவைகளில் நாளமில்லாச்சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன்) அதனால் ஏற்படும் உடல்வாகு / பிற உடல் மாற்றங்கள் (Secondary Sexual Characters) ஆகியவை அடங்கும். இன உறுப்புகளில் ஆண்ட்ரோஜென் சுரந்தால் ஆணாகவும் (மீசை/தாடி/உடலில் நிறைய முடி/கடின தோல்/கடினகுரல்) ஈஸ்ட்ரோஜன் சுரந்தால் (மாதவிடாய் சுழற்சி/மார்பகம்/மிருதுவான தோல்/மெல்லிய குரல்...) பெண்ணாகவும் வளர்ச்சியடைகின்றனர்.
அதாவது, Y இருந்தால் ஆண்ட்ரோஜென் மிகைத்து சுரக்கும். Y இல்லை என்றால் ஈஸ்ட்ரோஜென் மிகைத்து சுரக்கும். இங்கே XXY-ல் Y இருப்பதால் ஆண்ட்ரோஜென் மட்டும்தான் மிகைக்கும். ஆனால், இரண்டு XX -களை சமாளிக்க முடியாமல் Y கொஞ்சம் கம்மியாக ஆண்ட்ரோஜெனை சுரக்கிறது அல்லது சுரப்பதில்லை. பொதுவாகவே XY இருக்கும்போது அங்கே X சும்மா... 'உப்புக்கு சப்பாணி'தான். XXY எனும்போது அங்கே X கொஞ்சமாய் தன் வேலையை காட்டுகிறது. அதனால்தான் இந்த XXY ஆண்களிடம், பெண்குரலும், நளினமும், சிறிய மார்பகமும், மீசை தாடி முளைக்காததும் என..!
சுத்தமாய் androgen சுரக்கவில்லை என்றால், XXY ஆண்களிடம் erection /ejection /sperm எல்லாம் கிடையாது. இங்கேதான் மருத்துவம் மூக்கை நுழைக்கமுடியும். அதாவது, androgen தானாக சுரக்கவில்லையல்லவா? அதனை ஊசி மூலம் மேலதிகமாக உட்செலுத்துவதன் மூலம் 'XXY ஆண்களுக்கு' அவர்களின் குறையை போக்க முடியும். அனுபவத்தில் நமக்கு நன்றாக தெரியும். ஹார்மோன் சுரப்பதுக்கும் மனக்கட்டுப்பாட்டிற்கும் உள்ள தொடர்பு. மனது வைத்தால் மார்க்கமுண்டு.
இதன்படி இந்த பதிவின் நாயகர்கள் மனது வைத்து... பூரண நம்பிக்கையுடன் தக்க மருத்துவம் பார்த்து, ஆண்ட்ரோஜென் சுரந்துவிட்டால் முழு ஆண்கள்..! ஆனால், பெண்களாக மாற எந்த மருத்துவத்திலும் வழியே இல்லை.
4. உளவியல் பால் (Psychological Sex) :
ஆண் தன்னை 'ஆண்' என்றும், பெண் தன்னை 'பெண்' என்றும் நம்புவது.
இவ்விதம் ஒருவர் நான்கு நிலைகளிலும் ஒரேவகையினராக பொருந்தினால் மட்டுமே அவர் ஒரு சராசரி ஆண் அல்லது சராசரி பெண் ஆக தோற்றம் பெறுவார். ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல், இடை நிலை தோற்றத்துடன் இருப்பது கருஉருவாகும் போது ஏற்படும் mutations மூலம் அவற்றிலுள்ள மரபணுக்கள் மற்றும் அவற்றைத் தாங்கியுள்ள குரோமோசோம்களின் அமைப்பையும் அளவையும் பொறுத்தது.
இதற்கு முந்தைய மூன்று தேர்விலும் ஆண் என்று தேறிய நம் 'பதிவின் நாயகர்கள்' இங்கே (நம்பிக்கைதான் நான்காவது தேர்வு) தங்களை ஆண் என்று நம்புவதில் குழம்புகின்றனர் அல்லது குழப்பப்படுகின்றனர். இதன்படி இந்த பதிவின் நாயகர்கள் "XXY-ஆண்கள்" தங்களை ஆண் என்றுதான் நம்ப முடியும்..! நம்ப வேண்டும்..! இயற்கைக்கு மாற்றமான ஒரு முடிவை அவர்கள் எடுக்கும்போதுதான் எல்லா பிரச்சினைகளும் வருகின்றன. அதற்கு மூல காரணங்கள்... இவர்கள் மட்டுமல்ல நம் சமுதாயமும்தான்.
மேற்கண்ட பண்புகளுடன் ஒருவரது வளர்ப்புமுறை, சமுதாய சூழ்நிலையை பொறுத்து மனதளவிலும் முழுமையான ஆணாக முதிர்ச்சி அடைய விடுவதில்லை இந்த சமுதாயம். கேலி கிண்டல் பேசி புறக்கணிக்கும் போதுதான் "நாம் ஏன் பெண்ணாகவே மாறிவிடக்கூடாது?" என்று விபரீதமான தவறான பொருந்தாத முடிவு எடுக்கும்போதுதான், இந்த "XXY-ஆண்கள்" காணாமல் போய் ‘மூன்றாம் பாலினத்தவர்’ என முதல் பாரா கூத்துக்கள் எல்லாமே அரங்கேறுகின்றன. ஆனால், அவை அனைத்தும் உண்மைக்கும் இயற்கைக்கும் அறிவியலுக்கும் முற்றிலும் எதிரானவை ஆகும்.
இந்த "XXY-ஆண்கள்", சேலை/ரவிக்கை/பாவாடை அணிந்துகொண்டு சடைபின்னி பூ வச்சு பொட்டு வச்சு லிப்ஸ் ஸ்டிக் போட்டு நளினமாய் நடந்து வந்து குழைந்து நெளிந்து பெண்குரலில் அச்சு அசல் பெண்போலவே பேசுகிறார்களே? --- நல்ல கேள்வி..!
சரியான பதில் :- 'அவ்வை ஷன்முகி'-யின்... "ஹீரோயின் கமல்"... என்றால் எப்படி இருக்கும்..?!? நம் பதிவின் நாயகர்கள் 'சிலர்' நினைப்பது போல படத்திற்கு பொருந்தினாலும், அப்படி "டைட்டில் கார்ட்" போட்டால்...?!? இயற்கைக்கு விரோதமாகத்தானே இருக்கும்..? ஆனால், கருத்து காட்டுத்தீயாய் பிரபலமாகும். என்றாலும் அது போலி அல்லவா? 'வேஷம்' போட்டு 'உணர்வுப்பூர்வமாய்' நடிப்பதெல்லாம் ஒருபோதும் பாலின மாற்றம் என்றாகாது.
=>தங்களைப்பற்றி ‘அவர்கள்’ என்ன நினைக்கிறார்கள்?
=>'இவர்கள்' பற்றி மக்கள் கருத்து என்ன?
=>'அவர்களுக்கு' அரசு என்ன சொல்கிறது?
=>இதில் இஸ்லாம் தரும் தீர்வு என்ன?
=>'இவர்களுக்கு' என்னதான் முடிவு?
----இறைநாடினால் மேற்படி தலைப்புகளில் இந்த "XXY-ஆண்கள்" பற்றி மேலும் சில பதிவுகளில் தொடர்ந்து ஆய்ந்தறிவோம்.
டிஸ்கி:
இது, 'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் முதல்பதிவு..! இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள், தொடரின் அடுத்த 5 பதிவுகளான...
இது, 'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் முதல்பதிவு..! இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள், தொடரின் அடுத்த 5 பதிவுகளான...
