அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, November 10, 2013

10 தமிழா..! 'பகுதி நேர பிணம்' ஆகாதே..!வருஷா வருஷம் வசூல் சாதனை (!?) உடைக்கப்பட்டுக்கொண்டு இருப்பதும்... ஒருநாள் சராசரி வசூலான 59 கோடி ரூபாய்க்கு பதிலாக, "இந்த தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் மூலம் 330 கோடி ரூபாயை (அஞ்சரை மடங்கு) மக்களிடம் இருந்து அரசு வசூல் செய்து சாதனை(!?)" போன்ற செய்தியும், நமது தமிழ்நாட்டு உண்மை நிலையை மிகவும் கேவலமாக எடுத்தியம்புகிறது. நம் எதிர்காலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சகோஸ். தினமும் விபத்துகள் பெருகுகின்றன. கல்வி, வேலை, உற்பத்தி, சிந்தனை, உடல்நலம், பொருளாதாரம், குடும்ப வாழ்வியல் நிலை, சாலை பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம்... என்று அனைத்தும் பாதிக்கப்பட்டு மொத்த சமூகமுமே பின்தங்கி போய்க்கொண்டு இருக்கிறோம்... மது விற்பனை செய்வோரையும், மருந்து விற்பனை செய்வோரையும் தவிர..!
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...