அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, May 29, 2011

27 குஜராத் & மோடி - ஊழல் # 1 :- அன்னா ஹசாரேவின் அந்தர் பல்டி..!

 
அன்னா ஹசாரே என்ற முதியவர் சென்றமாதம் 'பிறந்தவர்' ஆவார்..! 

திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இந்தியாவில் எத்தனையோ ஊழல்கள் இதற்கு முன்னர்  நடந்துள்ளன. அப்போதெல்லாம் இவர் ஏதும் உண்ணாவிரதாமோ, ஊர்வலமோ, அறிக்கையோ இப்படி எந்த செய்தியுமில்லை. அதற்கு முன்னர்வரை நம்மில் யாரும் அவரை அறிந்திருக்கவுவில்லை. 

Tuesday, May 24, 2011

30 முத்துக்குளிக்க வாரீஈஈகளா..? (Photo Gallery)

நான் தூத்துக்குடியில் பணிபுரிந்த சமயம், அங்கே எனக்கு முத்துக்குளிப்பவர்கள் சிலர் நண்பர்களாயினர். அவர்கள் மூலம் அறிந்து கொண்டதாவது... முத்துக்குளிப்பவர் முதலில் அதிகநேரம் நீருக்கடியில் மூச்சை தம் கட்ட பழகிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடலுடன் ஒரு கயிற்றை கட்டிக்கொண்டு படகிலிருந்து கடலில் குதிக்க வேண்டும். கயிற்றின் மறுமுனை படகில் இருப்பவரின் கையில் இருக்கும். நீரின் அடியில் தரையில் எவ்வளவு விரைவாக முத்துச்சிப்பிகளை சேகரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைய சேகரிக்க வேண்டும். கடலில் குதித்தவர் எவ்வளவு நேரம் மூச்சை தம் கட்டுவார் என்று கடல் நீர்ப்பரப்பில் படகில் கயிற்றை பிடித்து இருப்பவருக்கு நன்கு தெரியும். அந்த நேரம் வந்தவுடன் மேலே படுவேகமாக கயிற்றை இழுத்து தூக்கி விடுவார். (கயிற்றை கட்டிக்கொள்ள காரணம்: அவ்வளவு சிப்பிகளின் வெயிட்டை தூக்கிக்கொண்டு நீந்தி மேலே ஏறி வருவது கடினம்..!)

Thursday, May 19, 2011

88 நர்ர்ரேந்திர ஜெ..! (மெளனம் ஆன நம் உணர்வுகள்)

செல்வி.ஜெயலலிதா, தன்னை ஒரு அப்பட்டமான "பாஸிச வெறி கொண்ட, ஆர்.எஸ்.எஸ். அபிமான, தீவிர ஹிந்துத்வா அரசியல்வாதி" என அவ்வப்போது அடையாளம் காட்டிக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை என்றுமே தவற விட்டது இல்லை...! அதுதான் ஜெ..!

Friday, May 13, 2011

58 'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!

வாக்காளர்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு… 'க.' & 'ஜெ.' 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!  

மிகவும் கஷ்டப்பட்டு, படாதபாடுபட்டு, அல்லும்பகலும் அயராது சிந்தித்து, பல போராட்டங்கள் கண்டு, இழப்புகள் பெற்று, பல வருடங்கள் கடந்து, ஒருவழியாக மேற்கு வங்கத்தில் 34 வருட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு... முற்றுப்புள்ளி வைத்தே விட்டார், மம்தா பானர்ஜி..! ஜோதிபாசு காலங்களில், மம்தா 30... 40... தொகுதிகளை பெறுவது கூட அன்று இமாலய சாதனையாக போற்றப்பட்டது. ஆனால், இன்று 225/294 வென்று அமோக வெற்றி பெற்று இருக்கிறார். இதுதான் போராடி பெற்ற வெற்றி..!

Monday, May 9, 2011

24 ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!

ஜப்பான்- ஹிரோஷிமா- 1945- ஆகஸ்ட்-6 காலை 8.15. 

அன்றுதான்... அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், கலாச்சாராத்திலும், கல்வியிலும் முன்னேறிய... அமெரிக்கா என்ற உலக மக்கள் விரும்பும் ஒரு அதி புத்திசாலி நாடு, இந்த நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் அப்பாவி மக்கள் மண்டையில் அணுகுண்டு போட்டு மனிதம் இழந்து பயங்கரவாதி ஆன நாள்..! அந்த அணுகுண்டிற்கு அது ஜாலியாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy). அன்று அந்த ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 அப்பாவி பொதுமக்கள் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள். சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக ஒன்றுமின்றி முற்றாக அழிந்தது.

Saturday, May 7, 2011

19 'வாயால் வீடு கட்டி ஒரு வாயில்லா ஜீவன் சாதனை..! (Photo Gallery)

பயங்கரவாதங்கள் நிறைந்த, பணம் சம்பாரிக்கும் பரபரப்பான இவ்வாழ்கையில் சில நேரங்களில் நம்மை சுற்றி இயல்பாக நடந்து கொண்டிருக்கும் எளியோரின் சில அதிசய சாதனைகள் நம் கண்டு கொள்ளலில் ஏனோ சிக்காமலேயே போய் விடுகின்றன..!

அப்படி  ஒன்றைத்தான் இங்கே புகைப்படங்களாக தந்துள்ளேன்.

வாருங்கள்..!

எளியோருக்கு அதரவு நல்கி, அவர்களின் உழைப்பை போற்றி  அன்போடு அரவணைப்போம்..!

மனிதம் நம்மில் தழைத்தோங்கட்டும்..!

நம்முடைய  எளிய சக 'Citizen of World'-ன் ஒரு சாதனை இப்பதிவில் படங்களுடன்.!

Wednesday, May 4, 2011

21 Black Money-யை சேமிக்க & செலவழிக்க சட்டப்பூர்வ Top 10 வழிமுறைகள்.


Lots Of Money
"கருப்பு பணம்... கருப்பு பணம்" என்பார்கள்..! சிறிய வயதில்... நான், 'ஏதோ அது கருப்பு மையில் அச்சடிக்கப்பட்டு இருக்குமோ' என்று நினைத்தது உண்டு. பின்னாளில்தான் இதன் உண்மையான அர்த்தம் புரிந்தது... தன் வருவாய்க்கு உரிய வருமான வரியை அரசுக்கு செலுத்தாத கையிருப்புக்கு  பெயர் கருப்பு பணம் என்று..!  

Sunday, May 1, 2011

10 எங்கும்...எந்த நிலையிலும்...எப்படியும்...! (Photo Gallery)

உழைப்பாளர் தின சிறப்பு பதிவு
(மறுமை உழைப்பிற்காக...)

எங்கும் -- கிடைக்கும் சுத்தமான இடங்களில் எல்லாம், 
எந்த நிலையிலும் -- போர்சூழலோ, புரட்சி சமயமோ, முக்கிய விளையாட்டு இருக்கும்போதோ, மீன்பிடிக்க தூண்டில் போட்டிருக்கும்போதோ, பனிக்கட்டி மீதோ, குளிரிலோ, வெயிலிலோ, மழையியோ.... 

பாறையோ, பள்ளமோ, மேடோ, காடோ, ரோடோ, ரோட்டோர பிளாட்ஃபாரமோ, மைதானமா, ரயிலோ, பேருந்தோ, விமானமோ, கப்பலோ, கடலோ, பாலைவனமோ... என்றெல்லாம் பாராமல்....
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...