வருஷா வருஷம் வசூல் சாதனை (!?) உடைக்கப்பட்டுக்கொண்டு இருப்பதும்... ஒருநாள் சராசரி வசூலான 59 கோடி ரூபாய்க்கு பதிலாக, "இந்த தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் மூலம் 330 கோடி ரூபாயை (அஞ்சரை மடங்கு) மக்களிடம் இருந்து அரசு வசூல் செய்து சாதனை(!?)" போன்ற செய்தியும், நமது தமிழ்நாட்டு உண்மை நிலையை மிகவும் கேவலமாக எடுத்தியம்புகிறது. நம் எதிர்காலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சகோஸ். தினமும் விபத்துகள் பெருகுகின்றன. கல்வி, வேலை, உற்பத்தி, சிந்தனை, உடல்நலம், பொருளாதாரம், குடும்ப வாழ்வியல் நிலை, சாலை பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம்... என்று அனைத்தும் பாதிக்கப்பட்டு மொத்த சமூகமுமே பின்தங்கி போய்க்கொண்டு இருக்கிறோம்... மது விற்பனை செய்வோரையும், மருந்து விற்பனை செய்வோரையும் தவிர..!
நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Sunday, November 10, 2013
10 தமிழா..! 'பகுதி நேர பிணம்' ஆகாதே..!
வருஷா வருஷம் வசூல் சாதனை (!?) உடைக்கப்பட்டுக்கொண்டு இருப்பதும்... ஒருநாள் சராசரி வசூலான 59 கோடி ரூபாய்க்கு பதிலாக, "இந்த தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் மூலம் 330 கோடி ரூபாயை (அஞ்சரை மடங்கு) மக்களிடம் இருந்து அரசு வசூல் செய்து சாதனை(!?)" போன்ற செய்தியும், நமது தமிழ்நாட்டு உண்மை நிலையை மிகவும் கேவலமாக எடுத்தியம்புகிறது. நம் எதிர்காலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சகோஸ். தினமும் விபத்துகள் பெருகுகின்றன. கல்வி, வேலை, உற்பத்தி, சிந்தனை, உடல்நலம், பொருளாதாரம், குடும்ப வாழ்வியல் நிலை, சாலை பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம்... என்று அனைத்தும் பாதிக்கப்பட்டு மொத்த சமூகமுமே பின்தங்கி போய்க்கொண்டு இருக்கிறோம்... மது விற்பனை செய்வோரையும், மருந்து விற்பனை செய்வோரையும் தவிர..!
தேடுகுறிச்சொற்கள் :-
அனுபவம்,
ஆரோக்கியம்,
குடி,
சமூகம்,
சரியான புரிதல்,
டாஸ்மாக்,
மனிதவளம்
Friday, June 8, 2012
33 நைட் ஷிப்டா..? அஸிடிட்டியா..? தீர்வு இதோ..!
சென்ற இரு பதிவிற்கு முந்தைய பதிவில், பகல் நேரப்பணியில் கடும் கோடையில் உண்டான பிரச்சினையும் அதற்கு கண்ட தீர்வையும் சொல்லி இருந்தேன் அல்லவா..? இப்போது... இரவுப்பணியில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினையையும் அதற்கு கண்ட தீர்வையும் எழுதப்போகிறேன்..! யாருக்கேனும் எனது அனுபவம் பயன் தந்தால் மிக்க மகிழ்ச்சி..! வழக்கம்போல சகோஸ்... நீங்களும் பின்னூட்டத்தில் மேலும் சில ஐடியாக்களை தாருங்கள்..! :-))
தேடுகுறிச்சொற்கள் :-
Acidity,
அனுபவம்,
ஆரோக்கியம்,
சரியான புரிதல்,
மருத்துவம்
Saturday, May 26, 2012
35 கோடை-சூடு-ஈரம்-வியர்வை (Only for Gents)
முன்குறிப்பு :- இது முழுக்க முழுக்க ஆண்களுக்கான பதிவு..!
.
.
