அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, February 15, 2011

18 மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்-2

டிஸ்கி : எனது சென்ற பதிவின் ‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்’ தொடரின் இரண்டாவது பாகமான இது... முந்தைய பதிவின் தொடர்ச்சி. இதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் முதல் பதிவை படித்து விட்டு தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


க்ளைன்ஃபில்ட்டர் சின்ட்ரோமில் 'XXY  ஆண்'  குழந்தைகள் பிறப்பின் எண்ணிக்கை 1000-ல் 1 அல்லது 2 எனில், நாம் சராசரியாக 750-ல் 1 என்று கொண்டால் கூட, அது ஆச்சரியமாக இருக்கும். "அவ்வளவு பேர்களா? அப்படி தெரியவில்லையே என்று"..! பல ஆய்வுகள், புள்ளிவிபரங்களுக்கு பிறகு நிலைமை என்னவெனில் இவர்களில்பெரும்பான்மையோர் சிண்ட்ரோம் அறிகுறிகள் காட்டுவதே இல்லை. சிலரே பாரிய பாதிப்புகளை காட்டுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால், இந்த XXY ஆண்களில் காணப்படும் ஆன்ட்ரோஜென்கள் (குறிப்பாக டெஸ்ட்டோஸ்டிரோன்கள்) எந்த அளவுக்கு ஈஸ்ட்ரோஜென்களை விட குறைவாக இருக்கிறது என்பதை வைத்து சிண்ட்ரோம் அறிகுறிகள் அதிகரிக்கும். சிலருக்கு ஓரளவுதான் வித்தியாசம் இருக்குமேயானால் பிறந்தபின் சில வருடம் அல்லது பல வருடம் கழித்து கூட வேலையை காட்டும். பலருக்கு நாளடைவில் இந்த டெஸ்டிரோஸ்டோன் ஹார்மோன்கள் தானாகவே மிகைத்து விடுவதும் உண்டு. அதனால் அவர்கள் முழு ஆண்களாகவே வாழ்ந்து திருமணமும் புரிந்து அப்பாவாகவும் ஆகிவிடுவர்.

இன்னும் சிலபேர் கேலிக்குள்ளாகும் வகையில் இருக்க மாட்டார்கள், எனினும் இவர்களுக்கு விஷயம் எப்போது தெரியவரும் எனில் திருமணத்துக்குப்பின்னர் குழந்தையின்மை குறித்து பரிசோதிக்கும் போதுதான். இதற்குப்பின்னர் செய்தாலும் ஹார்மோன் பேலன்ஸ் சிகிச்சை வெகு சிலருக்கு பலனளிப்பதும் உண்டாம்.

வெகு சிலர், தம் கல்லூரி நண்பர்களுடன் பாலின உணர்ச்சிகள் குறித்த தகவல் அனுபவ பகிர்வின் போது, 'தமக்கேன் இதுபோல உணர்ச்சி மாற்றங்கள் நடக்க வில்லை?' என்று சந்தேகம் கொண்டு திருமணத்துக்கு முன்பே சிகிச்சை பக்கம் செல்வதும் உண்டு.

மேற்குறிப்பிட்டவர்கள் அனைவருமே குறைந்த ஹார்மோன் வித்தியாசம் கொண்டவர்கள்... சிண்ட்ரோம் அறிகுறி காட்டாதவர்கள். இவர்கள் ஹார்மோன் பேலன்ஸ் சிகிச்சை எவ்வளவு விரைவாக செய்து கொள்கிறார்களோ அவ்வளவு விரைவாக முழுமையான ஆணாகும் பலன் கிடைக்கும்.

ஆனால், பெரும்பாலோர் நிலை இப்படி இல்லை. இந்த வகை ஆண்குழந்தைகள் பிறந்தது முதல் குப்புறுதல், அமர்தல், தவழ்தல், நிற்றல் என அனைத்தையும் தாமதமாகவே செய்வர். அப்புறம் முதல் வார்த்தை பேசுவதற்கு எப்படியும் நான்கு வயதாகவாவது ஆகிவிடும்.  இப்போது அவசியம் இது பற்றி ஏன் என்று பெற்றோர்கள் கண்டு கொள்ள வேண்டும்.
பின்னர் பள்ளியில் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தாலும் ஓரளவு மற்ற மாணவர்களுடன் போட்டியிட ஆரம்பித்துவிடுவார்கள்.  ஆனால், வருடங்கள் உருண்டோட மற்ற மாணவர்கள் என்னை பார்த்து கிண்டல் செய்கிறார்கள் என்று பெற்றோர்களிடமோ ஆசிரியர்களிடமோ புகாரிடும்போதாவது கட்டாயம் கண்டுகொள்ள வேண்டும்.

