இந்தியாவில் நடந்த ர(த்)தயாத்திரை - பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் நடந்த "பயங்கரவாத குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை" பொருத்த மட்டில்... அதை நாம் "கார்கரேக்கு முன்" என்றும், "கார்கரேக்கு பின்" என்றும் இரண்டாக பிரிக்கிறோம். சினிமாவையும் ஊடகத்தையும் இதற்குள் அடக்கித்தான் அலச வேண்டும் நாம்..!
'கா.மு', வில்... அரசின் கட்டளைக்கிணங்க... அல்லது ஓட்டரசியலில் அரசு எதிர்ப்பார்ப்பதை பூர்த்தி செய்யும் விதத்தில்... அல்லது அரசை பதவி உயர்வுக்காக குளிர்விப்பதற்கு... என்று ஏதோ ஒரு விதத்தில்... ஒவ்வொரு குண்டு வெடிப்பு நடந்து முடிந்த உடனேயே... 'இவர்களிடம் இருந்து மெயில் வந்தது, அவர்களிடம் இருந்து கடிதம் வந்தது' என்று பிரஸ்மீட்டில் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரை சொல்லி... "அது "பொறுப்பேற்று க்கொண்டது" என்று தொடர்ந்து ஒரே ஒரு பல்லவியையே எல்லா குண்டு வெடிப்பு நடந்த பிளாஷ் நியூஸ்களுக்கு வால் பிடித்து பின்னாடியே... ஏக ராகத்தில் பாடி வந்தது... நமது இந்திய உளவுத்துறையும் காவல்துறையும் என்பதை அப்போது செய்திகளை பின்பற்றியோர் நிச்சயமாக அறிவர்..!
இந்த உளவுத்துறை கருத்தையே... பூவும் பொட்டும் வைத்து, சடை பின்னி, ரிப்பன் வைத்து, ஹேர்பின் குத்தி, நகை நட்டு போட்டு... பட்டு அலங்காரம் இட்டு... தொடர்ந்து மக்கள் மத்தியில் வசீகரமாக உலவ விட்டு... கருத்துத்திணிப்பு மூலம் மூளைச்சலவை செய்ததில்... மாபெரும் வெற்றி பெற்றன... நமது முன்னணி ஊடகங்கள் அனைத்துமே..!
அதை அப்படியே சுவீகரித்துக்கொண்டன.... சினிமா கதை இலாக்காக்கள்..! அதில்.... 'தமக்கு எக்கச்சக்க தேசபக்தி இருப்பதாக காட்டி நடிக்கும்' நடிகர்களான விஜயகாந்த், அர்ஜூன், சரத்குமார் போன்றவர்கள்... தமது கதைகளில் மிக முக்கியமாக எடுத்துக்கொண்டனர்.
எந்த புதுமுகமும் இந்த பயங்கரவாத ஸ்கிரிப்ட்... படத்தில் நடிக்க வைக்கப்படமாட்டார். காரணம்... மாஸ் ஹீரோ செய்ய வேண்டிய ஹெவி பட்ஜெட் ஸ்கிரிப்ட். அவர்கள் நடித்தால் மட்டுமே ஓடும்..! பெரிய ரசிகர் பட்டாளமும் கமர்ஷியல் வேல்யூவும் உள்ள ஹிட் ஆக்ஷன் ஹீரோக்களும் பைஜாமா குர்தா அணிந்து தாடி வைத்த தொப்பி வில்லன்கள் நடிக்கும் கதையாக நாளடைவில் குண்டுவெடிப்புகள் ஆகிப்போனது நம் தலைவிதி..!
நம்நாட்டில்.... மும்பை-கோவை குண்டு வெடிப்பு மட்டுமே தீர்ப்பு வந்த
வழக்குகள் என்ற நிலை இனி மாறி... மாலேகான்-1, -மாலேகான்-2, அஹமதாபாத்,
சூரத், கோவா, புனே, அலஹாபாத், வாரணாசி, டெல்லி, அஜ்மீர், ஜெய்ப்பூர், மும்பை லோக்கல் ரயில்,
பாகிஸ்தான் சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில், ஹைதராபாத் மக்கா
மஸ்ஜித், ஹைதராபாத் டிரைவ் இன் தியேட்டர், பெங்களூர், சென்னை... போன்ற எல்லா குண்டு
வெடிப்புகளிலும் குற்றவாளிகள் மீது தீர்ப்பு வரட்டுமே..! இதுதானே சரியான
நீதி...?! எதற்கு அவர்கள் எல்லாம் இயற்கையாக மரணிக்கும் வரை சட்டம் காத்து
இருக்க வேண்டும் என்றுதான் எனக்கு புரியவில்லை. :-(
26/11
மும்பை துப்பாக்கி சூட்டில் மட்டும் சரியான தீர்ப்பு வந்தது போல... (கோகுல
கிருஷணன் அறிக்கைப்படி) கோவை கலவரம்... (ஸ்ரீகிருஷ்ணா அறிக்கைப்படி) மும்பை
கலவரம்... தொடங்கி... இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியான... ர(த்)த யாத்திரை...
பாபர் மசூதி.... (லிபர்ஹான் கமிஷன்) என்று, அனைத்து கமிஷன் அறிக்கைகள்
மீதும் தீர்ப்பு வரட்டுமே...!?
மும்பை.. கோவை...
குண்டுவெடிப்புகளுக்கு பிறகுதான் தடா- பொடா சட்டங்கள் எல்லாம் அதனதன் அசுர
பலத்துடன் தன் ஆக்டோபஸ் கால்களை தூக்கி கோரதாண்டவம் ஆட ஆரம்பித்தன..! அதில்
இடையே.. வைகோ-நெடுமாறன் சிறைவாசம் போன்ற அரசியல் காமடிகள் முடிவுக்கு
வந்தாலும்... அவற்றை தவிர்த்து பெரும்பாலான மீதி எல்லாமே முஸ்லீம்கள் மீது
நடத்தப்பட்ட அராஜக அக்கிரம அநியாயங்கள் மட்டுமே..!
அவற்றின்
மூலம் நடந்த முஸ்லீம்கள் மீதான போலி விசாரணை கைதுகள்... 'கா.பி.' யில்...
உண்மை புரிந்தும் இன்னும் விசாரணைக்கைது சிறைவாசங்கள் தொடர்வதுதான் உலகமகா
கொடுமை..!
.
.
சரி.. அப்படி என்னதான் சாதித்தார் கார்கரே..? காலண்டரில் 'கா.மு-கா.பி' போடும் அளவுக்கு..?
அதுவரை... "குண்டு வெடிப்பு என்றாலே... அது முஸ்லீம்கள் மட்டுமே அறிந்து வைத்து செயல்படுத்திக்கொண்டு இருக்கும்... வேறு எவருக்கும் புரியாத ஒரு அதிவினோத தொழில்நுட்பம்" என்று மக்கள் மனதில் மிக மிக ஆழமாக மூளை சலவை மூலம் பதிய வைத்து இருந்த அஸ்திவாரத்தை தூள் தூளாக்கி உடைத்து நிர்மூலமாக்கியவர்தான்...அஞ்சாநெஞ்சர் நேர்மையின் சிகரம் சத்திய தியாகி ATS தலைவர் மாவீரர் ஹேமந்த் கார்கரே IPS அவர்கள்..!
மாலேகானில் ஆரம்பித்து... ஏறக்குறைய... எல்லா குண்டு வெடிப்பு வழக்குகளிலும் துப்பு துலங்கி, காவி போர்வைக்குள் சாதுக்களைப்போல ஒளிந்து கொண்டிருந்த பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்து, குற்றவாளிகளை வெளிக்கொணர்ந்து, ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி, மக்களின் மூளைச்சளவை அஸ்திவாரத்தை தகர்த்து எறிந்து நிர்மூலமாக்கினார்..! இந்திய முஸ்லிம்களின் மீது அதுகாறும் போடப்பட்ட அநியாய அவதூறை தன் ரத்தத்தால் கழுவினார்..!
90களின் இறுதி, 2000 களின் துவக்கம் எல்லாம்... 'கா.மு.' வில் இந்திய முஸ்லிம் ஆண்கள் கையில் ஒரு முட்டையோ/வெங்காயமோ அல்லது கிரிக்கெட்/டென்னிஸ் பந்தோ இருந்தால் கூட... அது வெடிகுண்டா இருக்குமோ என்ற பார்வை வரும். தாடி வளர்க்கக்கூட முடியாது. ஏனெனில், போலீஸ் ஸ்டேஷனில் தேடல் லிஸ்டில் எல்லார்க்கும் தாடி வரைந்து விட்டிருப்பார்கள். அப்படி தேடிப்பிடித்து கைதானவர்கள் எல்லாம் இன்று நீதிமன்றத்தால் நிரபராதிகள் எனப்பட்டு விட்டனர்..!
