அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, March 1, 2011

28 'மூன்றாம் பாலினம்(?)' பற்றி இஸ்லாம்டிஸ்கி: 
இது, இத்தொடரின் இறுதிப்பதிவு..! இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள், முதல் 5 பதிவுகளான...
மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

" =>இதில் 'இவர்களுக்கு' இஸ்லாம் தரும் தீர்வு என்ன?

உலகில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அழகாக எந்த மார்க்கமும் சட்டங்களும் சொல்லாத வகையில் நியாயமான சரியான தீர்ப்பை சொல்லும் ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பது உலகறிந்த உண்மை.

உலகில் ஆண்-பெண் என்ற இரண்டு இயற்கை பாலினம் தான் மனிதர்களில் இருக்கிறது. இதை தவிர 'செயற்கை பாலினமாக' மாற முயலவோ அப்படி முயலுபவர்களை அல்லது முயன்றவர்களை ஒருக்காலும் 'மூன்றாம் பாலினமாக' அறிவிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை.

இந்த தூய இஸ்லாம்... பெண் போல வேஷமிடுவோரை ஆண்களாகத்தான் முடிவெடுக்கிறது. மேலும், இவர்கள் எந்த விதத்திலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்கப் பட முடியாதவர்கள் என்றும் தெளிவான நிலைப்பாடு எடுக்கிறது.

திருக்குர்ஆன் பார்வையில் பாலினம் இரண்டு மட்டுமே..!

மனித இனத்தில் இரு பாலினம் மாத்திரமே உள்ளன என்பதை, இறைவன் வார்த்தைகள் குர்ஆனில் தெளிவாக அறிவிக்கின்றன.
.

''மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்'' (குர்ஆன் - 4:1)

மேற்கண்ட வசனத்தில், முதலில் நபி ஆதம்(அலை) அவர்களை படைத்து பின் அவரிலிருந்து அவரின் துணையை படைத்து அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் இறைவன் படைத்ததை குறிப்பிடுவதிலிருந்து... உலகில் ஆண்-பெண் ஆகிய இரு பாலினத்தைத் தவிற வேறு பாலினம் இல்லை என்பது தெளிவான விஷயம்.

''அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச்செய்பவை யிலிருந்தும், அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாத வற்றிலிருந்தும் ஜோடிகளைப்படைத்தான்.''  (குர்ஆன் - 36:36)

இவர்கள் பற்றி நபியவர்களின் வார்த்ததைகள்..!

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். (ஒரு நாள் என் கணவர்) நபி(ஸல்) அவர்கள் என் அருகில் இருந்து கொண்டிருந்தார்கள். அங்கு எங்கள் வீட்டில் (பெண்களைப் போல் நடந்து கொள்ளும்) ‘அலி’ ஒருவனும் இருந்து கொண்டிருந்தான். அந்த ‘அலி’ என் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு அபீ உமைய்யாவிடம், ‘நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால், ஃகைலானுடைய மகளை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். (அவளை நீ மணந்துகொள்.) ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று (அவளுடைய மேனி அழகை வர்ணித்துக்) கூறினான். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘இவன் உங்களிடம் ஒருபோதும் வரக்கூடாது” என்று கூறினார்கள். (புஹாரி - 5235)இங்கே  தொன்னூறுகளின் இறுதியில் வந்ததால் புஹாரி தமிழ் மொழிபெயர்ப்பில் வேறுவழியின்றி 'அலி' என்ற வாசகத்தை உபயோகப்படுத்தி உள்ளார்கள். உண்மையில் இந்த வார்த்தை XXY ஆண் மற்றும் X0 பெண் இருவருக்கும் மற்றும் பாலினம் முடிவு செய்வதில் குழப்பமானவருக்கும் பொதுவானது. இவர்களை தனித்தனியே பிரித்தரிவிக்க தமிழில் வார்த்தை பஞ்சமா அல்லது புரிதல் பஞ்சமா தெரியவில்லை. ஆனால், அரபி மொழியில் சொல்வழக்கில் இருவருக்கும் தனித்தனி வார்த்தைகள் உள்ளன.அதாவது, பெண்களைப்போல் உடை ஒப்பனையணிந்து நடக்கும் ஆண்களை---'முக்ஹனத்துன்' (مخنثون) என்றும், ஆண்களைப்போல் உடை ஒப்பனையணிந்து நடக்கும் பெண்களை---'முதர்ஜிலாத்' (مترجلات) எனவும் அழைக்கின்றனர். அதன்படி, இந்த ஹதீஸில் வந்த 'அலி' என்பது (مخنثون) 'முக்ஹனத்துன்', அதாவது, பெண்போல உடை ஒப்பனை செய்த XXY ஆணாகத்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது.


