பண்டையகால உலகில் பனை ஓலைகளிலோ, துணிகளிலோ பின்னர் காகிதங்களிலோ எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகள்தான், தினசரிகள் என்று புழக்கத்தில் இருந்து வந்தன. இந்நிலையில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.
இது மேலும், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நவீனமாகி, பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத்தொடங்கினர். பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகமான அச்சுக்கூடம் என்பது... தினசரிகள், வார இதழ்கள் போன்றவை பிறக்கும் மிகவும் முக்கியமான இடம்..! இந்த அச்சுப்புரட்சி ஏற்பட்டபின்னர் கையெழுத்துப்பிரதி எழுதும் கலை (calligraphy) என்ற ஒன்றே இல்லாமல் ஆகி, வழக்கொழிந்து போய்விட்டது. யாரும் தினசரிகளை... அவ்வளவு ஏன்... வார, மாத இதழ்களையோ கூட கையினால் எழுதுவதில்லை. அனைவரும் எப்போதோ அச்சுக்கோர்க்க துவங்கி விட்டனர். ஆனாலும், ஐம்பது-நாற்பது வருடங்களுக்கு முன், நம் பல்கலைக்கழக பட்டங்களில் வித்தியாசமாக ஓவியங்கள் போல ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்குமே..! University Degree Certificate -- இப்படி..! நினைவு இருக்கிறதா..? இந்த சான்றிதழ்களை அதற்கென்றே உள்ள பட்டை நிப் உள்ள பேனா வைத்து தொழில்ரீதியாகவே அப்போது கையால் எழுதுவார்கள்.
பின்னாளில், அதே போன்ற அச்சு, அப்புறம் கணிணி 'ஃபான்ட்கள்' என வந்ததனால் நாளடைவில் இதனை தொழில் முறையாக எழுதுபவர்களான 'calligraphers' என்று அழைக்கப்பட்டவர்களும் காணமால் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மற்ற மொழிகளை விட அரபி, உருது மற்றும் சீன எழுத்துக்கள் இந்த calligraphy அடிப்படையில் எழுதுவதற்காகவே அமைந்தது போன்ற எழுத்துக்களானதால் இம்மொழிகளில் மட்டும் இன்னும் இவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். என்னுடன் பணிபுரியும் ஒரு சவூதிக்காரர், ஒரு ' வனப்பெழுத்தர் '. (அதாவது...Colligrapher). அதற்கென்றே உரிய பேனாக்களை வைத்து எல்லார் லாக்கர் கதவுகளிலும், சேஃட்டி ஹெல்மெட்டுகளிலும், கோப்புகளின் அட்டைகளிலும் அவரவர் பெயர்களை ஆர்வத்துடன் தானாகவே அச்சு எடுத்தது போல மிக அழகாக அரபியில் 'வரைந்து' தள்ளுவார்..!
(மேலே உள்ள மூன்றும் வெவ்வேறு...! அரபிகளுக்கு வனப்பெழுத்தில் ஆர்வம் மிக அதிகம்)
பின்னாளில், அதே போன்ற அச்சு, அப்புறம் கணிணி 'ஃபான்ட்கள்' என வந்ததனால் நாளடைவில் இதனை தொழில் முறையாக எழுதுபவர்களான 'calligraphers' என்று அழைக்கப்பட்டவர்களும் காணமால் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மற்ற மொழிகளை விட அரபி, உருது மற்றும் சீன எழுத்துக்கள் இந்த calligraphy அடிப்படையில் எழுதுவதற்காகவே அமைந்தது போன்ற எழுத்துக்களானதால் இம்மொழிகளில் மட்டும் இன்னும் இவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். என்னுடன் பணிபுரியும் ஒரு சவூதிக்காரர், ஒரு ' வனப்பெழுத்தர் '. (அதாவது...Colligrapher). அதற்கென்றே உரிய பேனாக்களை வைத்து எல்லார் லாக்கர் கதவுகளிலும், சேஃட்டி ஹெல்மெட்டுகளிலும், கோப்புகளின் அட்டைகளிலும் அவரவர் பெயர்களை ஆர்வத்துடன் தானாகவே அச்சு எடுத்தது போல மிக அழகாக அரபியில் 'வரைந்து' தள்ளுவார்..!