ஒரு முஸ்லிம் பெண் ரோட்டில் புருக்கா போட்டு நடந்தால்... அல்லது பேருந்தில் அமர்ந்து இருந்தால் கூட... திடுமென போலீஸ் உள்ளே ஏறி வந்து அப்பெண்ணிடம் சென்று கேட்கும்... 'உன் பெயர் ஆயிஷாவா'..? வேறொரு ஆயிஷாவாகவே அவர் இருந்தாலும், அவர் 'நான் ஆயிஷாவே இல்லை' என்று சொல்லவேண்டிய அவல நிலை..! ஆனால், 'கா.பி.'யில்... 'அந்த பெல்ட் பாம் ஆயிஷா மேட்டர் உண்மையல்ல' என்றனரே சென்னை போலீசார்..! உலக மகா கொடுமைடா..!
இந்தியாவின் ஒவ்வொரு முஸ்லிமும் மட்டுமல்ல... நேர்மையையும் உண்மையையும் விரும்பும் எல்லா சமயத்தவரும் ஹேமந்த் கார்கரேக்கு நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்..! இன்றெல்லாம் நான் பயங்கரவாதத்தை எதிர்த்து தலை நிமிர்ந்து இந்தியாவில் பதிவு எழுதுகிறேன் என்றால்... அவரை நினைவு கூறாமல் என்னால் இருக்க முடியாது. இவரை நம் நாட்டுக்கு ஒரு அருட்கொடையாக அனுப்பிய அந்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும்...!
ஆக, இப்பேற்பட்ட இந்த "கார்கரேக்கு பின்னர்" மும்பை-கோவை தவிர மீதி இந்தியாவில் நடந்த அத்தனை குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியது... ஆர்எஸ்எஸ்-சங்பரிவார இயக்கங்கள் என்று அறிந்த பின்னும்... உண்மை புரிந்த பின்னும்... சத்தியம் தெளிந்த பின்னும்... குழப்பம் விலகிய பின்னும்... எதற்கு இன்னும் அந்த அதே அரத பழைய மூளை சலவை... சினிமா ஊடகமே..? உனக்கே இது லாஜீக் மீறலாக தெரியவில்லையா...? கர்கரேயின் உயிருக்கும் அவரின் தியாகத்துக்கும் என்ன மரியாதை தருகிறீர்கள்..? இதுதான் இப்போது நாம் சினிமாவினர் முன்னர் வைக்கும் ஒர்ர்ர்ர்ர்ரே கேள்வி..!
அந்த காலத்தில்... அப்போதைய மூளை சலவையின் படி... விஜயகாந்த்தும் அர்ஜூனும் செய்தார்கள் எனில்... அவர்கள் வாழ்ந்தது "கார்கரேக்கு முன்னர்" என்ற அறியாமை நிரம்பிய அசத்திய கற்காலத்தில்...!
ஆனால்... 'உன்னைப்போல் ஒருவன் கமல்...', 'அதேபோல இன்னொருவன்... துப்பாக்கி விஜய்...' எல்லாம் கருத்தரித்தது... வளர்ந்தது... பிறந்தது... எல்லாம் "கார்கரேவுக்கு பின்னர்" என்ற சத்தியம் விளங்கிய அறிவுபூர்வமான தற்காலத்திலே அல்லவா...?
![]() |
Thanks for Photo making : |
விஜயகாந்த், அர்ஜூன், சரத்குமார் போன்றாராவது பெரும்பாலும் பாகிஸ்தான் முஸ்லீம்களைத்தான்... பயங்கரவாதிகளாக திரித்தனர்..! ஆனால்... கமலும் விஜயும்... நம் எதிர்வீடு... அடுத்தவீடு... பக்கத்து வீட்டு சகோதரனை அல்லவா பயங்கரவாதியாக காட்டுகிறார்கள்..? இது அராஜக அக்கிரம அநியாயம் அல்லவா...? இதைத்தான் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்..!
முன்னர் விஜயகாந்த் சரத்குமார் அர்ஜூனுக்கெல்லாம் அப்போது கையில் கார்கரேயின் ஆதாரம் இல்லை..! உளவுத்துறை-ஊடக உளறல் மட்டுமே அவர்களுக்கு அப்போது ஆதாரம்..! ஆனால், இப்போது..? இனி இப்படி முஸ்லீம்களை 2 படத்தில் பொடிக்கட்டம் போட்ட அரபிய-ஆப்கானிய மேல் துண்டில் போர்த்தி பயங்கரவாதியாக காட்டினால்... 13 படங்களில் காவி உடையில் ஹிந்துக்களை போர்த்தி பயங்கரவாதியாக சேவை(?) இயக்கப்பெயருடன் காட்டவேண்டி இருக்குமே..?! உங்களால் அப்படி காட்ட முடியுமா..? இது தவறு என்று புரியும் உங்கள் மூளைக்கு அது மட்டும் தவறென புரியாமல் போன மாயம்தான் என்ன...? இது முடியாது என்றால் அதையும் நீங்கள் செய்யக்கூடாது அல்லவா..?!
தமிழ் சினிமா ஆக்ஷன் ஹீரோக்களே..! நீங்கள் 'முஸ்லிமாக நடிப்பது' எல்லாம் அப்புறம் இருக்கட்டும். அதற்கு முன்னர்.... உங்கள் அனைவருக்கும் நான் ஒரு பகிரங்க சவால் விடுகிறேன்..!
மாலேகான் குண்டு வெடிப்பு முதல்... அதை துப்பறிந்து 'நாட்டின் உண்மை பயங்கரவாதிகளின் நிறம் காவி' என்று அடையாளம் காட்டியதற்காக ஹிந்துத்துவா நாசகார சக்திகளிடம் இருந்து கொலை மிரட்டல் விடப்பட்ட ரியல் ஹீரோவான ஹேமந்த் கார்கரே, புல்லட் பரூஃப் உடை அணிந்திருந்தும் குண்டு துளைக்கப்பட்டு கொலை செய்யப்பட... ஹீரோயின் திருமதி கார்கரே, நரேந்திர மோடியிடம் கோடி ரூபாய் நஷ்டஈடு(?) வாங்க மறுத்து துச்சமாக அதை அவரிடமே வீசி எறிந்தது உட்பட... 'கார்கரே கொலையில் மர்மம் இருக்கிறது, விசாரணை வேண்டும்' என்று பார்லிமென்டில் சொன்ன மத்திய அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே... அதன் பிறகு அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போனதும்... பின்னர் அந்த கார்கரே கொலை தொடர்பான அத்தனை ஆவணங்களும் புல்லட் பரூஃப் உடை உட்பட காணடிக்கப்பட்டதும் சேர்த்து... இதுதான் உங்கள் பட ரியல்-ஸ்கிரிப்ட்..!
இதில், ரியல் ஆக்ஷன் ஹீரோவான ஹேமந்த் கார்கரேயாக நடிக்க உங்களில் யார் தயார்..? உங்களில் யாரேனும் ஒரே ஒரு துணிச்சல் காரராவது உண்டா...? பாக்கிஸ்தானில் இருந்து குஜராத் பார்டர் வழியா வந்து உங்களை எவனாவது ஒரு 'கஸாப்' சுட்டுடுவான் என்று பயமா..? :-))
இதில், ரியல் ஆக்ஷன் ஹீரோவான ஹேமந்த் கார்கரேயாக நடிக்க உங்களில் யார் தயார்..? உங்களில் யாரேனும் ஒரே ஒரு துணிச்சல் காரராவது உண்டா...? பாக்கிஸ்தானில் இருந்து குஜராத் பார்டர் வழியா வந்து உங்களை எவனாவது ஒரு 'கஸாப்' சுட்டுடுவான் என்று பயமா..? :-))
நம்ம GANDHI யை படமாக எடுக்க ரிச்சர்ட் ஆட்டன்பரோவும், நடிக்க பென் கிங்ஸ்லியும் ஹாலிவுட்டில் இருந்து வந்தது
போல... வேறு நாட்டில் இருந்துதான் யாராவது கார்கரேவாக நடிக்கவும் படம் எடுக்கவும் வரவேண்டுமா..? நீங்கள் இன்னும் கொலைகாரன் கோட்சேயை ஹீரோவாக்கி, காந்தியை வில்லனாக்கி 'ஹேராம்'
அல்லவா எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்..! இதற்கு வெட்கப்பட வேண்டாமா நீங்கள்..? இதுதான் உங்கள் தேசபக்தியின் நிறமா..? மெய்யான நடிப்பல்லவா இது..!
இனி பழுக்க காய்ச்சி சூடுபோட்டாலும்... உணர இயலாது மரத்துப்போய் தூங்கும் செல்கள் (sleeping cells) அல்ல நாம்..! அவற்றுக்கும் உணர்ச்சி உண்டு..! வலி உண்டு...! எண்ணக்குமுறளை எழுத்தில் வெளிப்படுத்தும் எதிர்க்குரல் என்றென்றும் உண்டு..! 'சினிமாதானே' என்றெல்லாம் இவர்களை கண்டும் காணாமல் விடுவதாக இல்லை இனி..!
