அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, August 27, 2012

139 'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்?எப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..! அதற்காக நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டியது பேரானந்தம்..! இந்த சந்திப்பு சென்னையில் சீரும் சிறப்புமாக அமைய முயற்சி எடுத்த மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது இனிய நன்றிகள்..! என்னால் கலந்து கொள்ள இயலாவிடினும் நேரலையில் காண முடிந்தது..!


இந்த பதிவர் சந்திப்பு பற்றி பரபரப்பு தலைப்பு வைத்து, அதன்மூலம் ஏகப்பட்ட ஹிட்ஸ் அள்ளுவது என்பது இவ்வார பதிவுலக ஹிட்ஸ் நோய் ஆகிவிட்டது..! பொதுவாக அந்தந்த வாரத்தில் என்னன்ன விஷயங்கள் 'ஹாட் டாப்பிக்'கோ அதை வைத்து தங்கள் பதிவுக்கு தலைப்பு போடுவார்கள் நம் பதிவர்கள்..! 

உதாரணமாக... 

இணைய லாட்டரி சீட்டு சூதாட்டத்தில் ஈடுபடும் சவூதி தொழிலாளர்களை பற்றி சொல்லி அதை ஒழிக்க ஒரு பதிவு போடும்போது... "சவூதியில் மங்காத்தா" என்று தலைப்பிட்டு பதிவு போடுவார் பதிவர்..! அந்த வாரம் நடிகர் அஜீத் நடித்த 'மங்காத்தா' என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்ததால்... 'தியேட்டர் இல்லாத நாட்டில் அஜீத் படம் ரிலீஸா?' என்று ஆர்வமாக மக்கள் கூட்டம் அலைமோதும்..! ஹிட்ஸ் மழை பொழியும்..! சூதாட்ட விழிப்புணர்வு பல தரப்பினரிடம் விஷயம் சென்று சேர இது ஒரு வழிமுறை என்று நினைத்து இருக்கலாம்..!

இன்னும்... ஒருவர் 'ரோபோ' பற்றி, அறிவியல் தொழில்நுட்ப தகவல்பதிவாக போட்டு அது பலரிடம் சேற விரும்பினால்... அப்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' என்ற திரைப்படம் ரிலீசாகி இருக்குமேயானால்... "எந்திரன் - ஓர் அலசல்" என்று தலைப்பு வைத்தால்... அவ்ளோதான்..! சும்மா பதிவு பிச்சிக்கிட்டு போகும்..! ஹிட்ஸ் அடைமழைதான்..! நம்ம தமிழ்மணம் திரட்டியும் தன் பங்குக்கு சும்மா இல்லாமல், தலைப்பை மட்டும் பார்த்து விட்டு... திரைமணத்தில் மாற்றிப்போட்டுவிட்டால்... அவ்ளோதான்... குழப்பம் இன்னும் நன்றாக களைகட்டும்..! :-)) எப்படியோ... 'ரோபோ' பற்றி தொழில்நுட்ப விஷயம் அதை விரும்பாத பலரிடம் சென்று சேர்ந்துவிடும்..! ஆனால்... சினிமாவில் ஆர்வம் இல்லாத - தொழில்நுட்பத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டவர், அது பற்றிய துறைசார்ந்த அறிவு உள்ளவர்... அந்த முக்கிய பதிவை காணாமலேயே போக வாய்ப்பு உண்டு..! ஆயிரம் ஹிட்ஸ் வாங்கினாலும் அவரின் ஒரு ஹிட் இல்லை என்பது அந்த பதிவுக்கு ஒரு பெரிய மைனஸ்தான் அல்லவா சகோ..? 

என்னைப்பொருத்த வரை இதுபோன்ற பரபரப்பு தலைப்பையாவது ஏற்கலாம்..! இன்னும், இதொன்றும் அவ்வளவு பெரிய தவறுமில்லை..! ஆனால், நேற்று ஒரு பதிவர்... "பதிவர் சந்திப்பு புகைப்படங்கள்" என்று ஒரு பதிவு போட்டார்..! ஃபோட்டோ பார்க்கும் ஆர்வத்துடன் சென்று பார்த்தால்...'யாராச்சும் சீக்கிரமா ஃபோட்டோஸ் போடுங்கப்பா' என்கிறார் அவர்..! அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ...! இதுபோன்ற ஏமாற்று வேலைகளை நாம் செய்யக்கூடாது..! :-)) சுட்டிக்காட்டப் பட்டவுடன், தன் தவறுணர்ந்து பதிவை நீக்கி, அதே சுட்டியில் வருத்தப்பட்டு மன்னிப்பும் கோரி இருந்தார்... அந்த சகோதரர்..! இதன்மூலம் இவர் மற்றவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக ஆகிக்கொண்டார்..! நன்றி சகோ..!

