செல்வி.ஜெயலலிதா, தன்னை ஒரு அப்பட்டமான "பாஸிச வெறி கொண்ட, ஆர்.எஸ்.எஸ். அபிமான, தீவிர ஹிந்துத்வா அரசியல்வாதி" என அவ்வப்போது அடையாளம் காட்டிக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை என்றுமே தவற விட்டது இல்லை...! அதுதான் ஜெ..!
முதன் முதலில், அன்று தமிழ்நாட்டுக்கு யாரென்றே தெரியாத 'அத்வானி' என்பவர் பாபர் மசூதியை இடிக்கவேண்டி 'கரசேவை'க்காக அடியாள் தேடியபோது, அன்று எதிர்க்கூட்டணியில் இருந்தாலும் தன் கட்சித்தொண்டர்களை தாமாகவே 'கொலைச்சேவைக்கு' அனுப்பி வைத்தார் ஜெ..!
பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப்பின் "if Ram temple is not possible here.. then where..?" என்று பாஜக அல்லாத கட்சியின் ஒரே தலைவராய் பேட்டியளித்து அத்வானிக்கே அன்று இன்ப அதிர்ச்சி கொடுத்து ஹார்ட்அட்டாக் வர வைக்க முனைந்தார்... ஜெ..!
பாபர் மஸ்ஜிதை இடித்த 'கும்பல்' என்று பாஜகவை எல்லோரும் ஒதுக்கி வைத்திருந்த நிலையில், தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருப்பதே நிறைய பேருக்கு தெரியாத நிலையில், முதன்முதலாக அதற்கு சிகப்புக்கம்பள வரவேற்பு தந்து, 1998-ல் அக்கட்சியுடன் கூட்டணி போட்டு "தூய்மைப்படுத்தி" ஐந்து நாடாளுமன்ற சீட்டுக்களையும் அள்ளித்தந்து, தன் காவி கலரை காட்டி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார், ஜெ..!
முதன் முதலில், அன்று தமிழ்நாட்டுக்கு யாரென்றே தெரியாத 'அத்வானி' என்பவர் பாபர் மசூதியை இடிக்கவேண்டி 'கரசேவை'க்காக அடியாள் தேடியபோது, அன்று எதிர்க்கூட்டணியில் இருந்தாலும் தன் கட்சித்தொண்டர்களை தாமாகவே 'கொலைச்சேவைக்கு' அனுப்பி வைத்தார் ஜெ..!
பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப்பின் "if Ram temple is not possible here.. then where..?" என்று பாஜக அல்லாத கட்சியின் ஒரே தலைவராய் பேட்டியளித்து அத்வானிக்கே அன்று இன்ப அதிர்ச்சி கொடுத்து ஹார்ட்அட்டாக் வர வைக்க முனைந்தார்... ஜெ..!
பாபர் மஸ்ஜிதை இடித்த 'கும்பல்' என்று பாஜகவை எல்லோரும் ஒதுக்கி வைத்திருந்த நிலையில், தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருப்பதே நிறைய பேருக்கு தெரியாத நிலையில், முதன்முதலாக அதற்கு சிகப்புக்கம்பள வரவேற்பு தந்து, 1998-ல் அக்கட்சியுடன் கூட்டணி போட்டு "தூய்மைப்படுத்தி" ஐந்து நாடாளுமன்ற சீட்டுக்களையும் அள்ளித்தந்து, தன் காவி கலரை காட்டி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார், ஜெ..!
பின்னர், "13 மாசம் ஆட்சி புரிந்தும் ராமர் கோவில் கட்டாமல் என்னய்யா கிழிச்சீங்க" என்று..(?) அந்த கட்சியின் ஆட்சியை ஒரு ஓட்டில் கவிழ்த்து விட்டு, அடுத்தவருடம் 1999-ல் சென்னை கடற்கரையில் நடந்த த.மு.மு.க.வின் "முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாட்டில்" கலந்து கொண்ட ஜெ. : "சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்தது தவறு. அத்தவறுக்கு பிராயச்சித்தமாகத்தான் நானே பா.ஜ.க ஆட்சியை கவிழ்த்து விட்டேன். இனி ஒரு போதும் அ.தி.மு.க... பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காது.'' .. என்று முஸ்லிம் ஓட்டுக்காக உறுதி மொழி அளித்தார்... ஜெ..!
.
.
ஆனால்...
.
.
2002 ஆம் ஆண்டு இந்திய வரலாறுக்கே ஒரு களங்கமாக ஒரு மாநில அரசே திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலைதான் குஜராத் கலவரம் என்று நன்கு அறிந்து வேறு எந்த ஒரு கட்சியும் பாஜகவையும் மோடியையும் தீண்டத்தகாத ஒரு வஸ்துவாக விளக்கி வைத்திருக்க... அப்போது காங்கிரசுடன் எதிர் கூட்டணியில் இருந்தாலும்... தன் மதவெறி பிரச்சாரம் மூலம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி வெற்றி பெற்ற 'மரணவியாபாரி' மோடியின் பதவியேற்பு விழாவுக்கு குஜராத்துக்கு ஓடிச்சென்று கலந்து கொண்டு வாழ்த்தி, தன்னை யார் என்று மீண்டும் ஒருமுறை தன் ஹிந்துத்துவா முகத்தை காட்டிக்கொண்டார், ஜெ..!
.
.
.
அதுமட்டுமா..? முஸ்லிம்களிடம் 1999-ல் தந்த 'உறுதிமொழி'யை மறந்து, 2004 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து, முஸ்லிம்களுக்கு பெப்பே காட்டி தன் உண்மை முகத்தை மீண்டும் வெளிப்படுத்தினார் ஜெ..!
.
அதுமட்டுமா..? முஸ்லிம்களிடம் 1999-ல் தந்த 'உறுதிமொழி'யை மறந்து, 2004 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து, முஸ்லிம்களுக்கு பெப்பே காட்டி தன் உண்மை முகத்தை மீண்டும் வெளிப்படுத்தினார் ஜெ..!
.
2004-ல் ஆந்திராவில் காங்கிரஸ் முதல்வர் YSR அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்த போது அதனை தமிழ்நாட்டில் முதல்வராய் இருந்து கொண்டு சம்பந்தமே இல்லாமல் எதிர்த்தார். இவருக்கு என்ன.. போச்சு அதனால்..? காரணம்... தனக்கு உள்ளே ஓடும் ரத்தம் காவி என்று காட்டினார் ஜெ..!
.
.
அப்போது, 'மதமாற்ற தடைச்சட்டம்', 'ஆடு, கோழி பலியிடுதல் தடைச்சட்டம்' என்றெல்லாம் புதுப்புது மக்களுக்கு ஒவ்வாத சட்டங்கள் கொண்டுவந்து பாஜகவை விட தான்தான் அதிதீவிர ஹிந்துத்துவா அரசியல்வாதி என்று பாஜகவையே தலைகுனிய வைத்து நிரூபித்தார் ஜெ..!
நடந்து முடிந்த தேர்தலில் திமுக தன் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்கள் நலன் பற்றி அறிவித்த பின்னரும் கூட, அதை அப்பட்டமாக தன் தேர்தல் அறிக்கையில் 'ஈ அடிச்சான் காப்பி' அடித்தவர் அதுபற்றி மட்டும் ஏதும் குறிப்பிடாமல் வேண்டுமென்றே தவிர்த்தவர், ஜெ..!
இப்படிப்பட்டவரான ஜெ.... தன்னுடைய "பங்காளி" மோடியை தன் பதவி ஏற்பு விழாவிற்கு அழைக்காவிட்டால்தான் ஆச்சர்யம்..! இத்தனைக்கும் மோடியின் பாஜக இவரது தேர்தலில் கூட்டணி கட்சியா..? இல்லையே..! அப்புறம் எதற்கு கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இனப்படுகொலை மோடிக்கு சிகப்புக்கம்பள வரவேற்பு..?
சரி..! இவர் அழைத்தால் அப்போது நம்மிடையே எழ வேண்டிய பாசிஸ பயங்கரவாத எதிர்ப்புக்கு என்னாச்சு..? பொதுவாய் இப்படி இருக்காதே..! தமிழகத்தில் ஏன் இந்த திடீர் மந்தம்..? ஆட்சி மாறியதாலா..? கூட்டணி மாறியதாலா..? பயமா..? சோம்பலா..? குஜராத் இனவெறி படுகொலைகள் எல்லாம் மறந்து விட்டதா..? இந்தியாவிற்கே உலக அரங்கில் மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது குஜராத் இனப்படுகொலை அல்லவா..?.
.
அல்லது 'நரமாமிசமனிதன்', 'மரணவியாபாரி', 'ஹிந்துத்துவா பயங்கரவாதி' என்றெல்லாம் இகழப்பட்ட நரேந்திர மோடி திடீரென நல்லவராகி விட்டாரா..? அல்லது உச்சநீதி மன்றம் அப்படி குற்றமற்றவர் என அறிவித்து விட்டதா..? அதெப்படி... நாளுக்குநாள் மோடிக்கு எதிரான சாட்சிகளும், ஆதாரங்களும் அதனால் இன்னும் நிறைய புதிய வழக்குகளும் அதிகரித்த வண்ணம் அல்லவா இருக்கின்றன..? எவரிடமிருந்தும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் தமிழ்நாட்டுக்குள் இந்த பயங்கரவாதியால் ஜாலியாக வந்து செல்ல முடிந்தது எவ்வாறு..?
.
அல்லது 'நரமாமிசமனிதன்', 'மரணவியாபாரி', 'ஹிந்துத்துவா பயங்கரவாதி' என்றெல்லாம் இகழப்பட்ட நரேந்திர மோடி திடீரென நல்லவராகி விட்டாரா..? அல்லது உச்சநீதி மன்றம் அப்படி குற்றமற்றவர் என அறிவித்து விட்டதா..? அதெப்படி... நாளுக்குநாள் மோடிக்கு எதிரான சாட்சிகளும், ஆதாரங்களும் அதனால் இன்னும் நிறைய புதிய வழக்குகளும் அதிகரித்த வண்ணம் அல்லவா இருக்கின்றன..? எவரிடமிருந்தும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் தமிழ்நாட்டுக்குள் இந்த பயங்கரவாதியால் ஜாலியாக வந்து செல்ல முடிந்தது எவ்வாறு..?
"பிரபஞ்சத்தின் நமபர் ஒன் பயங்கரவாதி"யே இந்தாளுக்கு விசா கொடுக்க பயப்படுகிறான்...! அப்படியிருக்க, தமிழ்நாட்டுக்குள் மட்டும் எப்படி எதிர்ப்பின்றி இந்த மோடி வந்து செல்லலாம்..?
எங்கோ.. யாரோ.. கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட --'ஒரு பயங்கரவாதி' என இன்னொரு பயங்கரவாதியால் அறிவிக்கப்பட்ட ஒருவரின்-- சடலத்துக்கு, நம்மிடையே ஒரு சிலர் செய்த அவசியமற்ற 'இறுதிக்கடமை'க்கு, எதிராக எழுந்த சலசலப்பு கூட... இப்போது மோடி வருகைக்கு எதிராய் எழவில்லையே... ஏன்..? எனில், "நம் பயங்கரவாத எதிர்ப்பு" சுருதி அவ்வளவு குறைந்தது விட்டதா..? நம் உணர்வுகள் ஏன் மெளனமாகின..?
அன்று 2008 ஜனவரி 16-ல் துக்ளக் விழாவிற்காக சென்னைக்கு வரவிருந்த இந்த இனப்படுகொலைகாரன் மோடிக்கு, ஜெ. விருந்தளிக்க முடிவு செய்திருக்கிறார் என்றதுமே வெகுண்டெழுந்து "கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்" செய்த த.மு.மு.க.வினரின் 'மனிதநேயம்' இன்று ஏன் காணாமல் போனது..?
ஆமாம்..! அன்று நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக வழியிலான போராட்டக் குழு அமைக்கப்பட்டு அதற்கு ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி (A.F.F) என ஒரு மனதாக பெயரிடப்பட்டது.
அதில்....
1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
2. விடுதலைச்சிறுத்தைகள் (திரு. வன்னியரசு)
3. சிறுபான்மையினர் கூட்டமைப்பு (பேரா. எஸ்றா சற்குணம்)
4. தலித், இஸ்லாமியர், கிறித்தவக் கூட்டமைப்பு
5. பெரியார் திராவிடர் கழகம் (திரு.விடுதலை ராஜேந்திரன்)
6. மக்கள் கலை இலக்கியக் கழகம் ( ம க இ க... வினவு..?)
