அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, March 20, 2014

2 சவூதி 'லஹம் மந்தி' செயல்முறை (Photo Gallery)

நன்கு கழுவப்பட்ட ஆட்டிறைச்சி (லஹம்) யை இதுபோல சற்று பெரிய துண்டாக வெட்டி எடுத்து அதை படத்தில் உள்ள 'லஹம் மந்தி சமையல் கருவி'யின் மேல் தட்டிலும்..... 


உங்களின் வழக்கம் போல... பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் உங்களுக்கு பிடித்த இன்ன பிற வாசனை நகாசு ஐயிட்டங்களை எல்லாம் சேர்த்து நெய்யில்/எண்ணையில் வெங்காயம் கொண்டு தாளிச்சு பின்னர் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு எண்ணெய் விடும் வரை  வதக்கி, பிறகு எடுத்துக்கொண்ட உங்களின் அரிசிக்கு உங்கள் அனுபவத்தில் அறிந்தவாறு தகுந்த விகிதாச்சார அளவுக்கு தண்ணீர் சேர்ந்து, தேவைக்கேற்ப கொத்துமல்லி புதினா தழைகள் உலர் எலுமிச்சை எல்லாம் சேர்த்து, அரைவேக்காடுக்கு அரிசியை அடுப்பில் வேகவிட்ட சோற்று சட்டியை 'லஹம் மந்தி சமையல் கருவி'யின் கீழ் தட்டிலும் படத்தில் காட்டியபடி வைத்து..... 


அதை ஒரு பெரிய கனமான அண்டா போன்ற கருவியின் இன்னொரு பகுதியால் தட்டின் அடி வரை இடுக்கு இல்லாமல் இறுக்கமாக மூடி...





பின்னர், அதை சுற்றி காய்ந்த வைக்கோல் / தேங்காய் மட்டை / விறகு போன்ற ஏதேனும் ஓர் எரிபொருள் கொண்டு அண்டாவை அணைத்த வண்ணம் அடுக்கி வைத்து நிரப்பி முழுதும் எரிபொருளால் மூடி...



தீ வைத்து ஜுவாலை வரும்படி அரை மணி நேரம் எரிக்க வேண்டும். இதுதான் மிகவும் முக்கியமான செயல்முறை. காரணம், எவ்வளவு பேருக்கான சோறு உள்ளது... எவ்வளவு தண்ணீர் சேர்த்துள்ளோம்... எத்தனை கிலோ இறைச்சி உள்ளே உள்ளது, எரிபொருள் எந்த அளவுக்கு எரிந்து சூட்டினை தரும் திறன் கொண்டது போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. சரியான நேரமும் அளவும்... பலமுறை செயல்பட்டிருந்தால் மட்டுமே போகப்போக அனுபவத்தில் கைப்பக்குவம் மிகச்சரியாக வரும்.






தீக்கங்கு சூடு ஆறியவுடன், பாதுகாப்பாக அணைத்து சாம்பலையும் மிக கவனமாக மெதுவாக அண்டாவை சுற்றிலும் மற்றும் அண்டாவுக்கு மேலும் இருந்து நீக்கி துடைத்து எடுத்துவிடவேண்டும்.


பின்னர் மெல்ல அண்டாவை மெல்ல மேல்நோக்கி தூக்கி விட்டால்... உள்ளே மூக்கைத்துளைக்கும் கமகம வாசனையுடன் சவூதி லஹம் மந்தி தயார்..!



மேல்தட்டில் துளைகள் உள்ளதால், இறைச்சியின் கொழுப்பு உருகி, கீழ்த்தட்டில் உள்ள புலாவ் சோறில் வழிந்து ஊற்றி விடுவதால்... 'லஹம் மந்தி'யின் மனம் கம கம என்றும் ருசியோ அலாதியாகவும் இருக்கும்..! இதுதான்... இதன் தனிச்சிறப்பு. 






ஒரு பெரிய சஹானில் சோறை வைத்து அதன் மீது இறைச்சியை உடையாமல் அழகாக எடுத்து பரப்பி வைக்கவும்.


அப்படியேவும் சாப்பிடலாம்... அல்லது உங்களுக்கு பிடித்த சில பச்சை காய்கறிகளை இலைகளை சாலட்டாக வெட்டி இடையில் தொட்டுக்க பயன்படுத்தி கொள்ளலாம். தக்காளி சாஸும் நன்றாகத்தான் இருக்கும்.


சாப்பிட்டு முடித்தவுடன் 7 up போன்ற கூல் ட்ரிங்ஸ் எல்லாம் குடிக்காமல் சூடான கிரீன் டீ அல்லது ப்ளாக் டீ தயார் செய்து அதில் புதினா, ஹபக் போன்ற வாசனை இலைகளை போட்டும் குடிக்கலாம்.


இடை இடையில் தர்பூஸ் கடித்துக்கொள்வதும் நல்ல டேஸ்ட் கொடுக்கும்.


சாப்பிட்டு முடித்தவுடன் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம் இருந்தால்... மக்ரோனி, சேமியா போன்றவற்றில் சக்கரை பொங்கல் போலவோ... அல்லது பால் சேர்த்து பாயாசம் போலவோ... உங்களுக்கு பிடித்தாற்போல உங்கள் செய்முறையின் படி உங்கள் ருசிக்கு ஏற்றவாறு செய்து வைத்து கொள்ளலாம்.




அவ்ளோதாங்க...  இனி குடும்பத்தாரை/நண்பர்களை எல்லாம் அழைத்து சஹானை சுற்றி அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கலாம்..!


ம்ம்ம்... எல்லா... பிஸ்மில்லாஹ்...


​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​______________________________________________________________________

இதற்கு முந்தைய எனது  ஒரே 'சமையல் குறிப்பு' பதிவு :-  டோப்பிடஹான்  படித்துவிட்டீர்களா..?

2 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...