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்... கணிணி பயன்பாட்டினால், டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சியில், 'அச்சுக்கோர்ப்பு' என்பது எங்கேயோ உயர்ந்துவிட்ட சூழலில், 'நாடு முழுதும் தினமும் 22,000 பிரதிகள் விற்பனை ஆகும் ஒரு தினசரி, அச்சுக்கோர்க்கப் படாமல் கையால் எழுதப்பட்டு, பின்னர் படி-அச்சு இயந்திரத்தில் பல ஆயிரம் பிரதிகள் எடுக்கப்பட்டு, இத்தனை வருடங்களாய் ஒரு 'கையெழுத்துப்பிரதி'யாகவே இன்னும் வெளிவந்து கொண்டு இருக்கிறது' என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா..? உலகிலேயே ஒன்றே ஒன்றாய்..! அதுவும் அந்த தினசரி வெளி வருவது நம் இந்தியாவில் ..! அதுவும் நம் தமிழகத்தில்..! சென்னையில்..! திருவல்லிக்கேணியில்... என்றால்..!!! ஆம்..! வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது..!
அதன் பெயர் "தி முசல்மான்"..! இது ஒரு உருது தினசரி..! இதனை 1927-ல் துவக்கியவர் சையத் அஸ்மத்துல்லாஹ். அப்போதைய சென்னை மாகான காங்கிரஸ் தலைவர் டாக்டர்.முக்தார் அஹ்மத் அன்சாரியால் இக்கையெழுத்து தினசரி பத்திரிக்கை துவக்கி வைக்கப்பட்டது. இதன் உரிமையாளர் சையத் அஸ்மத்துல்லாஹ் இறந்தபின்னர் அவர் மகன் சையத் ஃபஸ்ளுல்லாஹ் பொறுப்பேற்றார். இவர் கடந்த 2008-ல் இறந்த பின்னர், இவர் மகன் சையத் நசருல்லாஹ் பொறுப்பேற்று இருக்கிறார். இன்னும் அது கையெழுத்து பிரதியாகவேதான் வெளிவந்து கொண்டு இருப்பதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.
இங்கே பணியாற்றுவோர் மொத்தமே நான்கு பேர்..! உருதில் 'காத்திப்' எனப்படும் மூன்று வனப்பெழுத்தர்கள் தினசரி, இத்தினசரியை எழுதுகிறார்கள். இந்த calligraphers-களில், ரஹ்மான் ஹுசைனி -- தலைமை வனப்பெழுத்தர் ஆவார். மற்ற இருவர் ஷபனா மற்றும் குர்ஷித் என்ற பெண்கள். இவர்களுக்கு செய்திகளை தருவது சின்னச்சாமி பாலசுப்ரமணியம் என்ற ஒரு நிருபர்.
ஒரு குழல் மின் விளக்கு, இரண்டு கூரை மின் காற்றாடிகள், மூன்று குமிழ் மின் விளக்குகளுடன், 1950-ல் அமெரிக்காவின் ஒரு ஓய்ந்துபோன தினசரியிடம் இருந்து ஃபஸ்ளுல்லாஹ் வாங்கிய, ஒரு பிரதி எடுக்கும் இயந்திரத்தத்துடனும் (மேலே உள்ள படம்), 800 சதுர அடியில் ஒரு அறையில் இந்த அலுவலகம் இன்னும் இயங்கி வருகிறது.
தினசரியில் மொத்தம் நான்கே பக்கங்கள். முதல் பக்கம் தேசிய-சர்வதேச செய்திகளும், மற்ற இரு பக்கங்களில் உள்ளூர் செய்திகளும் கடைசி பக்கத்தில் விளையாட்டு பற்றிய செய்திகளையும் எழுதுகிறார்கள். இவர்களுக்கு, ஒரு பக்கம் எழுத 60 ரூபாய் ஊதியம். இந்த தினசரியின் விலை: 75 காசு..!
'பத்திரிக்கை உலகில் குறிப்பாக அச்சுத்துறையில் இவ்வளவு தொழில்நுட்பப்புரட்சி ஏற்பட்டபின்னும் ஏன் இப்படி பழங்கால வழக்கத்தில் இன்னும் கையால் தினசரிகளை எழுதுகிறீர்கள்..?' என்று இவர்களை கேட்டால்..." உருது மொழியை கையால் எழுதுவது என்பதே ஒரு சிறந்த கலை; அதை நாங்கள் விரும்பி ஏற்று ரசித்து செய்கிறோம்" என்கிறார்கள்..!
