இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன் Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.
ஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field) அருகிலிருக்கும் மொபைல் (Base Station - 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station - 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை 'ஓகே' செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.
The impact of cell phone radiation on humans..! & How to overcome it carefully..!
ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) உண்டு. இது 1.6 W/KG (watts per kilogram) எனும் அளவுக்கு குறைவாக இருந்தாக வேண்டும். இது International Standard அளவு. உங்கள் மொபைலில் இது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது உங்கள் உடலுக்கு நல்லது.
நம் செல்ஃபோனுக்கான இந்த SAR-ஐ பின்வரும் மூன்று வழிகளில் அறியலாம்.
- உங்கள் செல்ஃபோனின் கையேடு ( user's manual) மூலம்.
- செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம் மூலமாக.
- செல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து இந்த தளம் மூலமாக.
நீண்ட நேரம் செல்ஃபோனை ' அணைத்த கையும் காதுமாய் ' கதை அடிக்கும் மனிதர்களின் தலைக்குள் ஊடுறுவும் இந்த மின்காந்த அலைக்கதிர்வீச்சு தலைக்குள் சூட்டை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. உதாரணமாய் 15 நிமிடம் அவ்வாறு பேசிய ஒரு 'மொபைல் பேச்சாளரின்' முந்தைய பிந்தைய நிலையை பின்வரும் படம் காட்டுகிறது.
நீண்ட நேரம் காதோடு மொபைல் வைத்து பேசுவோருக்கு... மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, ஞாபகமறதி, காது இறைச்சல், மூட்டுவலி இப்படி உடனடியாக சில தங்கடங்கள் வருமாம்.
தொடர்ந்து இதேபோல 'அணைத்த கையும் காதுமாய் ' செல்ஃபோன் மூலம் நீண்டநேரம் பேசினால்..? பெரியவர்கள் மண்டைஓடு கனமானது. குழந்தைகளின் மண்டைஓடு மெல்லியது. இதனால், பெரியவர்களை விட குழந்தைகள் இக்கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 5-வயது குழந்தைக்கு 75% பாதிப்பும் 10-வயது குழந்தைக்கு 50%-ம், பெரியவர்களுக்கு 25% பாதிப்பும் ஏற்படுகிறதாம்.
ஆக, இதே போல தினம் தினம் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் என சூடாகும் மூளை செல்களில் உள்ள புரோட்டீன் சிதைய, கடைசியில் Brain Tumor-ல் அல்லது சில சமயம் Brain Cancer-ல் கொண்டு போய் விடுகிறதாம்..!
இப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, 'அந்த அளவுக்கெல்லாம்... அப்படியெல்லாம்... ஒன்றும் ஆகாது' என்று இன்னொரு சாரார்... (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக...?) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..? சில வருடங்கள் கழித்து "ஆமாமாம்... அந்த சாரார் சொன்னதே சரி"-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி..? அதோ கதி அல்லவா..!
இப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, 'அந்த அளவுக்கெல்லாம்... அப்படியெல்லாம்... ஒன்றும் ஆகாது' என்று இன்னொரு சாரார்... (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக...?) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..? சில வருடங்கள் கழித்து "ஆமாமாம்... அந்த சாரார் சொன்னதே சரி"-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி..? அதோ கதி அல்லவா..!
'மொபைல் அடிமைகள்' ஆகிவிட்ட நம்மால், இதை எல்லாம் கண்டு பயந்து மிகவும் அரிய அவசிய கண்டுபிடிப்பான... இந்த செல்ஃபோனை "இனி வேண்டாம்" என தூக்கி எறிந்து விட முடியுமா..? முடியவே முடியாது அல்லவா..?
எனில், இறைநாடினால், சில மாற்று வழிகளை கைக்கொண்டு மேற்படி பயங்கர விபரீதத்திலிருந்து தப்பிப்போம்..! அதுவே புத்திசாலித்தனம்..!