7. தமிழர் தேசிய இயக்கம்
8. மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்
9. இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம்
10. கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம்
11. குழந்தைகள் உரிமை இயக்கம்
12. மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்(பேராசிரியர். அ.மார்க்ஸ்)
13. புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி
1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
2. விடுதலைச்சிறுத்தைகள் (திரு. வன்னியரசு)
3. சிறுபான்மையினர் கூட்டமைப்பு (பேரா. எஸ்றா சற்குணம்)
4. தலித், இஸ்லாமியர், கிறித்தவக் கூட்டமைப்பு
5. பெரியார் திராவிடர் கழகம் (திரு.விடுதலை ராஜேந்திரன்)
6. மக்கள் கலை இலக்கியக் கழகம் ( ம க இ க... வினவு..?)
7. தமிழர் தேசிய இயக்கம்
8. மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்
9. இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம்
10. கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம்
11. குழந்தைகள் உரிமை இயக்கம்
12. மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்(பேராசிரியர். அ.மார்க்ஸ்)
13. புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி
...அன்று இணைந்த இத்தனை அமைப்புகளின் சார்பில் சென்னைக்கு வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, சென்னையில் காமராசர் அரங்கிற்கு முன் திரண்டு மோடிக்கு எதிராக தைரியமாக இந்த அனைத்து அமைப்புகளும் பெருந்திரளாக கூடி ஒன்றினைந்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தமுமுகவின் முயற்சியால் உருவான இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக அன்று தமுமுக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா நியமிக்கப்பட்டார்..!
அன்று ஆரம்பிக்கப்பட்ட "பாசிஸ எதிர்ப்பு முன்னணி" இன்று அதே மோடி சென்னை வரும்போது எங்கே போச்சு..? கருப்புக்கொடி என்ன ஆச்சு..?
வெறுமனே ஜெ.யின் பதவியேற்பு விழாவை 'புறக்கணித்தல்' விழாவிற்கு 'போகாமல் இருத்தல்' (?!) என்ற நிலைக்கு பேராசிரியர். ஜவாஹிருல்லா சறுக்கியது ஏன்..? அத்தோடு, பதவியேற்கும் விழாவுக்கு பேராசிரியர். ஜவாஹிருல்லாவின் வாழ்த்தும் கூடவே செல்கிறதே..! இதற்குப்பெயர்தான் 'புறக்கணிப்பா'..? ஃபாசிஸ எதிர்ப்பா..?
ஓ..! இதுதான் 'கூட்டணி தர்மமா'..? சட்டப்பேரவைக்கு வெளியேயே இப்படி என்றால்... உள்ளே என்னவித 'இஸ்லாமிய குரலை' இவரிடம் எதிர்பார்ப்பது..?
சரி..! அந்த பட்டியலில் உள்ள "பாசிஸ எதிர்ப்பு முன்னணி"-யின் மற்ற "உத்தமர்கள்" எங்கே மறைந்து போனார்கள்..? அவர்களும் ஜெ.யுடன் கூட்டணியா..? அல்லது மோடியுடன் நட்பா..? அதில் "இணைய புரட்சியாளர்" ஒருவர் வேறு இருக்கிறார்...! அவராவது ஏதும் ஒரு பதிவு போட்டிருக்கலாமே..! ம்ஹூம்..!
சரி..! அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்தது..?
.
.
சென்ற 2006 சட்ட மன்ற தேர்தலில், த.த.ஜ.வின் ஆதரவுடன் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளைப்பெற்று பிரதான எதிர்கட்சியாக இருந்த ஜெயலலிதாவின் இந்தப்போக்கை முஸ்லிம்களும் நியாயவான்களும் கடுமையாக கண்டிப்பதாகவும், ஜெ.வின் இந்த ஈனச்செயல் முஸ்லிம்களை கொதித்தெழச்செய்துள்ளதாகவும்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சகோ.P.ஜெய்னுல் ஆபிதீன் அன்று எச்சரித்திருந்தார்.
.
.
அதைத்தொடர்ந்து, "11.01.08 அன்று தமிழகம் எங்கும் செல்வி ஜெயலலிதாவின் இந்த ஈனச்செயல்பாட்டை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்படும்" என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்து, அதன்படி, தமிழகம் வரும் நரேந்திர மோடியின் பயணத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசை வலியுறுத்தியும், நரேந்திர மோடிக்கு விருந்தளிக்கும் ஜெயலலிதாவை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு 2008-ஜனவரி-11 மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.
.
இப்போது அதே மோடி மீண்டும் வர, அன்று நடந்த இவர்களின் ஆர்ப்பாட்டம் இன்று எங்கே போச்சு..? த.த.ஜ தலைவரின் அறிக்கை என்ன ஆச்சு..? அதிசயமாக அவர்கள் வெப்சைட்டில் கூட இதுபற்றி எதுவுமே இல்லை..! ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என்று என்றுமே பயந்து பம்மியது கிடையாதே தவ்ஹீத் ஜமாஅத்..?
இவர்கள் இப்படியென்றால்... பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்று ஒரு அமைப்பு. இதுவும் ஊமையாகியது மட்டுமின்றி... ம.ம.கவின் இந்த புறக்கணிப்பு செயலுக்கு பாராட்டு தெரிவிக்கிறது..! அது பேராசிரியர். ஜவாஹிருல்லாவின் புறக்கணித்தல் செயலை பாராட்டுவதே மோடிக்கு தன்னுடைய எதிர்ப்பு என்று நினைத்து ஒதுங்கிக்கொண்டது..!
இனி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..! அதன் தலைவர் "செய்திகளும் நிஜங்களும்"-இல் ஏதேனும் தெரிவித்து இருப்பார். அதுவே அவர்களுக்கு பெரிய புரட்சி அல்லவா..?
அப்புறம்... முஸ்லிம் லீக் என்றும் தேசிய லீக் என்றும் சில கட்சிகள் இருக்கின்றன..! இவைகள் தேர்தல் நேரத்தில் மட்டும் சீட்டுக்காக கழகங்களின் முன்னே தலையை காட்டக்கூடியவர்கள்..! ஆதலால், இவர்களை இந்த 'போராட்ட லிஸ்டில் எங்கே' என்று கேட்பது நமக்கு அழகல்ல..!
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஐயாவாவது ஏதும் போராட்டம்... எதிர்ப்பு... அறிக்கை என ஏதேனும் அறிவித்தாரா..? இல்லை. மோடி போன்றே மற்றொரு பயங்கரவாதி ராஜபக்சேக்கு எதிராக குரல் கொடுத்தோர் எவராவது மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனரா..?
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஐயாவாவது ஏதும் போராட்டம்... எதிர்ப்பு... அறிக்கை என ஏதேனும் அறிவித்தாரா..? இல்லை. மோடி போன்றே மற்றொரு பயங்கரவாதி ராஜபக்சேக்கு எதிராக குரல் கொடுத்தோர் எவராவது மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனரா..?
அப்புறம்... கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அகில இந்திய & மாநில கம்யுனிஸ்ட் தலைவர்கள்... மோடி பங்குபெறும் ஜெ.யின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்..! பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்..? அவர்களிடம் கொள்கையா.. உறுதியா.. அரசியல் நேர்மையா.. மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆட்சியா... இப்போது என்னதான் மிச்சம் இருக்கிறது..?
.
.
" சரி...! நீ... என்னத்த பெரிசா கிழிச்சே...?" ...என்றுதானே கேட்கிறீர்கள்...?
.
.
தனியொரு மனிதனாய்... " நன்மையை ஏவுவது... தீமையை தடுப்பது..." இவை இரண்டையும் களத்தில் இறங்கி செய்ய சாத்தியப்படாத நிலையில், நான் தூரமாய் இருப்பதால்... " மேற்படி விஷயங்களுக்காக போராட்டங்கள் புரிவோரை வழக்கம்போல ஆதரித்து ஒரு பதிவு போடுவோம்..."" என்று தேடித்தேடி பார்த்தால்... அட..! எல்லாருமே சைலன்ட்..! " நீங்கள் எல்லாரும் ஏன் வழக்கத்திற்கு மாறாய் இப்போது சைலன்ட் ஆனீர்கள்..?" என்று கேட்கப்பட வேண்டியவர்களை கேட்டு... மவுனத்தை உடைச்சது... இதுதான்... இந்த பதிவுதான்... மோடிக்கு எதிராக இப்போது நான் கிழிச்சது..!
.
.
88 ...பின்னூட்டங்கள்..:
i have shared this in facebook
இவையெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே தான் தமிழகம் பாழும் கிணற்றுக்குள் சந்தோசமாக விழுந்து கிடக்கிறது.கருணாநிதியின் தவறுகளை விளாவாரியாக எழுதிய பத்திரிகைகள்.நாடார் நடத்தும் தந்தி உட்பட ஒருநாளும் மோடியைப்பற்றி எழுதியதே கிடையாது.பிஜேபிக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இடையில் உண்டாகிய முடிச்சு இனப்படுகொலைகளுக்கு எதிரானதல்ல.அது பௌத்தமதத்திற்கெதிரான வெறுப்பு மட்டுமே.எம் சோதர தமிழ்த்தோழர்களே எனக்கு மோடிக்கும் ராஜபக்சேவுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை.
காட்டமான பதிவு ஆஷிக்
அருமையான சாட்டையடி பதிவு.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
எங்கேயோ(?) படிச்சது...
//ஆனால், ஜெ.விடம் ஒரு 'மனமாற்றம்' ஏற்பட்டு கடந்த க. ஆட்சியை விட 'ஒருவேளை சிறப்பாக அமையலாம்' (!?) என்ற நப்பாசை கூட நம்மிடம் இருக்க வேண்டாமா.....//
"கவலைப்படாதீங்க, அப்படிலாம் உங்களை நினைக்க விடமாட்டேன்"னு ஜெ காட்டிட்டார். யார் வந்தாலும் நாடு மாறப் போவதில்லை. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் தினம் தான் வாக்காளர்களுக்கான "முட்டாள்கள் தினம்".
CLICK AND READ.
===> குமுதம். -- அ.தி.மு.க வுக்கு அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது. <===
..
go to pakisthan
அஸ்ஸலாமு அலைக்கும்!
மிகவும் சிறந்த அவசியமான பதிவு சகோ. ஆஷிக்!
கருணாநிதிக்கு மாற்றாக இனம் காட்டப்பட்டது ஜெயலலிதா என்பது துரதிர்ஷ்டவசமே! என்ன செய்வது? தவ்ஹீத் ஜமாத்தும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது ஆச்சரியமே! ஒருக்கால் இனி இதற்கான கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஏதும் அறிவிக்கலாம். பார்ப்போம்.
தனியொரு மனிதனாய்... " நன்மையை ஏவுவது... தீமையை தடுப்பது..." இவை இரண்டையும் களத்தில் இறங்கி செய்ய சாத்தியப்படாத நிலையில், நான் தூரமாய் இருப்பதால்... "
நானும் ஆதரிகிரேன் நண்பரே
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ....
உங்களின் சாட்டையடி பதிவுக்கு வாழ்த்துக்கள்....இதை ஏன் நான் எழுதவில்லை என்று நீங்கள் எழுதியதுக்கு பிறகுதான் நான் உணர்ந்தேன்..மோடிக்கு எதிராக புறக்கணிக்கவில்லை என்றும் விலகித்தான் இருந்தோம் என்றும் ஜவாஹிருல்லா இன்று அறிவித்து உள்ளார்...ஏன் இந்த பின்வாங்கல்?
முஸ்லிம்களே ஜெயலலிதாவை (அதுவும் ஐம்பத்து நான்கு வகை உணவு வைத்து மோடிக்கு விருந்து அளித்த ) மறந்து வாக்களித்து விட்டனர் , இல்லாவிட்ட்டால் முஸ்லிம்கள் பெரும்பானமையாக வாழும் தொகுதிகளில் கூட அவர் ஜெயித்து இருக்கிறார் எப்படி ? பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் ஆனால் மோடியோடு சேர்ந்தால் இவர் என்ன ஆவாரோ ,
நினைக்கவே எழுதவே பயமாக உள்ளது
நானும் உங்களை மாதிரி தான் தமுமுக,ததஜ,போனற வலைதளத்திற்கு சென்று பார்த்தேன் ஏமாற்றாம் மட்டுமே மிச்சம்...
http://kulkusma.blogspot.com/
தான் ஒரு இந்துதுவா வெறியர் என்பதை அம்மையார் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்.ஆனால் நம்மவர்கள்? இனி என்ன வக்ப் போர்டு தலைவர் &வாரிய தலைவர் பதவி சிவப்பு விளக்கு பொருத்திய அரசு வாகனம்.கைகட்டி வாய் மூடி நிர்ப்பார்கல்.கேட்டால் கூட்டணி தர்மம்.உங்கள் பதிவு ஒரு சவுக்கடி.வாழ்த்துகள் சகோதரரே.
"எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற நிலையில் ஆகிப்போன வாக்காளர்களுக்கு இவர்தான் கிடைத்த ஒரே மாற்றாகத் தெரிந்தார். சூடுகண்ட பூனையாக திருந்தியிருப்பார் என்று நம்ம்ம்ம்ம்பி இருந்த (என்போன்ற)வர்களுக்கு முதல்நாளே ஆப்பு வைத்துவிட்டார்.
//பொதுவாய் இப்படி இருக்காதே..! தமிழகத்தில் ஏன் இந்த திடீர் மந்தம்..? ஆட்சி மாறியதாலா..? கூட்டணி மாறியதாலா..? பயமா..? சோம்பலா..?//
அதிர்ச்சியில் மயக்கமடைந்திருப்பார்கள் போல. ‘தெளிந்த’பின் நடவடிக்கைகள் இருக்குமாயிருக்கும்.
அதுஇருக்கட்டும், தமிழகத்தில் மட்டுமே இத்தனை இஸ்லாமிய அமைப்புகளா????
திராவிடக்கட்சித்தலைமை என்றைக்கு ஒரு பிராமணரிடம் போனதோ அந்த நாளிலிருந்து தலித்துகளுக்கும் இஸ்லாமியருக்கும் கஷ்டகாலம்தான். முரளி மனோகர ஜோஷியின் பேச்சைக்கேட்டு ஜோஷியத்துக்கு ஒரு பாடம் அறிவித்தவராயிற்றே இந்த ஜெ. இதில் 91-96, 01-06 ஆக இருமுறை பொற்கால ஆட்சி வேறு நடத்தியிருக்கிறாராம். இவருக்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அவர்களின் அட்டகாசம் பல வழிகளில் மக்களுக்குத்தொல்லை என்றதால் இந்த மாற்றம். ஆனாலும் ஜெயிடம் எந்த மாற்றமும் இருக்காது.
த.மு.மு.க., தவ்ஹீத் ஜமா அத் சொல்லவேண்டிய விஷயத்தை நீங்கள் சாட்டைடியாய் விலாசியிருக்கிறீர்கள்
ஸலாம் சகோ ஆஷிக்..
நரேந்திரமோடி,வருகைக்கு ஒட்டுமொத்த தமிழகமும்,இத்துனை அமைதி காத்திருப்பதன் அர்த்தம் புரியவில்லைதான்..
இருந்தாலும் சூழ்நிலை அப்படிப்பட்டதாக அமைந்ததன் விளைவு இதுவாக இருக்கும் என நினைக்கிறேன்..
தேர்வு முடிவு வந்த பொழுதில் மாணவர்கள் மத்தியில் இருக்கும் ஒரு சில சலசலப்பு பல விஷயங்களில் கவனச்சிதைவை கொடுக்கும்,அப்படிப்பட்டதாக உணர்கிறேன்..
ஆனால் அந்த சலசலப்புக்கு மத்தியில் தங்களின் பதிவு,பிறரிடம் இருக்கும் மயக்கத்தை தெளியச்செய்வதாய் இருக்கிறது...
நாம் இப்படி மந்தமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது சகோ...
அன்புடன்
ரஜின்
ஒரே வில் எறிதலில் ரெண்டு அம்பு... ஒன்னு ஜெ & மோடிக்கு..! இன்னொன்னு எதிர்க்காம மவுனமான எல்லா இயக்க, கட்சி அமைப்பினருக்கும்..!
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லப்படவேண்டிய ஆட்களுக்கு 'நெத்தியடி'யாய் மொத்தி இருக்கிறீர்கள்.
அவர்கள் சரியான தடத்தில் மீண்டும் இயங்க இது எல்லாம் அவசியமானதுதான்..!
மிகவும் அருமையாக சாடி உள்ளீர்கள்......நான் பார்த்த எதிர்ப்பு -ம.க.இ.க. இயக்கத்திடம் இருந்து
அங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டி இருந்தனர்...மோடி வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து....மற்றபடி தங்கள் பதிவுஒரு சாட்டைஅடியே....
As'ala"mu alaikkum.
Dear Ashik,
Why did you enter into the politics now a days?
Any how, your article is a much needy one right at the moment.
Jeyalaithaa is nothing but Modi. ADMK is nothing but BJP. They are acting and cheating Tamilnadu people like two different parties.
It was a 'big surprice', that Muslims supported Jeyaliatha.
It is a 'bigger surprice', that Muslims are not opposing Modi this time.
It is the 'biggest surprice', that Muslims are not protesting democtaical way against the "INVITEE OF MODI" ie., CM Jayalaitha.
இனப்படுகொலை செய்ததில் ராஜபக்ஷேக்கும் மோடிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
ஆனால் இந்த அரசியல்தலைவர்கள் எல்லாம் தங்கள் இருப்பை வெளிக்காட்டவே இவர்களுக்கெதிராக போராடுகிறார்களோ என்று தோன்றுகிறது.
இதே மோடி தேர்தலுக்கு முன் வந்திருந்தால். நான்தான் எதிர்த்தேன் நான்தான் எதிர்த்தேன் என ஓட்டுக்காக ஆளாளுக்கு உரிமை கொண்டாடியிருப்பார்கள்.
இந்த மாதிரியான விசயங்களில் இனம், மதம், நாடு, மொழி பாகுபாடின்றி சக மனிதர்களாக நாம் அனைவருமே ஒன்றுபட்டு இனப்படுகொலையாளர்களை எதிர்க்கவேண்டும்.
Sorry dude,
'R' in place of 'E'_ a spelling mistake 'neighbouring keys' in typing error!
that should be,
"INVITER OF MODI" ie., CM Jayalaitha.
இந்த விடயத்தில் தமிழர்கள்(ஈழஆதரவாளர்கள்), சிறுபான்மையினர்(முஸ்லிம்கள்) ஆகிய இருவரின் நிலையும் ஒன்றுதான். துரோகியை (கருணாநிதி) விட எதிரி (ஜெயா ) மேலானவர். அதை அவர்கள் இப்படிக்கூட சொல்லலாம். இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது கருணாநிதி மத்தியில் கூட்டணி என தமிழர்களும், குஜராத் இனப்படுகொலையின்போது பாஜகவுடன் கூட்டணி, மற்றும் திமுக காவல்துறையின்கோவை அடக்குமுறைகள் என முஸ்லிம் அமைப்புகளும் காரணங்களை அடுக்கவும் முடியும். தேர்தல் அரசியலில் இதைத் தவிர வேறு வழியே இல்லை.
Ha Ha Ha!
Jeyalaithaa is nothing but Modi. ADMK is nothing but BJP. They are acting and cheating Tamilnadu people like two different parties.
It was a 'big surprise', that Muslims., Minorities supported Jeyaliatha.
Aamayai Manjalil Kulippaatti Nadu veettil vaithaalum
athan Neechu vaasam pogaathu!- Telugu Proverb.
More 4 years 11 Months and 25 days to go..,
//நரேந்திரமோடி,வருகைக்கு ஒட்டுமொத்த தமிழகமும்,இத்துனை அமைதி காத்திருப்பதன் அர்த்தம் புரியவில்லைதான்..//
உண்மையைச் சொல்லட்டுமா?
மோடியை எதிர்க்கவில்லை என்று புலம்பும் எந்த இஸ்லாமியரும் சிக்னல் ஃபாலியாவில் நடந்தது தப்பு என்று ஒத்துக் கொள்வதே இல்லை. ஏதோ மோடி ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் 'இன்னைக்கு 800 முஸ்லீம்களைப் போட்டுத் தள்ளுங்கடா' ன்னு ஆர்டர் போட்ட மாதிரி திரிக்காதிங்க.
சிக்னல் ஃபாலியாவில் ரயில் எரிப்பில் நடந்த 58 கொலைகளுக்கும், அதனைப் பின் தொடர்ந்த வன்முறையில் கொல்லப்பட்ட 254 ஹிந்துக்களுக்கு தரப்பட்ட பதிலடியாகத்தான் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான வன்முறை பெரும்பாலோரால் பார்க்கப்படுகிறது. இந்துக்களைச் சீண்டினால் இதுதான் நடக்கும் என்று (இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் 84ல் காங்கிரஸ் கட்சி 4000 சீக்கியர்களை தில்லியில் கொன்றது போல) சொல்வதன் நோக்கமே அவ்வன்முறைக் கொலைகள்.
அதனால்தான் மோடியை யாரும் கண்டு கொள்வதில்லை.
புலி வாலைப் பிடித்தவர்கள் கதை எப்போதும் சிக்கல்தான்.
//நன்மை செய்வோம். தீமையை தடுப்போம். இயலாவிடின்,செய்பவர்களையாவது ஆதரிப்போம்.//
சின்ன சந்தேகம். இந்த ஆதரிப்பதுங்கறது தீமை செய்யரவங்களையா?
இப்படி வேணா மாத்திப்பாருங்க
தீமையை தடுப்போம். நன்மை செய்வோம். இயலாவிடின்,செய்பவர்களையாவது ஆதரிப்போம்.
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!
சகோ ஆஷிக்,
இந்த விசயத்தில் வினவு குரூப் தான் நம் நண்பர்களோ?
/* ஷர்புதீன் said... Best Blogger Tips [Reply To This Comment] 26
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி! */
சீரியசான விஷயம் பேசும்போது Template மார்க் ரொம்ப முக்கியம்???? போங்க சர்புதீன் நேரம் காலம் தெரியாம...
/* புலி வாலைப் பிடித்தவர்கள் கதை எப்போதும் சிக்கல்தான். */
நாமும் புலி வாலைத்தான் பிடித்து இருக்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம் Mr . Anonymous
ஒரு பக்கம் எதிர்பார்க்காத தோல்வியால் ஏற்பட்ட அவமானம், மற்றொரு பக்கம் வெற்றியால் ஏற்பட்ட மமதை. ஆக மொத்தம் எல்லோரும் அதிகார பயத்திற்கு அடிமையாகி அடங்கிவிட்டார்கள் என்பதே உண்மை.
நர்ர்ரேந்திர ஜெ..! (மெளனம் ஆன நம் உணர்வுகள்)
தலைப்பிலேயே கோபமும் அடக்கமும் சிறப்பாய் அமைந்துவிட்டது.
ஜெயா, தான் ஒரு பார்ப்பனீய வெறி கொண்டவள்தான் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிரூபிப்பதில் அத்வானி, ஜோஷி, மோடியை விடவும் ஒரு படி முன்னால்தான் நிற்பார். அது இனவெறி! அந்த இனத்தின் பிறவிக்குணம்! மாற்ற நினைப்பதும் மாற்ற முனைவதும் முயற்சிப்போருக்குத்தான் இழப்பைத்தரும். அதை அப்படியே அதன் போக்கில் விட்டு, அனுபவப்பட்டுத்தான் திருந்தவிட வேண்டும். அதற்கான அவகாசம் ஏற்கெனவே கிடைத்தும் இன்னும் திருந்தக்காணோம்!
இதில் அய்யோ பாவம் என்று நினைக்கத்தோன்றுவது பேராசிரியரைத்தான்! பச்சை அரசியல்வியாதியாக பேராசிரியர் மாறிக்கொண்டிருக்கிறார். அல்லாஹ் அவரைக்காக்கட்டும்!
பன்றியோடு இணைந்த கன்றின் நிலை வராமல் இருக்க பிரார்த்திப்போம்!
வலையில் என்ன செய்யமுடியும் என்று நினைப்போருக்கும் வலையில் செய்ய என்ன இருக்கிறது என்று நினைப்போருக்கும் வலையில் என்ன தான் செய்ய முடியும் என்று நினைப்போருக்கும் .... இதோ இதுதான் நாம் செய்ய வேண்டியது என அழகாக பாதை காட்டிக்கொடுக்கும் உங்களின் பதிவுகள்.... வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
உங்களின் எழுத்துவன்மை மென்மேலும் பெருகட்டும்!
அன்புடன்
இறை நேசன்
குறிப்பு: மக்கள் மறதியாளர்கள் என்பதை வசதியாக பயன்படுத்திக்கொண்டு, சந்தில் சிந்துபாடியிருக்கும் அனானிமஸின் உளறல்களுக்கு "ச்சீ ..." என்ற ஒற்றைப் பதில் போதுமென நினைக்கிறேன்!
