தொடர்ந்து பல நாட்கள் இரவிலும் பகலிலும் தூங்காமல் கண்விழித்து வேலை செய்பவர்களிடம், வேலையின் தரம் குறையும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதுமிட்டுமின்றி, தூக்கமின்மையால்... சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற பலவித இன்னல்களுக்கும் மனிதன் ஆளாகிறான் என்பதும் கண்கூடு..!
தூக்கம் / உறக்கம் / நித்திரை / கண்ணயர்தல்... என எப்பெயரில் அது
நடந்தாலும், அது ஒரு மனிதனின் மூளையின் செயல்பாடுகள் கூர்மையடையவும்,
மூளையின் வளர்ச்சி சீராக இருக்கவும், அம்மனிதனின் உடல்நலனுக்கும்
அவசியத்தேவை..!
எனக்கெல்லாம் பகலில் தூங்காமல் சுத்திவிட்டு... அப்படியே... நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு... வந்து, உடனடியாக காலையில் தூங்காமல் செய்தாக வேண்டிய அத்தியாவசிய அவசிய வேலை ஏதேனும் வந்து... (மதிய சமையலுக்கு தேவையானதை வாங்கிவர மார்க்கெட், குழந்தைக்கு தடுப்பு ஊசி போட மருத்துவமனை, அரசு அலுவலகங்களில் நமது தேவைகள்... என வெளியே சுற்றுதல்... விருந்தினர் வந்துவிடல்...) அதில் நான் ஈடுபட்டால், அப்போது என் கண்களின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக ஏதோ மத்தாப்பு பொறி பொறியாக விழும்; காதுகளில்... 'ங்ஞொய்ய்ய்ய்ய்' என்ற ரீங்கார இரைச்சல் தொடர்ந்து கேட்கும்..! இதெல்லாம் தூங்கி எழுந்தால் காணாமல் போய்விடும்..! (இந்த அனுபவம் உங்களில் யாருக்கேனும் உண்டா..?)
தூக்கம் முக்கியந்தான்..! ஆனால்... அதுக்காக இப்படியெல்லாமா மனிதர்கள் தூங்குவார்கள்..? நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள் சகோ..!
வலையக்கூடாது... ஆனாலும் வலைஞ்சாச்சு..
சில்ட்ரன்ஸ் பார்க்கா, ஸ்லீபிங் பார்கிங்கா
இதுக்கு இனி, முள்கம்பி பயன்படுத்துவாங்க போல...
நிழல் நகர்ந்தால் வண்டியும் நகருமா..?
கொஞ்சம் பெரிய வண்டியா வாங்குறது..?
அவர் டூட்டியில் இருக்கார்..!
வேலிக்குள் 'பாதுகாப்பு படை' சூழ என்னவொருநிம்மதியான தூக்கம்..!
இந்த மரத்துக்கு பேரு தூங்குமூஞ்சி மரமா..?
குழந்தைங்க மேலே நாம் எதுவும் ஃபோர்ஸ் பண்ணினால், எல்லாம் அவங்க இஷடம்தான்.
நல்ல அணைப்பு சுகம் கத்து வச்சு இருக்கார்.

சேரா...சகதியா... தூக்கம் வந்தால்... எல்லாம் பஞ்சுமெத்தை..!
மூட்டை பூச்சி கடிக்குமா..?
வீட்டில் தூங்கினால் ஃபிளைட்டு மிஸ் ஆகிரும்னு பயம் போல...
டிரைவருக்கு குழந்தை மனசு..!
புரண்டு படுத்தா... டமால்..!
அடப்பாவி மாக்கான்...
கொஞ்சம் லைனில் வெயிட் பண்ண சொல்லி இருப்பாங்க..! அதுக்குள்ளே...
இன்னிக்கு பந்த் ஆக இருக்குமோ..?
நல்ல டெக்னிக்..!
இனி... ஒரு நாற்காலிதாண்டி உன் ஆபீசுக்கு...!
இரும்புப்படுக்கை
(மோசஸ்) மூஸா நபி வரலாறு.... அப்புறம் கர்ணன் கதை... தளபதி சினிமா... இன்னும் இந்த புராண கால டெக்னிக் தொடர்கிறது போல...
ரப்பர் டியூப்பை சுற்றினால், அதில் ஒரு சொகுசு.
அட்டைப்பெட்டி... தெர்மோகோல்... ம்ம்ம்.. சர்தான்...
ஆராரோ பாடியதாரோ... தூங்கிபோனதாரோ...
ஓ..! டை-க்கு இப்படி ஒரு உபயோகம் உண்டா..!
