அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, October 29, 2011

32 லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'


மக்களால்  தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு) 
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு) 
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! 
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!

Thursday, October 27, 2011

35 "Stop Fire-Crackers" : இனி,வேண்டாம் பட்டாசு..!

டிஸ்கி:- சென்றவாரமே வந்திருக்க வேண்டிய இந்த பதிவை நான் வேண்டுமென்றே தீபாவளி முடிந்து வெளியிட காரணம், இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மனக்கசப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும், சரியான உட்கருத்து சரியானவர்களிடம் சற்று நிதானமாகவே சென்று சேர்ந்தாலும் ஆழமாகவும் அழுத்தமாக சேரட்டும் என்பதாலுமே..! 

பொதுவாக மதச்சார்பற்ற நம் நாட்டில் சகல சமயத்தவரும் அவரவர் பண்டிகைகளை கொண்டாட உரிமை பெற்றவர்கள். அந்த வகையில் தீபாவளி கொண்டாடுவோர்...  (பலவகையினர் எனினும், இந்த பண்டிகைக்கு அவர்களால் காரணமாக நிறைய புராணக்கதைகள் கூறப்படுகின்றன... அவை பிற சாராரால் மறுக்கப்படுகின்றன... வேறு சாரார், அவை தமிழருக்கு எதிரானது என்று கடும் ஆவேசத்துடன் புறக்கணிக்கின்றனர்... என்றாலும் இப்பதிவுக்கு இதெல்லாம் அவசியமல்ல... காரணம் நான் தீபாவளி பண்டிகையை ஆதரிப்பவன் அல்லன், மாறாக... அதை கொண்டாடுவோரையும் புறக்கணிபோரையும் இணக்கமாக கருதுபவன்... அவர்களின் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக பாதுகாப்பாக கொண்டாட வாழ்த்துபவன்...) ஏறக்குறைய அனைவருமே, அதை தம் சமயப்பண்டிகையாக கொண்டாடும் போது மிக முக்கியமாக பட்டாசு வெடித்துத்தான் கொண்டாடுகிறார்கள். பட்டாசு ..! இதுதான் இப்பதிவின் மையப்பேசுபொருள்.

Sunday, October 23, 2011

49 அறுந்து விழும் லிஃப்டுக்குள் நீங்கள் இருந்தால்... உடனே செய்ய வேண்டியவை..!

நேற்று  இரவு... ஒரு "ஜீவ-மரண போராட்டமாக" கழிந்தது. இறைவன் அருளால் நான் பிழைத்து இருப்பதால் இன்று இந்த பகிர்வு..! நேற்று 'நைட் ஷிஃப்டி'ல் நான் பணிபுரியும் பவர் ப்ளாண்டில் பணி ஆரம்ப ரீடிங் போட லிஃப்டில் டாப் ஃப்ளோர் (12-th floor) சென்று, running equipments' reading எடுத்துக்கொண்டே படிகளில் இறங்கி வருதல் வழக்கம் (150 படிகள்)..!

அப்படி நான் லிஃப்டில் டாப் ஃப்ளோர் சென்றபோது... 11-வது தளத்துக்கும் 12-வது தளத்துக்கும் இடையில் லிஃப்ட் 'ஸ்ட்ரக்-அப்' ஆகி ஏதோ... 'பூகம்பம் வந்த பூமி' போல குலுங்கி ஆடி 'தடால்' என்று நகராமல் பயங்கர சப்தத்துடன் நின்று விட்டது..! உள்ளே பேனலில் எந்த பட்டனும் வேலை செய்யவில்லை. லிஃப்ட் நகரவே இல்லை. அப்போது சோதனையாக நான் மட்டுமே லிப்ஃட்டின் உள்ளே..! அப்புறம் என்ன செய்ய..? அப்போது மணி 22:15.

Monday, October 17, 2011

45 மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

விக்கியுலகம் said...
Mr.பெயரிலி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்....திரட்டியால் பதிவரா அல்லது பதிவரால் திரட்டியா!
திரட்டியே இல்லாத நாட்களிலும் பதிவர்கள் இருந்தனரே..!? பதிவுகள் வந்தனவே..!? இவர்களுக்காகத்தானே பின்னர் திரட்டிகளே தோன்றின..?! 

இப்போது, பதிவர்கள் எந்த பதிவுகளையும் திரட்டியில் இணைக்காவிட்டால்..? திரட்டியே இருக்காதே..!? அப்படியே இருந்தாலும், அதற்கு விளம்பரம் ஏதும் வராதே..!? இத்தளத்தில் இருக்கும் 89,000+ ஹிட்ஸ்களால் எனக்கு ஏதேனும் பைசா பலன் உண்டா..? 