'துப்பாக்கி'யே இறுதியாக இருக்கட்டும். சினிமாவுலகுக்கு பாடம் கற்பித்த 'துப்பாக்கி'யை சினிமா மறக்க கூடாது..! விஷயம் புரிந்தும் எதிர்காலத்தில் இன்னொரு படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டு, இதேபோல 'மன்னிப்பு கோரல் பிரஸ் மீட்' என்று இனி ஒன்று ஒருபோதும் நடக்கவே கூடாது..!
அப்படி நடந்தால்...?
'துப்பாக்கி'யில் காட்டிய நமது ஒருங்கிணைந்த எதிர்ப்பு... அப்படியே,
தனன்று கொண்டே இருந்து... அடுத்த விஸ்வரூபம் எடுத்து... அது அப்படியான படத்தை திரையிட 'தடை உத்தரவு' என்ற உடனடி நீதிமன்ற அதிரடி இடைக்கால தீர்ப்பில்தான் முடியவேண்டும்..!
அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி கிரிக்கெட்டில் மேட்ச் ஃபிக்சிங் செய்தோருக்கான நீதி, 'கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை' என்றால்... சினிமாவின் மூலம் அப்பாவி மக்கள் மத்தியில் கருத்து ஃபிக்சிங் செய்யும் இவர்களுக்கும், அந்த படத்துக்கும், நீதி மன்றம்... 'படம் எடுக்க-திரையிட வாழ்நாள் தடை' எனும் தீர்ப்பு தந்தால்தான் என்ன..?
என்னது...? செலவு பண்ணி எடுத்த படத்தை திரையிடாமல் என்ன செய்வதா...? ஏன்..? ஆர்.கே. செல்வமணியின் 'குற்றப்பத்திரிக்கை' கோமாவுக்கு சென்ற இடத்துக்கே அவையும் செல்லட்டுமே..! என்ன இப்போ..? நாட்டின் ஒற்றுமையை விட, சமூக நல்லிணக்கத்தை விட, மக்கள் அமைதியை விட பெரிதாக விஸ்வரூபம் எடுத்துவிடுமா உங்கள் பாக்ஸ் ஆபீஸ் கல்லாப்பெட்டி..? ஸாரி.... நோ மோர் ச்சான்ஸ் ஃபார் யு கய்ஸ்..!
42 ...பின்னூட்டங்கள்..:
Right time, right article u share it.. Thanks brother..
Jazakallahheir..
'துப்பாக்கி'யே இறுதியாக இருக்கட்டும். சினிமாவுலகுக்கு பாடம் கற்பித்த 'துப்பாக்கி'யை சினிமா மறக்க கூடாது..! விஷயம் புரிந்தும் எதிர்காலத்தில் இன்னொரு படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டு, இதேபோல 'மன்னிப்பு கோரல் பிரஸ் மீட்' என்று இனி ஒன்று ஒருபோதும் நடக்கவே கூடாது..!
Correct...!!
//நீங்கள் இன்னும் கொலைகாரன் கோட்சேயை ஹீரோவாக்கி, காந்தியை வில்லனாக்கி 'ஹேராம்' அல்லவா எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்..! இதற்கு வெட்கப்பட வேண்டாமா நீங்கள்..? இதுதான் உங்கள் தேசபக்தியா..? //
இன்னும் கொஞ்ச நாள் போனா கோட்சேதான் சுதந்திரம் வாங்கி தந்தார்(ன்)ன்னு பாட புத்தகத்துல , படத்துல சொன்னாலும் சொல்லுவானுங்க :-).
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ஆணித்தரமான பதிவு...கொஞ்சமாவது மனசாட்சி இருப்பவர்களுகாக,சுடும் கேள்விகள்..
நம் எதிர்ப்பு அவர்களின் கையை சுட்டதா, அல்லது மனதை சுட்டதா என்று தெரிய வில்லை..ஆனால் பொது மன்னிப்பு கேட்க வைத்ததே நமதான வெற்றி..
///இந்தியாவின் ஒவ்வொரு முஸ்லிமும் மட்டுமல்ல... நேர்மையையும் உண்மையையும் விரும்பும் எல்லா சமயத்தவரும் ஹேமந்த் கார்கரேக்கு நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்..!///
உண்மையான ஒன்று..சத்தியத்திற்காக போராடுபவர்கள் இறப்பதில்லை..நம்மை போன்ற மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..
///ரியல் ஆக்ஷன் ஹீரோவான ஹேமந்த் கார்கரேயாக நடிக்க உங்களில் யார் தயார்..? உங்களில் யாரேனும் ஒரே ஒரு துணிச்சல் காரராவது உண்டா...? பாக்கிஸ்தானில் இருந்து குஜராத் பார்டர் வழியா வந்து உங்களை எவனாவது ஒரு 'கஸாப்' சுட்டுடுவான் என்று பயமா..? :-))///
அருமை..:)
அனைவர் மனதிலும் ஆதங்கமாக இருந்த கேள்விகளின் எதிரொலியாக,அருமையான பதிவு சகோ..பதிவுக்கு நன்றி..:)
எல்லா நேரங்களிலும் சமாதான மையை ஊற்றி எழுதாமல், சற்று சுட்டும்,சுடும் மையை ஊற்றி எழுதலாம் என்றே தோன்றுகிறது சகோ..:)
#நாட்டின் ஒற்றுமையை விட, சமூக நல்லிணக்கத்தை விட, மக்கள் அமைதியை விட பெரிதாக விஸ்வரூபம் எடுத்துவிடுமா உங்கள் பாக்ஸ் ஆபீஸ் கல்லாப்பெட்டி..? ஸாரி.... நோ மோர் ச்சான்ஸ் ஃபார் யு கய்ஸ்..!#
சலாம் சகோ...அருமை....இனி எந்த வாய்ப்பும் அவர்களுக்கு கொடுக்க கூடாது...இதே பாணியில் திருப்பி கொடுக்க வேண்டும்
//ரியல் ஆக்ஷன் ஹீரோவான ஹேமந்த் கார்கரேயாக நடிக்க உங்களில் யார் தயார்..? உங்களில் யாரேனும் ஒரே ஒரு துணிச்சல் காரராவது உண்டா...? பாக்கிஸ்தானில் இருந்து குஜராத் பார்டர் வழியா வந்து உங்களை எவனாவது ஒரு 'கஸாப்' சுட்டுடுவான் என்று பயமா..? :-))//
இதில் மறைமுகமா கார்கரேயை சுட்டது கசாஃப் குருப் என்பதுப்போல அர்த்தம் வருதே...!!!.
எப்போதும் புல்லட் புருஃப் அனிந்து போகும் அவர் அந்த ஆபரேஷனுக்கு அது இல்லாமல் அனுப்பியது போல ஏராளமான மர்மங்கள் இருக்கே அவர் மரணத்தில்........ இதிலும் ஒரு கோட்சே மறைந்திருப்பான் நாளைய வரலாறு அதையும் வெளிக்கொணரும் இன்ஷா அல்லாஹ் ...!!!
சலம் சகோ ஆஷிக்,
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.நடுநிலையாளர்கள் இந்த கட்டுரையை படித்தால் நிச்சயம் உண்மையை விளங்கிக் கொள்வார்கள்.
இம்மாதிரி விளங்க வைக்கும் கட்டுரைகள் படம் எடுப்பவர் பார்வைக்கு போய் சேர வேண்டும்.நாம் எழுதி நம்மையே சுற்றி வருவதில் பலனில்லை. நமக்கு பொதுவான ஒரு தினப்பத்திரிக்கை , வாரப்பத்திரிக்கை ,தொலைக்காட்சி மற்றும் பல தொழில்நுட்பங்கள் அவசியம் தேவை .அனைத்துக்கும் மேல் ஒற்றுமை
என்ன தப்பா எடுத்துட்டாங்க... உண்மைய சொல்லகூடாதா? விட்டா மும்பை தீவிரவாத தாக்குதல் நடத்திய கசாப்.... சாரி சாரி கண்ணன் அல்லது டேவிட் அல்லது ஜோஹிந்தர் சிங் என்று செய்து வாசிக்கணும் இல்லையென்றால் டிவி ஸ்டேஷன் முற்றுகை இடப்படும் எண்டு சொல்வார்கள் போல... எல்லா மதத்தை சேர்ந்த நல்லவர்களும் இருகிறார்கள் கெட்டவர்களும் இருகிறார்கள்... ஆனால் இத திவிரவாத செயல்களை மற்ற மத மக்கள் நியாய படுத்துவதில்லை... இவர்கள் ஏன் கசாப் தூக்கில் போட ஒரு போராட்டம் செய்ய கூடாது...
தமிழ் சினிமா ஆக்ஷன் ஹீரோக்களே..! நீங்கள் 'முஸ்லிமாக நடிப்பது' எல்லாம் அப்புறம் இருக்கட்டும்.
