அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, July 27, 2013

2 என்னாது..? ரமளான் புனித மாதமா..!?கேள்வி : இஸ்லாத்தில் ரமளான் புனித மாதமா..? 
பதில் : இல்லை..!

சில விஷயங்கள் நாளடைவில் நமது பேச்சு வழக்கில் "புனிதமிக்க மாதமான ரமளான்... ரமளான் எனும் புனித மாதம்..." என்று திரும்ப திரும்ப பேசி எழுதி எல்லா இடத்திலும் தவறான கருத்துருவாக்கம் கொண்டு மனதின் ஆழத்தில் அதுவே சரிபோல பதிந்து விடுகிறது. பின்னர் அதை எப்பாடு பட்டு நீக்க போராடினாலும் மிகவும் கடினமாகிவிடுகிறது. மார்க்கத்தில் பல்வேறு விஷயங்கள் இப்படித்தான் சமூகத்தில் புரையோடிப்போய் உள்ளது. இதற்கு இன்னொரு உதாரணம் தான் "ரமளான் ஒரு புனிதமாதம்" என்ற நமது தவறான புரிதல்..!

இதை அதிகமாக முஸ்லிம் அல்லாத மக்களே... 'சிறப்பித்து உயர்வாக சொல்ல வேண்டும்' என்ற நல்ல எண்ணத்தில்தான் இப்படி சொல்லப்போக நாளடைவில் முஸ்லிம்கள் மனதிலும் அப்படியே அழுத்தமாக அமர்ந்து விட்டது..!

'ரமளான் புனித மாதம்'  இது இஸ்லாமிய அடிப்படையில் தவறு..! 

ரமளான் புனித மாதம் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை. வேறு பல சிறப்புகள் கொண்ட மாதமே ரமளான்..! அதே நேரம் அல்லாஹ்வும் ரசூலுல்லாஹ்வும் வேறு நான்கு மாதங்களைத்தான் முஸ்லிம்களுக்கு புனித மாதங்களாக்கி இருக்கிறார்கள். அந்த நான்கில்  ரமளான்  இல்லை..!

எனவே... நாம் நம் இஷ்டத்துக்கு அஞ்சாவதா ஒரு மாசத்தை சேர்க்க கூடாது. அதற்கு நமக்கு அனுமதியோ அதிகாரமோ இல்லை.

Tuesday, July 23, 2013

9 தமிழக காலிக்கல்வி கூடங்கள்

தமிழக அரசுப்பள்ளிகளைப்பற்றி அதிர்ச்சியூட்டும் அறிக்கை..!Rashatriya Madhayamic Shikasha Abhiyan (‪‎RMSA‬) என்ற அமைப்பு எடுத்த 2012-13 கணக்கெடுப்பில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Wednesday, July 3, 2013

2 '#பயங்கரவாதம்' - ஏன்? எதற்கு? எப்படி? எதனால்?

'#பயங்கரவாதம்'
# - மத/இன/சாதி/மொழி/கொள்கை

நான் அறிந்தவரை எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்ய சொல்லி பயங்கரவாதத்தை போதிக்கவில்லை. ஆனால்... இன்று உலகில் 'பயங்கரவாதிகள்' இருக்கிறார்கள் என்றால்... அதற்கு எந்த மதமும்  காரணம் அல்ல..! எனில், 'மத/இன/சாதி/மொழி/கொள்கை பயங்கரவாதம்' எல்லாம் எப்படி முளைக்கிறது...?

அநீதமான ஆட்சியாளர்களால்தான்..!
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...