அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, September 29, 2011

4 பேறுகால பெண்களை வஞ்சிக்கும் அமெரிக்க-ஆஸி.அரசுகள் (final part)

இன்றைய உலகில், கணவன் மட்டும் ஈட்டும் வருவாய் குடும்பத்தின் வளமான வாழ்வுக்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். அதிக வருவாய்க்கு 'அவசிய தேவை உள்ளது' என்றால்... கணவன்தான், தனக்கு அதிக வருவாய் வரும் வேறொரு வேலைக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு மாற்று வேலை தேடி, சேர வேண்டும். ஆனால், பொதுவாக இன்னொரு குறுக்கு வழியை ஆண்களில் பலர் தேர்ந்தெடுக்கின்றனர். அது மனைவியை வேலைக்கு அனுப்புவது..!

Tuesday, September 27, 2011

12 மனைவி எனும்...தாய் எனும்...(first part)

பொதுவாக ஆண் பெண் இருபாலருக்கும் கலவியல் இன்பம் என்பது பொதுவானதாகவே இருப்பினும், இதனால் விளையும் இனப்பெருக்கம் மூலம் கிடைக்கும் குழந்தைச்செல்வமும் இருபாலருக்கும் உரிமையுள்ள பொதுவானதாகவே இருப்பினும், இதில், பெண்ணுக்கு மட்டுமே சுமார் 280 நாட்கள் கருவை சுமந்து, வளர்த்து, பிரசவித்து சுமார் இரண்டு வருடங்கள் தினமும் பலமுறை அவ்வப்போது தாய்ப்பாலூட்டி கண்ணுங் கருத்துமாக சீராட்டி வளர்த்தல் என்று மனிதப்படைப்பு ஒரு பக்க பால் சார்பாக(?) விதியாகியுள்ளது.

Wednesday, September 21, 2011

19 'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:-அமெரிக்க CRS அறிக்கை.!

Congressional Research Service(CRS) : இது அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளில் உளவு பார்த்து அறிக்கை தரும் ஓர் அமைப்பு எனலாம். சுமார் 900 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் விழுங்கித்தான் இந்த வேலையை பார்க்கிறது. இதன் அறிக்கை ரகசியமாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மட்டுமே தரப்படும். இது அமெரிக்க அரசு தன் அயலுறவு கொள்கையை முடிவு செய்யும்போது இதனையும் ஒரு பொருட்டாக பார்க்குமாம். அதில் முக்கியத்துவம் இருக்குமாயின் அறிக்கை இரகசியமாக வைக்கப்படும். இல்லையேல், உறுப்பினர்களால் மக்களுக்கு அவ்வப்போது இவ்வறிக்கைகள் 'லீக்' செய்யப்படுவதும் உண்டு. காரணம், 'இது போன்ற அதிரடி வேலைகளை எல்லாம் அமெரிக்கா செய்கிறது' என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்ளவும், செலவு கணக்கு காட்டவும்தான். 

Sunday, September 18, 2011

28 இது.. நரகாசுரன் கொண்டாடும் தீபாவளி..!

2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோர தாண்டவம் ஆடிய குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டதும்... ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், பல்லாயிரக் கணக்கானோர் படுகாயப் படுத்தப்பட்டதும், இலட்சக் கணக்கானோர் உடைமைகள் களவாடப்பட்டதும்... ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கண்களில் அகப்பட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு முஸ்லிமும்  தப்ப இயலாதவாறு சுமார் 2 மாதங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டதும்... இதற்கெல்லாம்... ஆரம்பமாக 3 நாள் சட்டம் ஒழுங்குக்கு விடுமுறை அளித்துவிட்டு... இந்த "அமைதிச்சீரழிவு" & "மதவெறி" இவற்றுக்கு எல்லாம் மூல காரணம் இன்னார் என்று தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன் அப்பட்டமாக நிரூபிக்கப்பட்ட ஹிந்துத்துவா நரகாசுரர்களின் தலைவன்தான் நர்ர்ர்ரேந்திர மோட்ட்டி..! 

Friday, September 16, 2011

34 குருபூஜைகள் அவசியமா..?

