அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, August 30, 2012

14 Delete செய்த 'பிரபல' Post ஐ மீட்பது எப்படி..?

Blogger > Dashboard > Posts இங்கே சென்று எழுத்துப்பிழையை Edit பண்ணவேண்டிய சென்ற பதிவை  அவசரத்தில் நான் Delete பண்ணிவிட்டேன்..! :-((


Edit  | View | Delete மூன்றும் பக்கம் பக்கம் இருந்ததால்... அவசரத்தில் டெலிட் அழுத்தி, 'நடப்பு பின்னூட்டப்போர்' டென்ஷனில்... அடுத்து வந்த ஒரு சாளரத்தில் "Are you sure you want to delete the selected post(s)?" என்பதற்கு உடனே "OK" யும் கொடுத்துவிட்டேன்..! போச்சு..! பிரபல(!)பதிவர் 'டீக்கடை சிராஜுதீன்' இலை மடித்த பதிவு "Deleted" என்றாகி காணாமல் போச்சுங்க சகோ..! 

Monday, August 27, 2012

139 'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்?எப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..! அதற்காக நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டியது பேரானந்தம்..! இந்த சந்திப்பு சென்னையில் சீரும் சிறப்புமாக அமைய முயற்சி எடுத்த மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது இனிய நன்றிகள்..! என்னால் கலந்து கொள்ள இயலாவிடினும் நேரலையில் காண முடிந்தது..!


இந்த பதிவர் சந்திப்பு பற்றி பரபரப்பு தலைப்பு வைத்து, அதன்மூலம் ஏகப்பட்ட ஹிட்ஸ் அள்ளுவது என்பது இவ்வார பதிவுலக ஹிட்ஸ் நோய் ஆகிவிட்டது..! பொதுவாக அந்தந்த வாரத்தில் என்னன்ன விஷயங்கள் 'ஹாட் டாப்பிக்'கோ அதை வைத்து தங்கள் பதிவுக்கு தலைப்பு போடுவார்கள் நம் பதிவர்கள்..! 

உதாரணமாக... 

Thursday, August 23, 2012

74 மனித உரிமைக்கு எதிரான குடியை ஆதரிக்காதீர்

கழக ஆட்சிகளின் கடந்த நாற்பதாண்டு சாதனை... எதிர்கால தமிழகத்துக்கு சோதனை..!

கடந்த சில நாட்களாக பதிவுலகில் குடிக்கு எதிரான திவுகள் ஒருபுறமிருக்க... குடிக்கு ஆதரவான குடிகாரபதிவர்கள் தங்கள் பங்குக்கு குடியை ஆதரித்து பதிவுகள் போட்டு வருவதை காண்கிறோம். கூடவே, குடியை எதிர்ப்போருக்கு 'மதவெறியர்கள்' என்ற பட்டமும் தரப்படுகிறது. குடியை வெறுத்து குடிக்காமல் நல்லவர்களாக இருப்போர் அனைத்து சமயங்களிலும் உள்ளனர் எனபது உண்மைதான்..! எனில், நாத்திகர்கள் எல்லாருமே குடிகாரர்கள் என்கிறார்களா...?! புரியவில்லை..! :-))

நம்மை சுற்றி உள்ள எவ்வளவோ சமூக தீமைகளில் ஒன்றுதான் 'குடி'. எத்தனையோ சமூக தீமைகளை எதிர்த்து பதிவு போட்டு இருக்கிறோம். அப்போதெல்லாம் வராத எதிர்ப்பு குடியை எதிர்த்து பதிவு போட்டதும் வருகிறதென்றால்... குடி போதை வெறி மக்களிடம் ரொம்ப விபரீதமாக ஊடுருவி உள்ளது..! எனவே, இனி குடியை எதிர்த்து அவ்வப்போது விழிப்புணர்வூட்டி பதிவு போட வேண்டியது, சமூக நலன் நாடும் பதிவர்களின் அவசியமாகி விட்டது..!  

