அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, December 18, 2019

0 சாவர்க்... என்றாலே 'இந்தா சாவுடா' எனும் சவுக்கடி கட்டுரை

வாவ்...வாவ்...வார்ர்ரே வா..!
என்னவொரு அதிரடி கட்டுரை..!!
நாம் கட்டாயம் அறிந்தாக வேண்டிய ஒரு கொடிய தேசவிரோதியின் வரலாறு..!!!

பாஜக உருவாக்கி வரும் சாவர்க்கனின் போலி பிம்பத்தை... கை கால் தலை என தனித்தனியே பிய்த்து எடுத்து... துண்டு துண்டாக உடைத்து ஒவ்வொன்றாக எரித்து சாம்பலை எல்லாம் செப்டிங் டேங்க் உள்ளே கொட்டி கரைத்துவிட்டது... இந்த விகடன் கட்டுரை. 


ஏன் இப்படியொரு வதம் செய்யப்பட்டது என்றும் இப்படி செய்யாவிட்டால் அது நாட்டுக்கும் நமக்கும் எவ்வளவு பெரிய கேட்டில் முடியும் என்றும் கடைசி பாராவில் தெளிவாக விளக்குகிறது.


இனி எவனாவது...

சாவர்க்....என்று சொல்ல வாய் திறந்த உடனேயே... 'இந்தா சாவுடா...'என்று இந்த லிங்கைத்தான் அவன் வாய்க்குள் தூக்கி வீசுவேன். 

இதை வெளியிட்ட விகடன் குழுமம் வாழ்க. இதை எழுதிய சகோ.சக்திவேலும் அவரின் பரம்பரையும் வாழ்வாங்கு வாழ்க... வாழ்க. 👏✔️💯😊👍👌💐



https://www.vikatan.com/government-and-politics/politics/why-the-savarkars-ideology-is-dangerous-for-indias-democracy-and-secularism


Copy pasted from Vikatan : Thanks a lot.


Friday, April 15, 2016

4 அறிவியல் பாங்கு

கீழக்கரை ஜும்மா பள்ளி - 
கிபி 630 ல் கட்டப்பட்ட பள்ளிவாசல். தமிழகத்தின் முதலாவது பள்ளிவாசல். பின்னர் இஸ்லாம் பரவ பரவ சில நூறு வருஷங்களில் காயல்பட்டினம், ஏர்வாடி, மதுரை, அதிரை, நாகூர் என பல ஊர்களில் பள்ளிவாசகள் முளைத்தன.

கடிகாரம் - 
கிபி 1510 ல் உருவாக்கப்பட்டு... சிறிது சிறிதாக செம்மைப்படுத்தப்பட்டு... மணி, நிமிடம், வினாடி எல்லாம் பகுக்கப்பட்டு, 1656 ல் பெண்டுலம் சேர்க்கப்பட்டு உலகளவில் பலரால் ஏற்கப்பட்டது. அதன்பின் இந்த கடிகாரம் செய்யப்பட்டு... சந்தைக்கு விற்பனைக்கு வந்து உலகெங்கும் செல்வந்தர்களின் வீட்டில் இன்றியமையாத கெளரவ பொருளாக இன்னும் இன்னும் அதிக பிரபலமானது.


இனி சிறுகதைக்குள் செல்வோம்.
தலைப்பு :  அறிவியல்பாங்கு

Thursday, December 11, 2014

10 Coccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...

"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான Coccyx ‬... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..?"


...என்று கேள்வி கேட்டு, Tail bone என்று இதற்கு மாற்றுப்பெயரிட்டு... இது மனித உடம்பில் ஒரு தேவையற்ற உறுப்பு.. (vestigial organ) என்று பெரும்பாலான அறிவியலாளர் கருதுகிறார்கள். 

இது முற்றிலும் தவறு..!

இறைவனின் படைப்பான நமது உடலில்..."நான் ஒரு -தேவையற்ற உறுப்பு- vestigial organ" என்று எந்த உறுப்பிலும் எழுதி ஒட்டி இல்லை. நாமாக சிந்தித்து எந்த உறுப்பின் பயனாவது 'தெரியவில்லை' என்றால், அது பற்றிய விளக்கம் இல்லை என்றால், அந்த அறியாமையாகிய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 'அது தேவை அற்றது' என்று அவசரப்பட்டு அறிவித்து விடுகிறோம். 