இப்படியும் இயல்பான மனிதர்கள், எளிமையாக நம்முடன் வாழ்கிறார்களே..! மொழியார்வம் என்றால் இதுதானோ..! ஆச்சர்யம்தான்..!
23 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இன்று அச்சுக்கலையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்ட பிறகும் கூட.....இன்னும் கையெழுத்து பிரதியாகவே ஒரு பத்திரிகை வருவது ஆச்சர்யமான செய்திதான், பகிர்வுக்கு நன்றி நண்பரே........
ஆச்சர்யம்மான ஒன்று.
உருது என்பதால் யாருக்கும் தெரியவில்லை. அந்த செய்தித்தாளை பார்க்க ஆவலாக உள்ளது முயற்சிக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். சகோ எங்கேயிருந்து இதனை எல்லாம் சேகாிக்கீறீா்கள். வியப்பும் மற்றும் மலைப்பும். செல்வ விசயத்திலும், கல்வி விசயத்திலும் பொறாமைப்பட மாா்க்ம் அனுமதியளிக்கிறது. அந்த விசயத்தில் தங்களின் மேல் பொறாமை பொறாமையாய் வருகிறது. தங்களின் பனி மற்றும் ஈருலக வெற்றிக்கு பிராா்த்திக்கும் சகோ
சகோதரர் ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
மிக ஆச்சர்யமான தகவல்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
சகோ. ஆஷிக்!
புதிய தகவல். அதுவும் நம் சென்னையில். அனைவருக்கும் அறியத்தந்ததற்கு வாழ்த்துக்கள். கணிணி வந்தவுடன் கையெழுத்து முற்றிலுமாக மறக்கப்பட்டு விட்டது. இன்றும் இவர்கள் தொடர்வது ஆச்சரியமான விஷயமே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
//அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.//
சகோ அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டாலும் காகிதம் கிடைக்கும் வரை அது சூடு பிடிக்கவில்லை.
காகிதத்தைக் கண்டுபிடித்தவர் சாய் லுன் (Ts'ai Lun) ஆவார். இவருடைய பெயரை அறிந்தவர்கள் மிகக் குறைவே.
1. எழுது பொருளாக மட்டுமின்றி, வேறு பல பயன்பாடுகளும் காகிதத்திற்கு உண்டு. உண்மையைக் கூறின், இன்று தயாரிக்கப்படும் காகிதத்தில் பெரும் பகுதி அச்சிடுதல் அல்லது வேறு நோக்கங்களுக்காகவே பயன் படுத்தப்படுகிறது.
2. கூட்டன்பர்க்குக்கு முன்னர் வாழ்ந்தவர் சாய் லுன். ஏற்கனவே காகிதம் கண்டுபிடிக்கப் பட்டுப் பயனுக்குவராமற் போயிருப்பின் கூட்டன்பர்க் அச்சுக் கலையைக் கண்டுபிடிக்க இயலாமற் போயிருக்கலாம்.
3. காகிதம், நவீன அச்சுக் கலை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டுமே கண்டுபிடிக்கப் பட்டிருக்குமானால், இயங்கும் எழுத்துரு, ஆட்டுத் தோல் ஆகிய இரண்டின் கூட்டிணைவினால் அல்லாமலும் கூட்டன்பர்க்குக்கு நெடுங்காலத்திற்கு முன்பே அறியப்பட்டிருந்த அச்சுப்பாள அச்சு முறை, காகிதம் ஆகிய இரண்டின் கூட்டிணைவு மூலமாக அதிகமான நூல்களை அச்சிட்டிருக்க, முடியும்.
இந்த பதிவை படித்த பிறகு என்னை புதிய ஆய்வில் இறக்கி விட்டு விட்டீர்கள் ஏற்கனவே பல ஆய்வு பெண்டிங்குல இருக்கு இது வேரையா?
நன்றி சகோ
@ஹைதர் அலி அலைக்கும் ஸலாம் வரஹ்...