இதற்கு சரியான வழி, நீங்கள் செல்ஃபோன் வாங்கும்போது 'ear phone' என்று ஒரு அம்சம் பெட்டியுடன் சேர்த்து கொடுத்திருப்பார்களே..!? ம்ம்ம்... அதுதான்..! அதை தேடி எடுங்கள்..! ஒரு சில நிமிடங்களுக்கு மேலே பேசுவதாயின் கண்டிப்பாய் அதை இனி காதில் மாட்டிக் கொள்ளுங்கள்..! என்னது...? அதை காணவில்லையா...? சரி...வேறொன்று டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..! ஆரோக்கியம் முக்கியம் அல்லவா..?
அதுவரை என்ன செய்யலாம்...? அவசரத்துக்கு, இனி பேசும் போது செல்ஃபோனை காதுக்கும் வாய்க்கும் கிடைமட்டமாக பிடித்து, அதன்மூலம் ஆன்டேன்னா விலிருந்து வெளியேறும் அலைக்கதிர்வீச்சு கூடுமானவரை தலைக்குள்ளே செல்லாதவாறு சற்று தள்ளி பிடித்து பேசுங்கள்.
அப்புறம் 'Speaker Phone' என்று ஒரு அம்சம் உள்ளதே..! அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்..? அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் 'Speaker Phone' உபயோகித்தும் பேசலாமே..!
அப்புறம் 'Speaker Phone' என்று ஒரு அம்சம் உள்ளதே..! அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்..? அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் 'Speaker Phone' உபயோகித்தும் பேசலாமே..!
'டவர் சிக்னல் வீக்' என்று மொபைல் காட்டினால், அந்த இடங்களில் பேசுவதை தவிருங்கள். ஏனெனில், கஷ்டப்பட்டு சிக்னலை பிடிக்க அலைக்கதிர்வீச்சு அப்போது உச்சத்தில் இருக்கும். பாதிப்பும் நிறைய. உடனே... சிக்னல் முழுக்க கிடைக்கும் இடமாய் தேடிச்சென்று பேசுங்கள். கதிர்வீச்சு அளவை குறைத்துக்கொள்ளலாம்.
'பொதுவாக யாருடனேனும் நீண்ட நேரம் கடலை போட்டேயாக வேண்டும்' என்றால், இருக்கவே இருக்கே land-line phone..! அதை உபயோகியுங்கள்..! எந்த பயமும் இல்லை... முக்கியமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்து பல மணிநேரம் பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலையே இல்லையே...! ஹி..ஹி... :))
இனி... மொபைல் சோதனைகளை எல்லாம் கடந்து அதன் மூலம் சாதனைகள் பல செய்வோம்... சகோ..!
-------------------------------------------------------------------------------------------------------------------------
ப்ளூடூத் ஹெட்செட் மற்றும் கார்ட்லெஸ் ஃபோன்
பற்றிய விளக்கத்திற்கு...நீ...ண்டநேரம் Bluetooth Headset/Cordless Phone உபயோகிக்கிறீர்களா சகோ..?
....எனும் இந்த பதிவையும் அவசியம் படியுங்கள் சகோ..!
-------------------------------------------------------------------------------------------------------------------------
57 ...பின்னூட்டங்கள்..:
CLICK TO READ
===> செல்போன் கோபுரங்கள்.`உஷார்'
..
நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அருமையான விழிப்புணர்வு பதிவு இந்த பதிவில் உங்களின் கடுமையான உழைப்பு தெரிகிறது
(இறைவன் உங்களுக்கு நற்கூலியளிப்பானாக)
அப்புறம் சகோ ear phone' அதை தேடிப் பார்த்தேன் காணவில்லை
(இன்ஷா அல்லாஹ்)சாய்ங்காலம் டூப்பிளிகேட் வாங்க வேண்டும்
நன்றி சகோ
நல்ல தகவல்....
Good awareness info. Thanks for sharing.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
எல்லா மனிதர்களுக்கும் இறைவன் நேர்வழி காட்டுவானாக!
எல்லோரும் தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டிய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துகள்!
பொதுவாக யாருடனேனும் நீண்ட நேரம் கடலை போட்டேயாக வேண்டும்' என்றால்,///
கடலைனா?