இப்படி முட்டி போட்டுத்தான் தூங்கணுமா..?
சூப்பர் மார்க்கெட்டில் எக்ஸ்பைரி அயிட்டம் போல...
இந்த காரின் பம்பர் செஞ்சவன் பார்த்தால்... நொந்துருவான்..!
பிரிக் பெட் - செங்கல் மெத்தை
சீட்டில் சாய்மானம் உடைந்தால் இப்படி ஒரு வசதி.
சிக்னல் விழ தாமதம் ஆகிறது என்பதற்காக இப்படியா..?
என்னவொரு வித்தியாசமான போஸ்..!
உயர் அதிகாரி வந்து உருட்டி விடப்போறார்..!
டாய்லட்டுக்கு பாடி ஸ்ப்ரே அடிச்சா... இப்படித்தான்...
சீன பார்லிமெண்டை பார்த்து ஒட்டுமொத்தமா தூங்க கத்துக்குங்க...!
********************
ஒருவனுக்கு மரணம் வந்தால்... அவன் எங்கும் எந்த நிலையிலும் எப்படியும் விழுந்து இறந்து கிடப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால்... எவரும், எங்கும், எந்த நிலையிலும், எப்படியும் தூங்க முடியுமா..? முடிகிறதே..! ஆக, தூக்கமும் (NREM Sleep stage 3-4) 'ஒருவகை சிறு மரணம்' போல்தான் என்கிறார்கள்..! சரிதான்..!
புஹாரி = 6325.
அபூ தர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது... அல்லாஹும்ம பிஸ்மிக்க
அமூத்து வ அஹ்யா (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன். உயிர் வாழவும்
செய்கிறேன்)' என்று கூறுவார்கள். உறக்கத் திலிருந்து விழிக்கும்போது, அல்ஹம்து லில்லாஹில் லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந்நூஷூர் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச்செய்து பின்னர்
எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், அவனிடமே
செல்ல வேண்டியுள்ளது.) என்று கூறுவார்கள்.
அல்குர்ஆன் = 39:42
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின்
உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ
அதைத்தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை
விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
41 ...பின்னூட்டங்கள்..:
.
.
இப்பதிவு மேலும் பலரின் பார்வைக்கு சென்றடைய >>>>
இங்கே <<<< கிளிக் செய்து தமிழ்மணத்தில் வாக்களியுங்கள்.
இந்த தூங்கு முஞ்சிகளின் படம் எடுக்க எத்தனை நாட்கள் நீங்கள் தூங்காமல் இருந்தீர்களோ! நான் இந்த படத்தைப் பார்த்து கொடுத்து வைத்தவர்கள் (தூங்குபவர்கள்) நினைத்த இடத்தில இவர்களால் தூங்க முடிகின்றதே என ஆச்சர்யப்பட்டேன்! எல்லா வசதி இருந்தும் தூக்கமாத்திரை போட்டும் எனக்கு தூக்கம் வரவில்லையே என்று வருந்தும் நிலையில் இந்த படம் பார்த்ததும் அதன் நினைவாகவே அயர்ந்துதூங்கிவிட்டேன். தூங்க வைத்தமைக்கு நன்றி.
அருமையான படங்களை அள்ளித் தந்தமைக்கு என் வாழ்த்துகள் . நகைச்சுவை உணர்வும் நம்மிடம் இருந்தால்தான் கவலை இருந்தாலும் ஓடிவிடும்
.
THESE FELLOWS ARE GREAT AS THEY GRAB ANY AVAILABLE MEANS TO HAVE A SOUND SLEEP
WHILE MILLIONS EVEN WITH ALL THE COMFORT
ARE UNABLE TO SLEEP
AND WALLOWING WHAT NOT TO CATCH SLEEP.
.
இந்த புகைபடங்களை எங்கிருந்து தோண்டி எடுத்தீர்கள் .சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது .வாழ்த்துக்கள் .
சலாம் சகோ....
படங்கள் எல்லாம் உண்மையா?அப்படியே நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் படங்களையும் போட்டு இருக்கலாமே...ஹி ஹி...
தூக்கம் என்ற மாமருந்து!
உடலுக்கு இயற்கையாகத் தேவைப்படுவது தூக்கம்; உறுப்புகளின் ஓய்வு _ (ஒரு சில உடல் உறுப்புகள் இதற்கு விதிவிலக்கு என்பதை நாம் அறிவோம்) போதுமான தூக்கமின்மையே பல்வேறு நோய்களுக்கும், உடல் நலக் குறைவுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
வயது வளர, வளர_குறிப்பாக முதுமை நம்மை முத்தமிடும் நிலையில் தூக்கம் குறைவது வாடிக்கை. அதை வெகு கவனமாகக் கண்காணித்தால் நலவாழ்வு நம் கையில் நிச்சயம்!