ஆகிய பதிவுகளையும் தொடர்ந்து படித்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோ..!
அப்போதுதான்.... அரவாணி/திருநங்கை/அலி பற்றியான முழுமையான=சரியான புரிதலை பெற முடியும் சகோ..!
அப்போதுதான்.... அரவாணி/திருநங்கை/அலி பற்றியான முழுமையான=சரியான புரிதலை பெற முடியும் சகோ..!
71 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
//இறைநாடினால் மேற்படி தலைப்புகளில் இந்த "XXY-ஆண்கள்" பற்றி மேலும் சில பதிவுகளில் தொடர்ந்து ஆய்ந்தறிவோம்.//
தொடருங்கள் சகோ படிக்க ஆவலாய் இருக்கிறேன்
அதிக குழப்பமாக உள்ளதால் ஒரு சிறிய கேள்வி
மூன்றாம் பாலினம் என்று இன்றைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு 47 குரோமோசோம்கள் இருக்கிறதா. பதிவினை மிண்டும் படித்து புரிந்துகொள்ள முயல்கிறேன்.
'வேஷம்' போட்டு 'உணர்வுப்பூர்வமாய்' நடிப்பதெல்லாம் ஒருபோதும் பாலின மாற்றம் என்றாகாது.
//
அவர்கள் நடிக்கிறார்களா இல்லையா என்று நமக்கு எப்படித்தெரியும்
இதன்படி இந்த பதிவின் நாயகர்கள் "XXY-ஆண்கள்" குரோமோசோமில்-Y இருப்பதால் அவர்கள் //
இரண்டு இருப்பதால் பெண்கள் என்றும் கூறமுடியுமே?
Your argument is flawed. Go update yourself or have a wank!
"ஆக இங்கே பிரச்சினைக்குரிய Genotype எது என்றால்... " 47-XXY " --தான்..! இவர்கள்தான் இந்த பதிவிற்கு உரியவர்கள். ஆண்களுக்கு XY என்று இருக்க வேண்டியதற்கு பதிலாய்... 23-வது "ஜோடி" குரோமோசோம்கள் " XXY " என்று இருந்தால் அது ஒரு குறை என்றும் இதை 'Klinefelter syndrome' என்றும் கண்டுபிடித்து சொன்னவரின் (1942-ல்...Dr. Harry Klinefelter) பெயரை வைத்து அழைக்கின்றனர் அறிவியலாளர்கள்." This argument is flawed and completely depoliticizes sexuality and sexual difference. The scientific argument may be true. But why do you have to say if the 23rd pair of Chromosomes are in the form "XXY" it is a lack? Doesn't it mean that it is different? When u use the word "lack" people with "XXY" are going to be seen as aberrations.
ஸலாம் சகோ ஆஷிக்..
மிகச்சிறப்பான விரிவான விளக்கம்..
அல்லாஹ் தங்களின் அறிவை விசாலமாக்க போதுமானவன்.
பொதுவாக அரவாணிகளை பார்த்தால்,எனக்கு அவர்கள் மீது ஒருவித இரக்கமே வரும்..அவர்கள் பேருந்துகளின் பயணம் செய்யும்போதும் சரி,அல்லது,வேரெங்கும் காணும் போதும் சரி,இவர்கள் ஏன் இப்படி சமுதாயத்தில் நடந்து கொள்கிறார்கள்.மக்கள் ஏன் இவர்களை ஏற்கமறுக்கிறார்கள் என்றெல்லாம் எண்ணம் வரும்..
நேற்றுதான் அரவாணிகள் குறித்த ஒரு கதை படித்தேன்..
http://maruthupaandi.blogspot.com/2011/02/blog-post_08.html
அவர்களை குடும்பத்தாரும் ஒழுங்காக அணுகுவதில்லை.அவர்களும் தான் சரியாக வேண்டும் என வைராக்கியம் கொள்வதில்லை.
தாங்கள் சொல்வதுபோல் ஹார்மோன் பேலன்ஸ் செய்தாலே அவர்களின் பிரச்சனை தீர்ந்துவிடும்தான்;
ஆனால் நவீன மருத்துவ உலகு இதை அவர்களுக்கு அறியத்தருவதில்லை என்பதே வருத்தமான செய்தி.
மேலும் எது எதற்கோ இலவசம் தரும் அரசு.இதை இலவசமாக்கினால் அவர்கள் வாழ்வு சிறக்குமே...செய்வார்களா???
அன்புடன்
ரஜின்
தொடர்ந்து எழுதுங்கள். இன்ஷா அல்லாஹ்; மேலும் அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹு!
நல்ல அலசல், இவர்களை பெண்களாக மாறுவதற்கு ஊக்குவிப்பதில் சினிமாத்துறைக்கு முக்கிய பங்கு உள்ளது, அறிவியல் விபரம் என்பது படித்த மக்களிடம் கூட இந்த விஷயத்தில் பிற்போக்கான என்னத்தைதான் பிரதிபலித்திருக்கிறது, உலக நடப்பை விட்டு மேல் சிந்திக்காமல் மூன்றாம் பாலினம் என்று சித்தரிப்பதும் ஊக்குவிப்பதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அவர்களுடைய மன நிலையை மற்ற அவர்களில் இருந்தே ஒருவர் தயாராக வேண்டும், நாம் பெண்கள் அல்ல, மூன்றாவது பாலினமும் அல்ல நாம் ஆண்கள் தான் என்று புரிய சிந்திக்க வைக்க முயன்றால் நாம் போன்றோர் அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு படிப்படியாக மூன்றாவது பாலினம் என்று கூறுவதை இல்லாமல் இன்ஷா அல்லாஹ் ஆக்க முடியும்.
அரசும் அவர்களுடைய சுயமரியாதையை காக்கும் வண்ணம் அறிவியலை அடிப்படையாக வைத்து ஆண்கள் என்று அறிவித்து ஊனமுற்றோர் சலுகைகளை வழங்கி ஊக்குவிக்கலாம்.
ஸலாம் சகோ..ஆசிக்!
அருமையான பதிவு. பலரும் தொட கூச்சப்படக்கூடிய தலைப்பு. தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.
சில குடும்பங்களில் பெற்றோர்களும் தவறு செய்கின்றனர். தனக்கு பெண் குழந்தை பிறக்கவில்லை என்றால் அவன் பெரியவனாக ஆகும் வரை அவனுக்கு மை இடுவது, பாவாடை தாவணியில் பார்த்து ரசிப்பது, இவை கூட சில நேரங்களில் அந்த குழந்தைகளின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை பெண்களாகவே மாற்றி விடுகிறது.
எங்கள் தெருவில் கூட ஒரு சகோதரர் இது போன்ற மாற்றம் ஏற்பட்டு 20 வயதில் பாம்பேக்கு ஓடி விட்டார. நம்மவர்கள் யாரையாவது பார்த்தால் அந்த இடத்திலிருந்து ஓடி விடுவார். 20 வருடம் கழித்து எங்கள் ஊருக்கு திரும்பவும் வந்தார். கூடவே எய்ட்ஸையும் கொண்டு வந்தார். 10 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். ஆரம்பத்திலேயே தக்க வைத்தியம் பார்த்திருந்தால் நலமாகியிருப்பார்.
பயனுள்ள கட்டுரை தொடருங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
நல்ல பதிவு.தெளிவான விளக்கம்.
தொடருங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஆஷிக்,
அறிய விளக்கங்கள்!
அற்புத தகவல்கள்!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அருமையான பதிவு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அருமையான பதிவு
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,தங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.