இதுதான் உங்கள் பட ரியல்-ஸ்கிரிப்ட்..! அதில், ரியல் ஆக்ஷன் ஹீரோவான ஹேமந்த் கார்கரேயாக நடிக்க உங்களில் யார் தயார்..? உங்களில் யாரேனும் ஒரே ஒரு துணிச்சல் காரராவது உண்டா...? பாக்கிஸ்தானில் இருந்து குஜராத் பார்டர் வழியா வந்து உங்களை எவனாவது ஒரு 'கஸாப்' சுட்டுடுவான் என்று பயமா..? :-)
Sariyana kelvi
//இவர்கள் ஏன் கசாப் தூக்கில் போட ஒரு போராட்டம் செய்ய கூடாது... // பாகிஸ்தானில ஒரு சிங் மாட்டிகிட்டு இருக்காரே அது தெரியுமா..?? இவரை இங்கே போட்டா அங்கே அவரை போடுடுவாங்க :-) அதுக்குதான் கோடி கணக்குல செலவு செய்து இங்கே இவருக்கு முட்டை பிரியாணி போட்டுகிட்டு இருக்கோம் ஹா..ஹா... :-)
@Annbhu//என்ன தப்பா எடுத்துட்டாங்க... உண்மைய சொல்லகூடாதா?//---------- 'அப்புறம் என்னத்துக்கு மனம் வருந்தி முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டீங்க?' என்றும் அவங்க கிட்டே கேளுங்களேன்..!
//இவர்கள் ஏன் கசாப் தூக்கில் போட ஒரு போராட்டம் செய்ய கூடாது...//------------கார்கரேயின் கொலையில் எல்லா மர்ம முடிச்சியும் அவிழ்க்க சொல்லி நீங்க அந்த பக்கம் போராடுங்க..! நாங்க இந்தப்பக்கம் அவனை தூக்கில் போட சொல்லி போராடுறொமே..?
என்ன.... அன்ன்பூ....
டீல் ஓகேவா..?
@Annbhu//ஆனால் இத திவிரவாத செயல்களை மற்ற மத மக்கள் நியாய படுத்துவதில்லை...//
---------- ஹலோ...
யாருங்க நியாயப்படுத்துனா...?
யார் நியாயப்படுத்துனா...?
நானே பல இடங்களில் பலமுறை அஜ்மல் கசாபை நட்ட நடு ரோட்டில் மக்கள் முன்னிலையில்... லைவ் டிவி ரிலேயில் காட்டியபடி... பப்ளிக்காக தூக்கில் போட்டு... ஒரு நாள் முழுக்க அதிலேயே தொங்க விட சொல்லி இருக்கேன்..!
ஒரு ஜி மெயில் ஐடி இருந்தால் எதை வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு எழுதுவிங்களா..?
உங்களுக்கு நான் எண்ணி இன்னும் 12 மணி நேரம் கெடு விதிக்கிறேன்..!
அதற்குள் முஸ்லிம் பதிவர்களில் யார் யார் எல்லாம் //இத திவிரவாத செயல்களை ஆதரித்து நியாய படுத்தி// இருக்கின்றனர் என்ற லிஸ்ட் இங்கே பின்னூட்டமாக எனக்கு வந்தாகனும் சொல்லிட்டேன்..!
அப்டி வரலை.....
உங்களின் மேற்படி அவதூறு கமெண்ட்.. "ச்சீ..." என்று கூறப்பட்டு குப்பையில் தூக்கி வீசப்படும்..!
எச்சரிக்கை..!
சலாம் சகோ!
அருமையான ஆக்கம். ஹேமந்த் கர்கரேயை வைத்து அதன் உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட எந்த இயக்குனருக்காவது துணிவு உண்டா? மாலேகான் குண்டு வெடிப்பின் உண்மை சூத்ரதாரி யார் என்பதை இவர்களால் வெளிச்சம் போட்டு காட்ட முடியுமா? கதையை முடித்து விடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். எனவே தான் இந்துத்வாவை வைத்து காசு பண்ண பார்ப்பதில்லை.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
நீங்க ஒருத்தருதான் இதை ஆதரிச்சு சொல்லிருக்கிங்க.. பாப்போம் உங்க கருத்தை எத்தனை பேரு இதை ஆதரிப்பங்கன்னு... கேட்டா பதிலுக்கு கர்கரே பத்தி படம் எடுங்கட ன்னு சொல்றிங்க... அவன் முஸ்லிம் பத்தி படம் எடுத்தா நீங்க உங்க ஆளுங்க சேந்துகிட்டு மோடி பத்தியும் இஸ்ரேல பத்தியும் கர்கரே பத்தியும் தெரிஞ்சுக்கிறோம்.. அத விட்டுட்டு நாட்டுக்கு முக்கிய பிரச்சினை பத்தி படம் எடுத்தால் இவங்க பொய் பிரச்னை பண்றதே பொழப்ப போச்சு..
@Annbhu//நீங்க ஒருத்தருதான் இதை ஆதரிச்சு சொல்லிருக்கிங்க..//---எதை..? திவிரவாத செயல்களையா..? நானா..? எங்கேப்பா நான் ஆதரிச்சு இருக்கேன்..? முடிந்தால் எடுத்து காட்டுங்களேன்..! இனி இப்படி எல்லாம் அவதூறு பிரச்சாரம் செய்ய வேணாம் சகோ.அன்பு. chemistry... lab chemist... நம்ம துறை... பொழச்சு போங்க..!
//நாட்டுக்கு முக்கிய பிரச்சினை பத்தி படம் எடுத்தால் இவங்க பொய் பிரச்னை பண்றதே பொழப்ப போச்சு..//---ஆமாமா.... காவிரியில் 12 டி எம் சி தண்ணீர் வர போகுதுல்லே..!
:-)
//நாட்டுக்கு முக்கிய பிரச்சினை பத்தி படம் எடுத்தால் இவங்க பொய் பிரச்னை பண்றதே பொழப்ப போச்சு//
தேசிய நதி நீர் இனைப்பை பத்தி நான் படம் எடுக்க சொன்னா யாருமே கேட்க மாட்டேங்கிறாங்களே அன்பு சார் நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன் :-)
துப்பாக்கி விதைக்கும் நஞ்சு - முரளிகண்ணன்
நேற்று இரவு முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் பார்த்துவிட்டு நானும் என் 9 வயது மகனும் திரும்பிவந்து கொண்டிருந்தோம். அவன் என்னிடம்
“ஏம்பா, இந்த முஸ்லிம் எல்லாமே இந்தியாவை அழிக்கத்தான் இருக்காங்களா? என்று கேட்டான்.
படம் பார்க்கும் போதே நெருடலாக இருந்த விஷயம் அப்போது விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது.
இந்து, கிறிஸ்துவ, சீக்கிய மதங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் குடும்பத்தோடு, பாசமாக, சக மனிதர்களைப் பற்றி அக்கறையோடு இருப்பதாகவும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள் அதற்கு நேர் மாறாக இருப்பதாகவும் காட்சிகள் அமைக்கப்படுள்ளன.
சரி ஒரு வாதத்துக்காக ஆக்ஷன் மசாலா படம் என்று சொல்லலாம் என்றால்.
ஆக்ஷன் மசாலாவின் அடிப்படைத் தத்துவம் ஒரு கெட்டவன் அல்லது கெட்டவன் ஆக்கப்பட்டவனை ஹீரோ எதிர்த்து நிற்பது. இல்லையென்றால் பேட்மேன் ஜோக்கர் மாதிரி கேரக்டர்களை எதிர்த்து ஹீரோ ஜெயிப்பது.
இங்கே காட்டப்படும் வில்லன் முதல் கேட்டகிரியாகவே காட்டப்படுகிறான். அவனை தனிமனிதனாக காட்டினால் கேள்வியே இல்லை. மதம் சார்ந்து காட்சிப்படுத்தும் போது அது முழுக்க முழுக்க தவறே.
மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது மதம் சார்ந்த அடையாளங்களை அணிந்து கொண்டும், மத வாசகங்களை பேசியும் செய்கிறார்கள்.
அப்படியென்றால் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று நேரடியாக சொல்லப்படுகிறது. மற்ற திரைப்படங்களில் சில முஸ்லிம்களை நல்லவர்களாகக் காட்டி எல்லோருமே கெட்டவர்கள் இல்லை என்று சொல்லியிருப்பார்கள். இங்கே அது மிஸ்ஸிங்.
எம்ஜியார், ரஜினியை 50 படங்களுக்கு அப்புறம் எந்த வித பில்ட் அப் காட்சிகளும் இல்லாமலேயே நல்லவராக ஏற்றுக் கொண்டதைப்போல
இங்கே முஸ்லிம்கள் எந்தவித ஜஸ்டிபிகேஷன் காட்சிகளும் இல்லாமலேயே கெட்டவர்களாக காட்டப்படுகிறாள். இது ஆபத்தான போக்கு.
நான் பார்க்கும் போது அருகே ஒரு முஸ்லிம் குடும்பமும் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. சில காட்சிகளின் போது எழுந்த சப்தம் அவர்களை அங்கே சங்கடப்படுத்தியது.