அஸ்ஸலாமு அலைக்கும்!
அவசியமான பதிவு சகோ ஆஷிக்!
செல் போன் இல்லாதவர்கள் யாரும் இல்லை எனும் அளவுக்கு இதன் தாக்கம் பலரையும் ஆக்கிரமித்துள்ளது. செல் போன் ஒரு அவசிய தேவை என்பதால் தவிர்க்கவும் முடியாது. எனவே நீங்கள் சொல்வது போல் ஏர் போன் வசதியை அனைவரும் பயன் படுத்தினால் இந்த தீங்கிலிருந்து தப்பிக்கலாம். தற்போது கணிணி இணைததின் மூலம் பலரும் பேசுவதால் இந்த குறை நீக்கப்படுகிறது. சிக்கனமாகவும் பல மணிகள் பேசிவிடலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.ஆஷிக், செல்போன் ஆபத்துக்கள் பற்றி பல பதிவுகள்.அதில் உங்கள் பதிவு இன்னும் சிறப்பானது.பகிர்வுக்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
அருமையான பதிவு இதன் மூலம் பல தெளிவுகளை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி நன்பரே.
@tamilan
நன்றி சகோ.தமிழன்.
@THOPPITHOPPIநன்றி சகோ.தொப்பிதொப்பி.
@ஹைதர் அலி அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் பிரார்த்தனைக்கும் கணிப்பிற்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
ஹலோ...
ஒரு பேச்சுக்கு... அட்லீஸ்ட்... //டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..!// என்றால்... "டூப்பிளிகேட்தான் வாங்குவேன்" என்றால்... என்னங்க சகோ..? ஒரிஜினலே வாங்குங்க சகோ..!
@எஸ்.முத்துவேல் //நல்ல தகவல்....//--மிக்க நன்றி சகோ.முத்துவேல்.
@ஹுஸைனம்மாநன்றி சகோ.ஹுசைனம்மா.
@M. Farooq வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
மிக்க நன்றி சகோ.ஃபாரூக்.
@முஸ்லிம் //கடலைனா?//--சாப்பிடக்கூடிய நிலக்கடலை அல்ல.
@சுவனப்பிரியன்
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//தற்போது கணிணி இணைததின் மூலம் பலரும் பேசுவதால் இந்த குறை நீக்கப்படுகிறது. சிக்கனமாகவும் பல மணிகள் பேசிவிடலாம்//---நல்ல தகவல் சகோ.சுவனப்பிரியன்.
DESK-TOP PC OK. ஆனால், அதேநேரம் 'மடிக்கணினி'(LAP-TOP) மூலம் மடி சூடாவதால் அடுத்து அதன்மூலம் வேறு புதிய பிரச்சினைகள் முளைக்கின்றன...!
எனவே, இனி "LAP-TOP / மடிக்கணினி" என்ற நோய் தரும் அந்த தவறான பெயரை உடனே மாற்றியாக வேண்டும்.
என்ன பெயர் வைக்கலாம்...?
.....
.....
" HANDY-PC...?"
"கைகணினி...?"
.....
.....
இது ஓகேவா..?
@மு.ஜபருல்லாஹ் அலைக்கும் ஸலாம் வரஹ்...
//செல்போன் ஆபத்துக்கள் பற்றி பல பதிவுகள்.அதில் உங்கள் பதிவு இன்னும் சிறப்பானது//--அல்ஹம்துலில்லாஹ்...
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.ஜபருல்லாஹ்.
@அந்நியன் 2 அலைக்கும் ஸலாம் வரஹ்...
மிக்க நன்றி சகோ.அய்யூப்.
நல்ல தகவல்கள்!
மிக்க நன்றி சகோ!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நல்ல விழிப்புணர்வு, பகிர்வுக்கு நன்றி.
மிக அவசியமான தகவல்... நன்றி...