///* புலி வாலைப் பிடித்தவர்கள் கதை எப்போதும் சிக்கல்தான். */
நாமும் புலி வாலைத்தான் பிடித்து இருக்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம் Mr . Anonymous//
உண்மைதான். இது மோடிக்கும் பொருந்தும், 1400 ஆண்டுகளுக்கு முன்னால் பிடித்தவர்களுக்கும் பொருந்தும்.
"ம.ம.க மோடி வருகையை எதிர்க்காது. விழாவை புறக்கணிக்காது".
==பேராசிரியர் இப்படி பேட்டி கொடுத்து இருக்கணும். (ஏன்னா அடுத்த தேர்தலுக்கு அதிமுகவோட கூட்டணி முக்கியம்).
................................................
அப்புறம், அண்ணன் ஹைதர் அலி,
"த.மு.மு.க மோடி வருகைக்கு கடும் ஈதிர்ப்பை தெரிவிக்கிறது. படுகொலைகாரன் மோடியை விழாவிற்கு அழைத்த ஜெயாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறது."
==இப்படி பேட்டி கொடுத்து இருக்கணும். (ஏன்னா நமக்கு முஸ்லிம்களும் அவங்க ஓட்டும் அடுத்த தேர்தலுக்கு முக்கியம்)
................................................
எப்பூடி ?
'பேராசிரியருக்கு' அரசியல் தெரியலை.
நாம சொல்லித்தருவோம். ஹி.ஹி.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
நடுநிலையாளர்களுடைய உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே உங்களின் பதிவுகளில் விவரித்திருக்கிறீர்கள். இனப்படுகொலையாளன் ராஜபக்சேயை எதிர்ப்பவர்களில் பலர் மோடியை சிறந்த ஆட்சி நிர்வாகி, அவரைப் போன்று ஜெயாவும் ஆட்சி பண்ண வேண்டுமென்ற ஆசையில் துள்ளித் திரிகின்றனர். இவர்கள் அப்பட்டமாக இரட்டை நிலையை மேற்கொள்கின்றனர். ராஜபக்சேவுக்கு எதிராக பொங்கிய தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களோ மற்றொரு இனப்படுகொலையாளன் மோடியின் முகத்தை க்ளோசப்பில் காட்டி மகிழ்கின்றன. அச்சு ஊடகங்கள் நிலைமையை சொல்லவேண்டியதில்லை. மோடியை சிறந்தவொரு ஆட்சியாளன் என்ற நற்சான்றிதழை கொடுக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. எதற்கும் அஞ்சாமல் கருத்து சொல்லும் பதிவுலகமும் (அப்படித்தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் பதிவர்கள்) மோடிக்கு முன்னால் தங்களுடைய அனைத்து அங்கங்களையும் பொத்திக் கொண்டிருக்கின்றது. கருணாநிதியின் தவறுகளை அக்குவேறாக ஆணிவேராக ஆய்ந்து தம்முடைய மேதாவித்தனத்தை காட்டிய பதிவர்கள், உசாமா பின்லாடனுக்கு சென்னையில் தொழுகை நடத்தியவுடன் (தொழுகை நடத்தியது தவறு என்பது தான் என்னுடைய கருத்து) மனிதநேயம் பீரிட்டு அறச்சீற்றத்துடன் முஸ்லிம்களுக்கெதிராக ஆவேசமாக பதிவெழுதியவர்கள் என்று அனைத்து தரப்பும் எல்லாத்தையும் மூடிக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சாட்டையடிகளாய் இந்த பதிவு காட்சி தருகிறது.
@Dr.Rudhran//i have shared this in facebook//--தங்கள் வருகைக்கும் முகநூல் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.Dr.ருத்ரன்.
@காமராஜ்//தந்தி உட்பட ஒருநாளும் மோடியைப்பற்றி எழுதியதே கிடையாது.//
//எம் சோதர தமிழ்த்தோழர்களே எனக்கு மோடிக்கும் ராஜபக்சேவுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை.//
தங்கள் வருகைக்கும் அதிரடி கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.காமராஜ்.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்... //எங்கேயோ(?) படிச்சது...//--போன பதிவில்.. சகோ.ஷேக் உடனான விவாதத்தில்...என் வார்த்தைகள்...! I know..!
அடுத்த
//"முட்டாள்கள் தினம்"//
---இதற்குள், ஜெ.விடம் ஒரு 'மனமாற்றம்' ஏற்பட்டு....
ம்ம்ம்....
வெற்றி பெற்றாச்சு...
ஆட்சி அமைச்சாச்சு...
இனி நம்பிக்கை வைப்பது ஒன்றைத்தவிர வேறு என்ன வழி சகோ..?
ஜெ. ஒன்றும்... அபுலஹப் போல தெளிவான அறிவிப்பால் தண்ணிதெளிச்சு விடப்பட்ட கேஸ் கிடையாதே சகோ.அப்துல் பாஸித்...!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@DRAVIDANசூப்பர் சுட்டி..!
///தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி. தேவையில்லை///
சகோ.சோலை அப்போதே(December 30, 2008) தெளிவாக சொல்லியிருக்கிறார். தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.திராவிடன்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வராஹ்...
//ஒருக்கால் இனி இதற்கான கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஏதும் அறிவிக்கலாம்.//--"இனி"யா..? அடடா... மோடி குஜராத் போய்விட்டாரே..!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@ரியாஸ் அஹமதுதங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ.ரியாஸ்.
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//மோடிக்கு எதிராக புறக்கணிக்கவில்லை என்றும் விலகித்தான் இருந்தோம் என்றும் ஜவாஹிருல்லா இன்று அறிவித்து உள்ளார்...ஏன் இந்த பின்வாங்கல்?//---ஆமாம்...சகோ.
அப்புறம்தான் அவரின் "புறக்கணிப்பு பின்வாங்கலை" (!?) அவதானித்தேன்.
தவறாக எழுதியதை, பதிவில் திருத்தியும் விட்டேன். அதற்கான காரண இணைப்பு சுட்டிகளையும் அந்தந்த வார்த்தைகளின் பின்னே தந்திருக்கிறேன்.
தங்கள் வருகைக்கும் மிக முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி சகோ.அதிரடி ஹாஜா.
@vijay_dlநாட்டிலே ஒரு வகை உணவுக்கே அவனவன் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான்..!
இதுல //ஐம்பத்து நான்கு வகை உணவு//---அடப்பாவிகளா..!
நன்றாக நியாபகம் வைத்துளீர்களே சகோ...! அதெப்படி..?
தங்கள் வருகைக்கும் மிக முக்கியமான செய்திகளை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.விஜய்.
@செய்யது முஹம்மது புஹாரி (எ) முத்துவாப்பா..
//ஏமாற்றாம் மட்டுமே மிச்சம்...//---கூடவே... அதிர்ச்சியும்..!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.புஹாரி.
@Barariஉங்கள் பின்னூட்டம் இரட்டை சவுக்கடி சகோ.பராரி..!
//உங்கள் பதிவு ஒரு சவுக்கடி.//
---தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.பராரி.
@ஹுஸைனம்மா///திருந்தியிருப்பார் என்று நம்ம்ம்ம்ம்பி இருந்த (என்போன்ற)வர்களுக்கு முதல்நாளே ஆப்பு வைத்துவிட்டார்///--இதில் உள்ள... //ம்ம்ம்ம்// Vs. 'நர்ர்ரேந்திர'-வில் உள்ள... //ர்ர்//----ஐ விட டபுள்..!
ஆக, என் கோபத்தை விட தங்களுக்கு இரட்டை மடங்கு ஏமாற்றம் போல..!?
//தமிழகத்தில் மட்டுமே இத்தனை இஸ்லாமிய அமைப்புகளா????//
---என்னங்க... சகோ.ஹுசைனம்மா..? ஏழுக்கே இவ்ளோ அதிர்ச்சின்னா...?
நீங்க எதற்கும் பக்கத்தில் யாரையாவது நம்பகமான ஒருவரை துணைக்கு வைத்துக்கொண்டு...
இந்த சுட்டியை அழுத்துங்கள்..!
மயக்கம் போட்டு விழுந்தால் முகத்தில் தண்ணீர் தெளிச்சு... தெளியவெச்சு மெதுவா எழுப்பி உட்காரவைக்க உங்களுக்கு உதவக்கூடும்..!
இறைவன்தான் நம்மை பாதுகாக்க வேண்டும்..! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
@திலிப் நாராயணன்
தங்கள் வருகைக்கும் ஆணித்தரமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.திலிப் நாராயணன்.
@ரஹீம் கஸாலிபின்னே...? நானும், தமிழக முஸ்லிம் முன்னேற்றத்துக்காக குரல்கொடுக்கும் ஒரு தவ்ஹீத் வாதியாயிற்றே சகோ.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ரஹீம் கஸாலி.
@RAZIN ABDUL RAHMANஅலைக்கும் ஸலாம் இனி நாம் இப்படி அனைவரும் ஒட்டுமொத்தமாக மந்தமாக இருந்துவிடக்கூடாது... சகோ.ரஜின். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
@வடுகப்பட்டி ஜமீன்
அசத்தல் உவமை, அசத்தல் குறள்..!
எழுத்துக்களில் அசத்தி விட்டீர்கள் சகோ.ஜமீந்தார். வருகைக்கும் அசத்தலுக்கும் மிக்க நன்றி சகோ.
@ஜெயகுமார்.///நான் பார்த்த எதிர்ப்பு -ம.க.இ.க. இயக்கத்திடம் இருந்து
அங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டி இருந்தனர்...மோடி வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து....///---எதிர்ப்பு ஒன்றை காட்டியிருப்பது வரவேற்கத்தக்க செயல்.
ஆனால்... காட்டப்படவேண்டிய விதத்திலான எதிர்ப்பா அது..?
ஒட்டப்பட்ட சுவரொட்டி குஜராத்தியிலே இருந்ததா..?
ஹிந்தியிலே இருந்ததா...?
ஆங்கிலத்திலே இருந்ததா...?
அதை மோடி படித்தாரா...?
தன்னிடம் எண்ணற்ற தோழர்கள் உள்ள ஓர் அமைப்பு இப்படித்தான் பாசிஸத்துக்கு எதிராக போராடுமா..?
சென்ற முறை மோடியின் முகத்துக்கு நேராய் வீரமுடன் கருப்புக்கொடி காட்டிய ம.க.இ.க,
இம்முறை சுவரொட்டி மட்டும் ஒட்டிக்கொள்ளும் மட்டத்துக்கு தரம் சறுக்கியது ஏனோ..?
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஜெயக்குமார்.
@Dr.V.K.Ja'ffar Sadiqஅலைக்கும் ஸலாம் வரஹ்... தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.Dr.ஜஅஃபர் சாதிக்.
@சிநேகிதன் அக்பர்////இந்த மாதிரியான விசயங்களில் இனம், மதம், நாடு, மொழி பாகுபாடின்றி சக மனிதர்களாக நாம் அனைவருமே ஒன்றுபட்டு இனப்படுகொலையாளர்களை எதிர்க்கவேண்டும்.////---மிகத்துல்லியமான கருத்துக்கள் சகோ. அக்பர்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.
@தமிழானவன்//தேர்தல் அரசியலில் இதைத் தவிர வேறு வழியே இல்லை.//---வேறு ஒரு வழியைப்பற்றி இனியாவது நாம் சிந்தித்தே ஆக வேண்டும் சகோ.தமிழானவன்.
நமக்கினி துரோகிகளும் வேண்டாம்..
எதிரிகளும் வேண்டாம்..!
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.
@Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள்
//More 4 years 11 Months and 25 days to go.., //
தங்கள் வருகைக்கும் Count-down ஆரம்பித்ததற்கும் மிக்க நன்றி சகோ.சாய் கோகுல்.
@Anonymousநீங்கள் //உண்மை சொல்லட்டுமா// என்று கேட்டு பொய் சொல்லாதீர்கள் சகோ.அனானி.
இல்லையேல் இனியாவது உண்மையை அறிந்து கொள்ளுங்கள் சகோ.அனானி.
//சிக்னல் ஃபாலியா//--இதுவே 'மோடிக்களின் அப்பட்டமான கைங்கர்யம்தான்' என்று ஆதாரத்துடன் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்..!
ஆதாரம்-1
ஆதாரம்-2
ஆதாரம்-3
ரயில் பெட்டி யாரால் எரிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக காட்டும் ஆதாரங்கள் அவற்றில் கொட்டிக்கிடக்கின்றன.
இதைத்தொடர்ந்து நடந்த "திடீர்" (?!)கலவரத்திற்கு(?!) மட்டும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே....
"இப்படி கோத்ராவில் ஒரு ரயில் பெட்டி எரிக்கப்படும்" என்று முன்பே நன்கு அறிந்திருந்து...