தற்போதுஎன்னைப்போன்ற வயதில் உள்ளவர்கள் ஆக்ஷன் படத்திற்குப் போவதே சிறுவர்களின் பொழுதுபோக்கு/வற்புறுத்தல் காரணங்களுக்காத்தான். அவர்கள் இதற்கும் நிறைய அளவில் வந்திருந்தார்கள். எத்தனை சிறுவர்களின் மனதில் இந்த கேள்வி எழுந்ததோ?
படத்தில் டைட்டிலுக்கு முன் ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” என்று போட்டார்கள். எவ்வளவு பேரை மனச் சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள் முருக தாசரே?
தாணு மலயமாமணிக்கும், சந்தோஷ சிவனுக்கும் கூட இது உறைக்காதது ஆச்சரியமே!
சென்சார் சர்டிபிகேட்டில் ஒரு முஸ்லிம் அன்பரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. பிரிவியூ தியேட்டர் ஏசியில் உறங்கியிருந்திருப்பார் போலும்.
படம் நல்ல லாஜிக்கோடு இருக்கிறது என்று வேறு சொன்னார்கள். பல இடங்களில் ஓட்டை இருக்கிறது.
அருகாமையில் வசிக்கும் முஸ்லிம் நண்பர்கள்/அன்பர்களிடம் மாற்று மத குழந்தைகள் தள்ளி இருக்கச் செய்யும்படி இருக்கிறது இந்தப் படம். - முரளிகண்ணன்
THANKS TO SOURCE: http://muralikkannan.blogspot.sg/2012/11/blog-post_17.html
சலாம் சகோ ஆசிக்...
அலகாக அலசி உள்ளீர்கள்..இனி கொஞ்சம் யோசிப்பாங்க இது மாதிரி படம் எடுக்க... தீவிரவாதம் பற்றி பேச்சு வருகையில் ஒவ்வொரு முறையும் ஹேமந்த் கார்கறேயை குறிப்பிடுகிறீர்கள்..அவர் அதற்க்கு தகுதியாவனவர் தான்...அதை தொடர்ந்து செய்வோம்... கோயபல்ஸ் பிரச்சாரம் பண்ணிய போது நாம் அமைதியாகவே இருந்து விட்டோம்..இப்பொழுது தான் போராட்டங்களை ஆரம்பித்து உள்ளோம்..அதற்க்கான பலன் நன்றாகவே தெரிகிறது, உலகஅளவில்....
// 26/11 மும்பை துப்பாக்கி சூட்டில் மட்டும் சரியான தீர்ப்பு வந்தது போல... (கோகுல கிருஷணன் அறிக்கைப்படி) கோவை கலவரம்... (ஸ்ரீகிருஷ்ணா அறிக்கைப்படி) மும்பை கலவரம்... தொடங்கி... இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியான... ர(த்)த யாத்திரை... பாபர் மசூதி.... (லிபர்ஹான் கமிஷன்) என்று, அனைத்து கமிஷன் அறிக்கைகள் மீதும் தீர்ப்பு வரட்டுமே...!? //
தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும்... வராதே....ஹி..ஹி..ஹி... ஏன்னா செஞ்சது முஸ்லிம் இல்லையே?????
சரியான நேரத்தில் வெளியாகியுள்ள பதிவு. மத அரசியலை விஞ்சும் சினிமா அரசியல், இப் பதிவில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
//நம்ம GANDHI யை படமாக எடுக்க, ஹாலிவுட்டில் இருந்து ANTHONY QUINN வந்தது போல... //
ஒரு சிறிய பிழை. காந்தியைப் படம் எடுத்த டைரக்டர் Richard Attenborough. காந்தியாக நடித்தவர் Ben Kingsley.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
வாயால வடை சுடுரதுன்கிறது இதுதான்.. என்ன எடுக்கனும்னு நீங்க சொல்ல கூடாது... அப்டி எதுவும் எடுக்கணும் ந நீங்க போய் எடுக்கணும்... அத விட்டுட்டு ஒரு பிரச்சினைய பத்தி எடுத்தா ஆர்ப்பாட்டம் பண்றதே பொழப்ப வசுரிக்கிங்க...
@ஜெய்லானி
சார் தாரளம நீங்க நதி நீர் இணைப்பு பத்தி படம் எடுங்க சார்... நாங்க பார்க்க ரெடி... அத விட்டுட்டு அடுத்தவன் அத பத்தி எடுத்தா ஏன் இத பத்தி எடுக்க மட்ட்டேன்குரன்னு சொல்லறது எந்த விதத்துல சரி..? யாரு என்ன எடுக்கனும்முனு சொல்றதுக்கு உங்களுக்கு உரிமை இல்ல.. நீங்க உங்களுக்கு என்ன எடுக்கனும்னு தோணுதோ அத பத்தி எடுக்கலாம்...
அஸ்ஸலாமு அலைக்கும்
@Annbhu//சகோதரா
மாலேகான் குண்டுவெடிப்பு என்று ஒன்று நடந்தது தெரியுமா ?சாமியார் வேஷம் போட்ட அந்த பெண்சாமியார் சத்வி பிரக்யா தாகூர் என்ற பெயர் கேள்வி பட்டு இருகின்றீர்களா ?
இந்திய ராணுவத்தில் உயர்பதவிவகித்த பிரபாகர் குல்கர்னி மற்றும் உபாத்தியா என்ற பெய்ர்களை கேள்வி பட்டு இருக்கின்றீர்களா?
அவர்கள் அந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட போது
இதற்கு எதிர்ப்புதெரிவித்தவெங்கையா நாயுடு, உமாபாரதி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், "பெண் சாமியார் பிரக்யா அப்பாவி சாது. குண்டு வெடிப்பு தொடர்பாக அவரை கைது செய்து இந்து அமைப்புகள் மீது கெட்ட பெயர் ஏற்படுத்த சதி நடக்கிறது'' என்று கூறினார்களே அதாவது தெரியுமா?
இப்போது அந்த கேஸ் என்னவாயிற்று என்றாவது தெரியுமா?
@ஜாகிர்உசேன்
சகோதரா
அதற்காக நான் இந்து தீவிரவத்தையும் கண்டிப்பாக எதிர்கிறேன்... அதை பற்றி தெளிவாக யார் வேண்டுமானாலும் எடுக்கலாமே..? கசாபை ஆதரிக்கும் நண்பர்கள் எல்லோரும் அந்த பெண் சாதுவை ஆதரிக்கும் வேங்கையா நாய்டு உமா பாரதிக்கு சமமான தீவிரவாத ஆசாமிகள் தான்...
நல்ல பதிவு. இவர்கள் ஆபத்து ஆபத்து கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்று அலறுவதெல்லாம் சும்மா பம்மாத்து. கருத்துச் சுதந்திரன் வேண்டும் என்றால் முதலுல் சென்சார் போர்டைத்தான் தூக்கவேண்டும்.
@அபூ ஸாலிஹா தங்கள் கருத்துக்கும் தவறை தக்க விளக்கத்துடன் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சகோ.ஆபூ ஸாலிஹா. திருத்தி விட்டேன் சகோ.
இனி பழுக்க காய்ச்சி சூடுபோட்டாலும்... உணர இயலாது மரத்துப்போய் தூங்கும் செல்கள் (sleeping cells) அல்ல நாம்..! அவற்றுக்கும் உணர்ச்சி உண்டு..! வலி உண்டு...! எண்ணக்குமுறளை எழுத்தில் வெளிப்படுத்தும் எதிர்க்குரல் என்றென்றும் உண்டு..! 'சினிமாதானே' என்றெல்லாம் இவர்களை கண்டும் காணாமல் விடுவதாக இல்லை இனி..!
'துப்பாக்கி'யே இறுதியாக இருக்கட்டும். சினிமாவுலகுக்கு பாடம் கற்பித்த 'துப்பாக்கி'யை சினிமா மறக்க கூடாது..! விஷயம் புரிந்தும் எதிர்காலத்தில் இன்னொரு படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டு, இதேபோல 'மன்னிப்பு கோரல் பிரஸ் மீட்' என்று இனி ஒன்று ஒருபோதும் நடக்கவே கூடாது..!
அப்படி நடந்தால்...?
'துப்பாக்கி'யில் காட்டிய நமது ஒருங்கிணைந்த எதிர்ப்பு... அப்படியே, தனன்று கொண்டே இருந்து... அடுத்த விஸ்வரூபம் எடுத்து... அது அப்படியான படத்தை திரையிட 'தடை உத்தரவு' என்ற உடனடி நீதிமன்ற அதிரடி இடைக்கால தீர்ப்பில்தான் முடியவேண்டும்..!
Annbhu
//அதற்காக நான் இந்து தீவிரவத்தையும் கண்டிப்பாக எதிர்கிறேன்... அதை பற்றி தெளிவாக யார் வேண்டுமானாலும் எடுக்கலாமே..? //
இதை தானே சகோதரா இங்கே எனது சகோதரன் ஆஷிக் கேள்வி கேட்டு இருக்கின்றார்.
