அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, September 18, 2011

28 இது.. நரகாசுரன் கொண்டாடும் தீபாவளி..!

2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோர தாண்டவம் ஆடிய குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டதும்... ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், பல்லாயிரக் கணக்கானோர் படுகாயப் படுத்தப்பட்டதும், இலட்சக் கணக்கானோர் உடைமைகள் களவாடப்பட்டதும்... ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கண்களில் அகப்பட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு முஸ்லிமும்  தப்ப இயலாதவாறு சுமார் 2 மாதங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டதும்... இதற்கெல்லாம்... ஆரம்பமாக 3 நாள் சட்டம் ஒழுங்குக்கு விடுமுறை அளித்துவிட்டு... இந்த "அமைதிச்சீரழிவு" & "மதவெறி" இவற்றுக்கு எல்லாம் மூல காரணம் இன்னார் என்று தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன் அப்பட்டமாக நிரூபிக்கப்பட்ட ஹிந்துத்துவா நரகாசுரர்களின் தலைவன்தான் நர்ர்ர்ரேந்திர மோட்ட்டி..! 

டெல்லியிலிருந்து குஜராத் சென்று ஆய்வு மேற்கொண்டு, "இலட்சக்கணக்கானவர்களை முகவரியில் காணவில்லை என்பதால்... இந்த கெட்ட கேட்டில்... உனக்கு தேர்தல் ஒரு கேடா..?" என்பதுபோல போதுத்தேர்தலையே கேன்சல் செய்துவிட்டு சென்றார் தேர்தல் கமிஷ்னர்..! என்னே ஒரு கேவலம்..! எவ்வளவு பெரிய அவமானம்..! அதுமட்டுமா... அப்போது கலவர நேரத்தில் மோடியுடன் இருந்த உளவுத்துறை அதிகாரி திரு. ஸ்ரீ குமார் அளித்த அப்பட்டமான அறிக்கை மற்றும் உடன் பணியாற்றிய அதிகாரி திரு.சஞ்சீவ் பட் அதிரடி வாக்குமூலங்கள்... ஏகப்பட்ட சாட்சிகள்... புகைப்படங்கள்... காணொளிகள்... பொதுமக்கள் வாக்குமூலங்கள்... போலி துப்பாக்கி சூடுகள்... அதை மறைக்க கொலைகள்... என்று மோடியை சுற்றி ஏகப்பட்ட தூக்குக்கயிறுகள் பின்னிப்பிணைந்துள்ளன..!

ஜார்ஜ்  புஷ் ஒரு மிகப்பெரிய படுபாவி என்பது நமக்குத்தெரியும்..! அந்த ஆளே இன்னொரு படுபாவியைக்கண்டு பயந்துபோய் தன் நாட்டிற்குள் வர அனுமதி விசா மறுத்துவிட்டார்... என்றால், இந்த மோடி எப்பேர்பட்ட கொடியவர் என்று அறியலாம். இந்த அமெரிக்க விசா தடை இன்னமும் அப்படியே தான் இருக்கிறது.

"இந்தியாவின் ஊழல் நம்பர்#1 குஜராத்" என்றும் "மோடி ஒரு மோசமான நிர்வாகி" எனவும் இவரின் கூட்டாளி அண்ணா ஹசாரேவே குஜராத் சென்று மேடைபோட்டு சொல்லி விட்டார்..! அப்புறம் என்ன..? இன்னமும் குஜராத்  வளர்ச்சிப்பாதையில் செல்வதாகவும் இந்தியாவின் நம்பர் #1 மாநிலம் அது என்றும் புருடா விடுகின்றனர்..! ( விக்கி :- அது தமிழ்நாட்டை விட கீழேதான் உள்ளது..! ) நேரில் குஜராத் சென்று வாழ்ந்து பார்த்தவர்கள் சொல்லுங்கள்..! இப்படி பொய்சொல்லியே பிழைப்பை நடத்துவது அவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது. இப்படிப்பட்டவர்களின் அடுத்த பொய்தான் மதநல்லிணக்கம்.. சமூகஅமைதி.. உண்ணாவிரதம்.. செருப்பு.. விளக்குமாறு.. எல்லாம்..!

