அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label முஸ்லிம். Show all posts
Showing posts with label முஸ்லிம். Show all posts

Friday, April 15, 2016

4 அறிவியல் பாங்கு

கீழக்கரை ஜும்மா பள்ளி - 
கிபி 630 ல் கட்டப்பட்ட பள்ளிவாசல். தமிழகத்தின் முதலாவது பள்ளிவாசல். பின்னர் இஸ்லாம் பரவ பரவ சில நூறு வருஷங்களில் காயல்பட்டினம், ஏர்வாடி, மதுரை, அதிரை, நாகூர் என பல ஊர்களில் பள்ளிவாசகள் முளைத்தன.

கடிகாரம் - 
கிபி 1510 ல் உருவாக்கப்பட்டு... சிறிது சிறிதாக செம்மைப்படுத்தப்பட்டு... மணி, நிமிடம், வினாடி எல்லாம் பகுக்கப்பட்டு, 1656 ல் பெண்டுலம் சேர்க்கப்பட்டு உலகளவில் பலரால் ஏற்கப்பட்டது. அதன்பின் இந்த கடிகாரம் செய்யப்பட்டு... சந்தைக்கு விற்பனைக்கு வந்து உலகெங்கும் செல்வந்தர்களின் வீட்டில் இன்றியமையாத கெளரவ பொருளாக இன்னும் இன்னும் அதிக பிரபலமானது.


இனி சிறுகதைக்குள் செல்வோம்.
தலைப்பு :  அறிவியல்பாங்கு

Saturday, November 17, 2012

42 நமது 'துப்பாக்கி' எதிர்ப்பின் விஸ்வரூபம்...

 இந்தியாவில் நடந்த ர(த்)தயாத்திரை - பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் நடந்த "பயங்கரவாத குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை" பொருத்த மட்டில்... அதை நாம் "கார்கரேக்கு முன்" என்றும், "கார்கரேக்கு பின்" என்றும் இரண்டாக பிரிக்கிறோம். சினிமாவையும் ஊடகத்தையும் இதற்குள் அடக்கித்தான் அலச வேண்டும் நாம்..!


Wednesday, August 15, 2012

46 இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

நமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கருதுகிறேன்..! ஏதோ எதேச்சையாக நடந்த விபத்து போல தெரியவில்லை..! நிச்சயமாக இது திட்டமிட்ட சதியாகவே எனக்கு படுகிறது..! மனது கனத்தாலும்... மறைக்கப்பட்ட வரலாற்றை இன்று உலகெங்கும் அறியவைக்க எனக்கு நல்வாய்ப்பினை நல்கிய இறைவனுக்கே புகழனைத்தும்..! இதற்கு கருவியாக உதவும்.. இணையம்... கூகுள் பிளாக்கர்... சமூக வலைத்திரட்டிகள்... என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறேன்..! அத்துடன்... இந்த பதிவு... சிலரின் கடும் உழைப்பு..! முக்கியமாக வரலாற்றினை தேடி எடுத்து எழுதிய பேராசிரியர் மு. அப்துல் சமது, தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்., அவர்களுக்கு மிக்க நன்றி. அன்னாரின் அளப்பறிய பங்குக்கு... அல்லாஹ் இவருக்கு பேரருள் புரிந்து நற்கூலியினை அளிக்க பிரார்த்திக்கிறேன்..! அடுத்து... கீற்றுவில் எழுதிய (திப்பு சுல்தான் பகுதி) சகோ.முத்துப்பேட்டையாருக்கும்,  சகோ.சுவனப்பிரியன் ('தாதா அப்துல்லாஹ் கம்பெனி' ஜவேரி சகோதரர்கள்) சகோ.அப்துல்லாஹ் (குஞ்சாலி மரைக்காயர் மற்றும் பல) சகோ.யூசுப் கான்  (நேதாஜி லிஸ்ட்) அவர்களுக்கும் மிக்க நன்றி..! இவர்களுக்கு இறைவனின் பேரருளும் நற்கூலியும் கிட்டட்டுமாக..! ஆமீன்..!



கப்பல் ஓட்டிய வஉசி -க்கு அந்த கப்பலை ஒரு லட்ச ரூபாய் போட்டு வாங்கித்தந்தது யார்....?
நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க ஆயுதம் வாங்க எல்லாம்... ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் ஸ்பான்சர்  யார்....?
காந்திஜிக்கு தென் ஆப்ரிக்காவில் வேலை போட்டுக்கொடுத்து... அங்கே போக வர வைத்து அவரை பிரிட்டிஷ் எதிர்ப்புக்கு தூண்டியவர் யார்....? 
காங்கிரசின் சுதேசி கதர் ஆடையை கண்டுபிடித்தது யார்...?
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர் யார்..?
இந்திய தேசிய கோடியை வடிவமைத்தவர் யார்..?

------------எல்லா கேள்விக்கும் விடை... 'முஸ்லிம்'..! 

இதுபோல நாம் இதுவரை சிந்திக்காத... நாம் இதுவரை பள்ளி பாட எழுத்து காட்சி ஊடக வரலாறில் அறியாத ஆச்சர்யங்கள் இன்னும் எக்கச்சக்கம்..! 


previous home
Related Posts Plugin for WordPress, Blogger...