ஆயத்தங்களைச்செய்து ஆயுதங்களை தயார் நலையில் வைத்து ஒத்திகை பார்த்து கலவரத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை கொல்ல தயாராக இருந்திருந்தார்கள் சங்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பதை தெகல்கா நிரூபித்திருக்கிறது.
ஆக, முஸ்லீம்கள் தான் இதைச் செய்தார்கள் என்று இனியும் பொய் சொல்லாதீர்கள்...!
'முஸ்லிம்கள் இல்லை' என்று கோர்ட்டே ஏற்கனவே நிறுவியாச்சு---அதாவது கோத்ரா ரயில் எரிப்பின் "தலைவரும்"(?), "உபதலைவரும்" (?) "முக்கிய சூத்ரதாரிகள்"(!?) என பொட்டாவில் கைது செய்யப்பட்டவர்கள் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டனர்.....!!!
ஆக, கோத்ராவுக்கு காரணம் முஸ்லிம்கள்தான் என்று ஹிந்துத்துவாவினரால் பொய்யாக நிறுவ முயலப்படுகிறது.
அப்போதுதான் அவர்கள் குற்றவாளிகளை--அதாவது தங்களை-- காப்பாற்றிக்கொள்ள முடியும். இதுவே உண்மை.
எனில்....
'கோத்ரா சதி செயலின் முக்கிய சூத்ரதாரி' யார்...?
இப்போது இது எல்லார்க்கும் விடை தெரிந்த எல்கேஜி லெவல் கொஸ்டின்...!!!
@வாட்டாக்குடி இரணியன்
//இந்த ஆதரிப்பதுங்கறது தீமை செய்யரவங்களையா?//---???
//தீமையை தடுப்போம்//--என்றுதானே இருக்கு..?
அப்புறம் எதற்கு, சகோ...உங்களுக்கு //சின்ன சந்தேகம்//..?
"இந்த மருந்தை சாப்பிடும்போது குரங்கை மட்டும் நினைச்சுடாதீங்க.."--என்று ஒரு டாக்டர் நோயாளியிடம் சொன்ன கதையா ஆகிருச்சு...!
அதனால் என்னை மாற்ற வெச்சுட்டீங்க... (அதில் தவறே இல்லை என்ற போதிலும்)
தங்கள் வருகைக்கும் பதிவைப்பற்றி ஏதும் சொல்லாமல் வேறு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியமைக்கும் மிக்க நன்றி சகோ.வாட்டாக்குடி இரணியன்.
@சிராஜ்///இந்த விசயத்தில் வினவு குரூப் தான் நம் நண்பர்களோ?///--இல்லை சகோ.சிராஜ். எந்த விசயத்திலும் அவர்கள் நமக்கு நண்பர்களாக இல்லை.
வருகைக்கும், கருத்திற்கும், மேலும் இருவருக்கு நல்ல பதிலை அளித்ததற்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.
@மு.ஜபருல்லாஹ்//ஒரு பக்கம் எதிர்பார்க்காத தோல்வியால் ஏற்பட்ட அவமானம்....//
//....மற்றொரு பக்கம் வெற்றியால் ஏற்பட்ட மமதை.//
----ரெண்டுமே மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.ஜபருல்லாஹ்.
இதுதான் கேள்விகளுக்கான சிறப்பான சரியான முடிவுரை.
அப்புறம்...
//தலைப்பிலேயே கோபமும் அடக்கமும் சிறப்பாய் அமைந்துவிட்டது.//---வாவ்..!
(பதிவை எழுதிய நேரத்தைவிட தலைப்புக்குத்தான் அதிக நேரம் ஆச்சு சகோ..!)
நாம் எழுதியதை கருத்தூன்றி படிக்கிறார்கள் என்று அறியும்போது நிச்சயம் எழுதியவருக்கு மிக்க மனநிறைவை தருகிறது சகோ..!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜபருல்லாஹ்.
@இறை நேசன்தங்கள் அதிரடியான கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.இறைநேசன்.
@X Arasiyalwathi//எப்பூடி ?//---ம்ஹூம்... சரியில்லை சகோ.
ஜெ. என்ன அந்தளவுக்கு ஒண்ணும் தெரியாதவரா..? இதனால்தான் நீங்க "X" Arasiyalwathi ஆகிட்டீங்க..!
:)
தங்கள் வருகைக்கும் காமடி கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...
மிக அருமையான பின்னூட்டம்... 'நச்' கருத்துக்கள்...
'நறுக்' கேள்விகள்...
தங்கள் வருகைக்கும் மரணஅடி மறுமொழிக்கும் மிக்க நன்றி அன்பு சகோ.ஷேக்தாவூத்..!
நான் ஒன்று சொன்னால் கோவித்துக்கொள்ள மாட்டீர்களே...?
///எதற்கும் அஞ்சாமல் கருத்து சொல்லும் பதிவுலகமும் (அப்படித்தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் பதிவர்கள்)///---ஒரு 'முன்னாள் பதிவரான' நீங்கள் இனி மீண்டும் பதிவுலகம் திரும்பவேண்டி பகிரங்கமாக... உரிமையுடன் அழைக்கிறேன், என் அன்பு அத்திக்கடையான்..! பிடிவாதத்திலிருந்து மீண்டு(ம்) வருக..!
@Anonymous #6
///go to pakisthan///---ஏன்..?
ஏன் மோடி பாகிஸ்தான் போக வேண்டும்..?
அவர்... இந்திய சட்டத்திற்குட்பட்டு...
இந்திய உச்ச நீதிமன்றத்தால் தீரவிசாரிக்கபட்டு...
சாட்சியங்கள் ஆதாரங்கள் அடிப்படையில்...
'மிக உயர்ந்த பட்ச தண்டனை' அளிக்கப்பட்டு...
பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்படவேண்டும்...
என்பதே அனைத்து முஸ்லிம்களின், கிருத்துவர்களின்,பெரும்பாண்மை நடுநிலை நல்லோர்களின்... ஒட்டுமொத்த
அபிமானம்...
ஆசை...
ஆர்வம்...
ஆதங்கம்...
விருப்பம்...
வேண்டுதல்...
கோரிக்கை...
கோஷம்...
என எல்லாமே..!
சிந்திக்க வேண்டிய பதிவு.சமுதாய அமைப்புகள்,இனி இதுபோன்ற தவறுகளை தவிற்க்கவேண்டும்.சலியுட் MR MOHEMMED AAHSIQ
@Anonymousஆம்..! இனி இதுபோன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
Well written Ashik, you have written what neutral people should have written.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
//இனி நம்பிக்கை வைப்பது ஒன்றைத்தவிர வேறு என்ன வழி சகோ..?
ஜெ. ஒன்றும்... அபுலஹப் போல தெளிவான அறிவிப்பால் தண்ணிதெளிச்சு விடப்பட்ட கேஸ் கிடையாதே சகோ.அப்துல் பாஸித்...!
//
உண்மை தான் சகோ.! அதே நம்பிக்கையுடன் தான் நானும் காத்திருந்தேன். முதல் நாளிலேயே அதனை தகர்த்துவிட்டார் ஜெ.
ஜெ என்றில்லை, ஐந்து வருடம் கழித்து கருணாநிதி (?) வந்தாலும் இதே தான் நடக்கும்.
என்னுடைய முந்தைய பின்னூட்டம் அரசியல்வாதிகளின் புத்தியை(!!!) நினைத்து ஆதங்கத்தில் எழுதப்பட்டது.
@Seeni Mohamedவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சீனி முஹம்மது.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஜெ என்றில்லை, ஐந்து வருடம் கழித்து கருணாநிதி (?) வந்தாலும் இதே தான் நடக்கும்.//--எனது சென்ற பதிவே இதுதான் சகோ.அப்துல் பாஸித்.
ஆனால், அதில் வித்தியாசங்கள் இருக்கு(ம்).... என்பதே என் வாதம்.
இவர்கள் இருவருமே லட்சக்கணக்கில்... கோடிக்கணக்கில் பணம் செலவழித்து... வெற்றி பெற்று... ஆட்சியைக்கைப்பற்றி... 'வெறும் ஆயிரக்கணக்கில்' சம்பளம் பெற்று மக்களுக்கு சேவை செய்யத்தான் வருகிறார்களா..? அப்படி யாரும் நம்பத்தான் முடியுமா..?
என்ன்ன ஒன்று... 'சுருட்டுவதில்' சென்றமுறையைவிட இம்முறையாவது கொஞ்சம் குறைச்சுக்க மாட்டாங்களா(!?)என்றுதான் மக்கள் ஒவ்வோர் முறையும் எதிர்நோக்கியுள்ளனர்..!
இவ்வகையில், க.வின் கடந்த ஐந்தாண்டுகள் அதற்கு முந்தைய பல ஆண்டுகளைவிட மோசம்..!
அதேநேரம்,ஜெ.வின் முதல் ஐந்தாண்டுகளைவிட அடுத்த ஐந்தாண்டுகள் மோசமில்லை..!
கரெக்ட் தானே..? ஒத்துக்கறிங்கதானே..?
இம்முறை இன்னும் பெட்டராய் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே நம் எதிர்பார்ப்பு.... //மனமாற்றம்... நப்பாசை...// என்று..! எனவேதான்... அவர் மாறவே மாட்டார் (அபுலஹப் போல) என்று உத்தரவாதம் கிடையாது என்றேன்..!
அதேநேரம் ஜெ.வின் 'ஹிந்துத்துவா மோகம்' அவரிடம் கூடிக்கொண்டு வருகிறது. இதுதான் இப்போது ஜெ.வை பொறுத்தமட்டில் மக்களுக்கும் மாநிலத்துக்கும் மிக மிக அபாயகரமானது. அந்த மோகம் வெறியாக மாறிவிடாமல் இருக்க வேண்டும்... நாட்டு மக்கள் நலனுக்காக. இதுவே நம் ஆதங்கம் & வேண்டுதல்...சகோ. அதை கண்டும் காணாமல் இருக்கும் 'பாஸிச எதிர்ப்பு அமைப்புக்களை' சாடித்தான் இப்பதிவு..!
///முதல் நாளிலேயே அதனை தகர்த்துவிட்டார் ஜெ.///---எது..? இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை மேட்டரா...! அதல்லாம் ஒரு ஈகோ மேட்டர். 'பழைய கட்டிடத்தில்தான் இருப்பேன்' என்றால்... இருந்துக்கட்டும்..!
ஒவ்வொரு கட்சியின் ஆட்சியும் ஒவ்வொரு கட்டிடத்தில் இருந்துவிட்டு போகட்டும்..! இனி அங்கே நடந்த அலுவலகம் இங்கே நடக்கும். இங்கே நடந்தது அங்கே நடக்கும். இதனால்... மக்களுக்கு ஒரு நஷ்டமும் பாதிப்பும் புதிதாய் இல்லை. அதற்கென்று செலவழிச்ச காசு ஏற்கனவே செல்வழிச்சதுதான்..! ஆயிரம் கோடி செலவழிச்சு புதுசா கட்டும்போது அமைதியா இருந்த மாதிரி... அம்பது கோடி செலவழிச்சு பழசை புதுப்பிக்கும் போதும் அமைதியா இருந்துடவேண்டியதுதான்..! இது தமிழ்நாட்டின் விதி..! அவ்வளவுதான்..!
தாங்கள் மீண்டும் ஒருமுறை வந்தமைக்கு மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
//அதேநேரம் ஜெ.வின் 'ஹிந்துத்துவா மோகம்' அவரிடம் கூடிக்கொண்டு வருகிறது. இதுதான் இப்போது ஜெ.வை பொறுத்தமட்டில் மக்களுக்கும் மாநிலத்துக்கும் மிக மிக அபாயகரமானது. //
இதனை கருத்தில் வைத்து தான் பின்னூட்டம் இட்டிருந்தேன் சகோ.!
//இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை மேட்டரா...! // அதற்காக இல்லை.
மற்றபடி உங்கள் கருத்தில் மாற்றுக் கருத்து இல்லை.
இதை பற்றி நான் என் நண்பர்களிடம் பலமுறை அங்கலாய்த்திருக்கிறேன்.
எனக்கு என்ன கோபம் என்றால், தமுமுக பதவியேற்பு விழாவிற்கு போகவில்லை என்பதையே பெரிய விஷயமாக(?) கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது பெரிய விஷயம் இல்லை. ஆனால் போன தடவை செய்தது போல் தமுமுக கருப்பு கொடி காட்டி எதிர்ப்பௌ தெரிவித்திருக்க வேண்டும், அல்லது அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு வாழ்த்துரை வழங்குகிறார் பேராசிரியர். அடுத்ததாக இந்திய தவ்ஹீத் ஜமாத்தும் தங்களுக்கு அழைப்பு வந்தும் போகவில்லை என்பதையே தங்களின் இனையதளத்தில் வெளியிட்டுக் கொண்டது.