@குடுகுடுப்பை //மூன்றாம் பாலினம் என்று இன்றைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு 47 குரோமோசோம்கள் இருக்கிறதா. பதிவினை மிண்டும் படித்து புரிந்துகொள்ள முயல்கிறேன்.//--முயன்றிருப்பீர்கள்... புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
//அவர்கள் நடிக்கிறார்களா இல்லையா என்று நமக்கு எப்படித்தெரியும்//--சிறுவயதில் இருந்து டிரவுசர், விபரம் அறிந்த நாட்களில் கூட பேன்ட்-சட்டை போட்டவர்கள், திடீரென்று ஒருநாள்... பெண்களுக்குரிய ஆடைகள், ஒப்பனைகள், அரிதாரங்கள், நகைகள் அத்தனையும் அணிந்து கொண்டு ஆண் என்ற அடையாளம் தெரியாமல் மாறினால் அதற்குப்பெயர் நடிப்பு அல்லாமல் வேறு என்ன?
//இரண்டு இருப்பதால் பெண்கள் என்றும் கூறமுடியுமே?//--ஹி..ஹி..ஹி... இது என் கருத்து இல்லைங்க... அனைத்துலகும் ஒப்புக்கொண்ட அறிவியலின் ஆய்வு முடிவு. சும்மா நம்ம இஷ்டத்திற்கு லாஜிக் பேச இதில் முடியாது சகோ.குடுகுடுப்பை.
@Anonymous//Your argument is flawed. Go update yourself//--I hope 100% sure that the scientists and science with solid proofs would be correct. Updating is necessary for you now.
//or have a wank!//--if you don't believe be as yourself.
@Anonymous//..."XXY" it is a lack? When u use the word "lack" people with "XXY" are going to be seen as aberrations.//---You are correct... it looks so. But in tamil, 'lack' and 'defect' gives the same word "குறை"..!
Anyway i have changed it as ///23-வது "ஜோடி" குரோமோசோம்கள் " XXY " என்று இருந்தால் அது ஒரு "பிறவிக் குறைபாடு" (genetic birth defect) என்று இதை 'Klinefelter syndrome' என்றும் கண்டுபிடித்து/// to avoid 'aberrations'.
Thank you brother for your deep reading & giving a comment.
@RAZIN ABDUL RAHMANதங்கள் மீதும் ஸலாம் உண்டாவதாக சகோ.ரஜின் அப்துல் ரஹ்மான்.
மிகவும் சரியான கருத்துக்களை கூறியுள்ளீர்கள் சகோ.
//நேற்றுதான் அரவாணிகள் குறித்த ஒரு கதை படித்தேன்..
http://maruthupaandi.blogspot.com/2011/02/blog-post_08.html//--அறியத்தந்ததற்கு மிக்க நன்றி சகோ.
நானும் நேற்று அங்கே சென்றேன். படித்தேன்.விவாதித்தேன். அதை அங்கே சென்றால் அறிந்து கொள்க.
அவர், (சகோ.தேவா) அவரைச்சொல்லி குற்றமில்லை... இதுவரை நம் சமூகம் அவருக்கு கொடுத்த தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அந்த அடிப்படையிலேயே புனைவுக்கதை எழுதியுள்ளார். தவறான புரிதலில்தான் உள்ளார் என்பது தெளிவாகியது.
@ஹுஸைனம்மா//தொடர்ந்து எழுதுங்கள். இன்ஷா அல்லாஹ்; மேலும் அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.//--மிக்க நன்றி சகோ.ஹுசைனம்மா.
@M. Farooqஅலைக்கும் ஸலாம் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹ்...
சகோ.ஃபாரூக், கை கொடுங்க முதல்ல... வாவ்... ஒவ்வொரு வார்த்தையும்... தங்கம் சகோ.
//தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அவர்களுடைய மன நிலையை மற்ற அவர்களில் இருந்தே ஒருவர் தயாராக வேண்டும்//---இதுதான்... இதுதான் இங்கே இல்லை சகோ. இதனால்தான் அவர்களில் உள்ள "சிலர்" கூறுவதை உண்மை என்று மெத்தப்படித்த மொத்த சமூகமும், அரசு உட்பட நம்பித்தொலைய வேண்டியுள்ளது.
(பதிவிலும் இங்கும் 'சிலர்' என்று குறிப்பிட்டது ஏன் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன், இன்ஷாஅல்லாஹ்)
நான் சொல்ல இருந்ததில் முக்கிய கருத்துக்களையே மிகச்சரியாக பின்னூட்டி உள்ளீர்கள் சகோ. என் மொத்த பதிவுத்தொடருக்கும் ஒரு முன்னுரை போல.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் சகோ.சுவனப்பிரியன்...
//தனக்கு பெண் குழந்தை பிறக்கவில்லை என்றால்...//--அட..! இருக்கின்ற அமளி துமளி போதாதென்று இது வேறையா?
இந்த xxy ஆண்கள் தாமாக தமக்கு இழைத்துக்கொள்ளும் கொடுமையை "தற்கொலை" என்றால், நீங்கள் சொன்னது போல் பெற்றோர்கள் செய்வது "கொலை"..!
இப்படி, நார்மல் xy ஆண்களையே உளவியல் பால் (Psychological Sex) திரித்து மனசைக்கெடுப்பதற்கு தக்க தண்டனை கொடுக்க இனி ஒரு புதிய சட்டம்தான் இயற்ற வேண்டும்.
இப்படி செய்வது இஸ்லாமில் இது தடுக்கப்பட்டிருக்கிறது.
முக்கியமான கருத்தை இட்டமைக்கு மிக்க நன்றி சகோ.
சகோ.ஆயிஷா,
சகோ.ஜபருல்லாஹ்,
சகோ.tamilnadu,
சகோ.sadikeen,
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் அனைவர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
Your post is misleading...
@Anonymous#24th comment (117.254.204.49)
//Your post is misleading...//
சகோ.அனானி,
இப்பதிவு 'தவறாக வழிநடத்துகிறது' என்றால்.. யாரை..? எப்படி? எவ்வகையில்? எதற்காக? ஏன்? எதனால்? என்ன காரணத்தினால் அப்படி சொல்கிறீர்கள்?
தயவு செய்து சரியான விபரம் சொன்னீர்கள் என்றால் இப்பதிவை உடனடியாக நீக்கவும் தயாராக உள்ளேன்.
அறிவியலாளர்கள் என்ன சொல்லி இருக்கிறார்களோ அதைத்தானே திரட்டி தந்திருக்கிறேன்..?
எனில், "மக்களை அறிவியல் தவறாக வழிநடத்துகிறது" என்று சொல்ல வருகிறீர்களா?
என் மனசாட்சிக்கு எட்டியவரை இறைவனை பயந்து சொல்கிறேன்... 'இப்பதிவானது, இவ்விஷயத்தில் முழுக்கமுழுக்க தவறாக மக்களை வழிநடத்தும் அனைத்து சக்திகளுக்கும் எதிரானது..!'
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
மாஷா அல்லாஹ்...படிக்க படிக்க தங்களின் உழைப்பை எண்ணி வியக்கின்றேன். இது போன்ற கட்டுரைகளை எழுவதற்கு விஷயங்களை நன்கு உள்வாங்கி இருக்கவேண்டும். இதற்கே நிறைய நேரம் எடுக்கும். பின்பு அதனை தமிழ்ப்படுத்துவது பற்றி சொல்லவே தேவையில்லை. அதிக சிரத்தையான வேலை அது. இவ்வளவு விஷயங்களை தாண்டி எங்களுக்கு இது போன்ற கட்டுரை தந்த உங்களுக்கு நற்கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன்.
நம் சகோதர/சகோதரிகள் இது போன்று பல்வேறு துறைகளிலும் புகுந்து அற்புதமான கட்டுரைகளை எழுதி வருவது மனதுக்கு மிகுந்த அமைதியை தருகின்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே...
