அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, March 31, 2012

31 Love Lock - ஓர் இத்தாலிய மூடநம்பிக்கை



80-கள்  மற்றும் 90-களின் ஆரம்பத்தில் எல்லாம் தமிழ் சினிமாக்களில் கிராமிய கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வரும். அவற்றில் மிக முக்கியமாக, நாம் கேள்விப்பட்டிராத ஒரு புதுவகையான மூடநம்பிக்கை ஏதேனும் ஒன்று கட்டாயம் இடம்பெறும்..! இப்பதிவுக்கு தொடர்புடைய மூடநம்பிக்கைகளாக... உதாரணமாக... அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

ஒரு ஹீரோயின் மனைவி, தன் அதிதீவிர சாமி பக்தியின் காரணமாக 'வாரத்துக்கு ஏழு நாட்கள் மட்டும்(!?) விரதம்' இருப்பார். இதனால், தன் ஹீரோ(?) கணவனை தன் அருகில் வரவோ (கனவு டூயட் தவிர்த்து மற்ற நேரங்களில்) தொடவோ அனுமதிக்காத நிலையில்,  'சின்னஞ்சிறுசுங்க கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் ஒரு விசேஷமும் இல்லையே' என்று விஷயம் தெரியாமல், வீட்டில் உள்ள சில  பெரிசுகள்... அந்த மனைவியை... 'தொட்டிகட்ட'(?) சொல்வார்கள் சகோ..!

Monday, March 26, 2012

26 புதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..!

தம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக்கொடுக்க முடியாது. மட்டுமின்றி, விட்டுக்கொடுக்கவே இயலாத விஷயம் ஏதும் ஒன்று பிரச்சினையாகி அதன்மூலம் மனத்தாங்கல் ஏற்பட்டு இனி சேர்ந்து வாழவே இயலாது போனால்... பிரிவதை தவிர வேறு வழி இல்லை..! 


இந்நிலையில் மனம் ஒத்துப்போகாத தம்பதியர் அரசு அனுமதியுடன் அதிகாரபூர்வமாக பிரிதலே விவாகரத்து..! ஏனெனில், பிரிந்தவர்கள் தம் மனம் ஒத்த வேறொவருடன் மறுமணம் புரிய வேண்டுமானால்... இப்படி பிரிந்த  தம்பதியர் அரசிடமிருந்து அதிகாரபூர்வ அங்கீகாரமான விவாகரத்து பெற்றாக வேண்டும். இல்லையேல்... மறுமணத்தில் சட்டசிக்கல் வரும்..! 

Sunday, March 18, 2012

58 பல்லண்டம்... அது பிரம்மாண்டம்..!

ஒரு  வீட்டில் சுமார் 4 பேர். வீதியில் சுமா 100 வீடுகள். ஊரில் சும 50 வீதிகள். அந்த ஊருள்ள வட்டத்தில் சு 70 ஊர்கள். மாவட்டத்தில் சு 8 வட்டங்கள். மாநிலத்தில் சு 30 மாவட்டங்கள். நாட்டில் சு 25 மாநிலங்கள். கண்டத்தில் சு 20 நாடுகள். இந்த உலகத்தில் 7 கண்டங்கள். இந்த சூரிய குடும்பத்தில் 8 கிரகங்கள். சூரிய குடும்பம் உள்ள (பால்வீதி மண்டலம்) மில்கி-வே கேலக்ஸியில்  சுமார்ர்ர்ரர்ர்ர்... 10,000,00,00,000 சூரியன்கள்....... ஐ மீன்....... விண்மீன்கள் உள்ளனவாம்..! 
.
Ours Milky-Way Galaxy...நமது பால்வீதி மண்டலம் (அதன் மையம் ஒரு... கருந்துளையாம்..!!!)

இப்பிரபஞ்சத்திலும் சுமார்ர்ர்ரர்ர்ர்ர்... பத்தாயிரம் கோடி கேலக்ஸிகள் உள்ளனவாம்..!!

அப்புறம் இது போல இன்னும் "ஆறு பிரபஞ்சங்கள்" வேறு இருக்கின்றனவாம்..!!!