இதை வெளியிட்டதற்கு எதிர்க்கிறேன் என்று ஒரு அறிக்கை விட்டிருக்கலாம் பாக்கர்.
ததஜ இந்த விஷயத்தில் ஏற்கனவே மோடி வந்த போது எந்த போராட்டமும் செய்யவில்லை, ஆதலாம் இந்த தடவை ஈதும் செய்யக்கூடாது என்றில்லை. அவர்களாவது செய்திருக்கலாம்.
இனி வரும் காலங்களில் இது போன்ற நரவேட்டை பிராணிகளை செயலலிதா அழைக்காமல் இருப்பது நல்லது, அவர்களுக்கு.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அதற்காக இல்லை.//---நான்தான் தவறாக புரிந்து கொண்டேன். மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி சகோ.அப்துல் பாஸித்.
நன்றியுடன் என்னுடைய தளத்தில் மீள்பதிவு செய்திருக்கிறேன் சகோ
அஸ்ஸலாமு அலைகும் சகோதரரே,
Masha Allah .., இதை என் மனதளவில் கண்ணீர் மல்க எழுதிகிறேன்.. கரணங்கள் கீழே.,
எப்படியும் ஆட்சியை பிடித்தே தீரவேண்டும் என்று சோ., குருமூர்த்தி, மற்றும் அவர்கள் போன்றோர்களின் கூட்டு திட்டத்தின் பின்னணியில் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை அடைந்தால்தான் தேர்தலில் வெற்றி என்று அறிந்து, அவர்களின் ஓட்டுக்களை அடைந்தே தீருவது என்று பக்காவாக திட்டம் இட்டு , பிஜேபி யை தள்ளிவைத்து ( ரகசிய ஒப்பந்தமோ என்னவோ.. ) தேர்தலில் போட்டியிட்டு, சாதி மத வேறுபாடின்றி, ஜெயா திருந்தி விட்டார் என்று எண்ணி, ஊழல் ஒன்றை மட்டுமே எதிர்த்து ஓட்டுபோட்ட நடுநிலைமையான நியாயமான மக்களுக்கு மிகப்பெரிய "ஏப்ரல் பூல்" என்று உறக்க "மே" யில் கூறிவிட்டுருக்கிறார். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு பச்சை துரோகம் செய்திருக்கிறார், அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு செய்த துரோகத்திற்கு என்ன வார்த்தைக்கள் சொல்வது என்று தெரிய வில்லை. (இந்த முதல் para வில் சொல்லப்பட்டவை நடப்பவைகளை கண்டு என்னுடைய அறிவிற்கு உட்பட்ட என் அனுமானங்கள் மட்டுமே. ஏக இறைவன் மட்டுமே எல்லாம் அறிந்தவன். )
மோடி பதவியேற்புக்கு வருகிறார் என்று படித்ததும் இதயம் வெடித்தது.. எத்தனையோ முறை இந்தியாவில் பிறந்தும் அந்நியனாக உணர்ந்ததை அன்றும் உணர்ந்தேன்.. (உணர்த்தப்பட்டேன்) . ஓடினேன்.. எங்கள் சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் சில இயக்கங்களின் இணை தளங்களுக்கு என்ன போராட்டம் இன்று என்று நோக்க.. விஜய் டிவி நிகழ்ச்சி, நக்கீரன் செய்தி என்று ஒரு சிறு தவறுகளையும் விட்டு வைக்காத TNTJ போன்ற இயக்கங்களின் இணையதளங்களில் கூட 'மூச்..' just Pin Drop Silent . இந்த சமயத்தில் TMMK வின் புறக்கணிப்பு செய்தி சிறிது ஆறுதல். But not enought at all ... TMM க்கு கூட ஆழுங்கட்சியாக இருப்பதால் தர்ம சங்கடங்கள் இருக்கலாம். ஆனால் TNTJ க்கு என்ன நேர்ந்தது.. வருகிற 5 வருடங்கள் அரசை சமாளிக்க வேண்டும் என்ற என்னமா.. அல்லாஹ்வை நம்பாமல் அரசை கண்டு பயந்து விட்டர்களா.. அல்லது இந்த அமைதிக்கு அவர்கள் பக்கம் வேறு ஏதும் நியாயம் இருக்கிறதா .. எனக்கு தெரியவில்லை. இறைவன் அறிவான்.
அதே போல்.. இன்று இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு அதுவும் இந்தியாவில் தடை செய்யப்பட இயக்கமான விடுதலை புலிகளை வேரறுக்க நடைபெற்ற போரில், தன் சொந்த மக்களையே கேடயமாக பயன் படுத்திய புலிகளுக்கும் அதே போல அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கும் நடைபெற்ற போரில் உயிரழந்த அவர்கள் இந்தியர்களாக இல்லாவிட்டாலும் தமிழன் என்ற மொழி உணர்வுடன் போராட்டங்கள் கண்டனங்களும் நிகழ்த்திய கட்சிகளும் மற்றும் நடிகர்களின் வீரத்தையும் போராட்டங்களையும் முழுமையாக நான் ஆதரிக்கும் அதே வேளையில், குஜராத்தில் இந்தியர்களையே ( வேற்று நாட்டவர்கள் அல்ல) , அரசே அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக கற்பழித்து, சூறையாடி, ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என்று பாராமல் கொன்று குவித்த பொழுது எங்கே போனார்கள்.. இந்த உணர்வாளர்கள். ?? தமிழன் என்கிற உணர்வு ஏன் குஜராதில் நடந்த இனபடுகொலையை இந்தியன் என்ற உணர்வில் ஏன் கண்டிக்க வில்லை? என்ன காரணம்.? எனக்கு தெரியும் இந்த கேள்வியை இதற்கு முன்பு நமக்கு கேட்க யோக்யதை இருக்கலாம், அனால் இம்முறை நமது இயக்கங்களே வாய் மூடி இருக்கும்பொழுது.. இக்கேள்வியை இப்பொழுது இவர்களிடம் கேட்க நமக்கு யோக்யதை இல்லை என்று.
ஏன் ஒருத்தர் கூட எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று மனதளவில் துடித்துகொண்டு இருந்த பொழுது ..
(comment continues in next comment..)
2nd part of my comment continues..
சென்ற மாதம் குஜராத் IPS அதிகாரி Sanjiv Bhatt அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த அப்பிடவிட் பற்றி அறிந்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன். அதில் Riots க்கு முன்பாக மோடி வீட்டில் நடந்த மீட்டிங்கும் மற்றும் SIT (Special Investigation Team ) யின் உண்மை முகம் மற்றும் இப்போது அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் உள்ள மிரட்டல்களும், பாதுகாப்பின்மை என எராளமான அதிர்ச்சியான தகவல்களை தெள்ள தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. அந்த அப்பிடவிட்டை முழுவதுமாக படித்த பொழுது ரத்தம் கொதித்தது. அதை படித்து விட்டு அதன் நகலை மௌலவி PJ அவர்களுக்கும் , மக்கா இமாம் மௌலான சம்சுதீன் காஸ்மி அவர்களுக்கும் அவரவர்கள் வெப்சைட் மூலமாக அனுப்பினேன், எதாவது நடவடிக்கை எடுங்கள் என வேண்டுகோள் விடுத்து. அவர்கள் இன்ஷா அல்லாஹ் எதாவது செய்வார்கள் என நம்புகிறேன். வேறு யாருக்கு இதை அனுப்பினால் சரியாக இருக்கும், கொதித்து எழுவார்கள், ஜனநாயக முறையில் Action எடுப்பார்கள் என்று எண்ணியபொழுது.. என்றோ உங்கள் bloggai படித்தது தான் ஜாபகம் வந்தது. அப்படி உங்கள் blogkku வந்த பொழுதுதான் இந்த பதிவை கண்டேன்.. நீதி இன்னும் சாக வில்லை.. எங்கோ ஒரு மூலையில் ஆண்டவன் அதற்க்கு உயிர்கொடுத்து கொண்டுதான் இருப்பான் என்று உணர்ந்ததை கண்டு மனம் மகிழ்ந்தேன். இறைவனுக்கு நன்றி தெரிவித்தேன். ஒரு இயக்கம் பண்ண வேண்டிய வேலையை ஒரு தனி ஆளாக சுருக் சுருக் என்ற சாட்டையடி பதிவில் கேட்டுருப்பதும் அதற்க்கு Dr ருத்ரன் உட்பட மற்ற நியவான்களின் பின்னூட்டங்களும் ஒரு வாரகாலமாக மன உளைச்சலோடு அலைந்ததற்கு சிறிது ஆறுதல் தந்தது. ஏக இறைவன் உங்கள் இந்த பணி தொடரவும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இம்மை மறுமை வெற்றிகளை வாரி வழங்கி அருள் புரிவானாக. ஆமீன் .
உங்கள் blogkku வந்ததின் காரணத்தை சொல்கிறேன். நீங்கள் குஜராத் IPS அதிகாரி செய்த அப்பிடவிட்டையும் அதனை பற்றிய உங்கள் சாட்டையடி கருத்துகளையும் நீங்கள் ஒரு தனி பதிவாக இட வேண்டும் என்று இந்த சகோதரனின் ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் முழு அப்பிடவிட்டை இதுவரை படிக்க வில்லையென்றால், அதை நான் அனுப்பி வைக்கிறேன். அப்பிடவிட்டை படிக்கும்பொழுது "அடப்பாவிகளா" என்றுதான் ரத்தம் துடிக்குது சகோ. இதை நீங்கள் விடக்கூடாது .. உங்கள் பதிவு இந்திய அளவில் ஒரு awareness யும் அதிர்வையும் உண்டு பண்ண வேண்டும். அதற்க்கு நீங்கள் ஆங்கிலத்திலும் உங்கள் பதிவுகளை வெளியிட வேண்டும்.
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
///ததஜ இந்த விஷயத்தில் ஏற்கனவே மோடி வந்த போது எந்த போராட்டமும் செய்யவில்லை///
---இல்லை... சகோ.அபுநிஹான்... சகோ.பிஜே கண்டன அறிக்கையும் வெளியிட்டார். ஆர்ப்பாட்டமும் ததஜ சார்பில் நடத்தினர்.
""சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் 2008 ஜனவரி 14-ந் தேதி துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வருவதை எதிர்த்து, சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஜனவரி 12-2008-ல் தடையை மீறி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட பொருளாளர் சிராஜ் அஹமத் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பர் பாஷா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். போலீசார் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கிடையாது அதனால் கலைந்து செல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லவில்லை. இதைத் தொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக 200 பெண்கள் உள்பட 600 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட அனைவரும் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.""
நன்றி: தமிழ்க்கூடல் செய்தி
தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், இந்த இடுகையை தங்கள் தளத்தில் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.அபுநிஹான்.
@Rafikஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ரஃபீக்,
அந்த வாக்குமூலத்தை அது வந்தபோதே தெஹல்காவில் படித்தேன். ஆனால், மோடியுடன் அந்த சர்ச்சைக்குரிய கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்று எஸ்.ஐ.டி கூறிய அந்த ஏழுபேரில் ஒருவர் கூட இந்த டி எஸ் பி சஞ்சீவ் பட்டுக்கு உறுதுணையாக இருந்து, இவர் வாக்குமூலத்தை உண்மைப்படுத்த வில்லை.
மாறாக அதில் கலந்துகொண்டவர்கள், உடனேயே.. சஞ்சீவ் சொன்னதை மறுக்கின்றதைத்தான் விரக்தியுடன் பார்த்தேன். உடனேயே.. மறுப்பு வெளிவந்துவிட்டதால் என்னால் அப்போது பதிவேற்ற இயலாமல் போய்விட்டது சகோ.
ஆனால், இவரின் கார் டிரைவர், அவரை மோடி கூட்டம் நடத்திய இடத்த்தில் இறக்கி விட்டேன் என்கிறார். ஒருவரின் சாட்சியமா.. ஏழுபேரின் சாட்சியமா என்று பார்க்கும்போது, பாவம், இனி இந்த சஞ்சீவ் பட என்னதான் செய்வார்..?
இவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக, மோடிக்கு எதிராக உண்மைகளை கூற வேண்டிய அவசியமே இல்லை. இருந்தும் தைரியமாக கூறியுள்ளார். இதனால், வரலாற்றில் இடம்பெறுகிறார்.
அதேநேரம்... அந்த ஏழுபேரில் நான்குபேர் சஞ்சீவ் கூறியது போன்றே கூறிவிட்டால்... எஸ்.ஐ.டி. உட்பட, மோடி உட்பட, சாட்சி சொல்லாத மற்ற மூவர் உட்பட எல்லாரும் கூண்டில் ஏறவேண்டியதுதான்.
