அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, December 25, 2010

29 TNTJ தலைவர் அல்தாஃபியும் சுமார் 40 பாதிரியார்களும்

கும்பகோணத்தில்  40 பாதிரியார்களுடன் டிஎன்டிஜே நடத்திய நேரடி விவாதம்.

கடந்த 14-12-2010 செவ்வாய்க் கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குடந்தை மறை வட்டத்தில் உள்ள சுமார் நாற்பது பாதிரியார்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி, கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Tuesday, December 21, 2010

16 இஸ்லாமிய சிலதாரமணம் - The misuse.

திருக்குர்ஆன் என்பது, கிட்டத்தட்ட இருபத்து மூன்று ஆண்டுகள் சிறிது சிறிதாக மக்களை ஒரு சிறந்த சமூக வாழ்வியல் கோட்பாட்டின்பக்கம் நேர்வழிகாட்டி நெறிப்படுத்துவதின் பொருட்டு, இறைவனால் மக்களுக்கு தன் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலம் அனுப்பப்பட்ட நல்லுபதேசம்தான் என்பதை நாம் நன்கு அறிவோம். 

முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வசனங்களாய் அல்லாமல், நபியவர்களின் சொற்கள், செயல்கள் மற்றும் பிற முஸ்லிம்களின் செயல்களுக்கு நபியால் வழங்கப்படும் அங்கீகாரம் அல்லது தடை' ஆகிய இவற்றின் மூலமாக மக்களுக்கு இறைவன் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தெளிவான விளக்கம்தான் நபிவழி-ஹதீஸ் என்பதிலும் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. 

ஆக, மேற்படி இரண்டுமே இறைவன் புறத்திலிருந்துதான் வந்தன அல்லவா? ஒன்று குர்ஆனாய், மற்றொன்று ரசூலுல்லாஹ் (ஸல்...) அவர்களின் வாழ்க்கையாய்...!

Friday, December 17, 2010

12 இஸ்லாமிய சிலதாரமணம்

'பலதாரமணம்' எனும் பதம் இஸ்லாத்தை பொருத்தமட்டில் பொருந்தாது. 'சிலதாரமணம்' எனச்சொல்வதே சாலச்சரி..!

ஓர் உதாரணத்துக்கு... ராமனின் அப்பா தசரதனின் 'அறுபதாயிரதாரமணமும்',  இஸ்லாமிய 'நான்குதாரமண' அனுமதியையும் ஒரே தட்டில் வைத்து, எப்படி 'பலதாரமணம்' என்பது? ஆயிரத்திற்கும்... நான்கிற்கும்... ஒரு வித்தியாசமும் இல்லையா? சரி...சரி...மற்ற மொழிகளில் இல்லாமல், 'சில'வையும் 'பல'வையும் பிரித்தரிவிக்கும் ஒரு வசதி நம் தமிழில் இருக்கும்போது, நாமும் அதை பயன்படுத்திக்கொள்வோமே? மேலும், 'இஸ்லாமிய நான்குதாரமணம்' என்பது ஒரு அனுமதியே தவிர,  இந்த 'சிலதாரமணத்தை' விட 'ஒருதாரமணம்'தான் இஸ்லாத்தில் ஆண்களுக்கு அநியாயம் செய்யாமலிருப்பதற்குச்சுலபமான முறையாகும் என்று இறைவனால் பரிந்துரைக்கப்பட்டு (4:3) குர்ஆனில்  ஆண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறதே..!

Tuesday, December 14, 2010

12 நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..!

(அலுவலில் அல்லது பதிவுலகில் 'மணிக்கணக்கில் பொட்டிதட்டுவோர்'களுக்காக)

                        உங்களுக்கு நீண்ட நேரம் 'பொட்டிதட்டும்' வேலையாலோ...  அல்லது 'ஒரு பரபரப்பு பதிவு' போட்டுவிட்டு அதற்கு எவரேனும் பின்னூட்டமிடுகிறாரா... என எந்நேரமும்...  'கணிணித்திரையும் கண்ணுமாய்' காத்திருந்து, பின்னூட்டமிட்டவர்களிடம் 'விசைப்பலகையும் விரல்களுமாய்' கடுமையான  விவாதம் புரிவதாலோ... கண் பார்வை பிரச்சினை, முதுகு வலி, தோள் புஜம் நோவு, முழங்கால் வலி, மணிக்கட்டு வீக்கம், பாதச்சோர்வு,  தசைப்பிடிப்பு, தலைவலி, இடுப்புவலி ...( ...போதும்... போதும்... என்கிறீர்களா..? ) ...சரி, இதெல்லாம் வராமல் இருக்க... அல்லது  தாமதமாக வர...(!?)  அல்லது  வந்த வலி குறைய...  வேண்டுமானால்,  பின்வரும் ஆலோசனைகளை செயல்படுத்தி பாருங்களேன்..!

Sunday, December 12, 2010

17 இஸ்லாமிய ஹிஜாபும் பெண்ணுரிமையே..!