'அரவாணிகள்' அல்லது  'திருநங்கைகள்' என்று தங்களை இவர்கள்(XXYஆண்) அழைத்துக்கொன்டாலும், இவர்கள் 'ஆண்கள்' என்பதால்தான் நபியவர்கள், அவர்களை பெண்கள் இருக்கும் இடத்திற்கே வர விடக்கூடாது என்று தடுக்கிறார்கள்.

ஒரு 'பெண்' இன்னொரு பெண்ணைப்பற்றி இப்படி ஆபாசமாய் வர்ணித்து வேறொரு ஆணிடம் பேச முடியாது. இவர்கள் பெண்களிடம் தங்களை பெண்களைப் போல் காட்டிக் கொண்டு அவர்களுடைய அங்க அவயவங்களை நோட்டமிட்டு அதை ஆண்களிடம் ஆபாசமாய் காட்சிப்படுத்தும் கீழ்தரமான காரியங்களை செய்பவர்கள் என்பது புரிகிறது. அதனால், மஹ்ரமற்ற இந்த ஆண்கள் ஒரு போதும் பெண்களுடன் திரையின்றி தொடர்பு வைக்கவோ அருகில் அமர்ந்து அளவலாவவோ அனுமதிக்கக்கூடாது என்பது நபியவர்களின் தெளிவான வார்த்தை.

நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், அவர்க(ளில்அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் 'இன்னாரை' வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் 'இன்னாரை' வெளியேற்றினார்கள். (புஹாரி - 6834)
இந்த 'இவர்கள்' (XXYஆண்) ஆண்கள்தான். ஆனால் பெண்களைப்போல் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இவர்களில் மற்றொரு சிறுபாண்மையினர் (X0பெண்) பெண்கள்தான். ஆனால் ஆண்களைப்போல் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்.

 
மொத்தத்தில் இவர்கள் பால் மாற்றி வேஷமிட்டால், நபியவர்களின் சாபத்திற்கு உரியவர்கள் என்பதால் 'இவர்கள்' விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆண் வேஷமிடும் X0-பெண்களை இங்கே தற்போது எங்காவது பார்த்ததுண்டா? ஆகவே, பொதுவாக இங்கே நம்மிடையே உள்ள 'அரவாணிகளை' அல்லது 'திருநங்கைகளை' ஆண்களாகத்தான் நாம் முடிவெடுக்க முடியும்.

//மேலும் அவர்க(ளில்அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்//----இதில் நம்மில் சிலர் தவறு செய்கின்றனர். இதுபற்றி இங்கே சவூதியில் அரபிகளிடம் விளக்கம் கேட்ட போது, அன்று இவர்களை பெண்களாக கருதி பெண்கள் பழகிவர, நபி(ஸல்) அவர்களின் கட்டளை வந்தபின்னர், அப்போது மஹரம் இன்றி அடுத்தவர் வீட்டுப்பெண்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்களில் இருவர்தான் அந்த வெளியேற்றப்பட்டோர். நபிகளின் வீட்டினரிலோ அல்லது உமர்(ரலி) அவர்கள் வீட்டினரிலோ அப்படிப்பட்ட "பால்-மாறாட்டம்" செய்தோர் யாரும் இல்லை என்றுதான் அறிகிறேன். 

மேலும், ஆங்கில தர்ஜுமாக்கள் இப்படித்தான்(அதாவது, 'திருப்பியனுப்புமாறு') சொல்கின்றன: 
// "Turn them out of your houses". The Prophet turned out such-and-such man, and 'Umar turned out such-and-such woman.//

ஆக, ஆள்மாறாட்டம், அதாவது உடை ஒப்பனை கொண்டு "பால்மாறாட்டம்" செய்து வீட்டுக்குள் வருவோரைத்தான் வீடுகளிலிருந்து வெளியேற்ற இங்கே சொல்லப்படுகிறது. ஆனால், அவ்வாறு இன்றி அவர்களில், (xxy)ஆண்கள் ஆண்களாகவும், (X0)பெண்கள் பெண்களாகவும் இருந்தாலும் 'அவர்களை' நாம் நம் வீடுகளிலேயே வைக்கக்கூடாது' என்ற பொருள் இங்கு இல்லை. அப்படித்தான் என்றால், 'இவர்களுக்கான தனி சட்டம் என்ன', 'இவர்கள் எங்கே தங்குவது', 'ஊரிலா; வெளியிலா', 'யார் இவர்களுக்கு உணவளிக்க  பொறுப்பேற்றுக்கொள்வது' என்றெல்லாம் பல கேள்விகளுக்கு சட்டங்கள் சொல்லப்பட்டிருக்கும். மேலும், இன்று சவூதியில் குற்றம் செய்யாத இவர்களை யாரும் தங்கள் வீடுகளிலிருந்தெல்லாம் வெளியேற்றுதில்லை. 