குத்துவிளக்குடன் நரகாசுரன்கள் கொண்டாடும் 3-நாள் தீபாவளி ஆரம்பம்..!
"மதவெறி & அமைதிச்சீர்குலைவு"க்கு ஹோல்சேல் அத்தாரிட்டியாளர்களான இவ்வளவு கொடிய வரலாறு கொண்ட கோரர்கள்... உண்ணாவிரதம் இருக்க வேறு ஏதாவது ஒரு 'டப்பா காரணம்' சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை..! இப்போது, அஹமதாபாத் பல்கலைக்கழக வளாகத்தில் 'சத்பாவனா' என்ற பெயரில்  இந்த கோர பாதக மாபாவிகள் தொடங்கியுள்ள இந்த '3 நாள் உண்ணாவிரதம்'... என்பது "அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக (?!?!?)" நடத்தப்படுகிறதாம்..!?! அடப்பாவமே..! அடப்பாவமே..! எங்கே போய் முட்டிக்கொள்வது..?
.
"நேத்து வந்த அண்ணா ஹசாரேவின் நாடகமே ஹிட்..! 20 வருஷமா இந்திய அமைதியையும் மதச்சார்ப்பின்மையையும் 'காப்பாற்றும்'(?) நம்ம சினிமா சூப்பர் ஹிட் ஆகாதா..?"
 .
உயிர் இருந்தால்... 'உண்ணாவிரதம்' எனும் அந்த வார்த்தையே அவமானத்தால் வெட்கி வேதனை அடைந்து மானம் இழந்து தூக்குப்போட்டுக்கொண்டு விடுமே..? அடிப்படையே முழுமுதல் முரணாக அல்லவா இருக்கிறது..? அப்படியெனில்... இப்போது, "இனி நரகாசுரர்கள் எல்லாம் தீபாவளி கொண்டாட ஆரம்பித்துவிட்டனரா..!" சரியாப்போச்சு..! "#%&*$~#?+$" போங்கடா நீங்களும் உங்கள் மத அரசியலும்..!


'நரகாசுரன்களின் தீபாவளி' கொண்டாட்டத்தில் மேடை ஏற வேண்டுமானால் தாடி வைத்து தொப்பி போட்டிருக்கும் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமே  அனுமதியோ..!? மற்ற நேரத்தில் இவர்களுக்குப்பெயர் "தீவிரவாதி"... என்று கூறி குஜராத்தில் என்கவுண்டர் செய்வீர்களே..?! சீக்கியர்களுக்குக்கு தாடிக்கும் தலைப்பாகைக்கும் அனுமதி இருக்கும்போது... ராணுவத்திலும், காவல் துறையிலும் தாடி & தொப்பிக்கு முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பீர்களே..! அரசு ஊழியர் என்றால் இதற்கு கடும் எதிர்ப்பு கொடுப்பீர்களே..! போங்கடா நீங்களும் உங்கள் மத அரசியலும்..!
.
'நரகாசுரன்களின் தீபாவளி' கொண்டாட்டத்தில் பங்கு பெற புருக்கா போட்ட முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே அனுமதியோ..!? மற்ற நேரத்தில் இவர்களுக்குப்பெயர் "தீவிரவாதி"... என்று குஜராத்தில் என்கவுண்டர் செய்வீர்களே..?! புருக்காவை எதிர்ப்பீர்களே..? பள்ளி கல்லூரியில் அதை முஸ்லிம் பெண்கள் அணிய அனுமதி மறுப்பீர்களே..? மறுத்தால் சீட்டை கிழித்து பள்ளி கல்லூரி களைவிட்டு வெளியேற்றுவீர்களே..! போங்கடா நீங்களும் உங்கள் மத அரசியலும்..!
.
இனி... போலி சாமியார் நித்யானந்தாவும், சினிமா நடிகை ரஞ்சிதாவும் இணைந்து மும்பை ரெட் லைட் ஏரியா நடத்தும் தாதாக்கள் ஸ்பான்சர் செய்த பட்டு மஞ்சத்தில் அமர்ந்துகொண்டு  விபச்சாரத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்..!?

முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி இணைந்து டாட்டாக்கள் அம்பானிகள் ஸ்பான்சர் செய்த பல்லக்கில்  ஜம்பமாய் அமர்ந்து ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்..!?

ஹா..ஹா..ஹா..! ஊடகங்களே...! வாருங்கள்...! வாருங்கள்...! இவர்களையும் மதச்சார்பற்றவர்கள், ஒழுக்கசீலர்கள் என்று வாயார வாழ்த்தி புகழ்ந்து பேசி/எழுதி வழக்கம்போல உங்கள் ஆதரவை தாருங்கள்..!  மேலும் TRP எகிற உங்களுக்கு இது ஓர் அறிய வாய்ப்பு..! போங்கடா நீங்களும் உங்க சமூக பற்றற்ற பணவெறி ஊடகமும்..!

28 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...