அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, February 26, 2012

66 எச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்

சில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர் இந்தியர்கள் வந்துள்ளனர். கம்பெனி டாய்லட்டில் அவர்கள் புரியும் அழிச்சாட்டியத்தின் தாக்கம்தான் இந்த பதிவு..! இந்த பதிவை முதலில் எழுதலாமா... வேண்டாமா... என்றுதான் தோன்றியது. காரணம், இதில் உள்ள விஷயம் சிலருக்கு சற்று அருவருப்பாக இருக்கலாம். சிலருக்கு மிக அவசியமான அறிவுரையாக இருக்கலாம். அத்தவறை செய்யும் சிலருக்கு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். இன்னும் சிலருக்கு இந்த விஷயம் தொடர்பாக நான் இங்கே பகிரும் படம் பார்க்க பயங்கரமாகவும் கொடூரமாகவும் இருக்கலாம். ஆனாலும், அவசியம் எழுதியாக வேண்டும் என்று இறுதியில் முடிவு எடுத்தேன். பதிவில் ஆங்காங்கே சிகப்பில் உள்ளவற்றை நினைவில் கொள்ளுங்கள் சகோ..!

Tuesday, February 21, 2012

36 இடைத்தேர்தல் வெற்றிக்கு இலவச டிப்ஸ்..!

தமிழக அரசியலில் பொதுத்தேர்தலை பொருத்தமட்டில் பல காரணிகள் வெற்றி தோல்வியை நிர்ணயித்தாலும், இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகளுக்கு மட்டும் ஒரு மகத்தான இடம் உண்டு..! அப்படித்தான் இப்போதைக்கு முந்திய பொதுத்தேர்தலில்.... இலவச சைக்கிள், இலவச டிவி, இலவச Gகேஸ் ஸ்டவ், ரெண்டு ரூபா அரிசி (கிட்டத்தட்ட இலவசம்தானே இது?) என, இதுமாதிரி வாக்குறுதிகளை அள்ளி வீசியவுடன், பெரும்பான்மையான மக்கள் இலவசங்களுக்கு மயங்கி திமுகவுக்கு வாக்குகளை அள்ளி வழங்கி அதை அமோக வெற்றி பெற வைத்தார்கள். அதனாலேயே 2006ல், 'க.'தமிழக முதல்வர் ஆனார்.

அதேபோல, அதுவரை வழங்கப்பட்டு வந்த இலவசங்களை கன்னாபின்னா என்று திட்டித்தீர்த்த எதிர்க்கட்சித்தலைவர் ஜெ. கடந்த பொதுத்தேர்தலில், மக்களின் நாடியை புரிந்தவராக, தானும் தன் இஷ்டத்துக்கு இலவச லாப்டாப், இலவச மிக்சி, இலவச கிரைண்டர், இலவச ஃபேன்...என்று அடிச்சு விட்டார். வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்துவிட ஆட்சியை பிடித்தார் 'ஜெ'..!

Saturday, February 18, 2012

51 பிறந்தநாள் மூடத்தனம் ஒழியட்டும்..!


உலகின் பற்பல சமூக மக்களிடம் எப்படியோ இப்படி ஒரு மூடப்பழக்க வழக்கம் தொற்றிவிட்டது. அனேகமாக வருடாந்திர காலண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் இந்த மடத்தனம் ஆரம்பித்து இருக்க வேண்டும்..! 

தன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் 2012 - பிப்ரவரி-18 -சனிக்கிழமை  என்ற ஒருநாளை...  அடுத்தவாரம் சனிக்கிழமை வரும்போது அவர் கண்டுகொள்வதில்லை. அதுவே அடுத்த மாதம் மார்ச் 18 அன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால், அடுத்தவருஷம் 2013 - பிப்ரவரி-18 -என்ன கிழமை ஆனாலும், அதை... "தன் குழந்தையின் பிறந்தநாள் இன்று" என்கிறார்..! இது எப்படி சரி..? லாஜிக்கே இல்லாத முட்டாள்த்தனம் அல்லவா..? விளக்கமாக காண்போம்.