உயர் நிலைப்பள்ளியில் சக மாணவர்களுக்கு மீசை முளைக்கும், குரல் உடையும். ஆனால், இவ்வகை மாணவன் பெண்மை கலந்த குரலில், மிருதுவான தசையுடன் நளினமாக நடக்கும் போதாவது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் இவர்களை கண்டு கொள்ள வேண்டும். உடனடியாக ஹார்மோன் பேலன்ஸ் செய்தாக வேண்டிய பருவம் இது. இப்போதும் விட்டால் பிறகு ரொம்ப கஷ்டம்.

///The treatment of Klinefelter's Syndrome patients is aimed towards the replacement of the male sex hormone, testosterone. This becomes all the more important in a patient in whom puberty is delayed or in a post- pubertal individual in whom the secondary sexual features were absent. As KS males are unable to produce sufficient quantities of testosterone, supplementation of this hormone is required.

Testosterone therapy must be initiated early in adolescence. The hormone is usually given through intramuscular injections, once in every 10 - 14 days. It is common for the patients to have mood fluctuations or altered physical abilities during the treatment period. The dosage is started at 50 mg, which may be increased after a specified period.
///--என்கிறது ஒரு மருத்துவ தளம்.

இதேநேரம் தெருவிலும் பள்ளியிலும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிக்கொண்டு இருக்கும் இவர்களுக்கு மனநிலை திரிபு ஏற்படும். ஆனால், 'இவன்  அம்மாப்பிள்ளை, என் சாயல், என்னை மாதிரி' என்று பெற்றோர்கள் நினைத்து கவனிக்காது விட்டால்... தவறான வழிக்கு அழைத்துச்செல்லவே ஊரில் திரியும் "அவர்கள்-சமூக பாலியல் வியாபாரிகள்" கவனித்து விடுவார்கள். மூளைச்சலவை செய்து மனதில் ஆணா அல்லது பெண்ணா என குழப்பம் ஏற்படுத்தி விடுவார்கள். "சரி, நாம்தான் ஆணாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை, இனி ஆணாக இருப்பதும் வேஸ்ட், அப்புறம் ஏன் பெண்ணாக மாறிவிடக்கூடாது?" என்று பெண்வேஷம் போட்டுக்கொண்டு ஒருநாள் பையன் காணாமல் போய் விடுவான். அப்புறம், அழுது புலம்பி புண்ணியம் இல்லை. எந்த வீட்டிலும் தன் மகன் பெண் போல் உடுத்தி ஒப்பனை செய்து திரிய யாரும் அனுமதிப்பில்லை. இந்த உறுதியும் தெளிவும் இவர்களுக்கான சிகிச்சை மேற்கொள்வதிலும் கட்டாயம் இருக்க வேண்டும்.

இன்னும் சில கல்வி அறிவற்ற குடும்பங்களில் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக 'நம்ம குடும்பத்துக்கு போய் இப்படி வந்து வாய்ச்சதே... சனியன்' என்று தூற்றுவார்கள் எனில் இது மன்னிக்க முடியாத கொடுமை. பல இடங்களில் குடும்பத்தினரிலேயே இவர்களை அடித்து விரட்டும் மகா பாவிகளும் உண்டு. இப்படி விரட்டப்படும் அல்லது விரண்டோடும் இவர்கள் கல்வியும் கெட்டு, புத்தியும் கெட்டு இறுதியில் வயிற்றுப்பிழைப்புக்காக சேருமிடம்தான் மகா கொடியது.  அங்கே என்னவெல்லாம் நடக்கும்...? படித்தால் நெஞ்சு வலி வரும்.