கசாப்,கசாப் என்று இந்தியாவில் உள்ள ஒரு குடிமகனுக்கு கூட தெரியாமல் இருக்க கூடாது என்று கொண்டு போய் சேர்த்த மீடியா மற்ற விசயங்களில் அப்படி இருக்க முடியுமா என்பது தான் இங்கே கேள்வி
கசாப் கடை பாய் என்று சொல்வார்கள் அந்த கசாப் தான் (பலி ஆடு)இந்த கசாப் என்று இங்கே யாரும் சொல்லவில்லை ஆதாரம் இருந்தால் யாராக இருந்தாலும் நடுரோட்டில் வைத்து தூக்கு போடுங்கள் என்று தான் சொல்கிறோம்
@ஜாகிர்உசேன்
அந்த மாதிரியான மீடியாவை நீங்களும் நடத்தி மக்களுக்கு தெளிய வைக்கலாமே..! நடக்காத ஒன்றை அவர்கள் மீடியாவில் சொல்லவில்லை.. மேலே குறிபிட்டுறுக்கும் கட்டுரையில் ௨௦௦௮ மும்பை அட்டாக் பத்தி ஒரு சின்ன வார்த்தை கூட சொல்லவில்லை.. அதை எல்லாம் நடத்தியது யார் நண்பா..? கசாப் தானே..
விசயகாந்த் அர்சுன் இவர்கள் கூட இங்கு பதுங்கியிருக்கும் வெளிநாட்டு தீவிரவாதிகளை தேடிக் கண்டுபிடித்து ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என வாய் கிழிய கத்தி தமிழ் டைலாக் பேசிக் கொன்று கொண்டிருந்தனர்.
நம்ம விசய் ஒருபடி மேலே போய் இந்நாட்டின் அதுவும் உழைக்கும் வார்க்க சாதரண பேடிக்கடை பாய்,மாளிகை கடை பாய் இவர்களை தீவிரவாதியாக்கி இருப்பது.சினிமா லாப வெறி போதையின் உச்சக்கட்ட பரிணாமம் இது அத்துமீறல்
Which scene in the Thuppakki movie is objectionable to you?? I think some devious Muslims are opposing it, because it's very close to Truth and will expose that in their dreams they still aspire to capture India through subterfuge (Takkiya). A day will come when this militant Islam (Wahabbism) will be wiped off the face of this planet and that's when real peace will blossom. Inshallah :-)
//மும்பை அட்டாக் பத்தி ஒரு சின்ன வார்த்தை கூட சொல்லவில்லைஅதை எல்லாம் நடத்தியது யார் நண்பா..? கசாப் தானே//
அதை நடத்தியது கசாப் தான் என்று நம் நாடு சொல்கிறது அதை நாம் நம்புகிறோம்.
அதே நேரம் அந்த மும்பை தாக்குதல் ஏன் நடந்தது எப்படி நடந்தது .கார்கரே எப்படி அந்த இடத்திற்கு தனியாக போய் மாட்டிக்கொண்டார்?அப்போது அவரை போன் போட்டு அங்கு வர சொன்னது யார்?
போகும்முன் அவர் தன் துணைஅதிகாரியிடம் சொல்லிவிட்டு சென்றது என்ன?
அவர் ம்னைவி மோடி கொடுத்த ஒரு கோடி ரூபாயை தூக்கி அவர் முகத்தில் எறிந்து வீட்டை விட்டு வெளியேற்றினாரே அது ஏன்
இந்த விசயம் பற்றி கேள்வி எழுப்பிய அந்துலே என்ற அமைச்சருக்கு அதன் பின் அந்த அமைச்சர் பதிவி ஏன் பிடுங்க பட்டது போன்ற விசயங்களை முடிந்தால் யோசித்து பாருங்கள் சகோதரா
அதை விட்டு
//என்ன தப்பா எடுத்துட்டாங்க... உண்மைய சொல்லகூடாதா? விட்டா மும்பை தீவிரவாத தாக்குதல் நடத்திய கசாப்.//
இப்படி கேட்கும் முன் எய்தவன் இருக்க அம்பை மட்டும் நோவதேன் சகோதரா
துப்பாக்கி படத்தின் "சர்ச்சைக்குரிய" வசனங்கள் நீக்கப்பட்டது!
Saturday, 17 November 2012 12:08 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்
NOV17, முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி படத்தில் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கிவிட்டதாக கலைப்புலி தாணு தெரிவித்தார்.
கலைப்புலி தாணுவும் எஸ்.ஏ. சந்திரசேகரனும் இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து இந்த தகவலை தெரிவித்தனர்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த கலைப்புலி தாணு நிருபர்களிடம் கூறியதாவது:-
துப்பாக்கி படத்தில் சில காட்சிகள், தங்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று இஸ்லாமிய சகோதரர்கள் வருத்தப்பட்டனர்.
அதற்கு செவி சாய்த்து படத்தில் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கிவிட்டோம்.
அதை கமிஷனரை நேரில் சந்தித்து தெரிவித்தோம்.
இஸ்லாமிய சகோதரர்களையும் சந்தித்து சொல்லப் போகிறோம்.
50 பிரிவாக தியேட்டர்களுக்கு சென்று வசனங்கள் எடிட்செய்யப்பட்டது.
இவ்வாறு கலைப்புலி தாணு கூறினார்.
SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/616-2012-11-17-12-08-25
துப்பாக்கி விவகாரம்.. தாணு, விஜய், முருகதாஸ் அலறியதன் பின்னணி?
Updated: Saturday, November 17, 2012, 9:23 [IST]
Posted by: Shankar
துப்பாக்கி படத்தில் சில காட்சிகளுக்கு முஸ்லிம்கள் ஆட்சேபணை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுமே அலறியடித்துக் கொண்டு, அந்தப் படத்தின் இயக்குநர் முருகதாஸ், ஹீரோ விஜய் சார்பில் அவர் தந்தை (கவனிக்க, விஜய் கேட்கவில்லை!), தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டு, உருக்கமாக ஸ்டேட்மென்ட் கொடுத்தது ஏன் என்பதன் பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தப் படம் வெளியான மூன்று மணி நேரத்துக்குள், முஸ்லிம் அமைப்புகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் இது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது.
அடுத்த நாளே, விஜய், ஏஆர் முருகதாஸ், தாணு வீடுகளுக்கு முன்பாக பெரிய ஆர்ப்பாட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்தன.
அதில் 60 பேர் கைதாகிய நிலையில், அதற்கடுத்த நாள் 24 இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து பெருமளவில் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர்.
அத்தோடு, படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தி, மக்களை படம் பார்க்க விடாமல் செய்யப் போவதாக செய்தி பரவியது.
இதில் தியேட்டர்காரர்களுக்கு கிலியடித்துவிட்டது.
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் முன்பு அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, நடந்த தாக்குதல் போல ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது என்று கையைப் பிசைந்தவர்கள்,
தயாரிப்பாளருக்கு போன் போட்டு, ஏதாவது பண்ணுங்கள்.. இல்லாவிட்டால் படத்தை தியேட்டரை விட்டு எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றதும் தான்... இந்த பகிரங்க மன்னிப்பு படலத்தை அரங்கேற்றினார்களாம்!
SOURCE: http://tamil.oneindia.in/movies/news/2012/11/thuppakki-issue-here-is-the-inside-story-164776.html
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நெத்தியடி பதிவு!...
சகோ அன்ன்பு.. . தீவிரவாதம் வேறுக்க தக்கது தான் எந்த கோணத்தில் இருந்தாலும்... அதென்ன முஸ்லிம்கள் என வரும்போது மட்டும் அம்மணமாய் திரியும் தீவரவாதத்திற்கு உடனடி அட்ரஸ் கொடுத்து அதுக்கு அழகாய் தாடியும் தொப்பியும் வைத்து ஜிப்பாவும் போட்டு விடுகிறீர்கள்.
இன்று சமுகத்திற்கு எதிராக பல பயனற்ற தகவல்கள் சினிமா தரும்போதெல்லாம் அதை எதிர்ப்பு பல பதிவுகள் எழுதிக்கொண்டு தான் வருகிறார்கள். சமூக ஆர்வலர்கள் பலரும்...
ஆனால் பொதுவில் இஸ்லாம் எதிர்ப்புக்கு பகிரங்க கண்டனம் தெரிவிப்பதில்லை... ஆக அதற்காக களத்தில் போராட வேண்டிய தருணத்தில் நாங்கள்...
முன்னோரு காலத்தில் பாய் என்றாலே நல்லவராக, அடுத்தவரின் பொருட்களை காப்பவராக தான் கதை களத்தில் இருப்பார்.. இப்போது இதற்கு என்ன காரணம்...?
எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!
என மேற்கத்திய ஊடங்கள் பரப்பும் பொய் பிரச்சாரத்திற்கு ஒலிப்பெருக்கி வைத்து ஆதாயம் தேட பார்க்கிறார்கள் தற்கால கூத்தாடிகள்
மீண்டும் ஒருமுறை வரலாற்றை படித்து பாருங்கள் யார் தீவிரவாதிகள் என தெளிவாய் புரியும்...
http://www.naanmuslim.com/2012/03/blog-post.html
உங்கள் சகோதரன்
குலாம்.
