அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, December 11, 2014

10 Coccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...

"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான Coccyx ‬... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..?"


...என்று கேள்வி கேட்டு, Tail bone என்று இதற்கு மாற்றுப்பெயரிட்டு... இது மனித உடம்பில் ஒரு தேவையற்ற உறுப்பு.. (vestigial organ) என்று பெரும்பாலான அறிவியலாளர் கருதுகிறார்கள். 

இது முற்றிலும் தவறு..!

இறைவனின் படைப்பான நமது உடலில்..."நான் ஒரு -தேவையற்ற உறுப்பு- vestigial organ" என்று எந்த உறுப்பிலும் எழுதி ஒட்டி இல்லை. நாமாக சிந்தித்து எந்த உறுப்பின் பயனாவது 'தெரியவில்லை' என்றால், அது பற்றிய விளக்கம் இல்லை என்றால், அந்த அறியாமையாகிய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 'அது தேவை அற்றது' என்று அவசரப்பட்டு அறிவித்து விடுகிறோம். 

பின்னாளில் உண்மை புரியும்போது அதன் அவசியம் உணரும்போது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். நம் உடலில் எதுவும் வேஸ்டாக இருக்காது என்பது என் அனுபத்தில் எடுத்த அசைக்க முடியாத முடிவு. அதை எந்த விஞ்ஞானி வந்து மறுத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

-----------------------------------
ஓர் உண்மைச்சம்பவம் ஒன்றை ஊருக்கும் உலகுக்கும் உரைக்கிறேன்.
-----------------------------------

Monday, August 18, 2014

4 souq . com -ன் தள்ளுபடி ஃபிராடுத்தனம்

www. souq. com என்பது வளைகுடா பகுதியில் மிகவும் பிரபலமான இணைய வணிக நிறுவனம். திடீர் திடீர் என்று அதிரடி விலை குறைப்பு போட்டு அதை மெயிலில் அனுப்பி... புதிய பொருட்களை பரபரப்பாக விற்பார்கள். 'எப்படி இவ்வளவு குறைவாக விற்கிறார்கள்?!' என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதற்கு எல்லாம் விடை தேட மனமில்லாமல், அதிரடி தள்ளுபடி விலையில் புதிய பொருள் ஒன்று நம் வீடு தேடி வருவதால், நானும் அங்கே பொருள் வாங்க ஆசைப்பட்டேன். இது இயல்பானது. 



ஆனால்... அதே நேரம்,  ஒரு பொருளை, அதற்குரிய விலையில் அல்லாமல், படு குறைவான தள்ளுபடி விலையில் ஒருவர் விற்கிறார் எனில்... அதை நம்பி வாங்க நினைக்கும் எவரும்... ஏமாற தயாராக இருக்க வேண்டியதுதான் என்ற பாடத்தை நானும் கற்றேன். இரண்டு முறை..!

ஆம், இதுவரை...  இரண்டே முறை மட்டுமே சூக் டாட் காமில் பொருள் வாங்கி இருக்கிறேன். இரண்டு முறையும் நான் ஏமாற்றப்பட்டேன்..!

Tuesday, March 25, 2014

4 சஹாரா சாம்ராஜ்ய சக்ரவர்த்தி சிறைசென்ற பின்னணி தெரியுமோ?

மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு,மாட்டிக்கொண்டு இவ்வருடம் பிப்ரவரி 28-ல் 'Luck-No' வில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் தள்ளப்பட்ட சஹாரா நிறுவன முதலாளி சுப்ரதா ராய் பற்றி ஒரு நியூசும் வராமல் பார்த்துக்கொண்டனர் நமது தமிழ் ஊடக கொள்ளையர்கள்..! ஆங்கில ஊடங்களில்தான் ஓரளவு நியூஸ் வந்தன..!

சஹாரா நிறுவன முதலாளி சுப்ரதா ராய்

இந்தியாவில் மஹா பணக்காரர்கள் எனப்படும் கார்ப்பொரேட் பண முதலைகள்தான், சமுதாய நலன் பேணவேண்டும் என்ற நல்லுணர்வு சிறிதும் இல்லாமல், இந்தியாவையும் அதன் வளத்தையும்  சுயநலத்துடன் எப்படியெலாம் தைரியமாக அரசியல் & பண பலத்துடன் சட்டத்துக்கு கட்டுப்படாமல் துணிவுடன் கபளீகரம் செய்து கொண்டுள்ளார்கள என்று இப்பதிவில் அறிந்தால் நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள் சகோஸ்..!

Thursday, March 20, 2014

2 சவூதி 'லஹம் மந்தி' செயல்முறை (Photo Gallery)

நன்கு கழுவப்பட்ட ஆட்டிறைச்சி (லஹம்) யை இதுபோல சற்று பெரிய துண்டாக வெட்டி எடுத்து அதை படத்தில் உள்ள 'லஹம் மந்தி சமையல் கருவி'யின் மேல் தட்டிலும்..... 

Saturday, February 22, 2014

19 இறையச்சத்துக்கான இவ்வுலகப்பரிசு 40 இலட்சம் ரூபாய்..!

 சவூதியில் ஆடு மேய்க்க வந்த சூடான் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப்

முதற்கண் ஒரு சிறு முன்னுரை.

ஒரு  நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ  நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு நாட்டில்,புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.

நிற்க.

இனி தலைப்புக்கு செல்வோம் சகோஸ்.

இறையச்சத்துக்கான முதன்மை பரிசு மறுவுலக சுவனப்பரிசுதான். மற்றபடி இவ்வுலக பரிசு 40 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் அதுவும் ஒரு சோதனையே என்று கூறிக்கொண்டு... பதிவுக்கு செல்வோம் சகோஸ்.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...