//சகோ அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டாலும் காகிதம் கிடைக்கும் வரை அது சூடு பிடிக்கவில்லை.//---என்னது...? காகிதம் கிடைக்கவில்லையா..?
காகிதம் கண்டு பிடித்த சாய் லுன்(கி.பி. 50-121), கூட்டன்பர்கை விட 1300 ஆண்டுகள் வயதில் மூத்தவர்....!!!
பின்னர், சீனாவில் கி.பி. 300-களிலேயே காகிதத்தில் பரவலாக எழுத ஆரம்பித்து விட்டார்கள், சகோ.ஹைதர் அலி.
மேலும், காகிதம் ஐரோப்பாவில் அறிமுகம் ஆகி பரவலாக பயன்படுத்தப்பட்டது, கி.பி.12-ம் நூற்றாண்டுகளிலேயே..!
இதற்கு 250 ஆண்டுகளுக்குப்பிறகுதான் கூட்டன்பர்க் அச்சு இயந்திரத்தை ஐரோப்பாவில் கண்டுபிடிக்கிறார்.
ஆக, ஏற்கனவே ஐரோப்பாவில் காகிதம் பரவலான பயன்பாட்டில் இருக்கும்போதுதான் அச்சு இயந்திரம் உருவானது.
எனவே,
//அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.//---இது சரியானதுதான்.
@சுவனப்பிரியன் நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!--அவ்வாறே ஆகட்டுமாக, ஆமீன்..!
//கணிணி வந்தவுடன் கையெழுத்து முற்றிலுமாக மறக்கப்பட்டு விட்டது.//---சரியாய் சொன்னீர்கள் சகோ. சுவனப்பிரியன்.
செய்திகளுக்காக & நலம் விசாரிக்க என்று பெற்றோருக்கு/வீட்டிற்கு கடிதம் எழுதி ஏறக்குறைய ஐந்தாறு வருடங்கள் ஆகின்றன...!
காரணம்... கைபேசி, கணிணி, இணையம்..!
@Aashiq Ahamed அலைக்கும் ஸலாம் வரஹ்... //மிக ஆச்சர்யமான தகவல்...//--எனக்கும்தான்... சகோ.ஆஷிக் அஹ்மத்.
@Feroz
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஃபெரோஸ், குல்...மாஷாஅல்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்.
//எங்கேயிருந்து இதனை எல்லாம் சேகாிக்கீறீா்கள்.// ---இது ஒரு சுவாரசியமான(விபத்து)செய்தி சகோ.
பதிவில் நான் சொன்ன சவூதி சகோதரரின் வேலைக்கு, ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று அறிந்து கொள்ள கூகுளில் தேடியபோதுதான் இந்த தினசரி பற்றி ஆச்சர்ய செய்தி கிடைத்தது.
அப்புறம், தமிழில் "தி முசல்மான்" , "உருது தினசரி", என்று கூகுளிட்டால் இதுபற்றி ஒன்றுமே இல்லை.
அந்த தினசரியும், அதை எழுதுபவர்களும் தமிழகத்தில் தமிழராய் இருந்தும், அதுபற்றி இணையத்தில் இல்லாததால், "தமிழில் நாம் இதை முதலாவதாக வலையேற்ற வேண்டும்" என்றுதான் விக்கிபேடியாவிளிருந்து மொழியாக்க செயலில் இறங்கினேன்.
@THOPPITHOPPI //உருது என்பதால் யாருக்கும் தெரியவில்லை. அந்த செய்தித்தாளை பார்க்க ஆவலாக உள்ளது முயற்சிக்கிறேன்.//---சகோ.தொப்பிதொப்பி, தாங்கள் சென்னையில் இருந்தால், இதுபற்றி ஏதும் நேரிடையாக சென்று தற்சமய செய்திகள் ஏதும் அறிந்தால், தவறாமல் இங்கே பின்னூட்டம் இடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
@ரஹீம் கஸாலி அலைக்கும் ஸலாம் வரஹ்...//பகிர்வுக்கு நன்றி நண்பரே........//--வருகைக்கு மிக்க நன்றி சகோ.கஸாலி.