தாங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத பிரார்த்திக்கும்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
1. Transgender என்றழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் 47 க்ரோமோசோம்கள் தான் இருக்கின்றனவா?
2. பெண்களின் உடல் வாகோடு கர கர குரலுடன் ஆணைப்போல் நடந்துகொள்பவர்களைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?
3. ஹார்மோன் பேலன்ஸிங் சிகிச்சை செய்தாலே இவர்கள் சரியாகிவிடுவார்கள் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றனவா?
Anonymous said...
@ முஹம்மத் ஆஷிக்
சகோ,
Klinefelter Syndrome இருக்குறவங்களுக்கு உடல் மற்றும் பழக்கவழக்கங்களில்(அரிதாக) ஆண் தன்மை குறைந்து காணப்படுவது உண்மை தான்...! அதற்காக Transgenders அனைவருக்குமே Klinefelter Syndrome இருப்பதாகக் கூறும் நீங்கள் உங்கள் Knowlege of the Subject-ஐ அப்டேட் செய்துகொண்டுவிட்டுப் பிறருக்குக் கருத்து சொல்வது நல்லது சகோ.
Androgen மற்றும் Oestrogen ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே சுரக்கும். ஆண்களுக்கு அதிக அளவில் Androgens-ம் பெண்களுக்கு அதிக அளவில் Oestrogens-ம் சுரக்கின்றன. இதில் மாறாக ஆணாக உடலமைப்பைக் கொண்டு பிறந்த ஒருவருக்கு நாளடைவில் Secondary Sexual Characteristics, develop ஆகும் சமயம் oestrogens அதிக அளவில் சுரந்ததானால் அவருக்குப் பெண்மைக் குணங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் தோன்றுகின்றன. அதனால் மனதளவில் பெண்ணாகவே மாறி வளரும் அவர்(குறிக்க: இதில் அவரது பங்கோ முயற்சியோ எதுவுமில்லை) ஒரு கட்டத்தில் தன் உடல் உருப்புகளை அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஒரு பெண்ணாகவே மாறிவிடுகிறார்.
இதே போல் தான் Androgen அதிக அளவில் சுரக்கும் பெண்கள் ஆணாக மாறுவதும்..!
Transgenders-ன் அடிப்படை இந்த ஹார்மோன்ஸ் கான்செப்ட் தான். Even, அடிப்படையில் Klinefelter syndrome இருப்பவர்கள் கூட low serum testosterone level ஆனால் high serum FSH (follicle stimulating hormone) level இருப்பதால் தான் ஆண் தன்மை குறைவாகக் கொண்டுள்ளார்கள்..!
மேலும் Klinefelter syndrome உள்ளவர்கள் societal pressures-னால் தான் பெண்ணாக மாற முடிவு செய்கிறார்களே அன்றி எவரும் ஆசைபட்டோ நடித்தோ இனத்தை மாற்றவேண்டிய அவசியம் என்ன?
ஆக “அவர்கள்” நடிக்கிறார்கள் என்னும் உங்கள் கூற்று....???!!!!!
So, Transgenders concept is more of Hormone-basis rather than what u mention as bcos of Klinefelter syndrome...!
அண்ணா, தவறுகள் உள்ள பதிவை போட்டதுமல்லாமல் அதனை விளம்பரம் செய்யும் நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்தல் நன்று என்பது எனது தாழ்மையான கருத்து.
சுபத்ரா.
February 11, 2011 2:53 PM
=====================================================
in devas blogg don't you see it? why not answer?
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆஷிக் அஹ்மத்,
//உங்களுக்கு நற்கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன். தாங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத பிரார்த்திக்கும்//--ஆமீன்.
ஜசாக்கல்லாஹ் க்ஹைர்.
தங்கள் மீதும் அவ்வாறே உண்டாவதாகபிரார்த்திகிறேன்.
Anna,
Its great that u have taken even anonymous comments into consideration and replied them. I dont say that u r misleading ur readers intentionally. But what u have written in this post should be revised.
In this post, whatever u have written about Klinefelter syndrome is true. But the way u have related Klinefelter syndrome and transgenders concept doesnt seem to be true.
To say, Both are independent concepts.
I would also like to putforth the qns of Mugilan again:
முகிலன் said... 27
1. Transgender என்றழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் 47 க்ரோமோசோம்கள் தான் இருக்கின்றனவா?
2. பெண்களின் உடல் வாகோடு கர கர குரலுடன் ஆணைப்போல் நடந்துகொள்பவர்களைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?
3. ஹார்மோன் பேலன்ஸிங் சிகிச்சை செய்தாலே இவர்கள் சரியாகிவிடுவார்கள் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றனவா?
Thank You.. And kindly reply in Warrior Blog too.
Subadhra.
//1. Transgender என்றழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் 47 க்ரோமோசோம்கள் தான் இருக்கின்றனவா?//--47 க்ரோமோசோம்கள் உள்ளவர்கள் மூன்றாம் பாலினம் என்பது மூடத்தனம் என்பதுதான் பதிவு சகோ முகிலன். //Transgender//--பதிவில் சொல்லப்படாதது சகோ.
//2. பெண்களின் உடல் வாகோடு கர கர குரலுடன் ஆணைப்போல் நடந்துகொள்பவர்களைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?//--அது இக்கட்டுரைக்க்கு தேவை இல்லை என்பதால்தான் சகோ.முகிலன். மற்றபடி அது hormone imbalance.
//3. ஹார்மோன் பேலன்ஸிங் சிகிச்சை செய்தாலே இவர்கள் சரியாகிவிடுவார்கள் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றனவா?//--நான் பதிவில் கொடுத்திருக்கும் சுட்டியில் உள்ளதே சகோ..!
இதோ மேலும் ஒரு சுட்டி உங்களுக்கு அதிக விபரமாய்:
http://www.nichd.nih.gov/publications/pubs/klinefelter.cfm#xch_kl
டிஸ்கி: நான் டாக்டர் இல்லை சகோ.
@Anonymousசகோ.அனானி...
சகோ.தேவாவின் பதிவில், ////உங்கள் birth certificate-ல் ஆண் என்று உள்ளதா, பெண் என்று உள்ளதா? 'ஆண் என்று உள்ளது' என்றால், அதான் ஏற்கனவே இருக்கே 67% அப்புறம் எதற்கு முட்டாள்த்தனமாய் 1% கேட்கிறீர்கள்?////--என்ற என் பின்னூட்ட பகுதியையும்...
//// டிஸ்கி: நான் இந்த "கிளீன் ஃபெல்டர் சிண்ட்ரோம்" மூலம் பிறவிக்குறையுடன் பிறந்த இந்த "XXY ஆண்களுக்கு"(இவர்களுக்கு இதுதான் சரியான பெயர்) முழு ஆதரவு அளிக்கிறேன். இவர்களுக்கு எதிரான வன்முறை, கேலி கிண்டல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
அதேநேரம் (இவர்களை மீண்டும் ஆணாக மாற்றுவது எளிதாக இருக்க) இவர்களை பெண்ணாக மாற்றும் கொடுமைக்கும், இவர்களை 'மூன்றாம் பாலினம்' என படு கேவலப்படுத்தும் அரசு உட்பட அனைவருக்கும் மிகக்கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கிறேன்.
இவர்களுக்கான உண்மையான மனிதநேய தீர்வாகத்தான் நான் ஒரு பதிவுத்தொடர் தற்போது எழுதிவருகிறேன்.////
--என்ற என் பின்னூட்ட டிஸ்கியையும் படிக்க வில்லையா?
இருந்தும் அதை சகோ.சுபத்ரா பின்னூட்டம் இங்கே ஏன்?
