அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label படைப்பு. Show all posts
Showing posts with label படைப்பு. Show all posts

Thursday, December 11, 2014

10 Coccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...

"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான Coccyx ‬... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..?"


...என்று கேள்வி கேட்டு, Tail bone என்று இதற்கு மாற்றுப்பெயரிட்டு... இது மனித உடம்பில் ஒரு தேவையற்ற உறுப்பு.. (vestigial organ) என்று பெரும்பாலான அறிவியலாளர் கருதுகிறார்கள். 

இது முற்றிலும் தவறு..!

இறைவனின் படைப்பான நமது உடலில்..."நான் ஒரு -தேவையற்ற உறுப்பு- vestigial organ" என்று எந்த உறுப்பிலும் எழுதி ஒட்டி இல்லை. நாமாக சிந்தித்து எந்த உறுப்பின் பயனாவது 'தெரியவில்லை' என்றால், அது பற்றிய விளக்கம் இல்லை என்றால், அந்த அறியாமையாகிய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 'அது தேவை அற்றது' என்று அவசரப்பட்டு அறிவித்து விடுகிறோம். 

பின்னாளில் உண்மை புரியும்போது அதன் அவசியம் உணரும்போது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். நம் உடலில் எதுவும் வேஸ்டாக இருக்காது என்பது என் அனுபத்தில் எடுத்த அசைக்க முடியாத முடிவு. அதை எந்த விஞ்ஞானி வந்து மறுத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

-----------------------------------
ஓர் உண்மைச்சம்பவம் ஒன்றை ஊருக்கும் உலகுக்கும் உரைக்கிறேன்.
-----------------------------------

Thursday, February 9, 2012

22 சுவாசிக்க 100% ஆக்ஸிஜன் நல்லதா..?

நம் பூமியை சூழ்ந்த பல வாயுக்களின் தொகுப்பான இந்த வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 %ம், ஆக்ஸிஜன் 21 %ம், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 %ம், ஆர்கான் 0.934 %ம், நியான் 0.0018 %ம், ஹீலியம் 0.00052 %ம், மீதம் மீதேன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் மிகக்குறைந்த அளவிலும் கலந்துள்ளன..!

நாம் சுவாசிக்கும் அந்த காற்றில், ஆக்ஸிஜன் 21% தான் உள்ளது. ஆனால், காற்றில் மனிதனுக்கு தேவையான குறைந்த பட்ச உடல்நலன் பாதிப்பில்லாத ஆக்ஸிஜன் அளவு 19%..! சில சமயம் நோயாளிகளுக்கு 'ஆக்ஸிஜன் மாஸ்க்'... நீருக்கு அடியில் நீந்த செல்வோருக்கு 'ஆக்ஸிஜன் சிலிண்டர்'... என்று சொல்ல/எழுத கேள்விப்பட்டிருப்பீர்கள். இது சரியா..? இதனால், 'நாம் மூச்சு விட 100% ஆக்ஸிஜன் இருந்தால் நமக்கு நல்லது' என்று நாம் நினைத்தால் - இல்லை, உண்மையில் அது தீங்குதான் விளைவிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்..!

Thursday, August 4, 2011

25 அமைத்துக்கொள்ளுடி,சாப்பிடுடி,செல்லுடி..

பொதுவாக இவ்வுலகில் எந்த உயரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஆண்/பெண் இவற்றில் வலிய பாலினம் எதுவோ அது தன் எளிய பாலினத்தை உணவு, உறைவிடம், கொடுத்து பாதுகாக்கிறது.  மனிதன் என்றால் கூடுதலாக உடையும் கொடுக்கிறான். (அந்தக்காலத்தில் வலிய கணவன் எனில், மனைவியின் உடை என்பது புலித்தோல்தானே..!? இல்லையேல்... இலை தழை தானே  ஆடை..!?) ஆக, 'வலியது' கையில்தான் குடும்ப நிர்வாகம் இருக்கிறது.  இந்த வலிமை... தோல், கொம்பு, தந்தம், தோகை... இப்படியாக... மனிதனில் புஜவலிமை என்றாகி நிற்கிறது. 


Wednesday, January 19, 2011

20 சவூதியில் ஒரு புதுவித கடல்வாழ் உயிரினம்?

          சவூதியில் சென்ற வாரம்,  தமாமுக்கும் கதீஃபுக்கும் இடையே ஸிஹாத் என்ற ஊரில் உள்ள மீன்பிடி துறை முகத்தில் ஒரு புதுவித கடல்வாழ் உயிரினத்தை பிடித்து வந்தனர் அவ்வூர் மீனவர்கள். விசேஷம் என்னவென்றால்... பல வருடங்கள் கடலில் மீன்படித்தொழிலில் பணியாற்றிய மீனவர்களுக்கே இது புதுவித உயிரினமாக இருந்துள்ளது..! அவ்வூரிலிருந்து தினமும் ஜுபைல் வந்து எனனுடன் பணியாற்றுபவர்--வார விடுமுறையில் எதேச்சையாக மீன் வாங்க நண்பர்களுடன் அங்கு  சென்றவர், அதனை உடனே தன் mobile camera-வில் படம் பிடித்து வந்து, "இதனை இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா?" என்றார். அவரிடமிருந்து ஈ-மெயிலில் பெற்றுக்கொண்ட சில புகைப்படங்கள்... இதோ உங்கள் பார்வைக்கு..!

Friday, October 22, 2010

25 ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!


ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.


previous home
Related Posts Plugin for WordPress, Blogger...