என் பள்ளி காலங்களிலும் சரி... கல்லூரி காலங்களிலும் சரி... எங்கள் வீடு ர்ர்ர்ரொம்பவே ஸ்ட்ரிக்ட்..! பகலில் சட்டையை போட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தால் போதும்..... "வேகாத வெயிலில் வெளியே போகாதே...?"(---மை மதர்) "வெயிலை வீணாக்காமல் விளையாட்டு வேண்டி கிடக்கா...?" (---மை ஃபாதர்) ...என்ற கட்டளைகள் தூள்பறக்கும்..! விடுமுறை நாள் ஆனாலும் கூட... மாலை நான்கு மணிக்கு அப்புறம்தான் வீட்டை விட்டு வெளியே போகலாம், விளையாட..! இப்படியாக வெயில் படாமல் என்னை பொத்தி பொத்தி வளர்த்தார்கள்..!
தேடுகுறிச்சொற்கள் :-
Fungal Infection,
அனுபவம்,
ஆரோக்கியம்,
சரியான புரிதல்,
மருத்துவம்
Wednesday, March 14, 2012
41 தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..? (Photo Gallery)
தொடர்ந்து பல நாட்கள் இரவிலும் பகலிலும் தூங்காமல் கண்விழித்து வேலை செய்பவர்களிடம், வேலையின் தரம் குறையும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதுமிட்டுமின்றி, தூக்கமின்மையால்... சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற பலவித இன்னல்களுக்கும் மனிதன் ஆளாகிறான் என்பதும் கண்கூடு..!
தூக்கம் / உறக்கம் / நித்திரை / கண்ணயர்தல்... என எப்பெயரில் அது
நடந்தாலும், அது ஒரு மனிதனின் மூளையின் செயல்பாடுகள் கூர்மையடையவும்,
மூளையின் வளர்ச்சி சீராக இருக்கவும், அம்மனிதனின் உடல்நலனுக்கும்
அவசியத்தேவை..!
தேடுகுறிச்சொற்கள் :-
Photo Gallery,
ஆரோக்கியம்,
உடல்நலம்,
உறக்கம்,
சமூகம்,
தூக்கம்,
நகைச்சுவை,
நிகழ்வுகள்
Thursday, February 9, 2012
22 சுவாசிக்க 100% ஆக்ஸிஜன் நல்லதா..?
நம் பூமியை சூழ்ந்த பல வாயுக்களின் தொகுப்பான இந்த வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 %ம், ஆக்ஸிஜன் 21 %ம், கார்பன் டை ஆக்ஸைடு
0.033 %ம், ஆர்கான் 0.934 %ம், நியான் 0.0018 %ம், ஹீலியம் 0.00052 %ம்,
மீதம் மீதேன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் மிகக்குறைந்த அளவிலும்
கலந்துள்ளன..!
நாம் சுவாசிக்கும் அந்த காற்றில், ஆக்ஸிஜன் 21% தான் உள்ளது. ஆனால், காற்றில் மனிதனுக்கு தேவையான குறைந்த பட்ச உடல்நலன் பாதிப்பில்லாத ஆக்ஸிஜன் அளவு 19%..! சில சமயம் நோயாளிகளுக்கு 'ஆக்ஸிஜன் மாஸ்க்'... நீருக்கு அடியில் நீந்த செல்வோருக்கு 'ஆக்ஸிஜன் சிலிண்டர்'... என்று சொல்ல/எழுத கேள்விப்பட்டிருப்பீர்கள். இது சரியா..? இதனால், 'நாம் மூச்சு விட 100% ஆக்ஸிஜன் இருந்தால் நமக்கு நல்லது' என்று நாம் நினைத்தால் - இல்லை, உண்மையில் அது தீங்குதான் விளைவிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்..!