@சுபத்ராஇங்கு வருகை புரிந்ததற்கு மிக்க நன்றி சகோ.சுபத்ரா.
அனானியின் உங்கள் பின்னூட்டத்திற்கான எனது பதில்...
// Transgenders அனைவருக்குமே Klinefelter Syndrome இருப்பதாகக் கூறும் நீங்கள் உங்கள் Knowlege of the Subject-ஐ அப்டேட் செய்துகொண்டுவிட்டுப் பிறருக்குக் கருத்து சொல்வது நல்லது சகோ.//
---நான் எங்கே இப்படி கூறி உள்ளேன்? Transgenders....இப்படி ஒரு வார்த்தையையே நான் எங்கும் கூறவில்லையே...?
// ஒரு கட்டத்தில் தன் உடல் உருப்புகளை அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஒரு பெண்ணாகவே மாறிவிடுகிறார்.
இதே போல் தான் Androgen அதிக அளவில் சுரக்கும் பெண்கள் ஆணாக மாறுவதும்..! //
---இப்படி ஒரு 'அறுவைசிகிச்சை விஷயம்', சகோ.தேவாவின் புனைவுக்கதையிலும் வரவில்லை, என் இந்த அறிவியல் சார்ந்த கட்டுரையிலும் இதுவரை வரவில்லையே..? அப்புறம் எப்படி உங்கள் பின்னூட்டத்தில் மட்டும் திடுமென முளைக்கிறது? அறுவை சிகிச்சை செய்தவர்களையா நடிக்கிறார்கள் என்றேன்..?
(இந்த SRS பற்றியும்... இது ஒரு மோசடி என்றும் இதற்கான தேவை, அவசியம், இதனால் ஏற்படும் நாச விளைவு பற்றியும் இத்தொடரில் பின்னர் சொல்ல இருந்தேன்)
/// மேலும் Klinefelter syndrome உள்ளவர்கள் societal pressures-னால் தான் பெண்ணாக மாற முடிவு செய்கிறார்களே அன்றி எவரும் ஆசைபட்டோ நடித்தோ இனத்தை மாற்றவேண்டிய அவசியம் என்ன?
ஆக “அவர்கள்” நடிக்கிறார்கள் என்னும் உங்கள் கூற்று....???!!!!! So, Transgenders concept is more of Hormone-basis rather than what u mention as bcos of Klinefelter syndrome...!///
---மீண்டும் அதே... ‘இனத்தை மாற்றும் Transgenders’ குளறுபடி..!
அதை விடுங்க...
இங்கே அதைவிட ரொம்ப ரொம்ப முக்கியமாக, “societal pressures இல்லையென்றால் அவர்கள் மாறவேண்டிய அவசியம் இல்லை” என்று ‘நெத்தியடி’யாய் கருத்து கூறி உள்ளீர்கள். அதுதான் என் கருத்தும். அதைச்சொல்லவே இந்த்தொடர்.
ஆனால், societal pressures-களை எதிர்த்து போராடி நசுக்கி அழித்து ஒழிக்க நாம் எல்லாம் அவர்களுக்காக போராடாமல், அவர்களை 'நம் இரு பாலினத்தை விட்டும்' ஒழிப்பதை அல்லது துரத்தி அடிப்பதை ஆதரிக்கும் ஒரு ‘மிகக்கொடுமையான பயங்கரவாதத்தின்’ பக்கம் நின்று குரல்கொடுக்கிறீர்களே சகோ.சுபத்ரா? எவ்வகையில் இது மனிதகுனம் அல்லது மனிதநேயம் ஆகும் என்றுதான் எனக்கு புரியவில்லை சகோ.சுபத்ரா.
ஆஷிக் அண்ணா,
வாரியர் ப்ளாகில் அவர் குறிப்பிட்டிருப்பது Transgender எனப்படும் திருநங்கை ஒருவரைத் தான். Klinefelter syndrome பாதிக்கப்பட்ட ஒருவரை அல்ல.
Klinefelter syndrome இருக்கும் காரணத்தால் இனம் மாறியவர்கள் மிக மிக அரிது அண்ணா. Hormone imbalance காரணத்தால் மாறுபவர்கள் தான் அதிகம்.
‘அவர்கள்’ நடிக்கிறார்கள் என்னும் உங்கள் கூற்று, படித்தவர்களுக்கே புரியவில்லையே எனும் ஆதங்கமே தவிர வேறொன்றும் இல்லை அண்ணா.
நீங்கள் அவர்களைப் பார்த்திருப்பீர்கள்.. இதைப் பற்றி ‘அறிவியலார்’ தொடுத்து வைத்த விஷயங்களைப் படித்திருப்பீர்கள். நான் அவர்களோடு, பேசியிருக்கிறேன்.. பழகியிருக்கிறேன் அண்ணா.
//அவர்களை 'நம் இரு பாலினத்தை விட்டும்' ஒழிப்பதை அல்லது துரத்தி அடிப்பதை ஆதரிக்கும் ஒரு ‘மிகக்கொடுமையான பயங்கரவாதத்தின்’ பக்கம் நின்று குரல்கொடுக்கிறீர்களே சகோ.சுபத்ரா? எவ்வகையில் இது மனிதகுனம் அல்லது மனிதநேயம் ஆகும் என்றுதான் எனக்கு புரியவில்லை சகோ.சுபத்ரா.//
சிரித்துவிட்டேன். சரி.. மனித குணமுள்ள மனித நேயமுள்ள தங்களை இறைவன் ஆசீர்வத்திக்கட்டும்.
@சுபத்ராசகோ.சுபத்ரா,
//வாரியர் ப்ளாகில் அவர் குறிப்பிட்டிருப்பது Transgender எனப்படும் திருநங்கை//...!?!?
----அந்த புனைவுக்கதையில், தன் வீட்டில் குடும்பத்தார் மத்தியில் ஆணாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து இருந்த முருகன், ஒருநாள் இரவில் பெண் வேஷம் போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாண்டு சென்றபோது, அதே இரவில் பஸ் ஸ்டாண்டு பொறுக்கி கயவர்களால், முருகன் பெண்ணாக பார்க்கப்பட்டு... உடன் பாலியல் பலாத்காரம்(!?)நிகழ்த்தப்பட்டு... எல்லாம் முடிந்து 'நாச்சியா' என்று அதே இரவில் அழைக்கப்படுகிறா'ன்'.
இதற்குப்பெயர்தான் Transgender என்றால்... நன்றாக படித்தவர்கள் சொல்கிறீர்கள்... நம்பத்தானே வேண்டும்..!
//சிரித்துவிட்டேன். சரி.. மனித குணமுள்ள மனித நேயமுள்ள தங்களை இறைவன் ஆசீர்வத்திக்கட்டும்.//--மிக்க நன்றி சகோ.சுபத்ரா..!
@சுபத்ராதன் உடல் உருப்புகளை அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஒரு பெண்ணாக மாறுகிறார்கள் என்று முன்பு சொன்னீர்கள். அவர்கள் தான் trans gender என்கிறீர்கள். எனில், அந்த அறுவை சிகிச்சையை அந்த 'பொருக்கி கயவர்கள்' பஸ் ஸ்டாண்டிலே முருகனுக்கு நிகழ்த்தி trans gender -ஆக ஆக்கி விட்டார்களா?
//படித்தவர்களுக்கே புரியவில்லையே எனும் ஆதங்கமே தவிர வேறொன்றும் இல்லை அண்ணா.//--மிக்க நன்றி சகோ.சுபத்ரா.
@சுபத்ரா///Klinefelter syndrome இருக்கும் காரணத்தால் இனம் மாறியவர்கள் மிக மிக அரிது அண்ணா. Hormone imbalance காரணத்தால் மாறுபவர்கள் தான் அதிகம். ///--அது சரி... வாரியார் பதிவை படிக்காதது போலவே, என்னுடைய பதிவையும் படிக்க வில்லை போல...