'அவர்கள்' தங்களை ஆண்கள் என்று பகிரங்கமாக அறிவித்து ஆணுடைய தோற்றத்தில் இருந்தால் நாமும் அவர்களை ஆண்களாக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியும். மாறாக தன்னை ஒரு பெண்ணாக எவர் காட்டிக்கொள்கிறாரோ அவர் அந்த சாபத்துகுறிய பாவச்செயலை செய்வதை விட்டும் மீள / மீட்க வேண்டும். அவ்வாறின்றி மீறி அத்தவறை செய்தால்தான் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஹதீஸ் சொல்கிறது. அப்படி வெளியேற்றிய பின்னும் ஊரில் குழப்பத்தை ஏற்படுத்தினால்..? ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும் என கீழே உள்ள ஹதீஸ் சொல்கிறது. இதுதான் தண்டனை... ''பால்மாறாட்டத்துக்கு''..!

Sunan Abu-Dawud, Book 41, Number 4910: Narrated AbuHurayrah: A mukhannath who had dyed his hands and feet with henna was brought to the Prophet (peace_be_upon_him). He asked: What is the matter with this man? He was told: 'Apostle of Allah! he affects women's get-up'. So he ordered regarding him and he was banished to Al-Naqi'. The people said: Apostle of Allah! should we not kill him? He said: I have been prohibited from killing people who pray. AbuUsamah said: Naqi' is a region near Medina and not a Baqi (in other words not referring to Jannat al-Baqi cemetery. Indicating they were not punished.)'
 

ஆனால், இஸ்லாம் விபச்சாரத்தையும் ஓரினச்சேர்க்கையையும் மிகவும் கடுமையாக எதிர்க்கிறது. ஓரினச்சேர்க்கை என்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பதும், ஓர் ஆணும் பெண்ணும் விபச்சாரம் புரிந்தால் அவர்களுக்கு 'கல்லெறிந்து கொல்லும்' தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதும், திருமணமாகாதவர் என்றால் தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பதும் இஸ்லாமிய ஷரீஆவின் சட்டத்தீர்ப்பாகும்.

"CONJOINED TWIN BABIES" பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். 'ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்'- அங்கங்களில் பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்போர். அதாவது... இருதலை-ஓருடம்பு, ஒரு தலை-இரு உடம்பு, ஈருடல் ஆனால் வயிறு மட்டும் ஒட்டி அல்லது தலை மட்டும் ஒட்டி என்றெல்லாம் அரிதாக பிறக்கும் குழந்தைகள். சமீபத்தில் கூட, பெங்களூரில் அறுவை சிகிச்சை மூலம் சரிப்படுத்தப்பட்ட 'ஆறு கால்களுடன் ஒரு இந்திய சிறுமி', 'நெஞ்சில் இரு கால்கள் முளைத்த இந்திய சிறுவன்' என்றெல்லாம் படித்திருப்பீர்கள். அரிதாக பிறக்கும் இதுபோன்ற குழந்தைகளை யாரும் அப்படியே விட்டு விடுவதில்லை. அரசோ அல்லது தனியார் தன்னார்வ தொண்டு இயக்கங்களோ, நல்லுள்ளம் கொண்ட செல்வந்தர்களோ உதவிபுரிந்து இவர்களை "நார்மல் மனிதர்களாக" அறுவை சிகிச்சை மூலம் மாற்றுகிறார்கள் அல்லவா..? 

ஒருவேளை... இவர்கள் வளர்ந்தவுடன், "நான் இப்படித்தான் பிறந்தேன், இது என் பிறப்புரிமை, ஆறு கால்களுடன் அல்லது நெஞ்சில் முளைத்த கால்களுடன்தான் வாழ்வேன்" என்றால்...? அது சரி என்று நீதிமன்றமோ அரசோ சமூகமோ பெற்றோரோ ஏற்றுக்கொள்வரா?

சவூதியில் இதற்காக ஒரு தனி மருத்துவ படையே உள்ளது. சவூதி அரசு செலவில் இலவசமாகவே அனைத்துலக நாட்டு மக்களுக்கும் ஒரு சேவையாகவே வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சைகளை செய்து வருகிறது. இதுவரை... 20 ஜோடி ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்  அறுவை சிகிச்சை மூலம்...(King Abdulaziz Medical City, National Guard Health Affairs –Riyadh) சவூதியில் நலமாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனர்.  