முதலில் அவனுக்கு Emasculation (ஆண் பாலினப்பெருக்க உறுப்புகளை அறுத்து நீக்கிவிடுதல்). இன்னும் நன்றாக வளரவேண்டி, மார்பகம் மாற்றத்திற்கு ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்வது. உடன் தன்னை 'அரவாணி' என்பது. இப்போது செந்தமிழில் 'திருநங்கை' என்று சொல்ல வேண்டுமாம். அரசு 'மூன்றாம் பாலினம்' என்கிறது. 

அரவாணிகள் 'அறுவை' (சிகிச்சை) தற்போது முறையற்ற மருத்துவர்களால் செய்யப்படுகிறதாம். திண்டுக்கல் மாவட்டத்தில் இது பிரசித்தமாம். இது தவிர கடப்பா, பழமனேரிங்கற ஊர்லயும் செய்யுறாங்களாம். இது முழுக்க முழுக்க ஆண் உறுப்புகளை நீக்கும் அறுவை"சிகிச்சை(!?)" மட்டுமே. இதனால 6 மாசத்துக்குள்ள சிறுநீரகப் பகுதியில பிரச்சன ஏற்படுதாம். புண் ஆறாமல், சீழ் பிடித்து பின்னர் பெரும்பாலும் இறந்து விடுவார்களாம். இதையும் தாண்டி தப்பிப்பிழைத்தால்... வாழ காசு வேண்டுமே..? இவர்களுக்கு யாரும் எந்த வேலையும் கொடுப்பதும் இல்லையாம். ஆதலால் உடல் தேறிய பின்னர் பாலியல் தொழிலில்தான் இவர்களால் செய்ய முடியுமாம். வேறு வழியே இல்லையம்.

அதெப்படி இவர்களால் 'பாலியல் தொழில்..'? விபச்சாரம் செய்யும் பெண்களிடம் செல்ல பணம் தர முடியாதவர்களுக்கு இவர்கள் ஓரினச்சேர்க்கை மூலம் வடிகால் தருகிறார்களாம். அப்படிப்பட்ட மிருகங்களும் தமிழ் நாட்டில் நிறைய உள்ளனர் போலும்... //Clients who came to their quarters, she said, were often heterosexual men who could not afford a female prostitute. The rest were closet gays for whom hijras (வடநாட்டில் அரவாணிகளுக்கு இதுதான் பெயர்)  were the only source of release for pent-up frustrations.//  இவர்கள் வாழ்க்கை இப்படித்தான் ஓடுகிறது... என்கிறது இந்த நேரடி ரிப்போர்ட்.

///அரவாணிங்க வேறு தொழில் இல்லாம பெரும் பகுதி பாலியல் தொழிலாளர்களா இருப்பது என்னவோ உண்மைதான்..!///--தமிழ்நாட்டின் ஒரு 'நன்கு அறியப்பட்ட பிரபல அரவாணி' ஒரு பேட்டியில் கூறியதுதான் இது.

அப்புறம், சென்ற பதிவில் இதையும் சொல்லி குழப்ப வேண்டாமே என்று விட்டிருந்த (turner syndrome) "X0 குரோமோசோம் பெற்ற பெண் இயல்புகள் குறைவான பெண்கள்" பற்றி இப்போது பார்ப்போம். இவர்கள் 5000-ல் ஒன்று என்ற வீதம்தான் பிறப்பார்கள். இவர்களையும், குடும்பத்தார் மற்றும் ஆசிரியர்கள் கவனித்து பருவ வயதில் ஹார்மோன் பேலன்ஸ் செய்திடல் வேண்டும். ஆனால், பலருக்கு அறிகுறிகள் தெரியாமலேயே இருந்து விடுவார்கள். அறிகுறிகள் தெரியாவிட்டாலும் பெண்கள் விஷயத்தில் விடலைப்பருவத்தில் அவ்வளவு லேசாக பெற்றோர்கள் விட்டுவிட மாட்டார்கள். 'ஏன் இன்னும் என் மகள் வயதிற்கு வரவில்லை...' என்று மருத்துவரிடம் விரைவாகவே அழைத்துச்சென்று விடுவார்கள்.