Wednesday, August 15, 2012

46 இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

நமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கருதுகிறேன்..! ஏதோ எதேச்சையாக நடந்த விபத்து போல தெரியவில்லை..! நிச்சயமாக இது திட்டமிட்ட சதியாகவே எனக்கு படுகிறது..! மனது கனத்தாலும்... மறைக்கப்பட்ட வரலாற்றை இன்று உலகெங்கும் அறியவைக்க எனக்கு நல்வாய்ப்பினை நல்கிய இறைவனுக்கே புகழனைத்தும்..! இதற்கு கருவியாக உதவும்.. இணையம்... கூகுள் பிளாக்கர்... சமூக வலைத்திரட்டிகள்... என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறேன்..! அத்துடன்... இந்த பதிவு... சிலரின் கடும் உழைப்பு..! முக்கியமாக வரலாற்றினை தேடி எடுத்து எழுதிய பேராசிரியர் மு. அப்துல் சமது, தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்., அவர்களுக்கு மிக்க நன்றி. அன்னாரின் அளப்பறிய பங்குக்கு... அல்லாஹ் இவருக்கு பேரருள் புரிந்து நற்கூலியினை அளிக்க பிரார்த்திக்கிறேன்..! அடுத்து... கீற்றுவில் எழுதிய (திப்பு சுல்தான் பகுதி) சகோ.முத்துப்பேட்டையாருக்கும்,  சகோ.சுவனப்பிரியன் ('தாதா அப்துல்லாஹ் கம்பெனி' ஜவேரி சகோதரர்கள்) சகோ.அப்துல்லாஹ் (குஞ்சாலி மரைக்காயர் மற்றும் பல) சகோ.யூசுப் கான்  (நேதாஜி லிஸ்ட்) அவர்களுக்கும் மிக்க நன்றி..! இவர்களுக்கு இறைவனின் பேரருளும் நற்கூலியும் கிட்டட்டுமாக..! ஆமீன்..!கப்பல் ஓட்டிய வஉசி -க்கு அந்த கப்பலை ஒரு லட்ச ரூபாய் போட்டு வாங்கித்தந்தது யார்....?
நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க ஆயுதம் வாங்க எல்லாம்... ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் ஸ்பான்சர்  யார்....?
காந்திஜிக்கு தென் ஆப்ரிக்காவில் வேலை போட்டுக்கொடுத்து... அங்கே போக வர வைத்து அவரை பிரிட்டிஷ் எதிர்ப்புக்கு தூண்டியவர் யார்....? 
காங்கிரசின் சுதேசி கதர் ஆடையை கண்டுபிடித்தது யார்...?
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர் யார்..?
இந்திய தேசிய கோடியை வடிவமைத்தவர் யார்..?

------------எல்லா கேள்விக்கும் விடை... 'முஸ்லிம்'..! 

இதுபோல நாம் இதுவரை சிந்திக்காத... நாம் இதுவரை பள்ளி பாட எழுத்து காட்சி ஊடக வரலாறில் அறியாத ஆச்சர்யங்கள் இன்னும் எக்கச்சக்கம்..! 


Saturday, August 11, 2012

15 3 பெருநாட்கள் வருவது யாரால்..?

நாம் இதுவரை கடந்து வந்த கடந்த மூன்று பதிவுகளில், நான் சொன்னதில் இருந்து...

ஒரே கிழமையில் ஒரே தேதியில் உலகம் முழுதும் பெருநாள் வராது... என்பதிலும், இரண்டு கிழமை இரண்டு தேதிகளில்தான் பெருநாள் வந்தே தீரும் என்பதிலும், படித்துணர்ந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!

ஆனால், உலகம் முழுக்க எல்லா நாட்டுக்கும் எல்லா ஊருக்கும் ஒரே கிழமையில் ஒரே தேதியில் பிறை தெரிய சாத்தியமே இல்லையா...? ஆம் இருக்கிறது..! விதிவிலக்கு என்று சொன்னேன் அல்லவா..? இது பற்றி பார்போம்..!

சென்ற பதிவில்...  "ஒரே ஒரு விதிவிலக்கு தவிர்த்து இஸ்லாமிய பண்டிகை பெருநாள் என்றால்... அது இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வந்தே தீரும்" என்று சொல்லி இருந்தேன். அதென்ன விதிவிலக்கு..?

Saturday, August 4, 2012

47 2012 தீபாவளி : 2 தேதிகளில் 2 கிழமைகளில்..?!


பொதுவாக முஸ்லிம்கள் இரண்டு தேதியில் இரண்டு கிழமைகளில் பெருநாள் பண்டிகை கொண்டாடுகின்றனர் என்பதை அது ஏதோ ஒற்றுமையின்மையின் அடையாளமாகவோ அல்லது காலண்டர் குளறுபடியாகவோ மற்ற சமயத்து மக்களால் பார்ப்பது பற்றி நாம் அறிவோம். வெகுஜன நம்பிக்கைக்கு தகுந்தாற்போல் அல்லது வியாபாரத்துக்காக உண்மையை மறைக்கும் ஊடகங்களும், இதை அதே பாமர கண்ணோட்டத்தில்தான் பார்க்கின்றன. ஆனால், புவியியல் அறிவு உடைய வானியல் அறிந்த அறிவியல் உலகக்கு நன்கு தெரியும், "ஒரே ஒரு விதிவிலக்கு தவிர்த்து இஸ்லாமிய பண்டிகை பெருநாள் என்றால்... அது இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வந்தே தீரும்" என்று..! 

இதை எனது பிறை பற்றிய... 
பிறை : - அப்டீன்னா...? (for dummies)
பிறை : பார்ப்பது எப்படி..? (Advanced tips)
...ஆகிய சென்ற இரண்டு பதிவுகளில் படித்தறிந்துணர்ந்திருந்திருப்பீர்கள்..! 
 .
இதுவரை பெருநாள் மட்டுமே அப்படி இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வருவதை அறிந்து வைத்து இருக்கும் நமக்கு, தீபாவளியும் அப்படி இவ்வருடம் வருகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா..?

பொதுவாக நாம் இதைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள,  "சர்வதேச தேதி -கிழமை கோடு" அல்லது "பன்னாட்டு நாள் கோடு" என்ற கோட்டைப்பற்றி ஓரளவுக்காவது அலசி ஆய்ந்து அறிந்து இருக்க வேண்டும்..!  

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...