மூன்று முக்கிய வழிகள்_நமக்குத் தூக்கக்குறைவு, தூக்கக்கெடுதலை அறிவிக்க உள்ளன.
1. உங்களை எழுப்ப ஒவ்வொரு நாளும் அலாரம் டைம்பீஸ் என்ற கடிகாரத்தின் உதவியை நாடுகிறீர்களா?
2. மதிய நேரங்களில் நாம் செய்யும் வேலைகளைச் செய்ய இயலாத அளவு தூக்கம் தள்ளுகிறது. தூக்கத்தை எதிர்தள்ளி_எதிர்நீச்சல்போல் நீக்கி அதற்கு மேல் தள்ளாடிப் பணி செய்யும் நிலையா?
3. இரவு உணவு முடித்தவுடனேயே சிறு தூக்கத்தில் உடனடியாக உங்களை அறியாமலேயே வீழ்ந்து விடுகிறீர்களா?
இம்மூன்றுக்கும் பதில் ஆம் என்றால், அவருக்குப் போதிய தூக்கமின்மைத் தொல்லை உள்ளது என்பதற்கான அறிகுறிகள் அவை!
மேலும் தூக்கம் தேவைப்படுகிறது அவருக்கு என்பதனை_அறிவிப்புகளை உடல் அவர்களுக்குத் தருகிறது என்பது பொருள்!
குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி_ தேவையுமாகும் என்கிறார்கள் தூக்க ஆய்வு நிபுணர்கள்!
8 மணி நேரம் தூங்கினாலும் கூட, மேற்காட்டிய அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் அவர் நிச்சயம் டாக்டரிடம் சென்று அவருடைய அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.
மிகவும் குறைந்த சக்தியைத்தான் இந்தப் போதிய தூக்கமின்மை ஒருவருக்கு உடலில் ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் உள்ள பிரபல ஜான்ஹாப்கின்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியாகும் தி ஜெர்னல் ஆஃப் சிலீப் ரிசர்ச் (The Journal of sleep research) என்பதில் வெளியான ஓர் அரிய தகவல் இதோ:
மதிய உணவுக்குப் பிறகு சிறிதுநேரத் தூக்கம் (map-eats nap இதற்கு Siesta என்ற ஓர் ஆங்கிலச் சொல்லும் கூட உண்டு) போட்டு எழுந்தால் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியை அது தரும்.
ஜெர்மனியில் உள்ள ஆய்வாளர்கள் இந்த மதிய உணவுக்குப்பின் போடும் சிறு தூக்கத்தின் விளைவு எப்படிப்பட்டது என்று ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
சில சொற்கள் கொண்ட ஒரு பட்டியலை தூக்கம் போடுவோரிடம் தந்து, தூக்கத்திற்கு முன்பும், தூங்கி விழித்த பின்பும் கூறுமாறு செய்து பார்த்ததில் தூங்கி விழித்தாலும் நன்றாகப் பதிந்துள்ள நிலையில் அவர்களால் சொல்லமுடிகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்.
அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்றான கார்னெல் (Cornell University) உள்ள டாக்டர் ஜேம்ஸ் மாஸ் Ph.D., என்பவர் ஒவ்வொருவருக்கும் கூடுதல் நேரம் கிடைக்க அரிய வழி ஒன்றைத் தனது ஆய்வின் மூலம் அருமையாகத் தந்துள்ளார்!
இரவில் நெடுநேரம் தூங்கி எழுபவர்கள்_ தூக்கமின்மையால் அவதியுறாதவர்கள், பகலில் அதிக நேரத்தைத் தங்களது பணிகளுக்காகப் பெறுகிறார்கள்.
என்ன வியப்பாக இருக்கிறதா?
ஆம் உண்மை; கற்பனை அல்ல; மிகை அல்ல!
தூக்கக் குறைவுக்கு ஆளானவர்கள் எந்தப் பணியையும்_செயலையும்_மெதுவாகவும், இழுத்து இழுத்தும்தான் செய்கிறார்கள். சரியாகத் தூங்கி விழித்தவர்களோ, எந்தப் பணியையும் சுறுசுறுப்புடன் முடித்துவிடுகிறார்கள்.
