இன்று, டிசம்பர்-6, பாபர் மசூதியை மதவாத பயங்கரவாதிகள் இடித்த- முஸ்லிம்களுக்கு அநியாயமிழைக்கபட்ட இந்த துக்கம் மிகுந்த தினத்தில் என்ன நடக்கிறதென்றால்..... பொது இடங்களில் போவோர் வருவோரிடமெல்லாம் விசாரணைகள் – ஆவணப்பரிசோதனைகள் – உடை, உடைமைகளில் பாதுகாப்புச்சோதனை – காவலர் குவிப்பு – ராணுவ அணிவகுப்பு – பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முன்னெச்செரிக்கை கைது - அரசியல் தலைவர்களின் சூடான அறிக்கை என்று எல்லா ஊடகங்களிலும் ஏதோ ஒரு ‘அதிபயங்கர போர்ச்சூழல் மிகுந்த பரபரப்பு நாள்’ போன்று இந்நாளை வழக்கம்போல ஆக்கிவிடுவார்கள்.
இன்றோ நேற்றோ முந்தாநாளோ ஏதாவது ஒரு ‘அண்டார்டிக்கா-இ-தொய்பா’ அல்லது ‘ஆண்ட்ரமீட்டா முஜாஹிதீன்’ அல்லது ‘பால்வீதி மண்டல ஜிஹாத் அமைப்பு’ –க்களிடமிருந்து போலிஸ் கமிஷனருக்கோ, சி.பி.ஐ-க்கோ ஒரு அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்திருக்கும்..!? உலகப்புகழ்பெற்ற அளவில் எவ்வளவோ கண்டுபிடிக்கும் இவர்களுக்கு முஸ்லிம் வேஷத்தில் வரும் அந்த மிரட்டல் இ-மெயில் அனுப்புபவர்களை மட்டும் யார் என்று எந்த வருடமும் கண்டுபிடிக்க முடியாதாம்..!? பகுத்தறிவு சிந்தனை மிக்க மக்களே, நம்புங்கள் இதனை..!?