ஆனால், திரட்டிகள் மூலம் கிளிக் செய்து பதிவுகள் படிக்க வந்த வாசகர்கள் மூலம்... திரட்டிகளுக்கு அல்லவா ஒவ்வொரு கிளிக்குக்கும் ஹிட்ஸ் விழுந்திருக்கும்..? அதிக ஹிட்ஸ் வாங்கும் பதிவர்கள் அதிகமாக ஒரு திரட்டியில் இணைந்திருந்தால்... அதன் மூலம் திரட்டிகளுக்கு அல்லவா "அலெக்ஸா ரேட்டிங்" எகிறி, அதன் அடிப்படையில் திரட்டிகள் தமக்குவரும் விளம்பரத்தில் இலாபம் கொழிப்பர்..?! இதில், பதிவர்களுக்கு என்ன பங்கை தந்திருக்கிறார்கள்..?!

எனவே, யாரை நம்பி யார் இருக்கின்றனர் என்று புரிகின்றதா..? 

சரி, இனி பிரச்சினைக்கு செல்வோம்..!


Saturday, October 15, 2011

30 Micro-Wave ஒவன் உபயோகிக்கும் நாம் அறிய வேண்டியன:

ஒரு முக்கிய அறிவிப்பு :-


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இந்த பதிவை நான் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. ஓட்டுப்பட்டையையும் தூக்கி விட்டேன்.



காரணம்:-  சமீபத்தில் சக பதிவர்கள் மீது தமிழ்மண நிர்வாகி ஒருவரின் மோசமான சொற்பிரயோகமும் அதனை தொடர்ந்த அவரின் கருத்து இஸ்லாமிய முகமனை கேலி செய்வதாக இருப்பதாலும் அது குறித்து முஸ்லிம்கள் சார்பாக தமிழ்மணத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மற்ற தமிழ்மண நிர்வாகிகளின் விளக்கம் வரும்வரை இந்த பதிவு தமிழ்மணத்தில் சேர்க்கப்படாது. யாரும் சேர்த்துவிடவும் வேண்டாம். 


என் சகோதர பதிவர்கள் பலரை கேவலமாக ஏசி இருப்பதற்கும், இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்கும் அவரும் தமிழ்மணமும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் ஓட்டுப்பட்டை இணைக்கப்படும். புரிந்துணர்வு இல்லாமல் தொடரும் இவர்களின் ஒத்துவராத உழைப்புக்கு நன்றி சொல்ல தற்காலிகமாக இயலவில்லை..!


========================================================================

நாம் வாழும் தற்போதைய அதிவேக 'ஃபாஸ்ட்ஃபுட்' யுகத்தில் பலருடைய சமையல் அறைகளில் 'மைக்ரோ-வேவ் ஒவன்' முக்கிய இடம் பிடித்துவிட்டது,  'எப்போ பார்த்தாலும் கிச்சன்குள்ளயே நிக்க வேண்டியதா இருக்கு' என்று அங்கலாய்த்தவர்ளுக்கு, மிகப்பெரிய ஆபத்பாந்தவனாக... இன்னுமொரு மகத்தான அறிவியல் கண்டுபிடிப்பாக இவை வந்து... நிமிடங்களில் சமையலை முடித்துக்கொடுத்து விடுகின்றன. இந்நிலையில், 'மைக்ரோ வேவ் ஒவனை உபயோகிப்பது பற்றி' முழுமையாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்துவதுதான் 'மைக்ரோ ஒவன்' மற்றும் அதை உபயோகிக்கும் நமக்கும் பாதுகாப்பு அல்லவா சகோ..?

Saturday, October 8, 2011

49 'கையுங்காபி-பேஸ்ட்டுமாய்' அகப்பட்டேன் :-(

ந்த வினாத்தாளில் மொத்தம் 100 கேள்விகள். அனைத்தும் சிறு சிறு பதில்களுக்கான கேள்விகள்தான். 94 கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதினாலும் அது எனக்கு பெரிதாக தெரியவில்லை. விடை தெரியாத அந்த 6 கேள்விகளை சும்மா விட மனசு வரவில்லை. :-(  அந்த 6 கேள்விகளும் பூதாகரமாக உயர்ந்து நின்று... என்னை கேவலமாக பார்த்தது. ஏனெனில், என் வாழ்வின்  எதிர்காலத்திற்கான தேர்வுகளில் அது ஒரு மிக முக்கியமான தேர்வு.

அதுவரை குனிந்து என் பேப்பரை பார்த்தே தேர்வு எழுதியவன் முதன்முதலாக நிமிர்ந்து அக்கம் பக்கம் பார்த்தால்... பக்கத்து டெஸ்க் நண்பன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்..!

'ஸ்ஸ்.. ஸ்ஸ்.. இந்த 5-க்கும் விடை  என்ன' என்றான்... கை விரித்து காட்டி, சைகையில்..!

Tuesday, October 4, 2011

31 தமிழ்மணத்திற்கு நன்றி..!





(SEPTEMBER 28, 2011 · POSTED IN சிறப்பிடுகைகள், தமிழ்மணம், நட்சத்திர வாரம் )  

{ முஸ்கி :-    பதிவு = வலைத்தளம் (WEBSITE/BLOGG)  ;; இடுகை = வலைப்பதிவு (POST) }

சென்ற வாரத்தில் இப்படி ஒரு இடுகையை தன் பதிவில் வெளியிட்டு இருந்தது, தமிழ்மணம்..!  

அவ்விடுகையில்,  

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...