ஆசிக். நல்ல பதிவு
எஸ்.ஏ.சி. சொன்னாராம் தன் மகன் விஜய், புண்பட்டிருக்கும் முஸ்லிம்களை சமாதானப்படுத்த அடுத்து வரும் படங்களில் ஒன்றில் முஸ்லிம் தோழராக நடிப்பார் என்று.
எங்களுக்கு விஜய் முஸ்லிமாக கூட நடிக்க வேண்டாம். அஞ்சா நெஞ்சன் ஹேமந்த கர்கரே கேரக்டரில் நடிக்கட்டும். (தைரியமிருந்தால்.)
முன்பு தீவிரவாதிகளையெல்லாம் முஸ்லிமாக காட்டினீர்கள். இப்போது சாதாரன அப்பாவி முஸ்லிம்களையும் தீவிரவாதியாக்க முனைந்து வருகிறீர்கள்.
இதன் விளைவு ஒரு முஸ்லிம் தன் செல்போன் மூலம் ஒரு போட்டோ எடுத்தாலே கைது செய்யப்படும் அவலம் நடைப்பெற்று வருகிறது. (சமீபத்தில் ப. சிதம்பரத்தை சென்னை ஏர்போர்டில் போட்டோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டு பின்னர் சிதம்பரம் தலையிட்டதன் பேரில் விடுதலையானாராம். அவர் ஒரு முஸ்லிம்)
அஸ்ஸலாம் அலைக்கும் ....சகோஸ்,
ஒரு காட்சியில் தற்செயலாக நாய் அல்லது வேற எதோ பிராணியாகவே இருக்கட்டும் அந்தப்பக்கம் ஓடினாலும் அல்லது காட்சிக்கு சம்பந்தமே இல்லையென்றாலும் சென்சார் போர்டில் அனுமதிக்கமாட்டார்கள் , பூளு கிராஸ் இடமிருந்து சர்டிபிகேட் வாங்கிவந்தால் மட்டுமே அந்த காட்சியை அனுமதிப்பார்கள்..ஒரு பிராணிக்கே இவ்வளவு கட்டுப்பாடு போடும்போது சென்சிடிவான "முஸ்லிம் தீவிரவாதி " காட்சியை எப்படி அனுமதித்தார்கள் ..???
வேண்டுமென்றே அனுமதித்திருக்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது ...வேற என்னத்த சொல்ல ..!!
ஒலக நாயகனின் "விஸ்வரூபம் " படம் கூட இப்படித்தான் இருக்குமோ ..!!
பட டைட்டிலும், ட்ரைலரும் பார்த்தால் விஸ்வரூபம் கூட முஸ்லிம்களை வில்லனாக சித்தரிக்கப்பட்டு துப்பாக்கி பட பிரச்சனை போலத்தான் இருக்கும் என்றே நினைக்கிறேன் ....
இந்த எதிர்ப்பை உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு காட்டியிருக்க வேண்டும். இஸ்லாமியர்களை சந்தேக கண் கொண்டு பார்பதெல்லாம் பூணூலை சட்டைக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு பின்னூட்டம் போடுபவர்கள் வேலை.இன்னும் கூட உழைக்கும் மக்கள் அக்கம் பக்கமாக வாழ்பவர்களுடன் பிசிறில்லாத நட்புடனே தஞ்சை போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகிறோம்.அமெரிக்க தூதரக எதிர்ப்பு தான் பொது வெளியில் கூடி எதிர்ப்பு காட்டும் மனோதிடத்தை வழங்கியிருக்கிறது .இனி படமெடுப்பவர்கள் யோசிப்பார்கள்
சலாம் சகோஸ் .
இது இவர்களின் படைப்பு சுதந்திரமாம்..வேற எப்படி படம் எடுக்க என்று கயவர்கள் ஒரே ஒப்பாரி வேறு ...இன்று ஒரு டிவியில் "மோட்டார் சுந்தரம் பிள்ளை" என்று ஒரு படம் போட்டார்கள்..அதுவும் நல்ல படம் தான் என்று சொன்னார்கள் வீட்டில் உள்ளோர்..அது போல படம் எடுத்து தொலைய வேண்டியதானே..உங்களுக்கு யாரையாவது சுட்டுக்கிட்டே இருக்கணுமோ..அதுவும் முஸ்லிம்னா அல்வா சாப்பிடுற மாதிரி..!!!
தலிவரு Dogடர் விசை தான் பறந்து பறந்து சண்டை போடுறாரே !!! பின் எதுக்கு போலிஸ் பாதுகாப்பு கேட்டு கமிஷனர்ட மனு கொடுக்கிறார்..அவருக்கே தெரியுது நிஜத்துல பறந்து பறந்து சண்டை போட முடியாதுன்னு..பின்ன என்ன _ _ _ க்கு இந்த மாதிரி பில்டப்பு உங்களுக்கு...
போங்கையா...படகோட்டி , அன்பே வா , எங்கவீட்டு பிள்ளைன்னு பழைய கதை நெறையா இருக்கு ...அத ரீமேக் பண்ணி வயிறு வளக்கலாம்..
இங்கு சிலர் கேட்கிறார்கள் ..அப்ப நீங்க படம் எடுக்க வேண்டியது தானேன்னு !!! செப்டிக் டேங்கை சுத்தம் செய்வோர் சரியாக சுத்தம் செய்யவில்லையாயின் நாம் சொல்லத்தான் வேண்டுமே ஒழிய எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லித்தருகிறேன் பார் என்று இறந்குவீரோ...!!!
(டிஸ்கி ; இங்கு செப்டிக் டேங்க் சுத்தம் செய்வோரை பற்றி நாம் குறை கூறவில்லை..சினிமா என்பது செப்டிக் டேங்க் போன்றது என்பதை விளக்கவே..இன்னும் அதைவிடவும் நறுமணம் உடையது..)
நன்றி !!!
ஸலாம் சகோ.
வழக்கம்போல் அருமையான சாட்டையடி பதிவு!.
சகோ. Annbhu
பல அப்பாவிகளின் உயிரை காவு கொண்ட அஜ்மல் கசாப்பை ஏன் அவன் அக்கிரமம் செய்த அதே இடத்தில் கண்டவுடன் சுட்டு பொசுக்கவில்லை, அவனை ஒரு பொம்மையாக வைத்து ஏன் அரசாங்கம் செலவு செய்து கொண்டிருக்க வேண்டும்? என்ன காரணம் இதன் பின்னனியில்?. அப்பொழுதே அவனின் கதையை முடிக்க தடையாக இருந்தது என்ன?.
உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க என்னும் பாசாங்கெல்லாம் இங்கு பலிக்காது, ஏனெனில் யாரும் பிடிபடாமலேயே குண்டு வெடித்த சில வினாடிகளிலேயே எந்த இஸ்லாமிய இயக்கம் இந்த காரியத்தை செய்தது என்று செய்திகள் அலறும் இந்த காலத்தில், இந்த படுபாதக செயலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க அஜ்மல் கசாபின் உயிர் தேவையா?.
அமெரிக்காவை எதிர்த்த ஒரே காரணத்திற்காக ஒசாமாவை காட்டி காட்டி தீவிரவாதி என்றாலே தாடி வைத்து தலைப்பாகை கட்டியவன்தான் என்னும் தோற்றத்தை விதைத்த அமெரிக்க ஊடகங்களுக்கு அஜ்மல் கசாபின் ”க்ளீன் ஷேவ்” தோற்றம் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாது?. கிளிப்பிள்ளை போல் அமெரிக்கா மீடியாக்கள் சொல்வதை அப்படியே சொல்லும் இந்திய ஊடகங்களின் கண்களுக்கும் இது தெரியாது.
நிறைய நண்பர்கள் இப்படத்தற்கு தங்களின் எதிர்ப்பை பல வகைகளில் தெரிவித்தாலும், Annbhu போல் உள்ள ஒரு சிலர் மாத்திரம் ”அப்படி என்ன தவறாக படத்தை எடுத்து விட்டார்கள் உள்ளதைத்தானே எடுத்துள்ளார்கள்” என்று கேட்கிறார்கள்.
எது உண்மை, தீவிரவாத தாக்குதல் நடத்த இருந்த ஸ்லீப்பிங் செல்லுக்கு அடிமையான 12 இந்திய முஸ்லிம்களை, லீவில் வந்த எந்த ராணுவ அதிகாரி சுட்டுக்கொன்றார்?. அவரின் முகவரி என்ன?
அல்லது, பதிவில் கூறியிருப்பதுபோல் உண்மை தீவிரவாதத்தை கண்டுபிடித்த ஹர்கரேயை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாதியை வைத்து ஒரு நாடகம் நடத்தி அவரின் கதை முடிக்கப்பட்டதா?.