ஆனால் இதைவிட படுமோசம் எல்லாம் உள்ளது..! 'பதிவர் சந்திப்புக்கு அவசியம் நாம் போக வேண்டும்' என்ற கருத்தை சொல்லும் ஒரு பதிவுக்கு "பதிவர் சந்திப்பை புறக்கணிப்போம்" என்றெல்லாம் தலைப்பு வைப்பது படுகேவலமான ஹிட்ஸ்மேனியா நோய் முற்றிய கயமைத்தனம்..! தன்னுடைய பயண பிளான் சொதப்பிவிட்டதை... (நன்றாக நடக்கும்) 'பதிவர் சந்திப்பு சொதப்பிவிட்டது' என்பதெல்லாம் ரொம்ப ஓவர்..! இவர்களுக்கு, நான் ஒரு சூப்பர் ஐடியா தருகிறேன்..! 

இதோ உங்களுக்கு ஒரு 'ஹிட் தலைப்பு'..! 

"(பதிவர் பெயர் போட்டு) - நீ சாவனும்டா" என்று தலைப்பு வைக்கணும்..! 'அடப்பாவி'ன்னு.... எல்லாரும் விழுந்தடித்து உள்ளே போயி பார்த்தா... "நீ  பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து நல்லா இருக்கனும்... 'நீ சாவனும்டா' என்று உன் எதிரி கூட நினைக்க மாட்டான்..! 'நீ என் நன்பேண்டா'..." என்று பதிவை முடிக்கனும்..!

கூடிய  சீக்கிரம் ஹிட்ஸ்மேனியா காரர்களின் பதிவுகள் இப்படி வந்தாலும் ஆச்சர்யப்படாதீர்கள்..! அதற்காகவே முன்னரே சொல்லிவிட்டேன்..! :-))

இதை எல்லாம் பார்த்து நொந்து போன எண்ணங்களில் இருந்து உருவானதாக இருக்கலாம், சகோ.பிலாசபி பிரபாகரனின்.. இந்த பதிவு..! அதில் 'உண்மைக்கு புறம்பான தலைப்பு'களை வெறும் வெற்றுப்பரபரப்புக்காக வைத்து பதிவிடும் விஷயங்களை கலாய்த்தல் முறையில் சுட்டிக்காட்டி பல நல்ல செய்திகளை சொல்லி இருந்தார் சகோ.பிரபா..!  வெல்டன் பிரபாகரன்..!

ஆனால்... அதில், 'வடைபஜ்ஜி - டீக்கடை'  சகோ.சிராஜுதீன் ஐஸ் கிரீம் சாப்பிடும் அழகிய (!) புகைப்படம் ஒன்றை போட்டு... அதன் கீழே.... "பதிவர்கள் நட்பை விரும்பாத சிராஜுதீன்...! (அம்புக்குறி இடப்பட்டுள்ளது)" ....என்று எழுதி இருந்தார்..! இதைத்தவிர வேறு தகவல் அங்கே ஒன்றும் இல்லை..! ஏதோ... சும்மா ஜாலியாக கலாய்க்கிறார் என்பது மட்டும் புரிந்தது. ஆனால், அம்புக்குறி மேட்டர் என்ன என்றுதான் புரியவில்லை..! அதனால்... அவரிடம் பின்னூட்டத்தில் அதுபற்றி கேட்டிருந்தேன்..!

பதிவர் சந்திப்பில் சகோ.சிராஜுதீன் (நன்றி - சகோ.பிலாசபி பிரபாகரன்)

நானெல்லாம் எந்த ஹோட்டல் சென்றாலும் சரி..., எந்த வீட்டின் விருந்து என்றாலும் சரி... இலையில் போடப்பட்ட விருந்து என்றால்... அதை எதிர்ப்பக்கம்தான் மடிப்பேன்..! 

காரணம்..? 

இலையில் நமது பக்க பகுதியில் நாம் சாப்பிட்டது போக... எலும்புத்துண்டோ... மாங்காய் முருங்கைக்காய் தோளோ... அல்லது மிளகாய், கருவேப்பிலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், எலுமிச்சை ஊறுகாய் தோள்  போன்ற எச்சங்களையும் இலையின் எதிர்ப்புறம்தான் இட்டு நிரப்புவோம்..! 

நமக்கு சுவை பிடிக்காத கறிகாய் கூட்டு போன்றவையும் மீதம் இருக்கலாம். மேலும்...  நாம் கடைசியில் சாப்பிட்ட மோர் அல்லது அதற்கு முன்னர் சாப்பிட்ட ரசம் போன்றவை மீந்து போய்... இலையின் நடுப்பகுதியில் தேங்கி நிற்கலாம். இவற்றை எல்லாம் இழுத்துப்போட்டு நமது பக்கமாக வாழை இலையை மடித்தால் என்னாகும்..? 