அமெரிக்காவில் மிசிகன் மாநிலத்தில் உள்ள டிட்ராய்ட் நகர (கார் நகரம்) த்தில் உள்ள Ford Hospital sleep disorders and research center இல் நடத்திய ஆய்வில் வாரத்தில் ஒரு மணிநேரம் இரவுத் தூக்கத்தை அதிகரித்து தூங்கி எழுபவர்களை வைத்து ஆய்வு செய்ததில்,
அவர்களது சுறுசுறுப்பு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதனால் ஒப்படைக்கும் பணிகள் ஒழுங்காக விரைந்து முடிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தூக்கத்தைக் குறைக்காதீர்.!
http://viduthalai.periyar.org.
தூக்கத்தின் அவசியம்!
மனம், உடல் சோர்வில் இருந்து விடுபட மனிதனுக்கு தூக்கம் என்ற ஒன்று அவசியமாகிறது. நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க வேண்டுமானால் இரவில், நமக்கு நல்ல தூக்கம் தேவை.
அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் பொதுவானதாக இருந்தாலும், மனிதன் மட்டும்தான் இயற்கையிலிருந்து மாறுபட்டு தனது தேவைக்கேற்ப தூங்கும் நேரத்தை மாற்றிக் கொண்டு பின்னாளில் நோயுற்று அவதிப்படுகிறான்.
இரவில் நன்றாகத் தூங்கினால்தான் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்ற நிலையில், இன்றைய காலகட்டத்தில் 30 சதவிகித மக்கள் தூக்கம் சம்பந்தப்பட்ட கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர் என்கிறது மருத்துவக் குழுவினர் நடத்திய ஓர் ஆய்வு.
நோயாளிகளில் 50 சதவிகிதப் பேருக்கு தூக்கமின்மை (இன்ஸம்னியா) நோய் உள்ளது என்றும் மருத்துவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சரியான தூக்கமின்மைக்கு சுற்றுப்புறச் சூழல், பதற்ற நிலை, கவலை, நடுக்கம் போன்ற பல பொதுவான காரணங்கள் உள்ளன. ரத்த அழுத்தம், இருமல், மனச் சோர்வு முதலியவற்றுக்காகப் பயன்படுத்தும் மருந்துகளால்கூட தூக்கமின்மை ஏற்படலாம்.
உலக மக்களையே மிரட்டிய ஹிட்லர் போர்க்காலத்தில் தூக்கம் வராமல் தடுக்க ஒருவகை மருந்தை கண்களில் ஊற்றி வந்ததாகவும், பின்னாளில் அந்த மருந்தால் அவருக்கு பல நோய்கள் ஏற்பட்டதாகவும் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தூக்கம் பற்றி திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம், அரசு மருத்துவக் கல்லூரி மூளை நரம்பியல் துறை பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் எம்.ஏ அலீம் கூறியது:
"ஒருவரின் உறக்கம் கண் அசைவுள்ள தூக்கம், கண் அசைவற்ற தூக்கம் என்ற இரண்டு வகையான தூங்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
ஒருவர் தூங்கத் தொடங்கியவுடன் முதல் 90 முதல் 100 நிமிஷங்களுக்கு கண் அசைவு தூக்கம் ஏற்படுகிறது. பின்னர், கண் அசைவற்ற தூக்கம் பல நிலைகளில் ஏற்படுகிறது.
மொத்த தூக்கத்தில் கண் அசைவு தூக்கம் 20 சதவிகிதமும், கண் அசைவற்ற தூக்கம் 80 சதவிகிதமும் நிகழ்கின்றன.
மூளைத் தண்டின் பான்ஸ் பகுதி சல்லடை நரம்பு இழைகள் தூக்கத்தைச் சீர்செய்வதாகக் கருதப்படுகிறது.
பொதுவாக, தூங்கும் அறையில் அதிக வெளிச்சமோ, அதிக சப்தமோ வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புகைபிடித்தல் மற்றும் இதர நிக்கோடின் பொருள்களை படுக்கைக்குப் போகும் முன்பு அல்லது இரவின் நடுவே, தூக்கத்திலிருந்து விழித்திடும்போது பயன்படுத்தக் கூடாது.
இரவில் அதிகமான உணவை உள்கொள்வதால் தூக்கம் பாதிக்கப்படலாம். தூங்கச் செல்வதற்கு முன்பு காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது''
SOURCE: INTERNET
சரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்!
ஆராய்ச்சி தகவல்
லண்டன், மார்ச் 27- பெண்கள் போதுமான அளவுக்கு தூங்காவிட்டால் இருதய நோய் தாக்கும் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் எரிச்சல்படும் மனநிலையில் இருந்தால் அதற்கு காரணம் அவர்கள் சரியாக தூங்காததுதான் காரணமாக இருக்கும்.
