அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, December 27, 2013

11 'ப்ளூ டீ' போடுவது எப்படி?சகோஸ்...
'சுடுதண்ணீர்  போடுவது எப்படி?'ன்னு எல்லாம் வலைப்பூவில் கத்து தறாங்க. 
உங்களுக்கு அதை பார்க்க செமை கடுப்பா  இருக்குமே..? இருக்கும்..!

ஏன்னா, உங்களுக்கு 'ப்ளாக் டீ' கூட போட தெரியும். (வித் அவுட்... மில்க்)
'ப்ரவுன் டீ' கூட போடுவீங்கதானே..? (டிகாஷன் கொஞ்சம் ஸ்ட்ராங்கா...)
'ஆரஞ்ச் டீ' கூட போட்டு இருப்பீங்க. (ஹி..ஹி... அதாங்க.. டிகாஷன் கம்மியா, பால் கொஞ்சம் ரொம்ப தூக்கலா...)
இது மட்டுமின்றி, மூலிகைச்சாறு மணக்க மணக்க 'கிரீன் டீ' போட்டு குடிக்கும் சத்தான ஆளுங்களும் இங்கே இருப்பீங்க.

சரி, அதெல்லாம் ஓர் ஓரமா இருக்கட்டும். ஆனால்... உங்களுக்கு,
'ப்ளூ டீ' போட தெரியுமா..? இதுக்கு முந்தி 'ப்ளூ டீ' போட்டு இருக்கீங்களா..?

என்ன...? தெரியாதா..?

அப்படின்னா, அது பத்தி கத்துக்கணும்ன்னா,
வாங்க... சொல்லி தருகிறேன்..!
நாலே நாலு ஈஸி ஸ்டெப்ஸ்தான், சகோஸ்..!

படத்தோடு தெளிவா விளக்கி இருக்கேன்... ஒரே ஒரு முறை பார்த்துக்கிட்டீங்கன்னா கூட போதும்... அப்புறம், 'ப்ளூ டீ' போடுறதுல நீங்க மாஸ்டர் ஆகிருவீங்க..!

கம் ஆன் சகோஸ்...!


Monday, December 9, 2013

5 'தாயா-தாரமா' பனிப்போரை சமாளிப்பது எப்படி..?

ஆண்களே... இந்த பதிவு உங்களுக்காகத்தான்..! ஆனால், 
பெண்களும் படித்தால் அது அவர்களின் நல்லதுக்குத்தான்..!

இளம் ஆண்களே... நீங்கள் பிறந்தது முதல்  குப்புத்துக்கொள்வது, உட்கார்வது, ஊர்வது, நிற்பது, நடப்பது, ஓடுவது... வீடு, பள்ளி, பொதுத்தேர்வு, கல்லூரி, அர்ரியர்ஸ், நேர்முகத்தேர்வு, அலுவலகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போராட்டம், வெளியுலகம், அரசியல், பந்த், கலவரம், விலைவாசி.... என்று இன்றுவரை... எண்ணற்ற பல தடைகளை தகர்த்து எரிந்து, அவற்றை எல்லாம் உடைத்து சாதனை படிக்கட்டுகளாக்கி, ஒவ்வொன்றிலும் வெற்றிக்கொடி கட்டியவாறே ஏறி வந்திருப்பீர்கள்..! 

ப்ச்... இதெல்லாம் உங்கள் வாழ்வில் ஒண்ணுமே இல்லை சகோ..! ஜுஜூபி..!

அப்புறம்... வேறு எது ஜேசிபி..?

ம்ம்ம் சொல்றேன்... சொல்றேன்... இனி...திருமணம் என்ற ஒன்று ஆன பின்னால்... ஏகப்பட்ட சோதனைகள் இருந்தாலும்... அவற்றில் எல்லாம் நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள் என்றாலும்... அதில் மிக முக்கிய சோதனையாக... "மாமியார்-மருமகள் பனிப்போர்" என்ற ஒன்று ஆரம்பித்து ஜெகஜோராக நடக்குமே... அங்கேதான் உங்கள் நிஜ திறமை தெரியவரும்..!


சப்போஸ் இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்தால்... அப்படி ஒன்று நடக்காமல் எல்லாம் இருக்கவே இருக்காது. நடந்தே தீரும். அப்போதுதான்.... உங்களுக்கு ஆரம்பிக்கிறது... வாழ்வினில்... நான் சொல்ல வரும்... தி ரியல் சேல்லஞ்..!

Monday, December 2, 2013

1 மிரட்டும் கரிக்கோல் கூட்டம் (Photo Gallery)


என்ன இவைகள்..? 
ஏதும் ஆழ்கடல் புது வகை ஜந்துக்களா..? 
அல்லது, அமேசான் முட்புதர் காடுகளில் மண்டிக்கிடக்கும் இதுவரை எவரும் அறியாத அரியவகை தாவரங்களா..? 
அல்லது, மின்னணு நுண்ணோக்கியில் கண்டு புகைப்படம் எடுக்கப்பட்ட பாக்டீரியா - வைரஸ் போன்ற நுண்கிருமிகளா..? 
அல்லது, UFO வில் வந்த வேற்று கிரகவாசிகளா..?
அட..... என்னதான் இவைகள்..?
பயப்படாமல் கொஞ்சம் கிட்டே சென்று உற்றுப்பார்த்து சொல்லுங்களேன் சகோஸ்..! 'Photo Gallery' பதிவு போட்டு நாளாச்சு..!
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...