அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, September 30, 2012

30 'சீனியர் சிட்டிசன்' : அரசின் சலுகைகள்


சென்ற முறை ஊரில் BSNL அலுவலகம் சென்று இணைய இணைப்புக்காக நான் மனுச்செய்யும் பொழுது... 'எந்த Internet Package சிறந்தது' என்று தேர்ந்தெடுக்க, அலுவலர் தந்த ஒரு குறிப்பேட்டை பார்த்தபோது... அதன் அடியில் இருந்த கடைசி வரி... "ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்கள் எனில் 20% மாதாந்திர கட்டணத்தில் சலுகை உண்டு" என்று போட்டிருப்பதை பார்த்தேன்..! அப்புறம் என்ன..? எனது தந்தையை மனுச்செய்ய வைத்து, சலுகையுடன் வீட்டுக்கு இணைப்பு வாங்கிவிட்டேன்..! :-))
---------------------------------------------------------------------
பிற்சேர்க்கை :
1-5-2013 முதல்... 
இச்சலுகையை BSNL நிறுவனம்  10% குறைத்து விட்டது. 
எனவே... என் இணையக்கட்டணம் 10% கூடி விட்டது. :-((
---------------------------------------------------------------------
இப்படியான பல சலுகைகளை மத்திய-மாநில அரசுகள் பல இடங்களில் வழங்குகின்றன. அது ஏனோ நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல்லை. கூடவே, பயன்படுத்திக்கொள்ள தேவையற்ற தயக்கம். இவற்றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!
.

Thursday, September 27, 2012

27 Supreme Court : அதிரடி தீர்ப்பில் நெத்தியடி கருத்து..!

H.L. Dattu --- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் --- C.K. Prasad

"சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்காதீர்" என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில் குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது.  குஜராத்துக்கு மட்டுமல்ல... இது அனைத்து மாநில அரசு , காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும் சேர்த்தே பொருந்தும்..!

Friday, September 21, 2012

15 ஓட்டரசியலில் காவிரி ஓர் அநாதை

1980கள்- அது ஒரு பொற்காலம் சகோ..! என்னதான் கடுங்கோடை ஆனாலும், வீதிக்கு வீதி - வீட்டுக்கு வீடு... கையால் அடிக்கும் ஒரு இரும்பு பம்பு (எங்க ஊரு பக்கம்  -தஞ்சை மாவட்டம் பாபநாசம்/பண்டாரவாடை/ராஜகிரி- 'வேம்பா' என்று சொல்வோம்) ஒன்று ஆங்காங்கே இருக்கும். அப்போது அதன் உயரம் கூட நான் இருக்கமாட்டேன். ஒரு கையால் கைப்பிடியை பிடித்து நான் இழுத்தாலே அதன் வாய் நிறைய தண்ணீர் கொட்டும். அத்தனை தெளிவான சுவையான குடி நீர் வரும்..! இப்போது... அதெல்லாம் அது ஒரு கனாக்காலம் சகோ..! ஏன் இந்த நிலை..? பதில் :- காவிரி..! இப்போதெல்லாம் போர் போட்டாலே சில இடங்களில் தண்ணீர் வருவது இல்லை என்பது ஒரு புறமிருக்க... வறண்ட காவிரி ஆற்றில் மணலைக்கூட காண முடியவில்லையே சகோ..! :-(( என்ன காரணம்..? யார் காரணம்..?

Thursday, September 13, 2012

44 காட்டுமிராண்டிகளுக்கு கடுங்கண்டனம்..!


அப்பாவி மக்களை கொல்வது... விபச்சாரம்... ஓரினச்சேர்க்கை... போன்ற மனிதநாகரிகத்துக்கு எதிரானவற்றுக்கு கடும் தண்டனைகள் வழங்கி அவற்றுக்கு தடை போட்ட புரட்சி வாழ்வியல் மார்க்கம்தான் இஸ்லாம்..!

பெண்கள், குழந்தைகள். வயோதிகர்கள், மத குருமார்கள் போன்றவர்கள் தங்களிடம் போர்களத்துக்கே வந்து நின்றாலும் கூட... அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது... என்ற தூய்மையான வழியை போதித்த மார்க்கம்தான் இஸ்லாம்..!

இதெல்லாம்... 'நம் ஏக இறைவன் நமக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று கட்டளை இடுகிறான்' என்று மக்களுக்கு எடுத்துரைத்து... தாமும் இறைவன் சொன்னபடி சரியாக வாழ்ந்துகாட்டியவர்தான் நம் இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்..!

அன்னார் பற்றி புனைவாக ஒரு ஆபாசமான அடல்ட்ஸ் ஒன்லி செக்ஸ் சினிமா எடுக்க வேண்டும் என்றால்... எவ்வளவு கேவலமான தரங்கெட்ட மிருக சிந்தனை கொண்டவனாக அவன் இருக்க வேண்டும்..? ஆம்..! எடுத்து இருக்கிறார்கள்... சில அமெரிக்க காட்டுமிராண்டிகள்..!
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...