அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, January 31, 2013

26 முஸ்லிமல்லாதோருக்காக...நாம் சொல்லும் கருத்தை பிறர் தவறாக சித்தரிக்கும் ஒரு துர்சூழ்நிலை,
நாம் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் போன ஆற்றாமை,
நம்மை வைத்தே தனது அரசியல் வியாபாரத்தை செய்வோரின் சூழ்ச்சி,

இவற்றுக்கு நடுவே...
//அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சினிமா & ஒலி/ஒளி/எழுத்து ஊடகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்..? தேவையா முஸ்லிம்களின் இந்த விஸ்வரூப எதிர்ப்புகள்..?//
...என்று இன்னமும் கேட்டுக்கொண்டு இருப்போருக்காக கனத்த மனநிலையில்தான் இந்த இடுகையை எழுதுகிறேன் சகோஸ்.

Thursday, January 17, 2013

44 If prostitution legalised... விளைவு..? ---ஓர் அலசல்.


டெல்லி ஃபிசியோதெராஃபி மாணவிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரவாத சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் வல்லுறவு தொடர்பான இந்திய சட்டத்தை கடுமையாக்குவது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி ஜே.ஸ்.ஷர்மா கமிட்டி ஒன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியிடம் 'பாரதிய பாட்டிடா' என்றதன்னார்வ தொண்டு நிறுவனம் (!!?!!) ''விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளது. மேலும் ''நாட்டில் இதுபோன்ற கற்பழிப்புகள் நிகழ காரணம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்காததுதான்'' என்றும் கூறியுள்ளது..! 

பொதுவாக உலக அளவில் உள்ள NGO க்கள் எல்லாருமே இதே மாதிரியான புரிதலில்தான் உள்ளனர். இது சரியா, இதனால் raping குறையுமா, வேறு என்ன பக்க விளைவுகள் ஏற்படும்... என்பதை இப்பதிவில் அலசுவோம்.

Monday, January 14, 2013

17 என் ஜல்லிக்கட்டு அனுபவம்

ஜல்லிக்கட்டு..!
ஊரெல்லாம் இதே பேச்சு..!
செங்கல் ஜல்லியோ..? கருங்கல் ஜல்லியோ..? ஜல்லியை கட்டுன்னா... இதில் எதை கட்டுவது..?
அப்படியே கட்டினாலும், ஜல்லியை எப்படி கட்டுவது,  கயிற்றாலா... கம்பியாலா... அல்லது வாழை நாராலா..?

இப்படி எல்லாம் சந்தேகம் எனக்கு சிறு வயது முதலே ரொம்ப காலமாகவே உண்டு.  உங்களுக்கும் இதே ஐயம் இருக்கலாம். எனக்கு மட்டும் எப்படி அர்த்தம் தெரியும்..? வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்... இன்றும் கூட 'ஜல்லிக்கட்டு' என்றால் என்ன அர்த்தம் என்று நிறைய பேருக்கு தெரியவில்லையே..! அதன் பெயர்க்காரணம் பற்றி அறிய முற்படுதலே இப்பதிவு.


எனது அந்த ஜல்லிக்கட்டு அனுபவம்... ஓர் அலாதியான அதிபயங்கர அனுபவம். நம்பிக்கை மோசடி, வெறித்தனமான துரத்தல், , காயங்கள், உயிருக்கு பயந்து ஓடுதல், த்ரில், காமடி, டிராஜடி... இப்படி எல்லாமே உண்டு. என்னால் மறக்க முடியாதது. ஏனெனில் அன்று நான் விரட்டப்படும் போது... ஓடு ஓடு ஓடு என்று அப்படி ஓடி இருக்கிறேன்... தலைதெறிக்க ஓடி இருக்கிறேன்..!

Saturday, January 5, 2013

20 இந்திய கிரிக்கெட் அணியில் "_வெடிகுண்டு(!) பயங்கரவாதி(?)"

இன்றைய செய்தி... 

Parvez Rassol, the Jammu and Kashmir allrounder, has been included in the 14-member India A squad to play the warm-up one-day match against England on January 6 in Delhi.

இவரை நியாபகம் உள்ளதா சகோஸ்..? 


Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...