//3. புறத்தோற்ற பால் (Phenotype Sex) :
4. உளவியல் பால் (Psychological Sex) ://---இதெல்லாம் என்ன சகோ.?
//மேற்கண்ட பண்புகளுடன் ஒருவரது வளர்ப்புமுறை, சமுதாய சூழ்நிலையை பொறுத்து மனதளவிலும் முழுமையான ஆணாக முதிர்ச்சி அடைய விடுவதில்லை இந்த சமுதாயம். கேலி கிண்டல் பேசி புறக்கணிக்கும் போதுதான் "நாம் ஏன் பெண்ணாகவே மாறிவிடக்கூடாது?" என்று விபரீதமான தவறான பொருந்தாத முடிவு எடுக்கும்போதுதான், இந்த "XXY-ஆண்கள்" காணாமல் போய் ‘மூன்றாம் பாலினத்தவர்’ என முதல் பாரா கூத்துக்கள் எல்லாமே அரங்கேறுகின்றன. ஆனால், அவை அனைத்தும் உண்மைக்கும் இயற்கைக்கும் அறிவியலுக்கும் முற்றிலும் எதிரானவை ஆகும்.//--இதெல்லாம் என்ன சகோ.?
உங்கள் இடுகைக்கு என்னை வர வைத்த சூழலுக்கும் ஏக இறைக்கும் நன்றிகள் ஆசிக்.....
திருநங்கைகள் எல்லாம்...பெண்ணைப் போல நடிக்கும் ஆண்கள் என்று கூறுகிறீர்களா?
இது என் முதல் கேள்வி? இதற்கு பதில் சொல்லுங்கள்...
@dhevaவருக..! சகோ.தேவா, உங்கள் புனைவுக்கதை பதிவை படித்தபின்னர்(படித்திருந்தால்) எல்லோருமே உங்களிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்வி...//திருநங்கைகள் எல்லாம்...பெண்ணைப் போல நடிக்கும் ஆண்கள் என்று கூறுகிறீர்களா?//..!?!?!
//இது என் முதல் கேள்வி? இதற்கு பதில் சொல்லுங்கள்... //---நான் பல கேள்விகள் கேட்டிருந்தேனே சகோ.தேவா. அதெல்லாம்..?
இந்த கேள்விக்கு பதில் சொல்வதில் சிரமமிருக்காது என்று கருதுகிறேன்.. இங்கே நீங்கள் அளிக்கப்போகும் பதில்கள் உங்கள் கேள்விகளை உடைக்கும் என்று நம்புகிறேன்.. !
//இதெல்லாம் என்ன சகோ.?//
உங்களின் தவறான புரிதல்கள்.
wy? comment moderation dude....? remove it na.. it will allow us to discuss faster right?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,
நல்ல முயற்சி, விளக்கப்பட வேண்டிய செய்தி.
சமூகத்தில் இந்த விளக்கங்களை தெரிந்துகொண்டவர்களும் இவர்களை மூன்றாம் பாலினம் என்று அழைப்பதற்கு அவர்களின் உடலுறவு தொடர்பான நாட்டம், அனுகுமுறை குறித்து சந்தேகிக்கின்றமையும் ஒரு காரணமாகுதே?
1. இந்த மூன்றாம் பாலினம் என்று சொல்லுபவர்கள் தாங்கள் ஆண்கள் அதனால் பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தலாம் என்று முன்வரும் தைரியமில்லாது இருக்கின்றமை,
2. சூழலில் வாழும் மற்றைய ஆண்களுடன் தங்களது காம ஆசையை தீர்த்த்டுக்கொள்ள முயற்சிப்பது என்று தொடர்கிறது.
இதனை பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?.
நன்றி
படைத்தலை நம்பும் நீங்கள் XX , XY என்பவைகளைத் தாண்டி XXY,XO,XXX,XYY என்ற பிறழ்ச்சிகள் வருவதற்கும் காரணம் கடவுள் தான் என்றும் கூறுவீர்கள் என நினைக்கிறேன். அதற்கான காரணம் என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,
தொடர்ந்து எழுதுங்கள். இன்ஷா அல்லாஹ்; மேலும் அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்
@Issadeen Rilwan - Changes Do Clubஅலைக்கும் ஸலாம் வரஹ்... நன்றி சகோ.ரிள்வான்...
என் பதிவில், பால் என்பதை அறிவியல் நான்கு வகையாக கூறுவதை கூறியுள்ளேன். "அந்த நான்கு வகையிலும் எவர் ஒரே பாலினமாக தேர்ச்சி பெறுகிறாரோ அவர்தான் அப்பாலினம்" என்று மருத்துவ அறிவியல் கூறுவதை அடுத்தடுத்த பகுதிகளில் சொல்ல இருக்கிறேன். இதனை ஒலிம்பிக் கமிட்டி உட்பட பல அமைப்புகளும், பல நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. பின்பற்றுகின்றன.
இதில் தோல்வி அடையும் ஒருவரை 'அந்த பாலினத்தில் குறைபாடுடையவர்' என்றுதான் சிகிச்சை அளித்து ஆதரவளிக்க வேண்டுமே அன்றி... மூன்றாவது பாலினம் என்று வகைப்படுத்துதல் என்பது... தெரியாமல் செய்தால் மூடத்தனம்; தெரிந்து செய்தால் அநியாயம். அக்கிரமம்.அராஜகம்.
சிலர்(கவனிக்க:சிலர்)'எனக்கு சிகிச்சை தேவை இல்லை' என்று மாறுவேஷம் போட்டு தப்பிப்பது, அவர்களுக்கும் அவர்களால் மொத்த சமுதாயத்துக்கும் மிகப்பெரிய தீங்குதான் என்பதையும், இதற்கு பின்னணியில் உள்ள 'அவர்களின்' சுயநலத்தையும் சமுதாய அக்கறையின்மையையும் பின்னர் கண்டிக்க இருக்கிறேன், சகோ.ரிள்வான்.
டிஸ்கி:
இப்பதிவு ஒரு தொடரின் முதல் பகுதி. இதில் முழு விபரங்கள் பெற முடியாது. இறைநாடினால் வெளிவரவிருக்கும் மீதி பகுதிகளையும் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@தருமி///படைத்தலை நம்பும் நீங்கள் XX , XY என்பவைகளைத் தாண்டி XXY,XO,XXX,XYY என்ற பிறழ்ச்சிகள் வருவதற்கும் காரணம் கடவுள் தான் என்றும் கூறுவீர்கள் என நினைக்கிறேன். அதற்கான காரணம் என்ன?///---உங்களிடம் நீண்ட வருடங்களாய் இதுவரை பல இஸ்லாமிய பதிவர்கள் மிக நுணுக்கமாய் விவாதித்தமைதான் இதற்கு காரணம் என்று நினைக்கறேன்.
சரியாகவே நினைத்துள்ளீர்கள் சகோ.தருமி. வருகைக்கும் உங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.
@இளம் தூயவன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.இளம் தூயவன்...
தங்கள் வருகைக்கும் ஆர்வம் கலந்த ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ.
//உங்களிடம் நீண்ட வருடங்களாய் இதுவரை பல இஸ்லாமிய பதிவர்கள் மிக நுணுக்கமாய் விவாதித்தமைதான் இதற்கு காரணம் என்று நினைக்கறேன்.//
அல்லா தான் காரணமான்னு கேட்டா, விவாதம்தான் காரணம்னு சொல்றீங்க .. !
அப்போ அல்லா தான் காரணம்னு சொல்றீங்களோ?
@தருமிசகோ.தருமி...