பொதுவாக இவர்கள் மிக உயராமாக இருப்பார்களாம். இவர்களுக்கான treatment பற்றி இத்தளம் என்ன சொல்கிறதென்றால்... ///Estrogen replacement therapy is often started when the girl is 12 or 13 years old. This helps trigger the growth of breasts, pubic hair, and other sexual characteristics. Women with Turner syndrome who wish to become pregnant may consider using a donor egg.///

இவர்களுக்கு ஈஸ்ட்றோஜென் ஹார்மோன் அளவு ஆண்டோரோஜெனை (குறிப்பாக டெஸ்ட்டோஸ்டீரோன்) ஹார்மோனை விட குறைவாக இருக்கும். இந்த 'குறைவு' என்ற வித்தியாசம் எந்த அளவு அதிகமாக உள்ளதோ அந்த அடிப்படையில் அப்பெண்களின்  வெளிப்புறத்தோற்றதில்... முகத்தில் முடி, ஆண் குரல், சிறிய மார்பகம் கொண்டிருப்பார்கள். ரொம்ப ரொம்ப அரிதாகவே இவர்கள் கவனிக்கப்படாமல் போவதெல்லாம். அப்போது இவர்கள் வளர்ந்த குடும்ப சூழ்நிலை கல்வியறிவு சுற்றுப்புற மக்களின் ஏளனம் கேலிப்பேச்சு திருமணம் நடக்காத விரக்தி இவை எல்லாமே இவர்களை அலைகழிக்கும். இவர்களையும் வீட்டை விட்டு ஓட வைக்கும்... பெண்ணாகவே...! அங்கே "அவர்கள்-சமூக பாலியல் வியாபாரிகள்" இவர்களை கவனித்துக்கொள்வார்கள். ஆண் போல தோற்றம் காட்டும் இவர்களை "ஆணாக மாற" ஏனோ அக்கூட்டம் அனுமதிப்பதில்லை...!? இவர்களையும் மூன்றாம் பாலினம் என்று அழைப்பது மூடத்தனமாம்..! அறிவியல் சொல்கிறபடி, நாம் "45X0-Female" என்றே அழைப்போம்.

///அரவாணிகளோட பாலின மாற்று அறுவை சிகிச்சை இன்னும் இந்தியாவுல நடைமுறைப்படுத்தப்படல. இங்கு “Castration” அப்படிங்குற ஆண் உறுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை மட்டுமே இருக்குது. ஆனா பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமா ஆக்கணும், அதுபோல அறுவை சிகிச்சை முடிஞ்ச அப்புறம் மேலை நாடுகள்ல உள்ளதுபோல இனிமேல் பெண் என்ற மருத்துவ சான்றிதழ் தேவை.///----தமிழ்நாட்டின் ஒரு 'நன்கு அறியப்பட்ட பிரபல அரவாணி' அதே பேட்டியில் கூறியதுதான் இது.

இதனால் பெரும்பாலும் யாரும் "பாலினம் மாற்று அறுவை சிகிச்சை(?)" செய்வதில்லை. அப்படியே யாராவது செய்ய நாடினால்... வெளிநாடுதான் செல்ல வேண்டும். சில லட்சங்கள் செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு... இந்த தாய்லாந்து மருத்துவர் செய்யும் SRS ( Sex Reassignment Surgery) அறுவை சிகிச்சை  சில லட்சங்கள் ஆவது அடுத்த விஷயம்... அந்த அறுவை சிகிச்சை செய்முறையும்... ஆறுமாதம் என்ன செய்ய வேண்டும் என்பதும்... படித்தால் ரத்தக்கண்ணீர்தான் வரும். கொடுமை. மகா கொடுமை.