தேடுகுறிச்சொற்கள் :-
அறிவியல்,
ஆக்சிஜன்,
ஆரோக்கியம்,
சரியான புரிதல்,
நைட்ரஜன்,
படைப்பு
Saturday, October 15, 2011
30 Micro-Wave ஒவன் உபயோகிக்கும் நாம் அறிய வேண்டியன:
ஒரு முக்கிய அறிவிப்பு :-
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இந்த பதிவை நான் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. ஓட்டுப்பட்டையையும் தூக்கி விட்டேன்.
காரணம்:- சமீபத்தில் சக பதிவர்கள் மீது தமிழ்மண நிர்வாகி ஒருவரின் மோசமான சொற்பிரயோகமும் அதனை தொடர்ந்த அவரின் கருத்து இஸ்லாமிய முகமனை கேலி செய்வதாக இருப்பதாலும் அது குறித்து முஸ்லிம்கள் சார்பாக தமிழ்மணத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மற்ற தமிழ்மண நிர்வாகிகளின் விளக்கம் வரும்வரை இந்த பதிவு தமிழ்மணத்தில் சேர்க்கப்படாது. யாரும் சேர்த்துவிடவும் வேண்டாம்.
என் சகோதர பதிவர்கள் பலரை கேவலமாக ஏசி இருப்பதற்கும், இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்கும் அவரும் தமிழ்மணமும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் ஓட்டுப்பட்டை இணைக்கப்படும். புரிந்துணர்வு இல்லாமல் தொடரும் இவர்களின் ஒத்துவராத உழைப்புக்கு நன்றி சொல்ல தற்காலிகமாக இயலவில்லை..!
நாம் வாழும் தற்போதைய அதிவேக 'ஃபாஸ்ட்ஃபுட்' யுகத்தில் பலருடைய சமையல் அறைகளில் 'மைக்ரோ-வேவ் ஒவன்' முக்கிய இடம் பிடித்துவிட்டது, 'எப்போ பார்த்தாலும் கிச்சன்குள்ளயே நிக்க வேண்டியதா இருக்கு' என்று அங்கலாய்த்தவர்ளுக்கு, மிகப்பெரிய ஆபத்பாந்தவனாக... இன்னுமொரு மகத்தான அறிவியல் கண்டுபிடிப்பாக இவை வந்து... நிமிடங்களில் சமையலை முடித்துக்கொடுத்து விடுகின்றன. இந்நிலையில், 'மைக்ரோ வேவ் ஒவனை உபயோகிப்பது பற்றி' முழுமையாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்துவதுதான் 'மைக்ரோ ஒவன்' மற்றும் அதை உபயோகிக்கும் நமக்கும் பாதுகாப்பு அல்லவா சகோ..?

========================================================================
நாம் வாழும் தற்போதைய அதிவேக 'ஃபாஸ்ட்ஃபுட்' யுகத்தில் பலருடைய சமையல் அறைகளில் 'மைக்ரோ-வேவ் ஒவன்' முக்கிய இடம் பிடித்துவிட்டது, 'எப்போ பார்த்தாலும் கிச்சன்குள்ளயே நிக்க வேண்டியதா இருக்கு' என்று அங்கலாய்த்தவர்ளுக்கு, மிகப்பெரிய ஆபத்பாந்தவனாக... இன்னுமொரு மகத்தான அறிவியல் கண்டுபிடிப்பாக இவை வந்து... நிமிடங்களில் சமையலை முடித்துக்கொடுத்து விடுகின்றன. இந்நிலையில், 'மைக்ரோ வேவ் ஒவனை உபயோகிப்பது பற்றி' முழுமையாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்துவதுதான் 'மைக்ரோ ஒவன்' மற்றும் அதை உபயோகிக்கும் நமக்கும் பாதுகாப்பு அல்லவா சகோ..?
தேடுகுறிச்சொற்கள் :-
ஆரோக்கியம்,
உடல்நலம்,
சமூகம்,
நிகழ்வுகள்,
மைக்ரோவேவ் ஓவன்
Wednesday, June 15, 2011
15 அதிகநேரம் அமர்ந்திருந்தால் அதிவிரைவில் அமரர்...!? அதிர்ச்சிஅறிக்கை..!