அனைத்தும் நம் பக்கமாக வழிந்தோடி வந்து நமது ஆடையில் ஊற்றி  நாஸ்தி பண்ணிவிடாதா..? இப்படி அல்லாமல் எதிர்ப்புறமாக இலையை மடிப்பதுதானே பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் நாசூக்காகவும் இருக்கும்..? 

அதுமட்டுமல்ல... நாம் சாப்பிட்ட பக்கத்து வாழை இலை காலியாக இருக்கும். அதை எதிர்ப்புறமாக மடிப்பதுதான் இலகுவானது..!  இரண்டு புறமும் மடித்துப்பார்த்த பின்னர்... நான் சிந்தித்து எடுத்த தீர்க்கமான அறிவியல் சார்ந்த முடிவான இது... எனது வாழ்வியலில் நான் சந்தித்த சொந்த அனுபவம்..! இதே அனுபவம் பலருக்கும் இருக்கும்..! பலரும் இதேபோல எதிர்ப்புறம் இலையை மடிப்பதை பல சொந்தக்காரர்களின் விருந்துகளிலும், மீண்டும் வரவழைக்கும் ருசியுடன் கொண்ட உயர்தரமான சமையல் கொண்ட மிக நல்ல ஹோட்டல்களிலும் நேரில் கண்டிருக்கிறேன்..! 

ஆக, சகோ.சிராஜுதீனின் செயல், அறிவுப்பூர்வமான சரியான செயல்தான்..!

விஷயம் இப்படி இருக்க, அந்த பதிவில்... சகோ.பிரபா வந்து எனக்கு சரியான விளக்கம் தரும் முன்னர்... ஊடாலே வந்த "தலைகீழாக தொங்கும் ஒரு பாலூட்டி விலங்கின் பின்னூட்டம்" ஒன்றின் மூலம் நான் அறிந்து கொண்ட புதுமையான - கேள்விப்படாத - மூடநம்பிக்கைத்தகவல் என்னவென்றால்......... 

"எலையை எதிர்பக்கமா சாப்டு மடிச்சா மீண்டும் இந்த விருந்து/ சாப்பாடு / உறவு வேண்டாம்னு நினைப்பதாக தமிழக கலாச்சாரம்(?!?) "

என்னது...? தமிழர் கலாச்சாரமாம்..! யார் இப்படி எல்லாம் செய்கிறார்கள்..? கேள்விப்பட்டதில்லை..! நல்லா கேளுங்க இவருகிட்டே..! இதெல்லாம் என்ன "தலைகீழ் கலாச்சாரம்" என்று...? ஹா...ஹா...ஹா... ஒருசிலரின் மூடநம்பிக்கை தமிழர் கலாச்சாரம் என்றாகிவிடுமா..? எதையாவது எழுத வேண்டியது..!

இன்னும் சொல்கிறார் அவர்..! 

"தமிழ் நாட்டுல பொண்ணு பார்க்கப்போனால் சாப்பாடு போட்டு சாபிடும் போது எலையை எதிர்பக்கம மடக்கினால் பொண்ணு பிடிக்கலைனு சொன்னதா அர்த்தம் " ---அடப்பாவி தலைகீழியே...! 

வீடு வீடா பொண்ணு பார்க்க போவீங்க..! அவங்க வீட்டிலே எல்லாம் உம்மை மதித்து சாப்பாடு போடவேண்டும்..! சாப்பாடு ருசியா இருக்குதா இல்லையான்னு தெரிஞ்ச பின்னாடிதான் பொண்ணு பிடிக்குதா இல்லையான்னு முடிவு பண்ணுவீரோ..? வயிறு முட்ட ருசிச்சி சாப்பிட்டுவிட்டு, வெட்கமே இல்லாமல்... உமக்கு 'சுவையாக சமைத்துப்போட்ட அந்த அப்பாவி பெண்ணை பிடிக்கவில்லை' என்று... இப்படி குறிப்பால் வேறு உணர்த்துவீர்களோ..? ஹா...ஹா...ஹா... என்னப்பா இது... மூடநம்பிக்கை..?

எந்த பொண்ணு ஃபோட்டோ ஒக்கேயோ அந்த வீட்டுக்கு மட்டும் பொண்ணு பார்க்க போலாமே..? எந்த பொண்ணு புடிச்சிருக்கோ அந்த வீட்டில் மட்டும் சாப்பிட உட்காரலாமே..? ஏன்... பெண்கள் உம் வீட்டுக்கு மாப்பிள்ளை பார்க்க வந்து உம்முடைய தலைகீழ் தோற்றம் பிடிக்காமல் அதேபோல செய்தால் சும்மா விடுவீரோ..? ஏன் இந்த சமநீதியை மாப்பிள்ளை பார்ப்பதில் அனுமதிப்பதில்லை..? என்னே... ஓர் ஆணாதிக்கம்..? அகங்கார திமிர் கலாச்சாரம், உம்முடையது..? இதை மட்டுமா... இன்னும் சொல்கிறார்..! 

