அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, February 26, 2011

9 மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-5

டிஸ்கி : இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் முதல் நான்கு பதிவுகளான...
மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Wednesday, February 23, 2011

19 மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-4

டிஸ்கி : இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் இத்தொடரின் முதல் 3 பதிவுகளான... 
மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, February 20, 2011

28 மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-3


டிஸ்கி : இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் முதல் இரண்டு பதிவுகளான... மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Tuesday, February 15, 2011

18 மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்-2

டிஸ்கி : எனது சென்ற பதிவின் ‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்’ தொடரின் இரண்டாவது பாகமான இது... முந்தைய பதிவின் தொடர்ச்சி. இதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் முதல் பதிவை படித்து விட்டு தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, February 10, 2011

71 மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்

முக்கிய அறிவிப்பு :- (21-12-2011)
இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சகோ. அதனை தரவிறக்க விரும்புவோர் இங்கே >>>"கிளிக்"<<< சுட்டுங்கள் சகோ..!
========================================================================

'அரவாணி' என இதிகாச புராணம் சார்ந்த பெயரிலும், 'திருநங்கை' என திரித்தும் 'பொன்னைக்கா' அல்லது 'அலி' அல்லது 'ஒம்போது' என்று கண்ணியமற்ற, பொருளற்ற வார்த்தைகளாலும், ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்று அறிவியல் அறியாமல் தவறாகவும் அழைக்கப்படும் "இவர்கள்" பற்றி நம்மில் பலருக்கு சரியான முழுவிபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். உண்மையை சொன்னால், நமக்கு அறிந்துகொள்ள ஆர்வம் இல்லை. ஏன் அப்படி?  

'அவர்களை'-க் குறித்து நேர்மையான நோக்குடன் அணுகாமல், அவர்களை பிச்சைகாரர்களாகவும் பணம் பறிப்பவர்களாகவும் மற்றும் விபச்சாரம் செய்பவர்களாகவுமே ஊடகங்கள் மூலமும், சமுதாயத்தில் சிலசமயம் நேரடியாகவே அவர்களில் பெரும்பாலோரின் நடவடிக்கைகளை நாம் கண்ணுற்றோ செவியுற்றோ அறிவதினாலும்தான் இந்த ஆர்வமற்ற நிலை. மேலும்... 'மிகப்பெரும்பான்மையான நாம் அவர்களாய் இல்லை...!

Saturday, February 5, 2011

69 'தெஹல்கா லீக்ஸ்'... அடப்பாவிகளா...!

உச்சநீதிமன்றம் நியமித்த Special Investigation Team (SIT), உச்சநீதிமன்றத்திடம்  சமர்ப்பித்த அறிக்கையை நைசாக 'சுட்டு' தெஹல்கா நேற்று முன்தினம் வெளியிட்டுவிட்டது..! குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டறிந்துள்ளது.

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துடிக்கத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டும், குழந்தைகள் கூட நெருப்பிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர்.

Friday, February 4, 2011

13 நம்மிடையே நிலவும் சாதியை ஒழிக்க என்னதான் தீர்வு?

நம் தமிழக மக்களிடம் சாதிப்பிரிவு வேற்றுமைகளும் அது சார்ந்த  உயர்வு-தாழ்வு பாகுபாடும், அதனால் தீண்டாமையும் அதன் காரணமாய் சாதிவெறி வன்முறைகளும் கலவரங்களும்... என இந்த சாதி படுத்தும் பாடு இருக்கிறதே..! அப்பப்பா. இதனை தவறு என்றும் அருவருக்கத்தக்கது என்றும் சொல்வோர் ஏன் சாதிப்பிடியிலிருந்து மீள முடியவில்லை?

நம் அரசாங்கமும் மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே, அவர்களின் அனைத்து பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே... 

"தீண்டாமை ஒரு பாவச்செயல்,
 தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
 தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"
 ---என்று எழுதிப்போட்டும், 

அப்புறம்... பலமுறை பல வகுப்புகளில் மீண்டும் மீண்டும் 
"ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" 
---என்றும் சொன்னாலும், அவை எல்லாமே ஏன் விழலுக்கு இறைத்த நீராய் போகின்றன? 

Tuesday, February 1, 2011

துனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம்

மல்லிகை புரட்சி

துனிசியாவின் தேசிய மலர் மல்லிகை. துனிசிய புரட்சிக்கு 'மல்லிகை புரட்சி' என்று முதன்முதலில் தன் வலைப்பதிவில் பெயரிட்டவர்... பிரபல ஊடகவியலாளரும் ஒரு பிரபல துனிசிய பதிவருமான ஜியாத் அல் ஹானி..! இந்த புரட்சி பற்பல வருடங்களாக உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்த நெருப்புதான்.

1956-ல் பிரான்ஸ் அரசு துனிசியாவிற்கு சுதந்திரம் கொடுத்து ஆட்சியை சுதந்திரம் கேட்ட ஒரு கட்சி RCD (Constitutional Democratic Assembly) -யின் தலைவர் ஹபீப் பொற்குய்பாவிடம் ஒப்படைத்து சென்றது. இவர் அதிபரானார். 1975-ல் இந்த கட்சி அரசு இவரை 'காலமுள்ளகாலம் வரை அதிபராக' நியமித்தது. பின்னர், 1987-ல் இவர் புத்தி சுவாதீனமற்று போய்விட்டதால், அப்போதைய பிரதமர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி அதிபரானார். முதலில் எதிர்க்கட்சி என்றபெயரில் உள்ள அனைவரையும் 'அப்புறப்படுத்தினார்'. அப்போது நன்கு வளர்ந்திருந்த பிரதான எதிர்க்கட்சியான 'நஹ்டா' என்ற இஸ்லாமிய கட்சிதான் அரசின் முக்கிய அழித்தொழிப்பு இலக்கு. அதன் தலைவர் ரஷித் கொன்னோச்சி நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். (23 ஆண்டுகள் கழித்து முந்தாநாள்தான் நாடு திரும்பியுள்ளார்)

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...