ஆண்களை விட பெண்களுக்கு தான் தூக்கம் அதிகம் தேவைப்படுகிறது.
அவர்கள் போதுமான அளவுக்கு தூங்காவிட்டால், அவர்களுக்கு இருதய நோய், மனநோய் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஆண்களுக்கு தூக்கம் இல்லாவிட்டால் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் பெண்களுக்கு தூக்கம் இல்லாவிட்டால் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.
இந்த தகவலை டியூக் பல்கலைக் கழகத்தில் உள்ள உளவியல் துறை தலைவர் டாக்டர் எட்வர் சவாரெஸ் தெரிவித்தார். அவர்தான் இந்த ஆராய்ச்சியை நடத்தினார்.
வெளிச்சமாக இருந்தால் சரியாகத் தூங்க முடிவதில்லை... வெளிச்சத்துக்கும் தூக்கத்துக்கும் என்ன சம்மந்தம்?
பதில் தருகிறார் டாக்டர் என். ராமகிருஷ்ணன். ஸ்லீப் ஸ்பெஷலிஸ்ட்...
''நம்ம தூங்கவைப்பது மூளையின் ஒரு பகுதியில் சுரக்கும் மெலட்டோனின் என்கிற என்சைம்;. அது சுரப்பதற்கு, 'உலகம் இருண்டு விட்டது. இனி தூங்கலாம்!' என்று கண்கள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கட்டளையைப் பிறப்பிக்க வேண்டும்.
உடம்பும் அதை உணர்ந்து ஓய்வுக்குத் தயாராக வேண்டும்...
இருட்டு, இயல்பான தூங்கும் நேரம் என எல்லாவற்றையும் மூளை நம் புலன்களின் செயல்பாட்டின் வாயிலாக உணரும்போது மெலட்டோனின் தேவைக்குச் சுரந்து தூக்கம் உங்களைத் தழுவும்...
தூக்கத்திற்கான நேரம் வந்தும் நல்ல வெளிச்சத்தில் நாம் வேறு வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது, சூழ்நிலையைப் புரிந்து கொள்வதில் மூளையில் தடுமாற்றம் ஏற்பட்டு மெலட்டோனின் சுரப்பதில் சிக்கல் உண்டாகும். உடம்பு களைப்பாகும், உறக்கம் தள்ளிப்போகும்...
அதிகாலையில் எழுந்து வாக்கிங், ஜாக்கிங் சென்றால் புத்துணர்ச்சி ஏற்படுவதாகச் சொல்கிறோம்...
அதற்குக் காரணம், இதுபோன்ற பயிற்சிகள் நம் உடம்பில் மெலட்டோனின் அளவை விரைவாகக் குறைத்து தூக்கத்தின் தன்மையை சீக்கிரம் போக்கிவிடுவதால்தான்.
காலையில் தேகப் பயிற்சிகள் செய்யாதவர்களுக்கு மெலட்டோனின் அளவு குறைய காலதாமதமாவதால் தூக்கம் கலைந்து புத்துணர்வு பிறக்கவும் தாமதமாகும்... ஆக உறக்கமும் உற்சாகமும் உடம்பில் மெலட்டோனின் அளவைப் பொறுத்தது...
நம் உடம்பு அதை இயல்பாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நாம் கஷ்டப்படுத்தும் போதுதான் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு சங்கடங்கள் உண் டாகிறது.
இரவுப் பணி என்று வரும்பொழு மாதத்தில் ஒருவாரம் பத்து நாள் என்று வரும் ஷிஃப்ட் முறையில் பாதிப்புகள் குறைவு... கால் சென்டர்போல் காலமெல்லாம் நைட்ஷிஃப்ட் என்பது மன அழுத்தத்தில் துவங்கி இதயத்தை தாக்கும் அபாயம் இருக்கவே செய்கிறது.
இதை தவிர்க்க நினத்தால் இரவுப் பணி முடிந்தபின், குளிக்காமல், டி.வி. பார்க்காமல், அறையை முடிந்தமட்டும் இருட்டாக்கி, இரவுத் தூக்கத்தின் இழப்பை பகலில் தூங்கி சரிகட்டினால் ஓரளவுக்கு தப்பிக்கலாம்...
மற்றபடி ஒரு இரவு தூக்கத்தின் இழப்பை சரிகட்ட இருமடங்கு பகலில் தூங்கினால்தான் உடம்பு மீண்டும் இயல்புக்குத் திரும்பும்... அது முடியாத பட்சத்தில் நாம் இழப்பது தூக்கத்தின் நேரத்தை மட்டுமல்ல வாழும் நேரங்களையும்தான்.''