எனதருமை சகோ..!
சென்றவருடம் டிசம்பரில், அலுவலில் அல்லது பதிவுலகில்(?!) 'மணிக்கணக்கில் பொட்டி தட்டுவோர்' -களுக்காக...
சென்றவருடம் டிசம்பரில், அலுவலில் அல்லது பதிவுலகில்(?!) 'மணிக்கணக்கில் பொட்டி தட்டுவோர்' -களுக்காக...
---என்று உங்க உடம்பு நோகாமல் இருக்க(?) ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது அதன் அதிபயங்கர பின்னணி தெரியாமல் அப்படி ஒரு பதிவு போட்டுவிட்டேன். ஸாரி...! ஆனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலேயே கூடிய சீக்கிரம் உயிர்போக வாய்ப்பு அதிகமாம்..!? இப்படி ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கை ஒன்றை சொல்லி இப்போது வயிற்றில் புளியை கரைக்கிறார்கள்..! என்னத்த சொல்ல சகோ..?! அந்த அறிக்கை சொல்வதை நீங்களே தொடர்ந்து படியுங்களேன்..!
தேடுகுறிச்சொற்கள் :-
ஆரோக்கியம்,
உடல்நலம்,
கணினி,
சமூகம்,
டிவி,
தவறான புரிதல்,
நிகழ்வுகள்
Wednesday, March 30, 2011
16 நீ...ண்டநேரம் Bluetooth Headset/Cordless Phone உபயோகிக்கிறீர்களா சகோ..?
"உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ." என்ற என் சென்ற பதிவில், செல்ஃபோனை காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் (1/4, 1/2, 1 மணிநேரம் என்று) மணிக்கணக்கில் அடிக்கடி செல்ஃபோனில் பேசுவோருக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரலாம் என்று பார்த்தோம். அதில் இருந்து என்னென்ன வழிகளில் அவர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் பார்த்தோம். அதில், Speaker-phone, Ear-phone, Landline-phone ஆகியன உபயோகித்தல் நலன் பயக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.
தேடுகுறிச்சொற்கள் :-
Bluetooth Headset,
Cell Phone,
ஆரோக்கியம்,
உடல்நலம்,
கைபேசி
Saturday, March 26, 2011
57 உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன் Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.
தேடுகுறிச்சொற்கள் :-
Cell Phone,
Mobile,
ஆரோக்கியம்,
உடல்நலம்,
கைபேசி
Tuesday, December 14, 2010
12 நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..!
(அலுவலில் அல்லது பதிவுலகில் 'மணிக்கணக்கில் பொட்டிதட்டுவோர்'களுக்காக)
உங்களுக்கு நீண்ட நேரம் 'பொட்டிதட்டும்' வேலையாலோ... அல்லது 'ஒரு பரபரப்பு பதிவு' போட்டுவிட்டு அதற்கு எவரேனும் பின்னூட்டமிடுகிறாரா... என எந்நேரமும்... 'கணிணித்திரையும் கண்ணுமாய்' காத்திருந்து, பின்னூட்டமிட்டவர்களிடம் 'விசைப்பலகையும் விரல்களுமாய்' கடுமையான விவாதம் புரிவதாலோ... கண் பார்வை பிரச்சினை, முதுகு வலி, தோள் புஜம் நோவு, முழங்கால் வலி, மணிக்கட்டு வீக்கம், பாதச்சோர்வு, தசைப்பிடிப்பு, தலைவலி, இடுப்புவலி ...( ...போதும்... போதும்... என்கிறீர்களா..? ) ...சரி, இதெல்லாம் வராமல் இருக்க... அல்லது தாமதமாக வர...(!?) அல்லது வந்த வலி குறைய... வேண்டுமானால், பின்வரும் ஆலோசனைகளை செயல்படுத்தி பாருங்களேன்..!
தேடுகுறிச்சொற்கள் :-
ஆரோக்கியம்,
உடல்நலம்,
கணினி
Subscribe to:
Posts (Atom)