பின்னாளில் உண்மை புரியும்போது அதன் அவசியம் உணரும்போது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். நம் உடலில் எதுவும் வேஸ்டாக இருக்காது என்பது என் அனுபத்தில் எடுத்த அசைக்க முடியாத முடிவு. அதை எந்த விஞ்ஞானி வந்து மறுத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

-----------------------------------
ஓர் உண்மைச்சம்பவம் ஒன்றை ஊருக்கும் உலகுக்கும் உரைக்கிறேன்.
-----------------------------------

Monday, August 18, 2014

4 souq . com -ன் தள்ளுபடி ஃபிராடுத்தனம்

www. souq. com என்பது வளைகுடா பகுதியில் மிகவும் பிரபலமான இணைய வணிக நிறுவனம். திடீர் திடீர் என்று அதிரடி விலை குறைப்பு போட்டு அதை மெயிலில் அனுப்பி... புதிய பொருட்களை பரபரப்பாக விற்பார்கள். 'எப்படி இவ்வளவு குறைவாக விற்கிறார்கள்?!' என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதற்கு எல்லாம் விடை தேட மனமில்லாமல், அதிரடி தள்ளுபடி விலையில் புதிய பொருள் ஒன்று நம் வீடு தேடி வருவதால், நானும் அங்கே பொருள் வாங்க ஆசைப்பட்டேன். இது இயல்பானது. 



ஆனால்... அதே நேரம்,  ஒரு பொருளை, அதற்குரிய விலையில் அல்லாமல், படு குறைவான தள்ளுபடி விலையில் ஒருவர் விற்கிறார் எனில்... அதை நம்பி வாங்க நினைக்கும் எவரும்... ஏமாற தயாராக இருக்க வேண்டியதுதான் என்ற பாடத்தை நானும் கற்றேன். இரண்டு முறை..!

ஆம், இதுவரை...  இரண்டே முறை மட்டுமே சூக் டாட் காமில் பொருள் வாங்கி இருக்கிறேன். இரண்டு முறையும் நான் ஏமாற்றப்பட்டேன்..!

Tuesday, March 25, 2014

4 சஹாரா சாம்ராஜ்ய சக்ரவர்த்தி சிறைசென்ற பின்னணி தெரியுமோ?

மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு,மாட்டிக்கொண்டு இவ்வருடம் பிப்ரவரி 28-ல் 'Luck-No' வில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் தள்ளப்பட்ட சஹாரா நிறுவன முதலாளி சுப்ரதா ராய் பற்றி ஒரு நியூசும் வராமல் பார்த்துக்கொண்டனர் நமது தமிழ் ஊடக கொள்ளையர்கள்..! ஆங்கில ஊடங்களில்தான் ஓரளவு நியூஸ் வந்தன..!

சஹாரா நிறுவன முதலாளி சுப்ரதா ராய்

இந்தியாவில் மஹா பணக்காரர்கள் எனப்படும் கார்ப்பொரேட் பண முதலைகள்தான், சமுதாய நலன் பேணவேண்டும் என்ற நல்லுணர்வு சிறிதும் இல்லாமல், இந்தியாவையும் அதன் வளத்தையும்  சுயநலத்துடன் எப்படியெலாம் தைரியமாக அரசியல் & பண பலத்துடன் சட்டத்துக்கு கட்டுப்படாமல் துணிவுடன் கபளீகரம் செய்து கொண்டுள்ளார்கள என்று இப்பதிவில் அறிந்தால் நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள் சகோஸ்..!

Thursday, March 20, 2014

2 சவூதி 'லஹம் மந்தி' செயல்முறை (Photo Gallery)

நன்கு கழுவப்பட்ட ஆட்டிறைச்சி (லஹம்) யை இதுபோல சற்று பெரிய துண்டாக வெட்டி எடுத்து அதை படத்தில் உள்ள 'லஹம் மந்தி சமையல் கருவி'யின் மேல் தட்டிலும்..... 

Saturday, February 22, 2014

19 இறையச்சத்துக்கான இவ்வுலகப்பரிசு 40 இலட்சம் ரூபாய்..!

 சவூதியில் ஆடு மேய்க்க வந்த சூடான் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப்

முதற்கண் ஒரு சிறு முன்னுரை.

ஒரு  நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ  நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு நாட்டில்,புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.

நிற்க.

இனி தலைப்புக்கு செல்வோம் சகோஸ்.

இறையச்சத்துக்கான முதன்மை பரிசு மறுவுலக சுவனப்பரிசுதான். மற்றபடி இவ்வுலக பரிசு 40 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் அதுவும் ஒரு சோதனையே என்று கூறிக்கொண்டு... பதிவுக்கு செல்வோம் சகோஸ்.