இதற்குப் பிறகும் கால் சென்டரில் காலமெல்லாம் வேலைபார்க்க எத்தனை பேருக்கு துணிவு வருமோ?
Source: internet
மாப்ள போட்டோக்கள் அருமய்யா...பைக்ல நானும் இப்படி தூங்கி இருக்கேன் ஹெஹெ!
அஸ்ஸலாமு அலைக்கும்.
// தூக்கம் முக்கியந்தான்..! ஆனால்... அதுக்காக இப்படியெல்லாமா மனிதர்கள் தூங்குவார்கள்..? நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள் சகோ..! //
தூக்கம் என்பது இறைவன் தருகிற பாக்கியம்.அவற்ற்றை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள்?இந்த வித்தகர்கள். அயல் நாடாக இருக்க போய் அவர்களின் உடைமைகள் தப்பித்தது.நம் நாடாக இருந்தால் தூக்கத்திருக்கு பிறகு. துக்கமும் காத்திருக்கும்.
// சீன பார்லிமெண்டை பார்த்து ஒட்டுமொத்தமா தூங்க கத்துக்குங்க...!//
சரியாக சொன்னீங்க அப்பத்தான் எதிர் கட்சி சண்டைகளும் கூச்சலும் இல்லாமலிருக்கும்.
தூக்கம் வராட்டி மாத்திரைகளை போட்டுக்க சொல்லுங்க!
ஹா ஹா ஹா சூப்பர் போட்டோ கெலக்சன்..
சூப்பர் போட்டோ கெலக்சன்..
சலாம் சகோ!
போட்டோக்கள் அனைத்தும் அருமை. தூக்கமாத்திரை போட்டும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கும் பலர் இதனை பார்த்து ஆச்சரியப்படுவார்கள். இருந்தாலும் தண்டவாளத்தில் எல்லாம் தூங்குவது கொஞ்சம் ஓவர்... :-)
//கண்களின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக ஏதோ மத்தாப்பு பொறி பொறியாக விழும்; காதுகளில்... 'ங்ஞொய்ய்ய்ய்ய்' என்ற ரீங்கார இரைச்சல் தொடர்ந்து கேட்கும்..! இதெல்லாம் தூங்கி எழுந்தால் காணாமல் போய்விடும்..! (இந்த அனுபவம் உங்களில் யாருக்கேனும் உண்டா..?)//
ஏன் இல்லை? ஒரு பகல் ஒரு இரவு என்று தொடர் டியூட்டி பார்த்துவிட்டு காலையில் உறங்காமல் ஏதாவது பர்சேஸ் செய்யப் போகும் பொழுது வரும் பாருங்கள், அடேங்கப்பா..
இந்தப் படத்தில் உள்ள ஏதேனும் ஒரு நிலைக்கு நம்மையும் அறியாமல் சென்று விடுவோம்.
அப்பொழுது புரியும் உறக்கம் இறைவனின் எவ்வளவு பெரிய அருட்கொடை என்று!.
உலக சாதனை படைக்க ஒருவர் பல நாட்கள் தூங்காமல் இருந்து விட்டு பின்பு அவர் பைத்தியமாகி திரிந்தார் என்று கேள்வி
சலாம் சகோ முஹம்மத் ஆசிக்,
office ல மேனேஜர் க்கு தெரியாமா தூங்க ஏதாவது பிரத்யேக வழி இருக்கா???? ஹ..ஹ..ஹா..
சீனா பார்லிமென்ட் படம் பார்த்து சத்தமிட்டு சிரித்தேன்.. office ல எல்லாரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு...
பயபுள்ளைக எல்ல நாட்லயும் தூங்கத்தான் செய்றாங்க போலிருக்கு...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ. ஆசிக்,
உறங்காத ஒருவன் இறைவன் மட்டுமே...
முதல்ல இஸ்லாமிய விமர்சன தளங்களை பார்த்தா வேறுப்பாக இருந்தது, பிறகு சிரிப்பு வந்தது ஆனால் இப்பெல்லாம் இஸ்லாமிய விமர்சன தளங்களை பார்த்தாளே தூக்கம்தான் வருது.
:)
ஸலாம்
வித்தியாசமான படங்கள் ....