சகோ..! ஒரு நிமிஷம்..! நான் சாதிவெறிக்கு எதிரானவன் மட்டுமல்ல. சாதி மீது நம்பிக்கை இல்லாதவன் மட்டுமல்ல. சாதியை ஒழித்து அதை முற்றுமாய்  மறந்து வாழ்ந்துவரும் சமூகத்தில் பிறந்து வளர்ந்து அப்படியே வாழ்பவன் மட்டுமல்ல. என் சமூகம் போலவே என் மொழி பேசும் இதர மக்களும் சாதியிலிருந்து விடுபட வேண்டும் என்று பேராவல் கொண்டவன். ஆதலால், நான் யாருக்கும் சார்பாகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ இந்த கோரிக்கையை இங்கே வைக்கவில்லை. சாதி வெறி மூலம் மக்கள் உயிருக்கும் உடமைக்கும் அமைதிக்கும் குந்தகம் நேரும் இந்நேரத்தில் நாம் சற்று நிதானமாகவும் ஆழமாகவும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

Tuesday, September 13, 2011

21 காக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு...

தலையே சிதறப்போகுது...! ஆனால், ஒரு காது மட்டும் செவிடாகக்கூடாதாம்...!
சகோ..! சிலர் ஒரு கருத்தை சொல்லுவர். அதற்கு நேர்மாறாய் அவர்களின் செயல் இருக்கும். இதுபோன்ற முரண்பாடுகள் நம்மை சுற்றி நிறைய உண்டு என்றாலும்... எனக்குத்தெரிந்த என்னை அதிகம் அலைக்கழித்த பத்து முரண்பாடுகளை கீழே தொகுத்துள்ளேன். காரணம், இவற்றால் மக்களுக்கு நல்லது ஏதும் விளைவதில்லை அல்லது கேடு விளைகிறது. உங்களுக்கு இதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். மேலும், புதிய முரண்பாடுகள் என்று நீங்கள் வேறு சிலவற்றை நினைக்கலாம். அவற்றையும் பகிருங்கள்.

Friday, September 9, 2011

36 " படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..? "

"குட்டி சுவர்க்கம்" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய "படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்?"  --க்கு எதிர்பதிவு இது..!

அதிராம்பட்டினத்தில் 1வது முதல் 5வது வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் co-education-இல் படித்திருக்கிறேன். பின்னர்... காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில்  படித்தேன். இது ஆண்கள் பள்ளி என்றாலும்... +1  மற்றும் +2  மட்டும் co-education..!  ஆனால் அங்கே 6வது மற்றும் 7வது மட்டும்தான் படித்தேன். பிறகு ஆங்கில வழி கல்வி பயில பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8வது முதல் +2  வரை பயின்றேன். இதுவும் ஆண்கள் பள்ளி என்றாலும்... 6வது முதல் 10வது வரை நான் படித்த English medium மட்டும் co-education..! அப்போது நான்...

Saturday, September 3, 2011

31 சவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...

சவூதியில் "ஹுரூப்"  "Run away "  "هرب" என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று 'ஹுரூப்' என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோஸியேஷன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு  இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இதென்ன சட்டம்... "ஹூரூப்"...?

Thursday, September 1, 2011

55 பதிவரே..! நிறுத்துங்கள் மூளைச்சலவையை..!

தற்கொலையை 'போராட்டம்' என்பதை நான் ஒவ்வொரு முறையும் எதிர்த்துள்ளேன். எந்த காரணத்துக்காகவும் யார் செய்தாலும் எதிர்த்துள்ளேன். இப்படி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு போராடுவது போராட்டம் அல்ல. எதிரியால் கொல்லப்படாத அது வீரமரணமும் அல்ல. தற்கொலை என்பது... 'போராட்டத்தில் எங்கே நாம் தோல்வி அடைந்து விடுவோமோ' என்று அஞ்சும் கோழைகளின் செயல்..! தற்கொலை என்பது... ஒருவேளை தோல்வி ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து தப்பிக்க எண்ணி முன்பே எடுத்து வைத்துக்கொள்ளும் முன்ஜாமீன்..! ஒரு வீரருக்கு வெற்றியை அனுபவிக்க உயிர் மிக அவசியம்.  
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...