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.அவசியமான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு
நடைபாதையில் கிடக்கும் இடையூறுகளை அகற்றி மக்களுக்கு நன்மை உண்டானால் அதார்க்கு இறைவனிடம் நன்மையையே கூலியாக பெறலாம்.தங்களின் இந்த பதிவு மூலம் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தங்களுக்கு இன்ஷா அல்லாஹ் இறைவனிடம் தக்க கூலி கிடைக்கும்.ஆமின்.
அஸ்ஸலாமு அலைக்கும்
சிறந்த பதிவு சகோதரா
பிளாக்கருக்கான அழகிய மெனுபார்கள் -(பிளாக்கர் டிப்ஸ்)
செல்போன் பயன்பாட்டால் எலும்புகள் பாதிக்கும்: ஆய்வு
வாஷிங்டன்: செல்போனில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளால் எலும்புகள் பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான ஆண்கள் தங்கள் பெல்டின் வலப்பக்கம் செல்போன்கள் வைத்திருப்பது வழக்கம். அவ்வாறு செல்போனை இடுப்பிலேயே வைத்திருப்பவர்களுக்கு வலப்பக்க இடுப்பு எலும்பின் உறுதி குறைகிறது என்று நேஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். பெர்னான்டோ டி ஸ்ராவி தெரிவித்துள்ளார்.
இதே போன்று செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருப்பவர்களுக்கு தொடை எலும்பின் உறுதி குறைந்து வலுவிழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம். செல்போனை எவ்வளவு நேரம் பாக்கெட்டிலோ, பெல்டிலோ வைத்திருக்கிறார்களோ அதற்கேற்ப பாதிப்பின் விகிதம் மாறுபடும்.
எந்த அளவு செல்போனை உடலிலிருந்து விலக்கியே வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு உடலுக்கும் நல்லது, எலும்புக்கும் நல்லது.
SOURCE: http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/27-cellphone-use-weaken-bone-strength-aid0128.html
செல்போன் பாக்டீரியாக்கள் .
செல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கழிப்பறைக் கதவின் கைப்பிடியில், பல நூறு பாக்டீரியாக்கள் படிந்திருக்கும். கழிப்பறைக்குச் சென்று வந்தபின் கைகளை நன்றாய் சோப்பு போட்டுக் கழுவுவதன் மூலம், பாக்டீரியாவின் பாதிப்பிலிருந்து தப்பலாம். ஆனால், நாம் அண்மைக்காலமாக அதிகம் பயன்படுத்தும் செல்போன்களில், கழிப்பறைக் கதவின் கைபிடியில் உள்ளதுபோல், பல மடங்கு பாக்டீரியாக்கள் படிந்துள்ளன.
சமீபத்தில், இலண்டனில் பயன்படுத்தப்படும் செல்போன்களிலுள்ள பாக்டீரியாக்கள் குறித்து, ஜிம் பிரான்ஸிஸ் என்ற சுகாதாரத்துறை நிபுணர் ஒரு ஆய்வு நடத்தியுள்ளார். அந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி தரத்தக்கவையாயிருந்தது.
அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட ஆறு கோடி செல்போன்களில், சராசரியாக 25 சதவிகித செல்போன்களில், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பாக்டீரியாக்கள் இல்லாத இடமே இல்லை. எனினும், பாதுகாப்பான அளவென்று ஒன்று உண்டு.
ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, பல செல்போன்களில், 18 முதல் 39 மடங்கு வரை பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி இருக்கின்றன. இது போதாதென்று. உணவை நஞ்சாக்கும் “இ-கோலி” மற்றும் “ஸ்டெபைலோகாக்கஸ்” போன்ற பாக்டீரியாக்கள் தற்போது செல்போன்களில் குடியிருக்கத் துவங்கிவிட்டன.
ஜிம்மின் ஆராய்ச்சியில், சுவாரசியமான தகவலொன்று உண்டு. அவரின் ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப்பட்ட செல்போன்களில், அதிக அளவு பாக்டீரியாக்களை வைத்திருந்தவருக்குத் தீராத வயிற்று வலி இருந்து வந்தது தெரியவந்துள்ளது. ஆய்வின் உபயத்தால், அவருக்கு வயிற்றுவலி தீர்ந்ததோ இல்லையோ, பலருக்கு நோய் வரும் காரணம் செல்போனென்று தெரிந்து கொண்டோம் நாம்.