இப்படங்களை காணும்போது எனக்கு நடந்த அதிர்ச்சியான அந்த நிகழ்வு நினைவு வருகிறது. முன்பொருநாள் மாலை வேளை கார் ஓட்டும் போது டிராபிக் ஜாம் அதனால் வண்டி நின்று பின்பு ஊர்ந்து சென்று கொண்டுஇருக்கும் போது பலத்த சப்தம் ஒரே புகை எனக்கு அந்த வினாடி என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் தூங்கி விட்டமையால் எனது கார் ஆட்டோ கியர் type பிரேக் பதிலாக accelator மிதித்ததால் முன்னால் நின்ற காரை இடித்து எனது கார் air bag வெடித்து ஒரே புகை அதனால் காயம் இன்றி பிழைத்தேன், அல்ஹம்துலில்லாஹ்
அருமை. இதை காப்பி பேஸ்ட் செய்து நண்பர்களுக்கு மெயில் அனுப்ப அனுமதிக்கவும்.
@சமுத்ரா
//Copyright: For Me (~முஹம்மத் ஆஷிக்_citizen of world~) & You also--with a link to this blog is fine.//---இது எனது பிளாக்கின் கடைசி வரி..!
எனவே, அனுமதி கேட்கவெல்லாம் அவசியமே இல்லை சகோ.சமுத்ரா. தாளாரமாக அனுப்புங்கள். மகிழ்ச்சி.
சகோ, இன்னொரு விஷயம்... இந்த படங்கள் எல்லாம் கூகுள் இமேஜ்-யில் தேடித்தேடி எடுத்தவைதான். நான் எடுத்த புகைப்படங்கள் அல்ல.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சமுத்ரா.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
கார் ஓட்டும்போது தூக்கம்...! //காயம் இன்றி பிழைத்தேன்//---அல்ஹம்துலில்லாஹ்.
கவனம் சகோ.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ரப்பானி.
@தாஜுதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//உறங்காத ஒருவன் இறைவன் மட்டுமே...//---இறைத்தன்மையில் இதுவும் ஒன்று..!
//இஸ்லாமிய விமர்சன தளங்களை பார்த்தாளே தூக்கம்தான் வருது.//---மருத்துவர்கள் ப்ரெஸ்கிரைப் பண்ண வேண்டிய ஒரு புது மருந்து..!? :-))
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.தாஜுதீன்.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///office ல மேனேஜர் க்கு தெரியாமா தூங்க ஏதாவது பிரத்யேக வழி இருக்கா????///---ம்ம்ம் இருக்கு..!
///சத்தமிட்டு சிரித்தேன்.. office ல எல்லாரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு...///
---இப்படி ஆபீஸ்ல உட்கார்ந்து நகைச்சுவை பதிவுகளை படிச்சா எப்படி தூக்கம் வரும்..? முதலில் இதை நிறுத்துங்கள்..!
அப்புறம், ...இந்த வழி சரியா வருமா...என்று பயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லுங்கள் சகோ.சிராஜ்..!
இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று... ...எனது இந்த பழைய பதிவில்... சொல்லி இருக்கேன் சகோ.சிராஜ்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சிராஜ்.
@suryajeevaவருகைக்கும் பயங்கர தகவல் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சூர்யா ஜீவா.
@Syed Ibramsha////ஏன் இல்லை? ஒரு பகல் ஒரு இரவு என்று தொடர் டியூட்டி பார்த்துவிட்டு காலையில் உறங்காமல் ஏதாவது பர்சேஸ் செய்யப் போகும் பொழுது வரும் பாருங்கள்,////
----அட..அட...அட..அட.... ஆமாம் சகோ...அத்தான்... அத்தேதான்.... அப்போ அது எல்லாருக்கும் வருதா...
(அப்பாடா..... இப்போதான் எவ்ளோ நிம்மதியா இருக்கு...!)
///இந்தப் படத்தில் உள்ள ஏதேனும் ஒரு நிலைக்கு நம்மையும் அறியாமல் சென்று விடுவோம்.///---ஆமாம்.சகோ.ரப்பானி நிலைமை மாதிரி.... ஆகாம இருக்க, அந்த மாதிரி நேரத்திலே கார் பைக் ஓட்டுறதை எல்லாம் நிருத்திக்கணும்..!
///உறக்கம் இறைவனின் எவ்வளவு பெரிய அருட்கொடை///---சரியாக சொன்னீர்கள்..!
வருகைக்கும் டாக்டர் ஃபீஸை எனக்கு மிச்சப்படுத்தும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சையத் இப்ராம்ஷா.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@அந்நியன் 2வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அய்யூப். (என்ன ரொம்பநாளா பதிவுகளை காணவில்லை..?)
@Riyasவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ரியாஸ்.