குழந்தை பிறந்துதான் ஒருவருஷம் ஆச்சே..? உயிரோடு இருக்கும் அதே குழந்தை ஒரு வருஷம் கழித்து அன்று மீண்டும் ஒருமுறை எப்படி பிறந்தது..? 

இப்படி... கேட்டால்... Birth Day  என்கிறார்..! பெரிய சைஸ் கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்து, மத்தியில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி, அதனை உடனே ஊதி அணைத்ததும் கூடி இருந்த மக்கள் அனைவரும் இந்த சாதனைக்கு கைதட்டி "wish you happy birthday to you" என்று கோரசாக தலையை ஆட்டி ஆட்டி பாட்டு பாடுகிறார்கள்..! அடுத்து பலர் பரிசுகளுடன் வருகிறார்கள்..! கேக் வெட்டி கொடுத்து ஊட்டி விட்டு பரஸ்பரம் கைகுலுக்குகிறார்கள்..! கட்டி அனைத்து முத்தம் இடுகிறார்கள்..! எனில், இங்கே ஏதோ ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளதா..? 

Tuesday, February 14, 2012

57 குர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)

'இவ்வுலகின் வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் மூலம் மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும்' என்பதற்காகவே குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை இறைவன் விவரித்து கூறும்போது... அவற்றை மேலும் உறுதிப் படுத்துவதற்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புகள் மீதே அல்லாஹ் சத்தியமிட்டு அவ்வசனங்களை கூறுவதை குர்ஆனில் பல இடங்களில் நாம் காணலாம்..!

உதாரணமாக சில:-
வானத்தின் மீது சத்தியமாக 86:1
சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக 91:1
அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக  91:2
இரவு, பகல் மீது சத்தியமாக 92:1
அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக 95:1
தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக 95:2
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக 95:3
காலத்தின் மீது சத்தியமாக 103:1

ஆனால், அல்லாஹ் சொல்லும் சத்தியங்களில் மிக "மகத்தான சத்தியமாக" ஒரு சத்தியத்தை அல்லாஹ் சிறப்பித்து குறிப்பிடுவது எது தெரியுமா சகோ...?

Sunday, February 12, 2012

37 மகிழ்வுடன் ஒரு பகிர்வு

நான் பணிபுரியும் சவூதி அரேபிய அரசு அனல் மின் உற்பத்தி மற்றும் கடல்நீரை குடிநீராக மாற்றும் (SWCC) நிறுவனத்தில், சென்ற வருட நவம்பர் மாத இறுதியில், தானாக ஏற்பட்ட ஒரு திடீர் விபத்தில், உடனடியாக சிந்தித்து, சமயோசிதமாக செயல்பட்டு, தொழிலாளர் எவர் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து இன்றி, 600 MW (5 units) மொத்த மின்னுற்பத்தி திறன் மற்றும் மணிக்கு 20,000 cubic meter குடிதண்ணீர் உற்பத்தி திறன் கொண்ட ஆலையின் மற்ற எந்த உடமைக்கும், இயந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் யாதொரு சேதமுமின்றி, ஏக இறைவன் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால், அன்று ஷிஃப்டில் இருந்த நாங்கள் பத்து பேர், கடுமையாக உழைத்து  சரியாக trouble shoot செய்து பழுதை சரி செய்தற்காகவும், எங்களை தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு பாராட்டி, நிறுவனம் அளித்த Glass shield மற்றும் Certificate  ஆகியவற்றை தங்களுடன் இங்கே மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்..! 
:-) பாரக்கல்லாஹு ஃபீஹி..! :-)

Thursday, February 9, 2012

23 சுவாசிக்க 100% ஆக்ஸிஜன் நல்லதா..?

நம் பூமியை சூழ்ந்த பல வாயுக்களின் தொகுப்பான இந்த வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 %ம், ஆக்ஸிஜன் 21 %ம், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 %ம், ஆர்கான் 0.934 %ம், நியான் 0.0018 %ம், ஹீலியம் 0.00052 %ம், மீதம் மீதேன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் மிகக்குறைந்த அளவிலும் கலந்துள்ளன..!