சரி... இவ்வளவு கஷ்டப்பட்டு செலவு செய்து ஏன் பெண் உறுப்பை தனக்குள் பொருத்திக்கொள்ள வேண்டும்? ஏனெனில், இந்த SRS-ல் இதுமட்டும்தான் செய்யப்படுகிறது. ஆனால், ஓவரியோ, கர்ப்பப்பையோ பொருத்தப்படுவதில்லை. கூடவே சரியான அளவிற்கு மார்பகம் பொருத்தப்படுகிறது.  இதற்கு பெயர்தான் பெண்ணாக மாறுவதா?!? பெண்ணாக மாறுவது என்றால் மகப்பேறுக்கு அவசியப்படும் உறுப்புகள் தேவை இல்லையா? இதெல்லாம் அப்போ குடும்ப வாழ்க்கை வாழ்வதற்காக இந்த அறுவை சிகிச்சை இல்லையா? எனில், இவர்கள் ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதில்லை.,! இங்கே, இவர்கள் பெரும்பாலும் ஓரினச்சேர்க்கை வாதியிலிருந்து விபச்சாரியாக மாற்றப்படுகிறார்கள். இனிதான் வியாபாரம் களைகட்டும். ம்ம்ம்ம்.... அந்த தாய்லாந்து சுட்டியில்... வரும் பேஷன்ட் எயிட்ஸ் நோயாளியாக இருந்தால் மற்றவர்களை விட 60%  ஃபீஸ் அதிகமாக  கட்டியாக வேண்டுமாம்... தூத்தேறி..! எங்கே போகிறது நம் உலகம்?

இப்போது புரிகிறதா..?

இந்த அரவாணிகள் எதற்கு அரசிடம் 'கடுமையாக போராடி' இ.பி.கோ-377-வது சட்டத்தை கடந்த வருடம் (ஓரினச்சேர்க்கையில் ஈடு படுவோர்க்கு தண்டனை சட்டம்) நீக்க வைத்தார்கள் என்று?

இப்போது புரிகிறதா..?

இந்த அரவாணிகள் எதற்கு 'கடுமையாக போராடி' இலவசமாக தமிழக அரசு மருத்துவமனையிலேயே "பாலின மாற்று அறுவை சிகிச்சை"(!?) பெறும் வசதியை சென்ற ஆண்டு பெற்றுக்கொண்டார்கள் என்று?

இப்படி போனால் நிலைமை என்னாகும்...? எயிட்ஸ் வராதா? ஆம்... வரும். அதோடு...சிபிலிஸ், கோனாரியா, ஹெர்பிஸ், ஜெனிட்டல் வார்ட்ஸ், அமீபியாசிஸ், சியார்டியாசிஸ், ஹெப்படைடிஸ் பி... என்று நிறைய வரும் என... இந்த அரவாணிகள் செய்யும் ஓரினச்சேர்க்கை குறித்து ஒரு விரிவான மருத்துவ (Dr.S.ஜீவராஜன் M.D.,D.V.,) அலசல் ஒன்றை இங்கே சென்று படித்து வாருங்கள்.

இந்த நோய்களுக்கெல்லாம் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு இவர்களின் மிகப்பெரும்பாலோரின் 'தொழிலை' தொடர்ந்து நடத்தி தமிழகத்தில் இவ்வியாதிகளை பரப்ப என்ன வழி..? ஹி..ஹி..ஹி... அதற்குத்தான் இருக்கவே இருக்கே... "தமிழக அரவாணிகள் நலவாரியம்" மக்கள் பணத்திலிருந்தே நிதி கறக்க...!? (இதில் பல குளறுபடிகள் உள்ளன... யார் அரவாணிகள் என்பதிலேயே குழப்பம்..!? இதற்கு யார் இறுதித்தீர்வு சொல்வது, யாருடைய ஒப்புதலின் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் 'இவர் அரவாணிதான்' என்று பெயர் பதியப்படுகிறது... என்றால்... அவர்-'ஒப்புதல் அளிப்பவர்', அரசு மருத்துவரோ, கலெக்டரோ அல்லவாம்..!? 'அவர்களின் குழுமத்தலைவர்' "நாயக்"-தானாம்...!? வீட்டைவிட்டு ஓடிப்போய் 'இக்குழுமத்தில்' இனையாதவர்கள் கதி? அதோகதிதானாம்..! மேலும் விபரங்கள் இங்கே.) இப்போது... இந்த 'நலவாரியம்' மீதே சந்தேகம் எழுகிறது... "இது யாருடைய நலத்துக்கான வாரியம்" என்று..! Tehalka போன்ற investigative journalist-கள் அதை கவனித்துக்கொள்ளட்டும்.