எனில், அந்த ஏழாவது பிரபஞ்சத்தின் தூரத்து கடைசி மூலையில் போய் நீங்கள் நின்று கொண்டு... ஹி...ஹி... அங்கிருந்தபடியே... பார்த்து சொல்லுங்கள் சகோ..! நான் உங்களுக்கு தெரிகிறேனா..? எனது அளவு என்ன..?

Wednesday, March 14, 2012

41 தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..? (Photo Gallery)

தொடர்ந்து பல நாட்கள் இரவிலும் பகலிலும் தூங்காமல் கண்விழித்து வேலை செய்பவர்களிடம், வேலையின் தரம் குறையும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதுமிட்டுமின்றி, தூக்கமின்மையால்... சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற பலவித இன்னல்களுக்கும் மனிதன் ஆளாகிறான் என்பதும் கண்கூடு..!  

தூக்கம் / உறக்கம் / நித்திரை / கண்ணயர்தல்... என எப்பெயரில் அது நடந்தாலும், அது ஒரு மனிதனின் மூளையின் செயல்பாடுகள் கூர்மையடையவும், மூளையின் வளர்ச்சி சீராக இருக்கவும், அம்மனிதனின் உடல்நலனுக்கும் அவசியத்தேவை..!

Friday, March 9, 2012

62 கின்னஸ் சாதனையா? சமூக சோதனையா?

நான் சிறுவனாக இருந்தபோது, கின்னஸ் உலக சாதனை என்பது மிகப்பெரிய விஷயமாக போற்றப்படும். அப்போது, உடல் பலத்திலோ அல்லது மதி நுட்பம் மூலமாகவோ செயற்கரிய சாதனைகளை செய்த வீரர்கள் தங்கள் வீரதீரச்செயல்கள் மூலம் உலக சாதனை நிகழ்த்தி அப்புத்தகத்தில் இடம்பிடித்தனர். ஆனால், காலப்போக்கில் சுவாரசியம் மற்றும் புத்தக சர்குலேஷன் கூடவேண்டும் என்பதற்காக... நோஞ்சான்கள், சோம்பேறிகள், சாப்பாட்டு ராமன்கள், கயவர்கள், அயோக்கியர்கள், வேலைவெட்டி இல்லாத போழுது போக்கிகள், குற்றவாளிகள், முட்டாள்கள் செய்யும் உப்புசப்பில்லாத விஷயங்கள் எல்லாம் உலக சாதனைகள் என்ற பெயரில் அந்த கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறத்துவங்கின.

இவை கின்னஸ் சாதனையாக மக்களிடம் போகும் போது, "ச்சே... என்னடா இது...!? இப்படியாக தன் நேரத்தை, பணத்தை, திறமையை வெட்டியாக வீணாக்கி உள்ளார்களே..."  என்று அவர்கள் மீது வெறுப்பையும், பரிதாபத்தையுமே வரச்செய்தன. இதனால் கின்னஸ் சாதனை புத்தகம் தனக்குரிய மதிப்பையும் மரியாதையையும் நிஜ வீரர்களிடம் இழந்தது. ஆனால்... மூடர்களிடம் 'அதில் நாமும் சுலபமாக இடம்பெற்றிடலாமே' என்ற ஆர்வம் அவர்களை எதையும் செய்ய வைத்தது..! அப்படி ஒரு மூடத்தனம்தான் சென்ற வாரம் உலக சாதனையாக போற்றப்பட்டது..! அது என்ன தெரியுமா சகோ..?

Friday, March 2, 2012

31 'பகுத்தறிவாளர்கள்' என்போர் ஓரறிவு ஜீவிகளா..?

சில நாட்கள் முன்பு ஒரு மிகப்பெரிய பரப்பரப்பு திருப்புமுனையாக, உலகின் மிகப்பிரபல பரிணாமவாதியும், அறிவியல் கற்றறிந்த "நாத்திக தீவிரவாதி"-யுமான பேராசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ், "இனிமேல் தான் ஒரு நாத்திகர் அல்ல" என்று அறிவித்து விட்டார்..! 



"கடவுள் இல்லை என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது" என்று ஒத்துக்கொண்டு விட்டார்..!

[Agnostic - கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என நம்புபவர்;  Atheist - கடவுள் நம்பிக்கை இல்லாதவர். (நன்றி: Google translation) ]
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...