22,000 பிரதிகள் என்பது ஆச்சரியம். இந்த அலுவலகம் காயிதே மில்லத் சாலையின் ஒரு சந்தில் இருந்ததாக நினைவு. அவர்களின் மொழியார்வம் மரியாதைக்குரியது.
sakotharar ashiq avarkalukku thangalukku menmelum kalvi arivai visalamaakka iraivanidam pirarthikkindren
//சகோ அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டாலும் காகிதம் கிடைக்கும் வரை அது சூடு பிடிக்கவில்லை.//-
நான் சொன்னது ஜோஹான் கூட்டன்பர்க் இயந்திரத்தை அல்ல சகோ அதற்கு பல நூற்றாண்டு முந்தைய அச்சு கோர்ப்பு இயந்திரத்தை பற்றி சொன்னேன்.
இரண்டாம் நூற்றண்டின் போதே சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை சீனர்கள் காகிதம் தயாரிக்கும் உத்தியை நீண்ட காலம் இரசிகமாக வைத்திருந்தனர் ஆனால் சீனா அரேபிய பட்டு வர்த்தகம் ஊடாக அரேபியர்கள் இக்கலையை கற்று சமர்கண்டிலும், பாக்தாதிலும் காகிதம் தயாரித்தார்கள்
12ம் நூற்றாண்டில் இந்த கலையை அரபியமிடமிருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டார்கள் அதுவரை அவர்கள் வைத்திருந்த அச்சு பாள இயந்திரத்தில் தாள்களுக்கு பதிலாக ஆட்டுத் தோல் அல்லது கன்றின் தோல் தான்.
அப்போது இருந்த அச்சு இயந்திரத்தை சொன்னேன்
//--என்னது...? காகிதம் கிடைக்கவில்லையா..?//
@ஹைதர் அலி
//நான் சொன்னது ஜோஹான் கூட்டன்பர்க் இயந்திரத்தை அல்ல//
குறிப்பு: நான் குறிப்பிட்டது ஜோஹான்ஸ் கூட்டன்பர்க் இயந்திரம் பற்றித்தான்.
//அப்போது இருந்த அச்சு இயந்திரத்தை சொன்னேன்//
குறிப்பு:அதைப்பற்றி இப்பதிவில் எக்குறிப்பும் இல்லை.
:)
என்னது...? காகிதம் கிடைச்சிடிச்சா..?
:)
//12ம் நூற்றாண்டில் இந்த கலையை அரபியமிடமிருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டார்கள்//--மிக நல்ல அரிய தகவல்கள்... நாம் அறிய தந்தமைக்கும், தங்கள் வருகைக்கும், பதிலுக்கும், புதிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
@Barari தங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி சகோ.பராரி,
@தமிழ் வினை //அவர்களின் மொழியார்வம் மரியாதைக்குரியது.//--நிச்சயமாக.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி & மிக்க மகிழ்ச்சி சகோ.தமிழ்வினை.
somthing different
@Ravanasamudrama Sankili//somthing different//--indeed...
நன்றி, சகோ.ராவணசமுத்ரமா சங்கிலி.
"வனப்பெழுத்து/தர்” - புதிய வார்த்தை அறிமுகம் - நன்றி.
கையெழுத்துப் பத்திரிகை குறித்த தகவல் சுவாரசியம் என்றாலும், நவீனத் தொழில்நுட்பங்களுக்கு மாறினால், இன்னும் அதிக செய்திகள் தரலாமே என்று தோன்றுகிறது.
@ஹுஸைனம்மா மிக்க நன்றி சகோ.ஹுசைனம்மா.
//நவீனத் தொழில்நுட்பங்களுக்கு மாறினால், இன்னும் அதிக செய்திகள் தரலாமே என்று தோன்றுகிறது.//---எப்போதோ மாறி இருக்கலாம்தான்... ஆனால், அதைவிட... இவர்களுக்கு செய்திகளை அந்த (வனப்பெழுத்து) விதத்தில் தர வேண்டும் என்பதிலேதான் ஆர்வம் போலும்.
உலகின் ஒரே 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..! மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்http://pinnoottavaathi.blogspot.com
Assalamuallikum
உங்கள் கருத்துரையை படித்து சேர்த்துக்கொண்டேன். நன்றி
Please visit now http://nidurseasons.blogspot.com/2012/01/1927.html
Wassalam
JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً)
"Allâh will reward you [with] goodness."
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!