தீவிரவாதத்திற்கு எதிரான தங்களின் எதிர்ப்பை போராட்டங்கள் மூலம் குண்டு வெடிப்பு நடந்த மும்பையில் முஸ்லிம்கள் தெரிவித்துதானே இருக்கிறார்கள். நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று குண்டடிபட்டவர்களுக்கு இரத்தம் தானமாக கொடுத்துதானே இருக்கின்றார்கள், இது உண்மையா? அல்லது கற்பனை சிறகை பறக்கவிட்டு ஒற்றுமையை விரும்பும் மக்களுக்கு மத்தியில் தங்களின் வக்கிரபுத்தியை வியாபரமாக்குவது உண்மையா?.
இன்னொரு கோணத்தில் “நீங்கள் சங்பரிவாரங்கள் நடத்தும் குண்டு வெடிப்பை ஆதரிப்பதில்லை, வெறுக்கிறீர்கள். அதே போல் மதத்தை காரணம்காட்டி கேளிக்கை விடுதிக்குள் இருக்கும் பெண்களை அடித்து துன்புறுத்துவதை ஆதரிப்பதில்லை வெறுக்கிறீர்கள்” என்று வைத்துக்கொள்ளுவோம். அப்பொழுதும் இதே ஸ்லீப்பிங் செல் ஃபார்முலாவை வைத்து நீங்கள் இந்து என்னும் காரணத்திற்காக உங்களையும் சேர்த்து குற்றம் சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா?, இவையனைத்தையும் வெறுக்கும் உங்களின் நண்பர்களையும் இக்குற்றப்பட்டியலில் சேர்ப்பீர்களா?. Annbhu.
இதில் கொடுமை என்னவென்றால் ஒரு சிலர் நடத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிரான (சங் பரிவாரத்தின் கொடுமைகளை உட்பட) ஆதரித்து எத்தனையோ பதிவுகள் இருக்கிறது, ஆனால் இஸ்லாமிய பெயர்களில் ஒளிந்து நடத்தப்படும் கோழைத்தனமான கேவளத்தை இஸ்லாமிய பதிவர்கள் யாரேனும் ஆதரித்திருக்கிறார்களா?. மாட்டார்கள், ஏனெனில் தீவிரவாத கோழைகள் செய்வது இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்பதால்தான். அப்படி ஒருவன் மீறி ஆதரித்தாலும் அவன் இஸ்லாமியனாக இருக்க தகுதி கிடையாது. எழுத்திற்கே இப்படியென்றால் அப்பாவி பொதுமக்களை காரணமின்றி கொல்லும் கோழைகளை என்ன சொல்வது.
@Annbhu //யாரு என்ன எடுக்கனும்முனு சொல்றதுக்கு உங்களுக்கு உரிமை இல்ல.. நீங்க உங்களுக்கு என்ன எடுக்கனும்னு தோணுதோ அத பத்தி எடுக்கலாம்...//
அப்படியென்றால் ஒற்றுமையாக வாழும் சமூகத்திற்கு மத்தியில் ஒற்றுமையை குழி தோண்டிப்புதைக்கும் வகையில் படம் எடுத்தாலும் சும்மா பொத்திக்கொண்டு போகவேண்டும் என்று கூறுகிறீர்கள்?.
@Annbhu// நீங்க ஒருத்தருதான் இதை ஆதரிச்சு சொல்லிருக்கிங்க..//
அட… அஜ்மல் கசாபை தூக்கிலோ நடு ரோட்டில் கல்லெறிந்தோ கொல்லுங்கள் நோ. அப்ஜக்ஸன் நீதிபதிகளே. (இதை எத்தனை முஸ்லிகள் எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம். :))
@rajan//இந்த எதிர்ப்பை உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு காட்டியிருக்க வேண்டும்.//---------ஆமாம்., சகோ.ராஜன். நீங்கள் சொல்வது சரிதான்.
'சினிமாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை எதிர்க்க வேண்டும்' என்ற போதிய விழிப்புணர்வு இப்போது உள்ளது போல இஸ்லாமிய இயக்கங்களிடம் அப்போது இல்லை.
இன்னும் தெளிவாக சொன்னால்... சினிமாவில் உள்ளவற்றை ஒரு இஸ்லாமிய இயக்கம் எதிரத்தால்..."அட, இது சினிமா பார்க்கும் இயக்கமா" என்ற அவப்பெயர் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டு விடக்கூடும் என்று அஞ்சி இருக்க வேண்டும்..!
என்னை பொருத்தமட்டில், 'உன்னைப்போல் ஒருவன்' வந்த காலத்தில்... என்னிடம் அப்போது ப்ளாக்கும் முகநூலும் இல்லை.
இன்னொன்று முக்கிய அம்சம்...
ஒரு சினிமாவை நாம் எதிர்த்தால்... அவர்கள் அதை "ம்ம்... நல்ல விளம்பரம்தான், நடத்துங்க..." என்று எடுதுக்கொண்டால்... எதிர்ப்பு தோல்வியில் மட்டும் அல்ல, அந்த சினிமாவுக்கு வெற்றியில் முடிந்து விடும்.
எனவே, முழுக்கிணற்றையும் தாண்டும் சக்தி இருந்தால் மட்டுமே கோதாவில் இறங்க வேண்டும்..!
சினிமாவுக்கு எதிரான அப்படி ஒரு சக்தியும் எண்ணமும் தம் மக்களிடம் இருப்பதே... சமீபத்தில் ஏற்பட்ட அமெரிக்க தூதரக முற்றுகையில்தான் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தெரிய வந்தது.
///அமெரிக்க தூதரக எதிர்ப்பு தான் பொது வெளியில் கூடி எதிர்ப்பு காட்டும் மனோதிடத்தை வழங்கியிருக்கிறது .இனி படமெடுப்பவர்கள் யோசிப்பார்கள் ///--------மிகச்சரி..!
இனி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது மட்டும் உண்மைக்கு மாறாக 'கருத்து ஃபிக்சிங்' செய்யும் சினிமாகாரர்களுக்கு இருக்கு அதிரடி வேட்டு..!
மராட்டியத்தின் முசோலினி பால்தாக்கரே மரணம்!
சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே நான்கு நாட்களுக்கு முன்னரே இறந்து போனாலும், இன்று 17.11.12 மாலை 3.30 மணியளவில்தான் இறந்து போனதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாகவே மும்பை நகரத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கிப்போனது.
மக்கள் தங்களின் உயிருக்கும்,உடமைக்கும் தங்களால் முடிந்த வரையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தாலும், என்ன நடக்குமோ என்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் அஞ்சி நடுங்கியே வாழ்ந்து வந்தனர்.
தமிழர்கள்,முஸ்லீம்கள் ,வட இந்தியர்கள் தாங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் உச்சத்தில் உள்ளனர்.தற்போதைய நிலையால் வட இந்தியர்கள் ஏராளமானவர்கள் தமது சொந்த மாநிலங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
மராட்டியத்தில் முஸ்லீம்களின் முதன்மையான எதிரி சிவசேனாவும்,பால்தாக்கரேவும் என்பதை நிரூபிக்கும் வகையில் மும்பையில் உள்ள முஸ்லீம்கள் பால்தாக்கரே நலம் பெற சிறப்புப்பிரார்த்தனை நடத்தினார்களாம்.
இறந்து போனாலும் தாங்கள் பாசிஸ்ட்டுகள் தான் என்பதை நிரூபிக்கின்றனர்.
சிவசேனாவின் தொண்டர்கள்-குண்டர்கள் சாவை சிறுபான்மையினரை அஞ்சி நடுங்கச் செய்து ,தமது தலைவனின் சாவை கொண்டாடுகின்றனர்.
பாசிஸ்டுகள் மக்களால் தண்டிக்கப்பட்டு சாவை எதிர்கொள்வதற்கு பதில் தாமே சாவது நமக்கு வருத்தம்தான் என்றாலும்,
ஒரு மனித குல விரோதியின் மரணத்திற்காக மகிழ்ச்சி அடைவோம்! - சூறா வளி
THE ABOVE IS COPIED FROM: http://suraavali.blogspot.sg/2012/11/blog-post.html.
=====================
பால்தாக்கரே மறைந்து விட்டாராம்!
அவரை கைது செய்யாமல் கைபிசைந்து கொண்டிருந்த கால்துறையினர்..
அவரை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவைத்துக் கொண்டிருந்த நீதித்துறையினர்..
அவரின் பயங்கரவாதங்களை மூடிமறைத்த ஊடகத்துறையினர்..
அவருக்கு பயந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காங்கிரஸ் ஆட்சியினர்..
அனைவருக்கும் எமது கண்டனங்கள்!
மும்பை கலவரத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வாரிசுகள்..
மும்பையிலிருந்து விரட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள்..
மும்பையில் அச்சத்தின் பிடியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள்..
மும்பைக்குள் நுழையவே தயங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மராட்டியர் அல்லாதவர்கள்..
அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்! - ஆளூர் ஷாநவாஸ்.
source: http://aloorshanavas.blogspot.sg/2012/11/blog-post_6623.html
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!