இன்ஷாஅல்லாஹ் இவர் விஷயத்தில் உண்மை ஒருநாள் வென்றே தீரும் என்றே நம்புவோம். ஆனால், மோடிக்கு எதிராக வேறு ஆதாரங்களும் சாட்சியங்களும் மலையென கிடந்தும் நீதி உறங்குகிறது என்பதே நம் கவலை.
எனது பின்னூட்டம் 55 -இல் மூன்று ஆதாரங்களையும் படித்துப்பாருங்கள். அதிலும் முதலாவதை முழுதும் படியுங்கள். நடந்த சம்பவங்களை அப்போதைய குஜராத்தின் ஒரு உளவுத்துறை தலைவரைவிடவா வேறு நபர் உண்மை கூறிட முடியும்..?
குற்றவாளி என மோடியை கொக்கி போட்டு தூக்கி தண்டிக்க...எப்போதோ வெளியான இதைவிடவா நீதி மன்றத்துக்கு வேறு ஆதாரம் வேண்டும்...?
தங்கள் வருகைக்கும் உள்ளக்குமுறலை இப்படி அனல்பறக்க கொட்டித்தீர்த்தமைக்கும் மிக்க நன்றி சகோ.ரஃபீக். தங்களின் இந்த வீரமிக்க எழுத்தாற்றலை நீங்கள் உங்கள் வலைப்பூவிலும் வெளிப்படுத்துங்கள் சகோ.ரஃபீக்.
தகவல் தந்ததற்கு நன்றி சகோ. நினைவில் இல்லை. சகோ ரஃபீக் அவர்களின் ஆதங்கம் படித்தவுடன் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.அல்லாஹ் அவர்களுக்கும், உங்களுக்கும் அருள் பாலிப்பானாக
அஸ்ஸலாமு அலைகும் சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்களே,
உங்களின் பதிலுக்கு என் நன்றிகள்.
1 சஞ்சீவை தவிர ஏன் மற்றவர்கள் சாட்சி சொல்ல வில்லை என்பது அனைவர்க்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தாலும் கூட அந்த அப்பிடவிட்டிலேய அவர் அதை விளக்கி உள்ளார்.
"இன்றைக்கும் குஜராத்தில் உள்ள நிலைமையானது .. சாட்சிகள் சாட்சி கூறிய பின் அவரகளுக்கு ஏற்படும் பழிவாங்கும் நடவடிக்கைகாகவுtம், அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற இயக்கங்களினால் ஏற்படும் தீங்குகளுக்காகவும் அஞ்சுகிறார்கள். மேலும் அரசு பணிகளில் இருக்கும் சாட்சிகள் சாட்சி சொல்வதற்கு மிகவும் தயங்குகிறார்கள், அவ்வாறு கூறுவதினால் அவர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பிற்கு அது ஊரு விளைவிக்கும் என்பதால். "
அவருடைய வாக்குமூலத்தின் வரிகள்..
"Even today, the situation in Gujarat is such, that witnesses would be afraid of vindictive reprisals and persecution at the hands of the State machinery. Evidently, witnesses serving under the control of the State Government would be highly reluctant to come forward and take a stand that could imperil their own safety or the safety and security of their families."
2 அது மட்டும் அல்லாமால், இவரினால் பெயர் சொல்லப்பட்ட இன்னுமொரு சாட்சியான K .D . Panth (Assistant Intelligence Officer ) சாட்சி கூற சென்ற பொழுது அவரை SIT ஒரு குற்றவாளி போல நடத்திய விதமும் மற்றும் அவரை கைது செய்து விடுவோம் என்னும் அளவுக்கு மிரட்டியதை பற்றியும் கூட அவர் இந்த வாக்கு மூலத்தில் கொடுத்துள்ளார்.
அவருடைய வாக்குமூலத்தின் வரிகள் ..
"My apprehensions were substantiated when one of the witnesses I had named, Shri. K.D. Panth, (Assistant Intelligence Officer with State Intelligence Bureau in 2002) informed me that he had been called before SIT on 5.4.2011 and was virtually treated like an accused and was threatened with arrest and other dire consequences. It appears that other witnesses may have been similarly coerced into submission."
3 அது மட்டும் அல்லாமல், எது உண்மை என்று தெரிந்தாலும் கூட ஏழில் நான்கு பேராவது சாட்சி சொல்லவேண்டும் என்ற நிபந்தனை சுப்ரீம் கோர்டுக்குத்தான் தேவையானது, ஆனால் உண்மை என்ன என்று உலகம் முழுவதும் (அமெரிக்கா உட்பட) தெரிந்து இருக்கும்போது முஹம்மத் ஆஷிக் போன்ற பதிவருக்கு அந்த நிபந்தனை தேவையில்லை என்பது என் கருத்து. அப்பறம் பதிவுலகமே எதற்கு என்பேன். அந்த ஆறு பேர்கள் இடத்தில நம்மை வைத்து பார்த்தால் நம்மில் எத்தனை பேருக்கு சாட்சி சொல்வதற்கு (அதுவும் குஜராத் போன்ற மாநிலத்தில்) தைரியம் வரும் என்று யோசிக்கவேண்டும். அந்த ஏழு பேரில் ஒரு வீரராவது இருந்தாரே என்று சந்தோஷப்பட வேண்டும். அவ்வளவு மோசமான விஷமமான சூழ்நிலையிலும் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஒரு முஸ்லிம் அல்லாத ஒருவர் அதுவும் குஜராத் அரசின் ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரே முஸ்லிம்களுக்கு ஆதரவாக உண்மையை கூற வந்துள்ளார் அதுவும் சுப்ரீம் கோர்டிலேயே, என்றால் அது தான் அந்த ஏக இறைவனின் உதவி. மீதியை செய்வதற்குதான் இறைவன் நம்மை படைத்திருக்கிறான், எல்லாமே இறைவனே செய்துவிட்டால் அப்புறம் ஒரு முஹம்மது ரபீகயோ, ஒரு முஹம்மது ஆஷிக்கயோ இறைவன் ஏன் படைக்க வேண்டும்.???
4 எனக்கு அறிந்தது வரை, பல மீடியாக்கள் (தெஹெல்கா போன்றோரைத் தவிர) இதை ஒரு முக்கியமான seriousaana செய்தியாக பிரசிக்காமல் வெகு சாதரணமானதாக பிரசித்து மழுப்பினார்கள். ஆதாலால் உங்களை போல வலைப்பூ வைத்திருப்பவர்கள், அதிலும் குறிப்பாக உங்களை போன்றவர்கள், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து.. இதன் தமிழாக்கத்தையும் மற்றும் நமது கருத்துக்களையும் ஒரு பதிவாக இட்டு அநியாயங்களை வெளிகொனரும்போது.. இதை பற்றி அறியாத, அவருடைய வாக்குமூலத்தை முழுவதும் படிக்காத மக்கள் அதை பற்றி அறியவும், அநியாயங்களை தெள்ள தெளிவாக உணர்ந்து, அதற்க்கு எதிராக குரல் கொடுக்க முடியும் என்பது என் கருத்து.
திரு. சஞ்சீவ் பாட் IPS அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் கொடுத்த முழு வாக்கு மூலத்தின் லிங்க் கீழே.
http://drop.ndtv.com/common/pdf/Sanjiv_Bhatt.pdf?from=NDTV
@Rafikஅலைக்கும் சலாம் வரஹ்...
தாங்கள் மீண்டும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ.ரஃபீக்.
இவ்வாக்குமூல விஷயத்தில் மீண்டும் மீண்டும் விடாப்பிடியாக குஜராத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதிக்காக தங்கள் உணர்வை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது கண்டு மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன் சகோ.
பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற உங்கள் உள்ளக்கிடக்கைக்கு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன்.
தங்கள் உள்ளக்குமுறல் எனக்கு புரியாமல் இல்லை சகோ. ரஃபீக். கனன்று கொண்டு இருக்கும் ஒவ்வொரு சிறுபான்மை உள்ளத்திற்கும் அது நன்கு புரியும் சகோ.ரஃபீக்.
சரமாரியான கேள்விகள் கேட்டிருக்கின்றீர்கள் சகோ. சில புரிதல்களை எடுத்துச்சொல்லி பதில் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் சகோ.
//.....முக்கியமான seriousaana செய்தியாக பிரசிக்காமல் வெகு சாதரணமானதாக பிரசித்து மழுப்பினார்கள்.....//
ஏன் நடுநிலை ஊடகங்கள் சஞ்சீவ் பட் வாக்குமூலத்தை சீரியஸாக பிரதானப்படுத்தவில்லை..?
// அந்த ஏழு பேரில் ஒரு வீரராவது இருந்தாரே என்று சந்தோஷப்பட வேண்டும்.//...என்கிறீர்கள்..!
முதலில் தாங்கள் ஒரு விஷயத்தை சரியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
அதாவது... சஞ்சீவ் பட் அந்த மீட்டிங்கில் இடம் பெற்று இருந்திருப்பாரேயானால்... அவர் எட்டாவது ஆள்..!
--->>பிரச்சினையே இங்கேதான் சகோ..!
சஞ்சீவ் பட்... தானும் அந்த உயர்நிலை மீட்டிங்கில் 'எட்டாவதாக இருந்தேன்' என்கிறார்.
SIT யோ, இவரைத்தவிர ஏழுபேரைத்தான் அங்கே இருந்ததாக சொல்கிறது.
இந்த மீட்டிங்கில், கலந்து கொண்ட ஒருத்தராவது சொல்லி இருக்கலாம்... 'இவரும் அப்போது அங்கே மீட்டிங்கில் இருந்தார்' என்று.
அப்படியெனில், இந்த கூட்டு சதியில் SIT யும் உடைந்தையா என்பது... சஞ்சீவ் பட்டின் வாக்குமூலத்திற்கு தன் விஷயத்தில் அந்த கேடி பந்த் "ஆமாம்" என்று சொல்லியிருந்தால் கூட.. அதுவே SITக்கு செமை ஆப்பாக இருந்திருக்கும்..!
இதனால் மட்டும் ஹிந்துத்துவா எதிர்ப்பு மற்றும் சில நடுநிலை ஊடகங்களும் இவருக்கு ஆதரவாக குரலேழுப்பவில்லையோ என்று நினைத்து விடாதீர்கள்.
இவ்விஷயத்தில் சஞ்சீவ் பட்டுக்கு எதிரான அப்பட்டமான ஹிநதுத்துவா கூட்டு பொய்சாட்சி சதியே அன்றி இது வேறில்லை என்றே நடுநிலையாளர்கள் முடிவு கட்டுவார்கள். நாமும் அப்படித்தான் முடிவு கட்டுகிறோம்.
பின்னர் எதனால் நடுநிலை ஊடகத்தால் பிரதானப்படுத்தப்படவில்லை இந்த செய்தி..?
இவருடைய வாக்குமூலத்தை, தெஹல்கா ஏப்ரலில் சுட்டு வெளியிடுவதற்கு முன்பே, சஞ்சீவ் பட் இந்த விஷயம் பற்றி பிப்ரவரியிலேயே வெளியே பத்திரிக்கைகளுக்கு சொல்லிவிட்டார். அன்று பரபரப்பாகத்தான் பேசப்பட்டது. அதனால்தான் எல்லா துரோகிகளும் உடனுக்குடனே காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டு பேட்டியளித்தனர். சஞ்சீவ் பட்டை அப்படியே மருதளித்தனர். எனவே, ஏப்ரலில் தெஹல்கா சுட்டு வெளியிட்ட அந்த வாக்குமூல மேட்டர், புதிதாக வேறு செய்தி இல்லாத காரணத்தினால் பத்திரிக்கைகளுக்கு பழசாகி விட்டது.
@Rafik
//...ஆதாலால் உங்களை போல வலைப்பூ வைத்திருப்பவர்கள்,....//
நீங்கள் ஏன் இது பற்றி எழுத வில்லை என்று என்னை கேட்கிறீர்கள்..?
நான் கூட அதை, 'கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு சதி' தொடர்பான தீர்ப்பு வந்த சமயம் என்னுடைய முந்தைய ஒரு பதிவின் ஒரு பின்னூட்டத்திலே
ஒருவருடன் நடந்த சூடான விவாதத்தில் பதில் அளிக்கையில் அவருக்கு ஒரு ஆதாரமாக....
///"I was there. Narendra Modi said... let the people vent their anger :- Sanjeev Bhatt, DC" --ஓர் உயர் அதிகாரியின் வாக்குமூலம்./// ---இப்படி குறிப்பிட்டு எழுதி லிங்க் கொடுத்து இருந்தேன்..!