'அப்படியான தங்களின் நினைப்புக்கு' என்ன காரணம் என்று என் கருத்தை கேட்டீர்கள்... அதற்குத்தான் அந்த காரணத்தை சொன்னேன்.
அதேநேரம், 'அத்தைகைய விவாதங்களுக்கும் இறைவன்தானே காரணம்' என்று இப்போது கேட்கிறீர்கள்.
நிச்சயமாக... நிச்சயமாக... இதிலென்ன சந்தேகம் சகோ.தருமி?
எப்போதும் இறைவனை பற்றிய சிந்தனையுடன் தாங்கள் இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி சகோ.தருமி.
குழப்புறீங்க ..
இதே கேள்வியை நான் ஏற்கெனவே கேட்டிருக்கிறேன். மீண்டும் கேட்கிறேன். இந்தப் பிறழ்ச்சிகளுக்கு அல்லாதான் காரணமா? ஆமான்னா சரி .. இல்லைன்னா அப்புறம் என்ன அல்லா?
@தருமிகேள்வியையும் கேட்டு அதற்கு உடனே மிகச்சரியான பதிலையும்தான் நீங்களே சொல்லி விட்டீர்களே..!
சகோ.தருமி. அப்புறம் ஏன் குழம்புகிறீர்கள்?
ஏனிந்த குழப்பம் & தயக்கம். அல்லா தான் காரணமா?
@தருமி
ஆமாம்.
-----------------------------------
என்னாச்சு சகோ.தருமி உங்களுக்கு...?
இந்த பதிவில் இறைநம்பிக்கையை வைத்து பின்னூட்டங்கள் இட புகுந்து விட்டீர்களா? இறை நம்பிக்கையை மைய்யமாக கொண்ட பதிவு இல்லையே இது..?
உங்களுக்கென்ன ஜாலிதான் ரிட்டையர்ட் லைஃப்... பென்ஷன்... ஜாலியாக டைம் பாஸுக்கு 24 மணிநேரங்களும் கமெண்ட்ஸ் போடலாம். ஆனால், படிக்கும் மற்றவர்களுக்கு இது போரடித்துவிடுமே..! அந்த மற்றவர்களில் நானும் ஒருவன்.
இனி பதிவிற்கு பொருத்தமாக ஆரோக்கியமான விவாதங்கள் புரிவீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் சொன்னவைகளை கீழே உள்ளவை கேள்விகளாக்குகின்றன:
http://www.abc.net.au/science/slab/intersex/default.htm
The first question asked after a birth is - boy or girl? And when there is no definite answer to that,...
But surgery or no surgery is not the only issue. Intersex conditions include a wide variety of internal and external, genetic and hormonal characteristics. Many aren't visible at birth. And every individual affected is unique.
"The penis might be too small to be really called a penis, there might be a cleft but not one that would be typical for a girl, the urinary opening might be in the wrong place for either a boy or a girl, and perhaps we can feel either no testes at all, or perhaps one testis."
Androgen insensitivity syndrome, or AIS, is when the baby is genetically male, XY, and able to produce testosterone, but the tissues don't respond to it.
The studies that have been done suggest most intersex people are satisfied with the gender they were assigned, though maybe not with their equipment.
//பின்னூட்டம் கொடுங்கள் சகோ.//
//உங்களுக்கென்ன ஜாலிதான் ரிட்டையர்ட் லைஃப்... பென்ஷன்... ஜாலியாக டைம் பாஸுக்கு 24 மணிநேரங்களும் கமெண்ட்ஸ் போடலாம். ஆனால், படிக்கும் மற்றவர்களுக்கு இது போரடித்துவிடுமே..! அந்த மற்றவர்களில் நானும் ஒருவன்.//
உங்களுக்கு சபை நாகரீகம் தெரியவில்லை என்பதை இரண்டாவது முறையாக நிரூபித்திருக்கிறீர்கள். நன்று.
சகோ.தருமி,
தாங்கள் ஒரு அடிப்படையான இஸ்லாமிய நம்பிக்கையை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வுலகம் இறைநம்பிக்கையாளர்களுக்கு மறுமை வாழ்வுக்கான ஒரு சோதனைக்களம்.
பிறக்க வைப்பதும் இறக்க வைப்பதும் இறைவன்தான்...
நோய் தருவதும் அதை நீக்கி சுகமளிப்பதும் இறைவன்தான்...
இதை புரிந்து கொள்ளாமல், உங்கள் அறிவை உயர்த்தி இறைவனை நீங்கள் மட்டம்தட்டி நிந்திப்பதை எல்லாம் நான் என் வலைப்பூவில் வெளியிட முடியாது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
(அதனால் உங்களின் கடந்த பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டது)
சகோ.தருமி... தங்கள் 55-வது பின்னூட்டத்தில் கூறியிருக்கும் அனைத்தும் சரியே... அவை xy பற்றியன.
இது ஒரு தொடரும் பதிவு... அதில் இதுதான் முதல் பகுதி.
முதல் பகுதியில் xxy பற்றி மட்டுமே சொல்லி இருக்கிறேன். அதில்தான் நடிக்க முடியும். சகோ.முகிலன் கூட கேட்டார். x0 பற்றி... ஒன்றும் சொல்லவில்லியே என்று. அது xxy விட (5000-ல் ஒன்று) அரிது.
அதுமட்டுமல்ல xxy தான் (ஆயிரத்திற்கு ஒன்று முதல் இரண்டு வரை என்று) நிறைய மலிந்துள்ளது. எது மலிந்துள்ளதோ அதை முதலில் சொல்வோம்.
அடுத்தடுத்த பகுதிகளில்தான், நீங்கள் சொன்ன AIS மற்றும் நீங்கள் சொல்லாத Hypospadias, Simple Constitutional Feminism போன்றவற்றை எல்லாம் பற்றி கூற உள்ளேன். எல்லாருமே இப்படி அவசப்பட்டால் என்ன செய்வது..? பொறுமை. பொறுமை.
மனது மாறி பதிவிற்கு பொருத்தமான பின்னூட்டம் இட்டதற்கு மிக மிக நன்றி சகோ.தருமி.
//உங்களுக்கு சபை நாகரீகம் தெரியவில்லை என்பதை இரண்டாவது முறையாக நிரூபித்திருக்கிறீர்கள். நன்று.//--சகோ.தருமி...
உங்கள் பதிவுகளில், உங்கள் பின்னூட்டங்களில், அதில் மற்றவர்களுடன் நீங்கள் புரியும் விவாதங்கள் பற்றி நன்கு அறிந்திருந்ததாலும், இங்கே தங்களின் விவாத ஆரம்பமும் அப்படியான ஒரு எண்ணத்தைத்தான் என்னுள் ஏற்படுத்திவிட்டது. பலருக்காகவும் சிந்திக்க வேண்டி உள்ளது சகோ. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இறைவனை நிந்திக்கும் இன்னொரு பின்னூட்டமும் மட்டுறுத்தப்ப்ட்டது என்பதை அறியத்தருகிறேன்.
நன்றி.
சகோ.தருமி,
இறை நிந்தனைக்காக மட்டுறுத்தப்பட்ட உங்கள் கடைசி பின்னூட்டத்தில் //நிச்சயமாக இது ஒரு நடிப்பாக இருக்க முடியாது// என்று கூறி இருந்தீர்கள்.
