வருஷா வருஷம் வசூல் சாதனை (!?) உடைக்கப்பட்டுக்கொண்டு இருப்பதும்... ஒருநாள் சராசரி வசூலான 59 கோடி ரூபாய்க்கு பதிலாக, "இந்த தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் மூலம் 330 கோடி ரூபாயை (அஞ்சரை மடங்கு) மக்களிடம் இருந்து அரசு வசூல் செய்து சாதனை(!?)" போன்ற செய்தியும், நமது தமிழ்நாட்டு உண்மை நிலையை மிகவும் கேவலமாக எடுத்தியம்புகிறது. நம் எதிர்காலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சகோஸ். தினமும் விபத்துகள் பெருகுகின்றன. கல்வி, வேலை, உற்பத்தி, சிந்தனை, உடல்நலம், பொருளாதாரம், குடும்ப வாழ்வியல் நிலை, சாலை பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம்... என்று அனைத்தும் பாதிக்கப்பட்டு மொத்த சமூகமுமே பின்தங்கி போய்க்கொண்டு இருக்கிறோம்... மது விற்பனை செய்வோரையும், மருந்து விற்பனை செய்வோரையும் தவிர..!
நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label டாஸ்மாக். Show all posts
Showing posts with label டாஸ்மாக். Show all posts
Sunday, November 10, 2013
10 தமிழா..! 'பகுதி நேர பிணம்' ஆகாதே..!
வருஷா வருஷம் வசூல் சாதனை (!?) உடைக்கப்பட்டுக்கொண்டு இருப்பதும்... ஒருநாள் சராசரி வசூலான 59 கோடி ரூபாய்க்கு பதிலாக, "இந்த தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் மூலம் 330 கோடி ரூபாயை (அஞ்சரை மடங்கு) மக்களிடம் இருந்து அரசு வசூல் செய்து சாதனை(!?)" போன்ற செய்தியும், நமது தமிழ்நாட்டு உண்மை நிலையை மிகவும் கேவலமாக எடுத்தியம்புகிறது. நம் எதிர்காலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சகோஸ். தினமும் விபத்துகள் பெருகுகின்றன. கல்வி, வேலை, உற்பத்தி, சிந்தனை, உடல்நலம், பொருளாதாரம், குடும்ப வாழ்வியல் நிலை, சாலை பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம்... என்று அனைத்தும் பாதிக்கப்பட்டு மொத்த சமூகமுமே பின்தங்கி போய்க்கொண்டு இருக்கிறோம்... மது விற்பனை செய்வோரையும், மருந்து விற்பனை செய்வோரையும் தவிர..!
தேடுகுறிச்சொற்கள் :-
அனுபவம்,
ஆரோக்கியம்,
குடி,
சமூகம்,
சரியான புரிதல்,
டாஸ்மாக்,
மனிதவளம்
Tuesday, July 23, 2013
9 தமிழக காலிக்கல்வி கூடங்கள்
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
கல்வி,
சமூகம்,
டாஸ்மாக்,
தமிழ்நாடு அரசு,
நிகழ்வுகள்
Thursday, January 17, 2013
44 If prostitution legalised... விளைவு..? ---ஓர் அலசல்.
டெல்லி ஃபிசியோதெராஃபி மாணவிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரவாத சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் வல்லுறவு தொடர்பான இந்திய சட்டத்தை கடுமையாக்குவது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி ஜே.ஸ்.ஷர்மா கமிட்டி ஒன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியிடம் 'பாரதிய பாட்டிடா' என்றதன்னார்வ தொண்டு நிறுவனம் (!!?!!) ''விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளது. மேலும் ''நாட்டில் இதுபோன்ற கற்பழிப்புகள் நிகழ காரணம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்காததுதான்'' என்றும் கூறியுள்ளது..!
பொதுவாக உலக அளவில் உள்ள NGO க்கள் எல்லாருமே இதே மாதிரியான புரிதலில்தான் உள்ளனர். இது சரியா, இதனால் raping குறையுமா, வேறு என்ன பக்க விளைவுகள் ஏற்படும்... என்பதை இப்பதிவில் அலசுவோம்.
தேடுகுறிச்சொற்கள் :-
NGO,
Rape,
சமூகம்,
டாஸ்மாக்,
தவறான புரிதல்,
நிகழ்வுகள்,
விபச்சாரம்
Thursday, August 23, 2012
72 மனித உரிமைக்கு எதிரான குடியை ஆதரிக்காதீர்
![]() |
| கழக ஆட்சிகளின் கடந்த நாற்பதாண்டு சாதனை... எதிர்கால தமிழகத்துக்கு சோதனை..! |
கடந்த சில நாட்களாக பதிவுலகில் குடிக்கு எதிரான பதிவுகள் ஒருபுறமிருக்க... குடிக்கு ஆதரவான குடிகாரபதிவர்கள் தங்கள் பங்குக்கு குடியை ஆதரித்து பதிவுகள் போட்டு வருவதை காண்கிறோம். கூடவே, குடியை எதிர்ப்போருக்கு 'மதவெறியர்கள்' என்ற பட்டமும் தரப்படுகிறது. குடியை வெறுத்து குடிக்காமல் நல்லவர்களாக இருப்போர் அனைத்து சமயங்களிலும் உள்ளனர் எனபது உண்மைதான்..! எனில், நாத்திகர்கள் எல்லாருமே குடிகாரர்கள் என்கிறார்களா...?! புரியவில்லை..! :-))
நம்மை சுற்றி உள்ள எவ்வளவோ சமூக தீமைகளில் ஒன்றுதான் 'குடி'. எத்தனையோ சமூக தீமைகளை எதிர்த்து பதிவு போட்டு இருக்கிறோம். அப்போதெல்லாம் வராத எதிர்ப்பு குடியை எதிர்த்து பதிவு போட்டதும் வருகிறதென்றால்... குடி போதை வெறி மக்களிடம் ரொம்ப விபரீதமாக ஊடுருவி உள்ளது..! எனவே, இனி குடியை எதிர்த்து அவ்வப்போது விழிப்புணர்வூட்டி பதிவு போட வேண்டியது, சமூக நலன் நாடும் பதிவர்களின் அவசியமாகி விட்டது..!
தேடுகுறிச்சொற்கள் :-
குடி,
சமூகம்,
சரியான புரிதல்,
டாஸ்மாக்,
நிகழ்வுகள்,
போதை,
மது
Saturday, January 22, 2011
18 26 / 1 : 'குடி' அரசு தினமா இனி...?
டிஸ்கி :
என் இந்திய குடியரசு சார்பாக தமிழக 'குடி'அரசுக்கு ஓர் ஆதங்க மடல்.
டிஸ்கி ஆஃப் டிஸ்கி :
( இந்த மடல் உரைநடை வடிவில் எழுதப்படவில்லை...! )
-----------------------------------------------------------------------------------------------------------------
விடுனர் பெறுனர்
தேடுகுறிச்சொற்கள் :-
உடல்நலம்,
குடியரசு தினம்,
சமூகம்,
டாஸ்மாக்,
தமிழ்நாடு அரசு,
மனிதவளம்
Subscribe to:
Posts (Atom)