செல்களைக் கழுவ முடியாது. கைகளை நன்றாய்க் கழுவுங்கள்.
THANKS TO: உணவுஉலகம் BLOGSPOT.
@Karikal@ன் - கரிகாலன் //நல்ல தகவல்கள்!//--மிக்க நன்றி சகோ.கரிகால்@ன்..!
@இளம் தூயவன்அலைக்கும் ஸலாம் வரஹ்... //நல்ல விழிப்புணர்வு//--மிக்க நன்றி சகோ.இளம்தூயவன்.
very useful!
@ச.சரவணன், //மிக அவசியமான தகவல்//--மிக்க நன்றி சகோ.ச.சரவணன்.
@ரஹீம் கஸாலி அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அவசியமான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு//--மிக்க நன்றி சகோ.கஸாலி.
@Barariதங்கள் கருத்திற்கும் துவாவிற்கும் மிக்க நன்றி சகோ.பராரி.
நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!
@Farhathஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//சிறந்த பதிவு சகோதரா//--மிக்க நன்றி சகோ.ஃபர்ஹத்.
உங்கள் தளம் வலைப்பதிவர்களுக்கு மிகவும் அவசியமான தளம். அவ்வப்போது வர வேண்டி புக்மார்க் செய்து கொண்டேன். அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோ.
@tamilan
பல அரிய அறிவியல் தகவல்களை பின்னூட்டத்தின் வாயிலாக மக்களுக்கு அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.தமிழன்.
@Geetha6//very useful!//--மிக்க நன்றி சகோ.கீதா.
நல்லதொரு சிந்திக்க வேண்டிய விஷயம்.
ப்ளுடூத் இயர் ஃபோன் உபயோகிக்கலாமா...?
அது எப்படி..?
@இறைநேசச்செல்வன்மிக்க நன்றி சகோ.
"..BLUETOOTH EARPHONE.."
---அடடா...! கேட்டுவிட்டீர்களே..!
இறைநாடினால் எனது அதுத்த பதிவே இதைப்பற்றித்தான் சகோ...!
இதுபற்றி நிறைய சொல்ல வேண்டி இருந்ததால் இப்பதிவில் சொல்லவில்லை.
இதிலும் அதே மைக்ரோவேவ் டேஞ்சர்தான் உள்ளது சகோ.
உங்களிடம் இது இருந்தால் கூட அதை உபயோகப்படுத்தவேண்டாம்...!
@ இறைநேசச்செல்வன் & அனைவருக்கும்,
இப்படி சொல்லி இருந்தேன்...///உங்களிடம் இது இருந்தால் கூட அதை உபயோகப்படுத்தவேண்டாம்...!///---இங்கே ஒருவிஷயம் சொல்ல வேண்டும்.
அது "எப்படிப்பட்ட புளூடூத் இயர்ஃபோன்" என்பதை பொருத்தும்...
"எவ்வளவு நேரம்" நீங்கள் அதில் பேசக்கூடியவர் என்பதை பொருத்தும்...
அது 'நல்லதா கெட்டதா' என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் சகோ.
அதில் நிறைய வகைகள் உண்டு. 'எல்லாமே தீயவை அல்ல' என்பதை மட்டும் இங்கே சுருக்கமாக சொல்லிக்கொள்கிறேன்.
cordless phones-ம் இதேபோலத்தானே..?
@இறைநேசச்செல்வன்//cordless phones-ம் இதேபோலத்தானே..?//
CORDLESS PHONE'S BASE-STATION நம்ம செல்ஃபோன் டவர் மாதிரி என்றால்...
CORDLESS PHONE'S HAND-SET நம்ம செல்ஃபோன் மாதிரி...