மேற்படி  சாதகமான சூழ்நிலைகளின் விளைவு என்ன தெரியுமா...?

 
(கவனிக்கவும்... இது 2001-ல் இந்தியாவின் நிலைமை..! 2011-ல் என்ன நிலைமை..?)

 

உதாரணாமாக... சர்க்கரை நோயாளிகளுக்கு 'இன்சுலின் ஹார்மோன்' குறைந்தால் சர்க்கரை அளவு அவர்களிடம் கூடி விடும். இதற்கு என்ன செய்கிறார்கள்? 

அவர்கள்,  "மனதும் /உடம்பும்  விரும்பும்படி(!?)..."கிலோ கிலோவாய் இனிப்பு சாப்பிடுவதா சிகிச்சை? 

உச்சநீதி மன்றம், "இவர்கள் இனிப்பு சாப்பிடுவது இவர்களின் தனிமனித உரிமை" என்றா தீர்ப்பு அளிக்கிறது? 

தமிழகஅரசு... இவர்களுக்கு ரேஷன் கடையில் "இனி இலவச சீனி வழங்கப்படும்" என்றா அறிவிக்கிறது? 

இல்லையே...! அறிவியல் கூறும், "இன்சுலின்  இஞ்சக்சனே சரி" என்று அல்லாவா இவர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள்...?! மனதும் உடம்பும் சொல்வதை ஏற்றுக்கொள்ள வில்லையே..?

வெட்டப்பட்டதால்... ஒரு காலை இழந்த எட்டுக்கால் பூச்சியை...'ஏழுக்கால்  பூச்சி' என்று பாஸ்போர்ட் அலுவலக விண்ணப்ப படிவம்/நீதிமன்றம்/அரசு என யார் அழைத்தாலும் நான் அப்படி அழைக்க மாட்டேன். "ஒரு கால் வெட்டப்பட்ட எட்டுக்கால் பூச்சி" என்றுதான் நான் அழைப்பேன்...! அப்படித்தான் அறிவியலும் அழைக்க சொல்கிறது..!

இதுவரை 'இவர்களில்' பெரும்பாலானவரை பற்றி பார்த்துவிட்டோம். இவர்கள் அனைவருமே 1-மரபணு பால் (Genetic Sex) அடிப்படையில்  3-புறத்தோற்ற பால் (Phenotype Sex) -ல்  ஹார்மோன் குளறுபடியால் உண்டானவர்கள். (குறிப்பு... 'இஸ்லாம் தரும் தீர்வு', 'இவர்களுக்கு  என்னதான் முடிவு' ஆகியன மொத்தமாய் இன்ஷாஅல்லாஹ் கடைசி பகுதியில்..!)
 
இனி, மிக மிக மிக அரிதாக... சிறு சிறுபாண்மையாக ஒரு சிலர் "இவர்களில்" மிச்சம் இருக்கின்றனர்..! இவர்கள் யாரெனில் 1-மரபணு பால் (Genetic Sex) அடிப்படையில் அல்லாமல்  2-இன உறுப்புகள் பால் (Gonadal Sex)-ல் ஏற்படும் இன உறுப்புக்கள் குளறுபடியால் உண்டாகிறவர்கள்... 'transgender' என்ற பெயருக்கு ஓரளவு தகுதியானவர்கள் --ஆனாலும்..,'மூன்றாம் பாலினம்' அல்ல--...


.....இவர்களைப்பற்றியும்...

=>தங்களைப்பற்றி ‘அவர்கள்’ என்ன நினைக்கிறார்கள்?
=>'இவர்கள்' பற்றி மக்கள் கருத்து என்ன? 
=>'அவர்களுக்கு' அரசு என்ன சொல்கிறது? 
=>இதில் இஸ்லாம் தரும் தீர்வு என்ன? 
=>'இவர்களுக்கு' என்னதான் முடிவு
 ....என இன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்வோம்.டிஸ்கி: 

இது,'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் இரண்டாம்பதிவு..! இந்த பதிவை படித்தோர் தொடரின் அடுத்த 4 பதிவுகளான...

 
ஆகியவற்றையும் தொடர்ந்து படித்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோ..!

18 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...