இதைவைத்து அடுத்து ஒரு பதிவு போட்டிருக்கலாம். பின்னூட்டத்த்திலே சொன்னது மட்டும் போதாது...
ஆனால், போடவில்லை.
காரணம்...?
விரக்தி..! விரக்தி..!!
விரக்திதான் சகோ.ரஃபீக்..!
வேறொரு காரணம் இல்லை..!
என்ன விரக்தி..? எதில் விரக்தி..? ஏன் விரக்தி..?
@Rafik
இங்கே பின்னூட்டத்தில் நான் உங்களிடம் முன்பே சொன்ன...
இப்பதிவின் அந்த 55 வது பின்னூட்டத்திலே நான் கொடுத்த "ஆதாரம்-1" சுட்டியை நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
அது இந்த சஞ்சீவ் பட் வாக்குமூலத்தைவிட எல்லாம் பலமடங்கு உணர்வுப்பூர்வமாக... நடந்த உண்மைகளை, அந்த இனப்படுகொலை நடந்துகொண்டு இருக்கும்போதே... அங்கே குஜராத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த மாநில உளவுத்துறைத்தலைவர் ஸ்ரீ குமார் அளித்த வாக்குமூலங்கள்... 2008 ஆம் ஆண்டே வெளிவந்தவை அவை..! அப்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியவை..! முழுக்க முழுக்க தமிழிலேயே மொழிபெயர்க்கப்பட்டு உயிர்த்துடிப்புடன் அப்படியேதான் இன்னும் உள்ளன..!
அதே 55 -ஆம் பின்னூட்டத்தில் உள்ள மற்ற ஆதரங்களையும் பாருங்கள்.
இதுபோல மோடியின் இனப்படுகொலைக்கு எதிராக ஏகப்பட்ட நம்பகமான மெய் சாட்சியங்கள்..!
அனைத்தும் எதிர் சாட்சியங்கள் அளிக்கப்படாத நிலையில்... பொய் என யாராலும் மருதலிக்கப்படாத நிலையில் இன்னும் அப்படி அப்படியேதான் இருக்கின்றன சகோ.ரஃபீக்.
'டேய்...இதப்பாருங்கலேண்டா..!'... என்று கதற வேண்டும் போலத்தான் இருக்கிறது சகோ.ரஃபீக்..!
அதற்கெல்லாம் என்ன ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தார்கள்..?
இதுதான் நமக்கு தெரியவில்லை சகோ. சுத்தமாக புரியவில்லை சகோ.
அதைவிட தெஹல்கா வீடியோ ஆதாரங்கள் ஒளி/ஒலி வடிவில் வந்தன. பட்டன் கேமராவில் படுகொலை பாதகர்கள் சண்டாளர்கள் ஹிதுத்துவா பயங்கரவாதிகள் தாங்கள் செய்த வன்முறை கொலை வெறியாட்டங்களை அப்படியே ஒலி ஒளி ஆதாரங்களாய் புட்டு புட்டு வைத்தார்கள்.
"அதை ஏன் நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை" என்று யாருக்குமே... ஏன்... தேஹல்காவிற்கேகூட புரியவில்லை..!
இந்நிலையில்.... இனி....
@Rafikஇனி நாம் என்னதான் செய்ய வேண்டும்..?
வேற்று மதமாயினும்... கொடுமையிழைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு அதரவாக உண்மைகளை உரத்துச்சொல்லும் நல்லவர்கள்... (ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்டு விட்டாலும்)ஸ்ரீ குமார், சஞ்சீவ் பட், தெஹல்கா, போன்ற எண்ணற்றோர் இன்னும்... நம்மிடையே உயிருடன் இருக்கையிலே... அதுபோல ஒருவரை நீதிபதியாகவும் எதிர்பார்த்து நாம் காத்து இருப்போம் சகோ.
இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக ஒருநாள் சத்தியம் வென்றே தீரும் சகோ.ரஃபீக்..! அதில் சந்தேகமே இல்லை..!
ஆனால், மிக அதிக காலதாமதம் ஆகக்கூடாது சகோ. ஏனெனில், அறுபது வருடங்கள் ஆகிவிட்டால் பாபர் மசூதி நில விவகார தீர்ப்பு போல தவறான ஒரு கட்டப்பஞ்சாயத்து போல பிசுபிசுத்து போகக்கூடும் சகோ.
இதற்கும் அதுபோல அறுபது ஆண்டு காலம் ஆனால், மோடி இயற்கையாகவே இறந்திருக்கக்கூடும்... அவரால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் அப்போது இல்லாது போய்
இருக்கலாம்.
இது... மோடிக்கள் மாதிரியான பயங்கரவாதிகள் சட்டத்தை கையில் எடுப்பதற்கான அனுமதியை நீதிமன்றமே தருவது போல ஆகிவிடக்கூடும் என அஞ்சுகிறேன் சகோ.ரஃபீக். நிறையப்பேர் உருவாகிவிடக்கூடும்..! எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் நிறைந்த நாடு இந்தியா என்ற அவப்பெயர் உருவாகிவிடக்கூடும்..!
இறைவன் அருளால் பொய்கள் நீண்ட நாள் நிலைக்காது சகோ.ரஃபீக். ஆனால், நாம், 'நீதிமன்றமே, நீதி தரும்' என்ற நம்பிக்கையில்... 'இந்த குஜராத் இனப்படுகொலையில் மோடிக்கு எதிராக நீதிபதிகள் நடுநிலையுடன் தீர்ப்பளித்தே தீருவார்கள்' என்ற நம்பிக்கையுடன் இறைவனை வேண்டியவர்களாக வேறு வழியே இன்றி பொறுமைகாத்து வருகிறோம்..!
@Rafikஒரு நச்சுத்தேள் வீட்டினுள்ளே வந்து விட்டது. அதை அடித்துக்கொல்ல அதற்கென நியமிக்கப்பட்டவர் அதற்கென வழங்கப்பட்ட பிரத்தியேக ஆயுதம் தாங்கி தயாராய் உள்ளார்.
இந்நிலையில்... அவர் ஏன் அந்த தேளை அடிக்க வில்லை..?
தேள்.. இஷ்டத்துக்கு அங்கும் இங்கும் சுற்றி வருகிறது. சென்னைக்கும் வருகிறது. எந்த வித எதிர்ப்பும் யாரும் தெரிவிக்காத நிலையில்...!
இப்போது... நாம்... சூழல் புரியாமல்,
'இதோ இன்னொரு SIT செருப்பு...'
'இதோ இன்னொரு சஞ்சீவ் கோடரி...',
'இதோ இன்னொரு ஸ்ரீ குமார் துப்பாக்கி..',
'இதோ இன்னொரு தெஹல்கா பீரங்கி..'
---என்று ஆயுதம் ஆயுதமாக தேடிக்கொண்டு இருப்பது வீண்..!
இவை விரக்தியை வரவழைக்கிறது சகோ.
கிடைத்த ஏதோ ஒரு ஆயுதம் கொண்டு உடனேயே அடிக்க வேண்டும் அல்லவா..? விட்டால் தப்பித்து விடக்கூடும். அல்லது அதப்பிக்காது என்றால்... அது நச்சுத்தேள் தானா.. என்ற சந்தேகம் நாளடைவில் வந்து விடக்கூடும். அப்புறம் அதை அடிக்கவா.. கூடாதா.. என்று பட்டிமன்றம் நடக்கும்... பிறகு...?
இப்படித்தான்... பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களை துப்பறிந்து(???) "கண்டுபிடிக்க"(???) 19 வருஷம் ஆனது..!
"கண்டுபிடிக்கப்பட்ட அந்த 68 பேரை 'குற்றவாளிகள்' என்றுதான் லிபரான் கமிஷன் சொல்கிறது... கைது பண்ணவோ... சிறையில் அடைக்கவோ... தண்டிக்கவோ சொல்லவில்லை என்று (???)அறிவுப்பூர்வமாக...(???) "ஹிந்துத்துவா செய்தித்தொடர்பாளர் ப.சிதம்பரம்" அறிப்பது போல... அதற்கு ... நோ கமெண்ட்ஸ் என்று ஜஸ்டிஸ்.லிபர்ஹான் இருப்பது போல...
மோடி குற்றவாளி இல்லை என்று எவரேனும் அறிவித்து விடுவர்...!
அதனால்... நாம் மீண்டும்... மோடி இனப்படுகொலை புரிந்த கொடிய பயங்கரவாதி என்று மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்... ஆதாரம் ஏற்கனவே மலையளவு உள்ளது... இப்போது ஆதாரம் பற்றி பதிவு போட்டால்... அட..! மோடிக்கு எதிராக அதாரம் இல்லையோ என்ற ஐயம் வரக்கூடும் ... அதுதான்... ஹிந்துத்வா பயங்கரவாதிகளுக்கு இப்போது அவசியம்...இனி நான் அதைத்தான் சொல்லப்போகிறேன்...
வேறென்ன சொல்ல சகோ...? வேறென்ன எழுத சகோ..?
மற்றெல்லா கட்சிகளும் மதவெறி பிடித்த முஸ்லீகளுக்கு ஆதரவாக இருக்கும் போது ஜெயலலிதா ஆர்.எஸ்.எஸ் க்கு ஆதரவாக இருப்பதில் என்ன தவறு...???/
@ thiyagarajan. said... 85
//மதவெறி பிடித்த முஸ்லீகளுக்கு//---அடடே..! அப்படியா..? நம் தமிழ்நாட்டில் உள்ள எல்லா முஸ்லிம்களும் "மதவெறி பிடித்த"வர்களா..?
இவர்களுக்கு மட்டும் 'மதவெறி அடைமொழி' கொடுத்துவிட்டு....
//..ஆர்.எஸ்.எஸ் க்கு..//---இப்படி இவர்களுக்கு மட்டும் வெறுமனே 'அடைமொழி' ஏதும் இல்லாமல் சொல்லலாமா..?
"மதவெறியே அற்ற... மதச்சார்பற்ற,
நாட்டில் பல இடங்களில் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொலை செய்யாத,
தன சமய மக்களையே 60 பேரை உயிரோடு ஓடும் ரயிலில் எரித்துக்கொல்லாத,
இன்னொரு மத மக்களை மூன்றே நாட்களில் ஆயிரக்கணக்கில் கொன்றோழிக்காத,
இன்னொரு மத வழிபாட்டுத்தலத்தை இடிக்காத,
இன்னொரு மத வெளிநாட்டு பாதிரியாரை உயிரோடு எரிக்காத,
பயங்கரவாதம் என்றால் என்னவென்றே தெரியாத,
நாட்டின் தேசப்பிதா மகாத்மாவை சுட்டு கொன்ற உத்தம சீலர்களான..."
---இபப்டியெல்லாம் (?) சொல்லலாமே... சகோ.தியாகராஜன்..!
:-)
அதானே...
இப்படிப்பட்ட 'ஒழுக்க(?)சீலர்களை' ஜெயலலிதா ஆதரிக்காவிட்டால்தானே தவறு..!
இல்லையா சகோ..?
முஸ்லிம்களுக்கான உங்கள் பெருநாள் வாழ்த்துக்கள் (?) 'நன்றாக இருந்தது' சகோ.தியாகராஜன்..!
தங்கள் வருகைக்கும் நன்றி சகோ.தியாகராஜன்..!
சொல்லுங்கள் நண்பரே..முதன் முதலில், அன்று தமிழ்நாட்டுக்கு யாரென்றே தெரியாத 'அத்வானி' என்பவர் பாபர் மசூதியை இடிக்கவேண்டி 'கரசேவை'க்காக அடியாள் தேடியபோது, அன்று எதிர்க்கூட்டணியில் இருந்தாலும் தன் கட்சித்தொண்டர்களை தாமாகவே 'கொலைச்சேவைக்கு' அனுப்பி வைத்தார் ஜெ..! ஆக உங்களுக்கு மட்டும் எப்படி பாபர் மசூதி தெரிய வந்தது.. காவி என்ற வார்த்தையை கொச்சையாக பயன் படுதாதிர்.. என்னை போன்ற சாதாரண ஹிந்து நண்பனை நீங்கள் இழந்து விடுவிர்கள்..
தங்களின் இந்த கருத்தோடு நான் ஒத்துபோகின்றேன் இன்றுமுதல் நானும் உந்தன் சகோதரனாக,நண்பனாக ஆசைபடுகின்றேன்,மன்னிக்கவும் ஆகிவிட்டேன்
உந்தன் எழுத்து புரட்சி தொடர என்வாழ்த்துக்கள் சகோ,நண்பா.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!