@லெ.மு.செ.அபுபக்கர்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//தூக்கம் என்பது இறைவன் தருகிற பாக்கியம்.//---உண்மை..!
//அப்பத்தான் எதிர் கட்சி சண்டைகளும் கூச்சலும் இல்லாமலிருக்கும்.//---ஆபாச படங்கள் பார்த்து மாட்டமலாவது இருக்கலாமே..?! :-))
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அபுபக்கர்.
@விக்கியுலகம்///பைக்ல நானும் இப்படி தூங்கி இருக்கேன்///---அந்த மழையில் அந்த பெரியவை நீங்க காப்பாத்தும் போது தூங்கி இருந்தா என்ன ஆகி இருக்கும்..? கவனம் தேவை சகோ. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.விக்கி.
@VANJOOR///இதை தவிர்க்க நினத்தால் இரவுப் பணி முடிந்தபின், குளிக்காமல், டி.வி. பார்க்காமல், அறையை முடிந்தமட்டும் இருட்டாக்கி, இரவுத் தூக்கத்தின் இழப்பை பகலில் தூங்கி சரிகட்டினால் ஓரளவுக்கு தப்பிக்கலாம்...///---கடந்த பதினஞ்சு வருஷமா வாரத்தில் ரெண்டு நாள் நைட் ஷிப்ட் முடிந்து, இப்படித்தான் செய்கிறேன்..!
///ஒருவர் தூங்கத் தொடங்கியவுடன் முதல் 90 முதல் 100 நிமிஷங்களுக்கு கண் அசைவு தூக்கம் ஏற்படுகிறது. பின்னர், கண் அசைவற்ற தூக்கம் பல நிலைகளில் ஏற்படுகிறது.///----ஆமாம் சகோ.வாஞ்சூர்.
பதிவிலும் இதனை.... "தூக்கமும் (non-rapid eye movement)NREM Sleep stage 3-4 'ஒருவகை சிறு மரணம்' போல்தான்" என்று சுட்டியுள்ளேன்..!
///தூக்கம் என்ற மாமருந்து!
தூக்கத்தின் அவசியம்!
சரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்!
ஆராய்ச்சி தகவல்///----வருகைக்கும் பின்னூட்டங்கள் வாயிலாக இப்படி பல அரிய தகவல்களை அறிய தந்தமைக்கும்...
அப்புறம், //இப்பதிவு மேலும் பலரின் பார்வைக்கு சென்றடைய// தாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கும்...
மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் சலாம் வரஹ்...
//தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் படங்களையும்//---அதுக்குத்தான் நம்ம ப.சி., தமிழ் ரெப்ரெசென்டேட்டிவா தூங்கிட்டு இருக்காரே..! :-))
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஹாஜா..!
@Barari//இந்த புகைபடங்களை எங்கிருந்து தோண்டி எடுத்தீர்கள்//---Searched and saved in Google images..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.பராரி.
@nidurali//இந்த படம் பார்த்ததும் அதன் நினைவாகவே அயர்ந்துதூங்கிவிட்டேன். தூங்க வைத்தமைக்கு நன்றி.//
-----மிகவும் மகிழ்ச்சி சகோ. அல்ஹம்துலில்லாஹ்..!
//நகைச்சுவை உணர்வும் நம்மிடம் இருந்தால்தான் கவலை இருந்தாலும் ஓடிவிடும்//
-----சரியாக சொன்னீர்கள் சகோ..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.நிடூர் அலி.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அட பாவி மக்கா! எப்படிலாம் தூங்ககூடாதுன்னு இந்த படங்களை பார்த்தால் கத்துக்கலாம்...
@G u l a mஅலைக்கும் சலாம் வரஹ்... வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.கு லா ம்.
இந்த படங்களை வைத்து நா ஒரு பதிவு தேத்தி வைத்து இருந்தேன். ம்....சர்தான் பரவால்ல..
தமிழனுக்குதான் ஒரு வலைபூவு - நாமெல்லாம் திராவிடர் - மலையாளத்தில போடுவோம் கன்னடத்தில போடுவோம் தெலுங்கில போடுவோம் ஹி ஹி ஹி.
@மனசாட்சி
புதுமொழி:-
பந்திக்கு பிந்து...
பதிவுக்கு முந்து..!
:-))
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.மனசாட்சி..!
இந்த அபூர்வ படங்களைப் பார்த்து என் தூக்கமெல்லாம் போயிருச்சு. சகோ,
அருமையான வினோதம்.
சரியான சோம்பேறி பயபுள்ள எப்படியெல்லாம் தூங்குது
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!