"அப்புறம் கருமாதி எனப்படும் 16 ஆம் நாளுக்கு அப்புறம் போடும் சாப்பாட்டில் எல்லாரும் எலையை எதிர்ப்பக்கமாக மடிக்கணும் அர்த்தம் இது போல் துக்க சாப்பாடு சாப்பிட இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்பது. " 

---அதாவது எதிர்ப்புறம் எப்போது மடிப்பாங்களாம் என்றால்... இனி துக்கமே இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்றாம்..! இது அறிவியல் பூர்வமாக சாத்தியமா..? ஒரு மனிதன் பிறந்தால் அவன் நிச்சயம் இறந்தே ஆக வேண்டும் அல்லவா..! இதுதானே உலக நியதி..? இதுதானே நிகழ்வில் உண்மை..? இவர் இலையை எதிர்புறமாக மடித்தால் மட்டும் இனி இறப்பு இந்த வீட்டின் பக்கமே வராமல் ஓடி விடுமா..? எல்லாரும் அந்த வீட்டில் சாவே இல்லாத சிரஞ்சீவி என்று ஆகிவிடுவார்களா..? இலையை எதிர்ப்புறம் மடித்து இப்படி 'காலத்தை வென்ற' ஒரு வீட்டையாவது காட்ட இயலுமா...? அந்த கருமாதி அந்த வீட்டில் வந்ததுக்கு காரணம்... இதற்கு முன்னர் இந்த தலைகீழி இலையை எதிர்ப்பக்கம் மடிக்காமல் போனதா..? ஹா...ஹா...ஹா... என்னப்பா இது... மூடநம்பிக்கை..? 

பிறப்பும் இறப்பும் இயற்கையான ஒன்று என்பதை எப்போது நாம் தெளிவாக உணரப்போகிறோம்..? வெறும் இலையை எதிர்ப்பக்கம் மடிப்பதால் மட்டும் சாவைவிட்டு தப்பிவிட முடியுமா..? இத்தனை கல்வி கற்ற பின்பும் இன்னுமா மூட நம்பிக்கைகள் ஒழியவில்லை...? எப்போது திருந்த போகிறோம்..?

ஒருவேளை.... பொண்ணு வீட்டில் தட்டில் (!) சோறு போட்டால்... பொண்ணு பிடிக்க வில்லை என்று... சாப்பிட்ட எவர்சில்வர் தட்டை 'மடிக்க முடியாது' (?!) என்பதால்... தட்டை 'தலைகீழாக' கவுத்து போட்டு உணர்த்த வேண்டுமோ தலைகீழியே..? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ...! :-)) 

கருமாதி வீட்டில் தட்டில் சோறு தின்றுவிட்டு தட்டை கவுத்து போட்டால் இனி சாவே வராதோ தலைகீழியே..? :-(( 

அது போகட்டும்...! கல்யாண வீட்டில் எவர் சிலவர் தட்டில் விருந்து போட்டு இருந்தால் என்ன பண்ணுவது..? எப்படி அதை கவுப்பது...? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ...! ஐடியா சொல்லுங்க சகோஸ்...! 

அடுத்த பதிவர் சந்திப்பில், வாழை இலை கிடைக்காமல்... ஒருவேளை...  தட்டில் விருந்து போட்டால்... கலந்துகொள்ளும் நமக்கும் தேவைப்படும் அல்லவா..?

ஒழியட்டும் தவறான மூடக்கலாச்சாரங்கள்..!


பின்னூட்ட  விவாதங்களுக்கு பிறகான பிற்சேர்க்கை
 =============================================================
சகோஸ்.... ஒரு பொது அறிவிப்பு..!

'தமிழக கலாச்சாரம்' என்று ஒரு தலைகீழி சொன்னதால்தான் இந்த பதிலடி பதிவே..! தமிழன் என்ற முறையில் 'இது மூடநம்பிக்கை' என்று பதிலடி தர எனக்கு சகல உரிமையும் உள்ளது..! உண்மை இப்படி இருக்க, மதவாதம், மதநிந்தனை என்று  தேவையற்ற திரிபு வாதத்தில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்த பதிவுக்கும் எந்த மதத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இதுவரை இல்லை..!

ஆனால்....

'எப்படி இலை மடிப்பது' என்பது... 'சமய சார்பான நம்பிக்கை' என்று சைவ/வைணவ வேதங்களில் இருந்து எவரேனும் ஆதாரம் காட்டினால்...
இந்த பதிவு தூக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன்..!

=============================================================

139 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...