சென்ற மாதம், எதேச்சையாக டிவி நியூசில் கேட்ட செய்தி..!
'உழைப்பவருக்கே நிலம் சொந்தம்', 'இருப்பவருக்கே இல்லம் சொந்தம்' போன்ற வெற்று ஓட்டரசியல் கற்பிக்கும் பிற்போக்கு சித்தாந்த உந்துதலுக்கு உள்ளாகி... 'சில வருடம் உழைத்து பராமரித்த தோட்டம்... தனக்கே சொந்தம்' என்று ஒரு தோட்டக்காரர், உரிமையாளருக்கு எதிராக அத்தோட்டத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடுக்க, நீதிபதியோ... 'அந்த தோட்டம் உரிமையாளருக்கே சொந்தம்' என்றும்... இப்படி ஒரு அநியாய வழக்கை போட்டதற்காக, தோட்டக்காரருக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார்..! அபூர்வமான இதுபோன்ற "மெயின் தீர்ப்புடன் இணைந்த இலவச தீர்ப்பு"... அதாவது '2 in 1 நல்ல தீர்ப்புகள்' நாட்டுக்கு ஆரோக்கியமானவை..! தீர்ப்பை வரவேற்கிறேன்..!
