அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, May 31, 2012

26 அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

சகோ... இப்படி நீங்களோ நானோ அல்லது எவரா இருந்தாலும் எங்கேயாவது ஒரு இடத்திலே... ஏதோ ஒரு சூழலிலே... யாரோ ஒருத்தரிடமிருந்து... மேற்படி அர்ச்சனையை நாம் எப்படியோ பெற்றிருப்போம்..! இப்போது நம் நினைவை சற்று மெல்ல மீட்டிப்பார்த்தால்... எங்கே, எப்போது, எதற்காக, யார் நம்மை அப்படி கடிந்து கொண்டது என்று நியாபகம் வந்து விடும்..! அதன்படி நியாபகம் வராவிட்டால்... இதோ உங்களுக்காக சில க்ளூஸ்..! இதன்படியும் நியாபகம் வராவிட்டால்... ஸாரி... பதிவுலக சொல்வழக்குப்படி 'இதற்கு கம்பெனி பொறுப்பல்ல'..!
.

Saturday, May 26, 2012

36 கோடை-சூடு-ஈரம்-வியர்வை (Only for Gents)

முன்குறிப்பு :- இது முழுக்க முழுக்க ஆண்களுக்கான பதிவு..!
.
என் பள்ளி காலங்களிலும் சரி... கல்லூரி காலங்களிலும் சரி... எங்கள் வீடு ர்ர்ர்ரொம்பவே ஸ்ட்ரிக்ட்..! பகலில் சட்டையை போட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தால் போதும்..... "வேகாத வெயிலில் வெளியே போகாதே...?"(---மை மதர்)  "வெயிலை வீணாக்காமல் விளையாட்டு வேண்டி கிடக்கா...?" (---மை ஃபாதர்) ...என்ற கட்டளைகள் தூள்பறக்கும்..! விடுமுறை நாள் ஆனாலும் கூட... மாலை நான்கு மணிக்கு அப்புறம்தான் வீட்டை விட்டு வெளியே போகலாம், விளையாட..! இப்படியாக வெயில் படாமல் என்னை பொத்தி பொத்தி வளர்த்தார்கள்..!

Tuesday, May 22, 2012

16 இது 'கன்ட்டம்ப்ட் ஆஃப் கட்ட பஞ்சாயத்து'லே..!

சென்ற மாதம், எதேச்சையாக டிவி நியூசில் கேட்ட செய்தி..!


'உழைப்பவருக்கே நிலம் சொந்தம்', 'இருப்பவருக்கே இல்லம் சொந்தம்' போன்ற வெற்று ஓட்டரசியல் கற்பிக்கும் பிற்போக்கு சித்தாந்த உந்துதலுக்கு உள்ளாகி... 'சில வருடம் உழைத்து பராமரித்த தோட்டம்... தனக்கே சொந்தம்' என்று ஒரு தோட்டக்காரர், உரிமையாளருக்கு எதிராக அத்தோட்டத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடுக்க, நீதிபதியோ... 'அந்த தோட்டம் உரிமையாளருக்கே சொந்தம்' என்றும்... இப்படி ஒரு அநியாய வழக்கை போட்டதற்காக, தோட்டக்காரருக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார்..! அபூர்வமான இதுபோன்ற "மெயின் தீர்ப்புடன் இணைந்த இலவச தீர்ப்பு"... அதாவது '2 in 1 நல்ல தீர்ப்புகள்' நாட்டுக்கு ஆரோக்கியமானவை..! தீர்ப்பை வரவேற்கிறேன்..!

Tuesday, May 1, 2012

51 திருமணமா...? விபச்சாரமா..? எதை ஆதரிப்பீர்..?

தமிழகத்தின் வெகுஜன ஜனரஞ்சக முன்னணி வாரப்பத்திரிகை ஒன்றில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியார், இன்னும் பிரபலமாகி ஏகப்பட்ட சொத்தும் பக்தர்களும் சேர்த்து விட்ட நிலையில், தன்னை ஒரு பிரம்மாச்சாரி என்று கூறிக்கொண்டே ஒரு நடிகையுடன் விபச்சாரம் செய்த வீடியோ சன் நியுஸில் நாள் முழுக்க ஓடிய போது... அதுவரை சேர்த்து வைத்த பணத்தை தவிர்த்து...பெயரும் புகழும் இழந்தார்.

இந்நிலையில், அதுவரை இவர்மீது அதீத பக்திகொண்டு கடவுளாக கருதி வணங்கியோரும் எண்ணற்ற ஆத்திகரும் அதிர்ந்துதான் போயினர். இது, நாத்திகர்களுக்கு ஏகக்கொண்டாட்டமானது. வழக்கம் போலவே... முடிந்தவரை ஹிந்துமதத்தையும் அதன் கடவுள் கொள்கையில் உள்ள கோளாரையும் எடுத்துக்காட்டி அவரின் பக்தர்களையும் கிண்டல்-கேவலப்படுத்தி எக்கச்சக்க 'டவுசர் - கோமண பதிவுகள்' எல்லாம் தொடர்ந்து வெளியிட்டனர்.

இப்படியாக அந்த சாமியார் தலைமறைவு...போலிஸ் வலைவீச்சு... கைது... கோர்ட்டு... சிறை... ஜாமீன்... வழக்கு... வாய்தா என்று கேவலப்பட்டு கிடந்தவர், திடீரென இந்துமத ஆன்மிக குருவாக.. இளைய மதுரை ஆதினமாக பதவிப்பிரமாணம் செய்து முடிசூட்டப்பட்டு கெளரவிக்க பட்டபோது...  அப்போது அசிங்க அசிங்கமாக பதிவு பின்னூட்டங்கள் போட்டு அவரை திட்டியவர்களை ஏனோ இப்போது காணவில்லை..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...