        //இஸ்லாத்தில் ஆணடிமைத்தனம் & பெண்ணாதிக்கம்..! என்ற என் சென்ற பதிவின்// ஒரு பின்னூட்டத்தில், ' கிராண்ட்ஸ்லாம் டென்னிசில், அவரவர் உடல் வாகிற்கு தக்கபடி ஆண்கள் ஐந்து செட்டுகள் ஆடும்போது பெண்களை மூன்று செட்டுகள் மட்டுமே ஆடச்சொல்வது போன்றதுதான் பதிவில் சொன்ன ஏனையவை..! ஒருவேளை டென்னிசில் இதையே இஸ்லாம் சொல்லி இருந்தால் "பெண்களின் ஐந்து செட் ஆடும் உரிமையை இஸ்லாம் அநியாயமாய் பறித்து விட்டது" என்று வேண்டுமென்றே திரிக்கப்படும். "இஸ்லாத்தில் என்னே ஒரு பெண்ணடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கம்..!" என்றே பரப்பப்படும் ' என்று சொன்னதை ஒருவர் கிண்டலடித்திருந்தார். இது மிகைப்படுத்துதல் அல்லது பொய் என்று நினைத்துவிட்டார் போலும். அதனால், அதனை  விளக்கி 'புரியும் விதத்தில்' ஒரு பதிவிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். மேற்படி விஷயம் ஒரு உதாரணமே என்றாலும் நிகழும் நிஜங்கள் நான் சொன்னதைத்தான் மெய்ப்பிக்கின்றன.

Wednesday, December 8, 2010

56 இஸ்லாத்தில் ஆணடிமைத்தனம் & பெண்ணாதிக்கம்..!

'அப்த்' என்ற அரபிப்பெயருக்கு அடிமை என்று பொருள். அப்த்+உல் = 'அப்துல்' என்றால் '---ன் அடிமை' என்றாகிறது.  'அப்த்-உல்-அல்லாஹ்' அதாவது 'அப்துல்லாஹ்' என்றால் 'இறைவனின் அடிமை'.  அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் ( ரஹ்மான், ரஹீம், லத்தீஃப், ஜலீல், மலிக், ஹமீத்,  ஹலீம்... என) பற்பல பெயர்கள் உள்ளன. அப்துல்லாஹ் போலவே... அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம், அப்துல் லத்தீஃப், அப்துல் ஜலீல், அப்துல் மலிக், அப்துல் ஹமீத், அப்துல் ஹலீம்.... என்று நிறைய 'இறைவனின் ஆணடிமைகளை' உங்களுக்கு தெரியும். ஆனால், அதேநேரம் 'இறைவனின் பெண் அடிமைகள்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்களோ... ரஹ்மானியா, ரஹீமா, லத்தீஃபா, ஜலீலா, மலிக்கா, ஹமீதா, ஹலீமா... என்று 'அடிமை-அப்த்' பெயரை தங்கள் பெயருடன் இணைக்காமால் 'ஜம்பமாக' திரிவதைத்தான் பார்த்திருப்பீர்கள். உடனேயே இப்போது உங்களுக்கு தோன்றவில்லையா...? "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!" என்று?

Monday, December 6, 2010

11 அயோத்தி, டிசம்பர்-6 : தலைவெட்டு எப்போது?

      இன்று, டிசம்பர்-6, பாபர் மசூதியை மதவாத பயங்கரவாதிகள் இடித்த- முஸ்லிம்களுக்கு அநியாயமிழைக்கபட்ட இந்த துக்கம் மிகுந்த தினத்தில் என்ன நடக்கிறதென்றால்..... பொது இடங்களில் போவோர் வருவோரிடமெல்லாம் விசாரணைகள் – ஆவணப்பரிசோதனைகள் – உடை, உடைமைகளில் பாதுகாப்புச்சோதனை – காவலர் குவிப்பு – ராணுவ அணிவகுப்பு – பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முன்னெச்செரிக்கை கைது - அரசியல் தலைவர்களின் சூடான அறிக்கை என்று எல்லா ஊடகங்களிலும் ஏதோ ஒரு ‘அதிபயங்கர போர்ச்சூழல் மிகுந்த பரபரப்பு நாள்’ போன்று இந்நாளை வழக்கம்போல ஆக்கிவிடுவார்கள்.

      இன்றோ நேற்றோ முந்தாநாளோ ஏதாவது ஒரு ‘அண்டார்டிக்கா-இ-தொய்பா’ அல்லது  ‘ஆண்ட்ரமீட்டா முஜாஹிதீன்’ அல்லது ‘பால்வீதி மண்டல ஜிஹாத் அமைப்பு’ –க்களிடமிருந்து போலிஸ் கமிஷனருக்கோ, சி.பி.ஐ-க்கோ ஒரு அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்திருக்கும்..!? உலகப்புகழ்பெற்ற அளவில் எவ்வளவோ கண்டுபிடிக்கும் இவர்களுக்கு முஸ்லிம் வேஷத்தில் வரும் அந்த மிரட்டல் இ-மெயில் அனுப்புபவர்களை மட்டும் யார் என்று எந்த வருடமும் கண்டுபிடிக்க முடியாதாம்..!? பகுத்தறிவு சிந்தனை மிக்க மக்களே, நம்புங்கள் இதனை..!?

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...