Friday, December 27, 2013

11 'ப்ளூ டீ' போடுவது எப்படி?



சகோஸ்...
'சுடுதண்ணீர்  போடுவது எப்படி?'ன்னு எல்லாம் வலைப்பூவில் கத்து தறாங்க. 
உங்களுக்கு அதை பார்க்க செமை கடுப்பா  இருக்குமே..? இருக்கும்..!

ஏன்னா, உங்களுக்கு 'ப்ளாக் டீ' கூட போட தெரியும். (வித் அவுட்... மில்க்)
'ப்ரவுன் டீ' கூட போடுவீங்கதானே..? (டிகாஷன் கொஞ்சம் ஸ்ட்ராங்கா...)
'ஆரஞ்ச் டீ' கூட போட்டு இருப்பீங்க. (ஹி..ஹி... அதாங்க.. டிகாஷன் கம்மியா, பால் கொஞ்சம் ரொம்ப தூக்கலா...)
இது மட்டுமின்றி, மூலிகைச்சாறு மணக்க மணக்க 'கிரீன் டீ' போட்டு குடிக்கும் சத்தான ஆளுங்களும் இங்கே இருப்பீங்க.

சரி, அதெல்லாம் ஓர் ஓரமா இருக்கட்டும். ஆனால்... உங்களுக்கு,
'ப்ளூ டீ' போட தெரியுமா..? இதுக்கு முந்தி 'ப்ளூ டீ' போட்டு இருக்கீங்களா..?

என்ன...? தெரியாதா..?

அப்படின்னா, அது பத்தி கத்துக்கணும்ன்னா,
வாங்க... சொல்லி தருகிறேன்..!
நாலே நாலு ஈஸி ஸ்டெப்ஸ்தான், சகோஸ்..!

படத்தோடு தெளிவா விளக்கி இருக்கேன்... ஒரே ஒரு முறை பார்த்துக்கிட்டீங்கன்னா கூட போதும்... அப்புறம், 'ப்ளூ டீ' போடுறதுல நீங்க மாஸ்டர் ஆகிருவீங்க..!

கம் ஆன் சகோஸ்...!


Monday, December 9, 2013

4 'தாயா-தாரமா' பனிப்போரை சமாளிப்பது எப்படி..?

ஆண்களே... இந்த பதிவு உங்களுக்காகத்தான்..! ஆனால், 
பெண்களும் படித்தால் அது அவர்களின் நல்லதுக்குத்தான்..!

இளம் ஆண்களே... நீங்கள் பிறந்தது முதல்  குப்புத்துக்கொள்வது, உட்கார்வது, ஊர்வது, நிற்பது, நடப்பது, ஓடுவது... வீடு, பள்ளி, பொதுத்தேர்வு, கல்லூரி, அர்ரியர்ஸ், நேர்முகத்தேர்வு, அலுவலகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போராட்டம், வெளியுலகம், அரசியல், பந்த், கலவரம், விலைவாசி.... என்று இன்றுவரை... எண்ணற்ற பல தடைகளை தகர்த்து எரிந்து, அவற்றை எல்லாம் உடைத்து சாதனை படிக்கட்டுகளாக்கி, ஒவ்வொன்றிலும் வெற்றிக்கொடி கட்டியவாறே ஏறி வந்திருப்பீர்கள்..! 

ப்ச்... இதெல்லாம் உங்கள் வாழ்வில் ஒண்ணுமே இல்லை சகோ..! ஜுஜூபி..!

அப்புறம்... வேறு எது ஜேசிபி..?

ம்ம்ம் சொல்றேன்... சொல்றேன்... இனி...திருமணம் என்ற ஒன்று ஆன பின்னால்... ஏகப்பட்ட சோதனைகள் இருந்தாலும்... அவற்றில் எல்லாம் நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள் என்றாலும்... அதில் மிக முக்கிய சோதனையாக... "மாமியார்-மருமகள் பனிப்போர்" என்ற ஒன்று ஆரம்பித்து ஜெகஜோராக நடக்குமே... அங்கேதான் உங்கள் நிஜ திறமை தெரியவரும்..!


சப்போஸ் இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்தால்... அப்படி ஒன்று நடக்காமல் எல்லாம் இருக்கவே இருக்காது. நடந்தே தீரும். அப்போதுதான்.... உங்களுக்கு ஆரம்பிக்கிறது... வாழ்வினில்... நான் சொல்ல வரும்... தி ரியல் சேல்லஞ்..!

previous home
Related Posts Plugin for WordPress, Blogger...