அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, August 18, 2014

4 souq . com -ன் தள்ளுபடி ஃபிராடுத்தனம்

www. souq. com என்பது வளைகுடா பகுதியில் மிகவும் பிரபலமான இணைய வணிக நிறுவனம். திடீர் திடீர் என்று அதிரடி விலை குறைப்பு போட்டு அதை மெயிலில் அனுப்பி... புதிய பொருட்களை பரபரப்பாக விற்பார்கள். 'எப்படி இவ்வளவு குறைவாக விற்கிறார்கள்?!' என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதற்கு எல்லாம் விடை தேட மனமில்லாமல், அதிரடி தள்ளுபடி விலையில் புதிய பொருள் ஒன்று நம் வீடு தேடி வருவதால், நானும் அங்கே பொருள் வாங்க ஆசைப்பட்டேன். இது இயல்பானது. ஆனால்... அதே நேரம்,  ஒரு பொருளை, அதற்குரிய விலையில் அல்லாமல், படு குறைவான தள்ளுபடி விலையில் ஒருவர் விற்கிறார் எனில்... அதை நம்பி வாங்க நினைக்கும் எவரும்... ஏமாற தயாராக இருக்க வேண்டியதுதான் என்ற பாடத்தை நானும் கற்றேன். இரண்டு முறை..!

ஆம், இதுவரை...  இரண்டே முறை மட்டுமே சூக் டாட் காமில் பொருள் வாங்கி இருக்கிறேன். இரண்டு முறையும் நான் ஏமாற்றப்பட்டேன்..!
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...