தமிழக அரசுப்பள்ளிகளைப்பற்றி அதிர்ச்சியூட்டும் அறிக்கை..!
Rashatriya Madhayamic Shikasha Abhiyan (RMSA) என்ற அமைப்பு எடுத்த 2012-13 கணக்கெடுப்பில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
=>சென்னை, விழுப்புரம், வேலூர், நீலகிரி, மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மொத்தம் 16 அரசுப்பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட பணியில் இல்லை..!
==>மொத்தமாக... தமிழ்நாட்டின் 2,253 அரசுப்பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாக அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது..! இதில், அதிக பட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 195 அரசுப்பள்ளிகள் இப்படி 'ஓராசிரியர் பள்ளி'யாக உள்ளன. மொத்தமாக மாநிலத்தில் 83,641 மாணவர்கள் ஓராசிரியர் பள்ளியில் பயிலுகின்றனர். இவர்களில் ஓராசிரியர் கொண்டு SSLC & +2 படிப்போர் 765 மாணவர்கள்..!
===>அடுத்து, மாநிலத்தில்... 16,421 அரசுப்பள்ளிகளில் இரண்டே 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும் அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது..!
====>தமிழ்நாட்டில், 21,931ஆசிரியர் பணி இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன..! இதில் வேலூர் மாவட்டத்தில் மட்டுமே 3000 போஸ்ட் வேகண்ட்...!
=====>மாநிலத்தின் 387 அரசுப்பள்ளிகளில்... PTR (pupil-teacher ratio) எனப்படும் "இத்தனை மாணவர்க்கு இத்தனை ஆசிரியர் எனும் விகிதம்" 100 ஐ தாண்டி உள்ளது..! இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 லட்சம்..!
ஆனால்... நகரங்களில் அதிலும் குறிப்பாக சென்னையில் ஆசிரியர் பணி இடங்களை தாண்டி மித மிஞ்சிய நிலையில் தேவைக்கு அதிகப்படியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். பிரச்சினை நகருக்கு வெளியே உள்ள கிராமப்புற பள்ளிகளில்தான்.
ஆக... இதுதான் கல்விக்கண்ணை திறப்பதில் நமது மாநிலத்தில் அரசின் இன்றைய நிலை..!
ஆனால்... கண்ணை மூடவைக்கும் டாஸ்மாக்கில் நம் அரசின் செயல்பாடு எப்படி தெரியுமா ..?
//As of 2010, the TASMAC has around 30,000 employees and operates about 6800 retail liquor outlets throughout the state: Wikipedia//
அங்கே... 21,931 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கல்விக்கூடங்கள் காலியாக கிடக்க...

இங்கே... ஒவ்வொரு ஒயின்ஷாப்பிலும் தலா நாலு பேருக்கு மேலே பணியில்
அமர்த்தப்பட்டு மக்கள் சேவையாற்றி வருகிறது நம் 'குடி'அரசு..! அரசின் எந்த ஓர் ஒயின்ஷாப்பும் பணியாளர் இன்றி காலியாக இல்லை..!
ச்சே_என்ன_மாதிரியான_ஆட்சியில்_வாழ்கிறோம்_நாம்..!
Thanks to news source :

9 ...பின்னூட்டங்கள்..:
என்ன செய்யலாம்...?
அஸ்ஸலாமு அலைக்கும்,
மிகவும் வருத்தமளிக்கும் செய்தி :-( என்ன சொல்லுவதென்று கூட தெரியவில்லை
உண்மையிலே இது அதிர்ச்சி தரும் செய்தி தான்...
எப்பா.. உலகம் எங்க போய்கிட்டு இருக்கு...?? ஆசிரியர் இல்லாத பள்ளில படிக்கிற அந்த பசங்களோட எதிர்காலத்த நினைச்சாவே கவலையா இருக்கு...
இறைவா!! இனம்,மொழி,மத,நிற வேற்றுமைகள் இன்றிஉலக மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி கொடுக்கக் கூடிய திறமை உள்ள ஆட்சியாளரைத் தருவாயாகா.... ஆமீன்...
நானும் தொலைக்காட்சியில் இன்று பார்த்தேன். இதையெல்லாம் கவனிக்க தமிழக முதல்வருக்கு எங்கே நேரம்? இன்று நட்டால் இன்றே பூக்க வேண்டும் என்பதுபோல் அம்மா உணவகம், அம்மா மலிவு விலை காய்கறி, இலவச அரிசி என்று போட்டால் உடனே ஓட்டு வந்து விழும். இன்றைய தலைமுறைக்கு பாடம் புகட்டினால் ஓட்டு வந்து விழ பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகுமே.
@திண்டுக்கல் தனபாலன் அரசுக்கு பல்வேறு வழிகளில் கோரிக்கை வைக்கலாம். நிலைமை இப்படியே தொடர்ந்தால் மக்களை திரட்டி மனித நலன் பேணும் அமைப்புகள் இயக்கங்கள் கட்சிகள் தலைமையில் அணிதிரண்டு போராடலாம். வேறு ஐடியா இருந்தால் சொல்லுங்க சகோ.தனபாலன்.
@aashiq ahamedஅலைக்கும் சலாம் வரஹ்.., இப்போதைக்கு இந்த கோர நிலைக்கு பொறுப்பில் உள்ள கல்வி அமைச்சருக்கு கண்டனம் சொல்லி வைப்போம்..!
@சிராஜ்ஆமீன்..!
@டிபிஆர்.ஜோசப்//இன்று நட்டால் இன்றே பூக்க வேண்டும்//---என்று காமராஜர் போன்ற அப்போதைய முதல்வர்கள் நினைத்திருந்தால்... கல்வியில், பொருளாதாரத்தில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் கட்டக்கடைசியில் இருந்திருப்போம்.
//இன்றைய தலைமுறைக்கு பாடம் புகட்டினால் ஓட்டு வந்து விழ பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகுமே.//
காமராஜர் இன்று தேர்தலில் நின்றால் அவருக்கே எனது ஓட்டு..!
தங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரர்களே.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!