இங்கேயும் அதே மைக்ரோவேவ் கதிர்வீச்சு உண்டு என்றாலும், அது CELL PHONE-ல் உள்ளது போல அல்ல. ரொம்ப கம்மி. ஏனெனில் இரண்டுக்கும் தூரம் மிக மிக கம்மி என்பதால்..!
இதனால் இதில் மணிக்கணக்கில் பேசுவோருக்கு செல்ஃபோனில் பேசும் அளவுக்கு பாதிப்பு இதில் வராதுதான்.
-------------------X------------------
அப்புறம்....
இப்பதிவில் நான் சொல்லவந்த முக்கியமான ஒன்றை மறந்து விடாதீர்கள்...
நான் பதிவில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சிகப்பில் என்ன சொல்லி இருக்கிறேன்..?
'செல்ஃபோனை அணைத்த கையும் காதுமாய்' செல்ஃபோனில்.........
நீ...........ண்டநேரம் மணிக்..........கணக்காய்
பேசுவோருக்கான எச்சரிக்கை பதிவுதான் இது..!
அப்படி பேசுவோர் என்னமுறைகளை கையாளவேண்டும் என்றும் சொல்லியுள்ளேன்.
மற்றபடி, சிறப்பான இந்த நவீன கண்டுபிடிப்புகளுக்கு...
...எதிர்ப்பு பதிவு இது அல்ல...சகோ..!
Can you add the download your posting as a pdf file.
Thank you.
nisc
@shanmugavel//nisc//---? "நிஸ்க்"?---சகோ.ஷன்முகவேல்... இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. ஏதேனும் லேட்டஸ்ட் பதிவுலக கோட் வேர்டாக இருக்குமோ..?
@Anonymous"Can you add the download your posting as a pdf file."---Why not..?
Please, see just above the தமிழ்மணம் ஓட்டுப்பட்டை as...
\\\"PDF வடிவில் பதிவிறக்க"///
has been added after your request.
இப்போது ஓகேவா சகோ...?
Enjoy...!!!
@இறைநேசச்செல்வன் & அனைவருக்கும்...
உங்கள் கேள்விகளுக்கு விடையாக...
நீ...ண்டநேரம் Bluetooth Headset/Cordless Phone உபயோகிக்கிறீர்களா சகோ..?
என்ற அடுத்த பதிவையும் பாருங்கள் சகோ...!
" உங்கள் கேள்விகளுக்கு விடையாக...
அடுத்த பதிவையும் பாருங்கள் சகோ...!"
===மிகவும் நன்றி.
எங்கோ இருந்து நமது செல்லுக்கு ஒரு கோல் வந்தால் அதை மட்டும்தான் நாம் பார்க்கிறோம், நீண்ட நேரம் காதில் வைத்திருப்பது, அதன் மூலம் ஏற்படும் சாதக, பாதம் குறித்து சிந்திப்பதே இல்லை. இப்படியானவர்களுக்கு நல்ல விழிப்புணர்வு பதிவு. பட விளக்கங்கள் அசத்தலானவை. நன்றி.
@Issadeen Rilwan - Changes Do Club நம்மை சூழ்ந்துள்ள அனைத்து வித அலைகளையும் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்வது தற்போது அவசியமாக இருக்கிறது, சகோ.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரிள்த்வான்.
Dear brother Mohammad Ashik,
Assalamu Aleykum wa rahmatullahi wa barakatuh,
Jazakkallahu kheir brother for this useful article !
May ALLAH(swt) reward you for your good deed... Aamin...
Your sister,
M.Shameena
@ஏம்.ஷமீனாஅலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்கத்துஹ்...
தங்கள் வருகைக்கும் துவாவிற்கும் மிக்க நன்றி சகோ.ஷமீனா.
மேலும், May ALLAH(swt) reward you for your good deed... Aamin...
nalla pathivu sir
@Mahan.ThameshThank you sir.
phonum kaiyuma irukiravanka ippayavatu thirundunga.........
GOOD AWARNESS.
@JAFARதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜாஃபர்.
வணக்கம் சகோ!
தெளிவானவிளக்கங்கள்அறிய தங்களின் தளம் உதவியதுநன்றி
மிக்கநன்றி.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!