நாம் சுவாசிக்கும் அந்த காற்றில், ஆக்ஸிஜன் 21% தான் உள்ளது. ஆனால், காற்றில் மனிதனுக்கு தேவையான குறைந்த பட்ச உடல்நலன் பாதிப்பில்லாத ஆக்ஸிஜன் அளவு 19%..! சில சமயம் நோயாளிகளுக்கு 'ஆக்ஸிஜன் மாஸ்க்'... நீருக்கு அடியில் நீந்த செல்வோருக்கு 'ஆக்ஸிஜன் சிலிண்டர்'... என்று சொல்ல/எழுத கேள்விப்பட்டிருப்பீர்கள். இது சரியா..? இதனால், 'நாம் மூச்சு விட 100% ஆக்ஸிஜன் இருந்தால் நமக்கு நல்லது' என்று நாம் நினைத்தால் - இல்லை, உண்மையில் அது தீங்குதான் விளைவிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்..!

Monday, February 6, 2012

11 உழவர்சந்தை போல், இடைத்தரகர் இல்லா மீனவர்சந்தை..!

தற்போதய பறந்து விரிந்து வாழும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒரு மணமகன் அல்லது மணமகள் தேடுவதற்கோ, அல்லது நமக்கு ஒரு நிலம், வீடு, வாகனம் போன்றன வாங்க/விற்க வேண்டும் என்றாலோ 'அவை எங்கெங்கே உள்ளன' என்பதையோ, 'அதற்கான தேவைகள் உள்ளவர்கள் எங்கெங்கு உள்ளனர்' என்று அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. இந்த இடத்தில் 'தரகு' என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிறது.


இதற்காகவே சிலர், அவர்களாக முயற்சித்து அதற்கான தகவல்களை முன்னமேயே திரட்டி வைத்திருந்து, பயனாளிகளுக்கு உடனுக்குடன் தருவதை தமது முழு நேரத்தொழிலாகவே செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட தொழிலை செய்வோரான இந்த 'தரகர்கள்' என்போர் இல்லாவிட்டால் இது போன்ற பல வியாபாரங்கள் சுணங்கும், இழுத்தடிக்கும் அல்லது தடைபட்டும் விடும்.

ஆனால் தரகர்களில் சிலர்,  பணம் பண்ணுவதற்காகவே எவ்வித பித்தலாட்ட-பதுக்கல்-மோசடியிலும் ஈடுபடுகின்றனர். இதனால், மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அவசியமானதாக ஆகிவிட்ட இந்த தரகுத்தொழிலை முழுமையாக 'தவறு' என நிராகரிக்கவோ அல்லது 'சரி' என அப்படியே ஏற்றுக்கொள்ளவோ முடியாத குழப்ப சூழல்தான் இப்போது நிலவுகிறது. 

Thursday, February 2, 2012

33 சிறுகதை - ஹராம்

தானே புயல்... தானே உருவாகி, தானே மையங்கொண்டு, தானே பலம் பெற்று, தானே நகர்ந்து, தானே கரை கடந்து, தானே சுழன்றடித்து, தானே சேதப்படுத்தி, தானே வலுவிழந்து, தானே ஓய்ந்தும் போனது... ஆகிய அனைத்தும் தானேவா நிகழந்தது..? இல்லை... இது இறை விதியா..? இது மனிதர்களுக்கு இறைவனின் சோதனையா..? ...போன்ற கேள்விகளெல்லாம் மனதை ஆக்கிரமிக்க இடமே இன்றி... பெருந்துயருடன் தலையில் துண்டை போட்டுக்கொண்டு கன்னத்தில் கை வைத்து என் மனதை போலவே சுக்கு நூறாய் உடைந்து போன எனது தள்ளு வண்டி இட்லி கடையின் முன்னே அமர்ந்து இருந்தேன். 'இங்கே கடையை நிறுத்தினால், சாலையின் நியான் விளக்கின் உதவியுடன் இரவு வியாபாரம் களைகட்டும்' என்று நிறுத்தும்போது தெரியவில்லை... இப்படி புயல்வரும்... அதனால், இந்த மின்சார விளக்குத்தூண் என்  பொருளாதாரத்தின் மீதே விழுந்து இப்படி உடைத்து தொலைக்கும் என்று..!
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...