அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, July 28, 2011

36 தமுஸ்கிபீடியா

நான் முன்பு ஒருமுறை அதிராம்பட்டினத்திலிருந்து காரைக்குடி நோக்கி  ரயிலில் பிரயாணித்தேன். அப்போது, வீரசோழன் எனும் ஊருக்கு... அந்த ஊரின் மதரசாவில் உஸ்தாத் பணிக்கு சென்ற -- என்னுடன் பயணம் செய்த ஒரு மவுலவியிடம் இஸ்லாம் குறித்த கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது. அவரிடம் இருந்து பல இஸ்லாமிய மார்க்க விஷயங்களை பயணத்தின் போது கற்றுக்கொண்ட நான், ஒரு மார்க்க சட்டத்தில் நான் ஒரு கேள்வி கேட்க அவர் அதற்கு பதில் கூறும் முன் என்னிடம் ஒரு கிளைக்கேள்வி ஒன்றை கேட்டார். 

அந்த கேள்வி யாதெனில்....

"நீங்க 'அத்தா கூட்டமா'... இல்லே... 'வாப்பா கூட்டமா'...?" என்ற கேள்விதான்..!

Friday, July 22, 2011

16 'தேன்கூட்டின் ராஜாக்கள்'..!?

(This is the third article of my 'Honey Bee Series')
முதல்  கட்டுரை :  
தேன்கூடு (A Miracle in Engineering & Technology)  இதில் தேன்கூட்டை தேனீக்கள் எப்படி கட்டி  இருக்கின்றன என்று கண்டு அதிசயிக்க..!

இரண்டாவது கட்டுரை :   
தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..?   இதில் தேனீக்களில் மட்டும் ஆண் 1% -ம்  பெண் தேனீக்கள் 99% -ம் எப்படி சாத்தியமாயின என்று மலைத்து சிந்திக்க..!

சென்ற பதிவில், நான் வைத்திருந்த சில கேள்விகளுக்கு விடை தேனீக்கள் தொடரின் இப்பகுதியில் கிடைக்கும். பெண் தேனீக்களில் மிக முக்கியமான வகையான உழைப்பாளி தேனீக்கள் (worker bees) பற்றி இப்பதிவில் மேலும், சற்று சிந்திப்போம்.   தேனீக்கள் என்றாலே 99% இவைதானே..! 

Friday, July 15, 2011

94 பெண்களே..! வரதட்சணை(சீரு)க்கு எதிரான போரில் இணைவீர்..!

http://genderbytes.wordpress.com/war-on-dowry/
'வரதட்சணை' என்றால் என்ன என்ற முழுமையான புரிதல் நம்மில் எல்லோரிடமும் இல்லை சகோ..! பொதுவாக வரதட்சணையை ஆங்கிலத்தில் DOWRY என்கிறார்கள். இதற்கு, பொருள் என்று நீங்கள் ஆங்கில அகராதியில் தேடிச்சென்றால், 'ஒரு மணப்பெண்ணிடம் இருந்து மணமகன் வீட்டாருக்காக திருமணத்தின் பொழுது கேட்கப்படும் பணம் & பொருள் அனைத்தும்' என்றுதான் எல்லா ஆங்கில அகராதிகளும் அறிவிக்கின்றன. ஆனால், நாம்தான் அதனை தமிழில் பலவகையாக பிரித்து வைத்துள்ளோம்..! மேலும், "அதில் பணம் சம்பந்தப்பட்ட ஒன்றாக" வரதட்சணையையும் தவறாக விளங்கி வைத்திருக்கிறோம்.

Friday, July 8, 2011

39 " ஏழை மணப்பெண்களின் சந்தை ஹைதராபாத்" ---இந்த அவலத்திற்கு யார் காரணம்..?

"மேட்டருக்குள்" நுழையுமுன் ஒரு சிறு முன்னுரை 

ஓர் இஸ்லாமிய திருமணத்தை "இப்படித்தான் செய்ய வேண்டும்" என்ற வரையறையையும் ஒழுங்குகளையும் இஸ்லாம் நமக்கு  கற்றுத்தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. அந்த சட்டங்களை எல்லாம் பேணி ஒரு திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் சொல்லிக்காட்டியபடி நடத்தும் போது தானே அது இஸ்லாமியத்திருமணமாக அமையும்..?

Monday, July 4, 2011

15 தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..?

(The second article of my 'Honey Bee Series') 

தேன்கூடு (A Miracle in Engineering & Technology) என்ற சென்ற பதிவில் தேன்கூடு பற்றிய அற்புதங்களை கண்டோம். இனி, தேனீக்கள் பற்றிய அற்புதங்களை காண்போம். சகோ..! நீங்கள், பள்ளியில் கணிதப்பாடத்தில், 'நிகழ்தகவு' (probability theory) பற்றி படித்திருப்பீர்கள். அதில், 1/2 நிகழ்தகவுக்கு இரு உதாரணங்கள் சொல்வார்கள். ஒன்று... காசு சுண்டும்போது விழும் "பூவா தலையா" ; மற்றொன்று... குழந்தை பிறக்கும்போது "ஆணா பெண்ணா" நிகழ்தகவு. இதன் மூலம் நாம் என்ன அறிகிறோம் என்றால்... ஆண் அல்லது பெண் குழந்தை பிறப்புக்கு 50:50 Ratio வாய்ப்பே இருப்பதாக சொல்கிறது இக்கணிதம். பொதுவாக, இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் (இன அழிப்பு போன்ற மனித ஊடுருவல் இல்லாமல்) இயற்கையாக இப்படித்தான் பொதுவாக ஆண் பெண் பாலினத்தொகை இருக்கிறது.    

Friday, July 1, 2011

18 தேன்கூடு (A Miracle in Engineering & Technology)

(The first article of my 'Honey Bee Series')
.
நம்பினால் நம்புங்கள் சகோ..!  "தேன்கூடு" என்பது அல்லும் பகலும் அயராது பாடுபட்டு பல ஆராய்ச்சிகளின் இறுதியில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மிகத்துல்லியமான ஒரு இயந்திரத்தால், மிகக்கச்சிதமான கணித அளவீடுகள் கொண்டு மனிதனுக்காக மனிதனால் வடிவமைக்கப்பட்ட, "தேன்வேட்டைக்கு" பயன்படும் ஒரு "கருவி" என்றுதான்... நான் பல ஆண்டுகள் வரை நினைத்திருந்தேன்..! ஹி..ஹி.. :)

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...