கூவாகம் சென்று ஒருநாள் முழுக்க இருந்து கூத்தாண்டவர் திருவிழாவை நேரில் கண்டு வந்த ஒரு பதிவரின் அறிக்கை இதோ:
/////////நான் கவனித்த மற்றொரு முக்கியமான விஷயம்.. விழுப்புரத்திலும், கூவாகத்திலும் நான் கண்ட அரவாணிகளில் பலர் ‘கோத்திகள்‘ மற்ற நாட்களில் ஆண் தோற்றத்தில் சமுகத்தில் புழங்கும் இவர்கள் இங்கு மட்டுமே பெண் உடையணிந்து வலம் வருகின்றனர். இவர்களில் மிகக்குறைந்த சதவீதத்தினர் தவிர அனைவருமே ஒரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர். இவர்கள் இங்கு கூடுவதே இதற்குத்தானா.. என்ற எண்ணமும் தோன்றுகிறது. ரமேஷ் ரசிகாவாகவும், நரசிம்மன் நசீனாவாகவும் பல பெண் பெயர்களால் தங்களை அடையாளப்படுத்தி அறிமுகம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் போது ரமேஷ், நரசிம்மன் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.///////////
------->>>(நன்றி - அகநாழிகை /இவ்வார தமிழ்மண பதிவர்)
இதுதான் இப்போது நிதர்சனம் சகோ.தருமி.
&
என்னை விட வயதில்,அனுபவத்தில், பட்டப்படிப்பில்(கல்லூரி பேராசிரியரான) பெரியவர் தாங்கள், "முஸ்லிம் பதிவர்கள் எதை எழுதினாலும் அங்கே வந்து கடவுளை நிந்திப்பது, பதிவை எதிர்த்து மட்டுமே கருத்து கூற உள்ளே வருவது" ஆகியவற்றை தயவு செய்து இனியாவது மறுபரிசீலனை செய்யவேண்டி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு சாதாரண மனிதரான உங்களை கொஞ்சம் ஜாலியாக வம்பிழுத்ததற்கே நீங்கள் அதை "சபை அநாகரிகம்" என்கிறீர்களே..!
ஆனால், இந்த பிரபஞ்சத்தையே படைத்து அதில் உள்ள, நாம் அறிந்த-அறியாத அனைத்தையும் மிக துல்லியமாக இயக்கும் இறைவன்... மகா பெரிய அல்லாஹ்வையே பழித்து பின்னூட்டம் இடுவது எந்த ஊர் சபை நாகரிகம் என்றுதான் எனக்கு சத்தியமாய் விளங்கவில்லை..!
You have talked about the treatment as well. I think only a specialist doctor who deals with such problems in real life can recommend treatments for such disorders.
So, what is your qualification in suggesting treatments for such patients? What is the reference for your views about treatment in this article? You can express your views as a common man, but you can't try to argue that your say is the right one unless you have direct clinical experience with such people. Even if you are a doctor, how many Klinefelter syndromes have you treated in your real life? - I need to know your answers for these questions before starting any discussion.
While I agree with the details about the disease, I do not agree with your dogmatic views about the treatment - so let me try to read about this in detail and then try to argue.
@redwithangerDear Brother 'redwithanger',
Why did you read with angry'...!
Please 'read anything without angry'...!
we are the common people say to piliticians, "avoid youself from corruption". But politicians never asked about our qualifications as "to oppose the corruption, are you a politician ever before?" or "in how many corruption scandal have you involved with?" .... "if, 'no' & 'never'.... the answers' then don't speak about corruption"---is it the right attitude?
Before commenting, first search through google or anything to many doctor's site or clinic's site just with key words 'treatment for kleinfelter's sysdrome' and get the treatments ways from many many many doctor's/clinic's sites but read without anger- which is very important to know the truth.
Of course, I read without anger, but I think anger is a right reaction for wrong things.
//we are the common people say to piliticians, "avoid youself from corruption". But politicians never asked about our qualifications as "to oppose the corruption, are you a politician ever before?" or "in how many corruption scandal have you involved with?" .... "if, 'no' & 'never'.... the answers' then don't speak about corruption"---is it the right attitude?
Huh!!! Recommending treatment to a patient vs speaking against corruption??? What a comparison you have made!
Can you cite the reference for your treatment suggestions?
As I mentioned, I will read before making any comments for argument purposes, but Klinefelter is not the only cause of intersex. So, it has to a complete study and it may take more time.
@redwithanger Dear brother, please note that this article is not ending with this post.
Please, read all the rest then ask. If you can't search in google, at least read the links which i have given in this post and in comment#31 and have an idea of treatment. But for the treatment, meet any doctors.. because, so for 'online treatment' is not available.
//But for the treatment, meet any doctors.. because, so for 'online treatment' is not available. //
I quit with this as I don't like arguing with such people who intend to make fun of the arguer instead of arguing about the article.
I have commented in your next post which I saw after this, that I will start my discussion after you finish. In that, I thanked you for the references. And I did not read your comments section of this post, that is why I was asking for references. Sorry for that!
Thanks for your comments about the treatment, and I don't need that. You can follow that if you want!!!! Good Bye!
@redwithangerI'm extremely very sorry brother... Loss of control... For God sake please, forgive me. That must have been not like this.
Thats fine brother! As I said, I need time to read about this. And I can wait till you finish.
Asking for references is to make sure that the readers have their choice of referring to them for any questions. Thats how all scientific articles are written.
Assalamu Alaikkum.
I don't know about the scientific mentioned in this post but ...
I believe that ALLAH has created everything as pair. As I believe there is no 3rd sex.
Please collect some more infos to clear us via your post, and don't get diverted by irrelevant comments.
@நட்புடன் ஜமால்Alaikkum salaam varah...
Dear brother Jamaal,
//Please collect some more infos to clear us via your post, and don't get diverted by irrelevant comments.//--Thank you very much for your kind instructions.
தவறான பதிவு .... பாலியல் குரோம்சோம்கள் கூடுவதையோ குறைவதையோ ஹார்மோன் ஃபாக்டர்கள் கட்டுப்படுத்த முடியாது. அப்படியே டெஸ்டிஸ்ரோன் அல்லது ஆன்றோஜனைக் கூட்டியும் குறைத்தாலும் அது ஜீன்களை மாற்றாது. ஜீன்களை ஹார்மோன்கள் மூலம் மாற்றலாம் என்று சொன்னது வேடிக்கையான ஒரு தகவல். அது உண்மையில்லை. இங்கு பதிவர் குரோமோசோம்களால் பாதிப்பு உண்டாகி பிறந்த மாற்றுப் பாலினத்தவரையும், சில ஆண்கள்/பெண்களில் காணப்படும் ஹார்மோன் பிரச்சனைகளையும் குழப்பி உள்ளார்.
இறைவனின் படைப்பில் தவறு இருக்காது என்ற ஆழ்மன நம்பிக்கையை திடமாக பற்றிக் கொண்டு கிடைத்ததை சேர்த்து குழப்பியுள்ளார். ஒரு போதும் அறிவியலையும் மதக் கொள்கையையும் வெகு சீக்கிரத்தில் ஒத்துப் போக செய்ய முடியாது....
அல்லா மூன்றாம் பாலினத்தவரைப் படைக்க மாட்டார் என்றில்லை. படைத்துள்ளாரே, குருடன், ஊமை போல பாலியல் குறைப்பாடுள்ளவர்களாய் மூன்றாம் பாலினத்தவரைப் படைத்துள்ளார். அதுவும் ஒரு காரணத்துக்காக என்று தான் ஏற்றுக் கொள்ளா வேண்டும்.....
அதே போல் மூன்றாம் பாலினம் என்பது மனிதனில் மட்டும் காணப்படுவதில்லை. விலங்குகளிடமும் உள்ளதே .. எதையும் அறிவியல் பூர்வமாய் ஆராய்ந்தால் இக்குழப்பங்களைத் தவிர்க்கலாம்..
@இக்பால் செல்வன்முற்றிலும் தவறான புரிதல் உங்களுடையது சகோ. இக்பால் செல்வன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!