இதேபோலத்தான், இந்த 'பாலின பிறவிக்குறைபாடுள்ளவர்களை', கவுன்சிலிங் தேவைப்படுவோருக்கு மனோதத்துவம் மூலமும், ஹார்மோன் ஊசியால் குணப்படுத்த வேண்டியவர்களை அதன்மூலமும், அறுவை சிகிச்சையால் (இதற்கு “gender correction” operation என்று சவூதியில் சரியான பெயரை சூட்டிள்ளனர்) மட்டுமே "சரிப்படுத்த" வேண்டியவர்களை அதன் மூலமும் குணப்படுத்துகிறது. அதாவது, ஆணை, 'முழு ஆணாக' மாற்றவும் பெண்ணை, 'முழு பெண்ணாக' மாற்றவும் முடிந்த வரை முயற்சி நடக்கிறது. xxy-ஆண் பெண்ணாக மாறவெல்லாம் இங்கே அனுமதி இல்லை. ஏனெனில், இது "அரவாணிகள் நலவாரியம்" அல்ல. மேலும், நாம் முன்பு பார்த்த தாய்லாந்து டாக்டரின் 'ஆணை பெண்ணாகும்' SRS ஏமாற்றுவித்தை போலவும் அல்ல. 

ஆக, இவர்கள் பிறவிக்குறைபாட்டுடன்தான் பிறந்தவர்கள். மற்ற உடல் பாகங்களில் குறைபாட்டுடன் பிறந்தவர்களுக்கு நாம் எப்படி சிகிச்சை அளிக்கிறோமோ... அதேபோலத்தான் இவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதை உணரவேண்டும். ஊனப்பட்டால், நோய்வாய்ப்பட்டால் சிகிச்சை செய்யத்தான் சொல்கிறது இஸ்லாம்.


மீண்டும்  நியாபகப்படுத்திக்கொள்வோம் :  
உலகில் எங்குமே இதுவரை ஆண் பெண் அன்றி "மூன்றாவது ஒன்று" பிறந்ததே இல்லை. அப்படி பிறந்ததாக எந்த நகரத்து மருத்துவமனையிலும் எந்த கிராமத்து மருத்துவச்சி வீட்டிலும் சரித்திரமோ பூகோளமோ கிடையாது.

இவர்கள் 23  வது ஜோடி குரோமோசோமில் குறைபாட்டோடு / கோளாறோடு பிறந்தவர்கள். மற்ற குரோமோசோம் ஜோடிகளில் கோளாறு கொண்டு பிறந்தோரை Physically challenged என்பது மாதிரி இவர்களை Zoologically Challenged எனலாம். ஆகவே, அதற்குரிய உயரிய மருத்துவ சிகிச்சைகளையும், குறைபாடு சரிசெய்ய இயலாவிட்டால் அரசின் பாகுபாடற்ற சலுகைகளையும் சமூகத்தின் கேலியற்ற அணுசரனையையும் விரோதமற்ற சகோதரத்துவத்தையும் குடும்பத்தினரின் மனக்கசப்பற்ற அன்பையும் ஆதரவையும் பெறத்தக்கவர்கள். அவ்வளவுதான்.

மற்றபடி,  பிறப்புறுப்பை பொறுத்த மட்டில், ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறந்ததாகவே சமூகத்தில் சிறுவயது முதல் கண்டறியப்பட்ட இவர்கள், குறிப்பிட்ட பருவ வயதுக்கு வளர்ந்த பிறகு Androgen / Oestrogens ஹார்மோன் அளவின் குறைபாட்டினால் அல்லது மிகைபாட்டினால் தனது ஆண்மை குறைபாட்டை அறிந்து கொண்ட ஆண் மற்றும் பெண்மை குறைபாட்டை அறிந்து கொண்ட பெண் இருவரும் தங்களின் எதிர்பாலினம் போலவோ அல்லது "திருநங்கை" / "அரவாணி" என "மூன்றாம் பாலினம்" என்றோ நடித்து சமூகத்தையும் அரசையும் பால்மாறாட்டம் செய்து ஏமாற்றுவது இனிமேலாவது சட்டத்தில் குற்றமாக கருதப்படல் வேண்டும். அப்படித்தான் இஸ்லாமும் அறிவுப்பூர்வமாக கருதுகிறது & அறிவுறுத்துகிறது.

எனவே, அறிவியல், மருத்துவம், சரியான சமூக புரிதல் மற்றும் இஸ்லாமிய அடிப்படையில் இரண்டு பாலினம் அன்றி "மூன்றாம் பாலினம்" என்றால் அது மூடத்தனமே..! 

எனவே, அறிவியல், மருத்துவம், சரியான சமூக புரிதல் மற்றும் இஸ்லாமிய அடிப்படையில் இரண்டு பாலினம் அன்றி "மூன்றாம் பாலினம்" என்றால் அது மூடத்தனமே..!

( இனிதே தொடர் நிறைவுற்றது..! அல்ஹம்துலில்லாஹ்..! )

பிற்சேர்க்கை 20/12/2011 :-
இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சகோ. அதனை தரவிறக்க விரும்புவோர் இங்கே >>>"கிளிக்"<<< சுட்டுங்கள் சகோ..! 

28 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...