"குட்டி சுவர்க்கம்" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய "படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்?" --க்கு எதிர்பதிவு இது..!
அதிராம்பட்டினத்தில் 1வது முதல் 5வது வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் co-education-இல் படித்திருக்கிறேன். பின்னர்... காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். இது ஆண்கள் பள்ளி என்றாலும்... +1 மற்றும் +2 மட்டும் co-education..! ஆனால் அங்கே 6வது மற்றும் 7வது மட்டும்தான் படித்தேன். பிறகு ஆங்கில வழி கல்வி பயில பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8வது முதல் +2 வரை பயின்றேன். இதுவும் ஆண்கள் பள்ளி என்றாலும்... 6வது முதல் 10வது வரை நான் படித்த English medium மட்டும் co-education..! அப்போது நான்...
+2 படிக்கும்போது... PG Teachers Association சார்பில் சுமார் இரண்டரை மாதம் வேலைநிறுத்தம் நடைபெற்றது. டியுஷன் உட்பட கல்வி கற்பிப்பதையே முழுதும் நிறுத்தி சம்பள உயர்வுக்காக (1992-93 கல்வியாண்டில்) போராடினார்கள். அதில் அவ்வருடம் நாங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டோம். அதன் விளைவு... எங்கள் பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் தெரிந்தது. மற்ற பாடங்கள் ஓரளவு நாங்களே புரிந்து படித்து விட்டாலும் கணக்கு மட்டும் ஆசிரியர் துணை இல்லாமல் சுத்தமாக புரியவே இல்லை. முக்கியமாக அவ்வருடம் மட்டுமே அறிமுகமான differential equations, conics மற்றும் complex numbers. இவற்றை புரியாமல் அப்படியே ஒதுக்கி வைத்து விட்டுத்தான் தேர்வுக்கே சென்றோம். என்னால் 148 தான் எடுக்க முடிந்தது..!
இதனால் அடுத்த வருடம் Improvement எழுதி பொறியியல் கல்லூரியில் புகுந்து விடலாம் என்று (அப்போது... 39 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே தமிழகத்தில் இருந்தன) கணக்கில் centum எடுக்கும் முயற்சியில் தனி டியுஷன் வைத்து படித்து வந்தோம். வருடம் வீணாகாமல்... 'எதற்கும் இருக்கட்டும்' என்று அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் - வேதியியல் சேர்ந்து கொண்டேன். அன்றொரு நாள் என் நண்பனுடன் அவன் வீட்டில் 'complex numbers' problems solve பண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தோம். Group study..!
அப்போதுதான்....
ஒரு அம்மா குழந்தையுடன் வந்து என் நண்பனின் தாயாருடன் பேசிவிட்டு வெளியே செல்லும்போது... ஹாலில் என்னை பார்த்துவிட்டு...
"ஹே... ஆஷிக்... எப்படிடா இருக்கே..?" ...என்றார்கள்.
"நல்லா இருக்கேன் மாமி" என்றேன்.
(பொதுவாக என் நண்பன் அவனுடைய அம்மாவின் தோழிகளை அப்படித்தான் அழைப்பான்).
ஆனால்... மனதுள்... ""இவர் யார்... நம் தாயாரின் தோழியோ..? இதற்குமுன் பார்த்ததோ பேசியதோ இல்லையே... இவருக்கு மட்டும் நம்மை எப்படி தெரிகிறது..?"" என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே...
அந்த அதிரை ஸ்டைல் துப்பட்டி போட்டிருந்த குழந்தை வைத்திருந்த மாமி...
"என்னது மாமியா...? என்னை தெரியலையாடா..?"
"ஹி.. ஹி.. எங்கேயோ பார்த்துருக்கேன்... ஆனா எங்கேன்னுதான் தெரியலை மாமி...!"
"என்னடா மறுபடியும் 'மாமி'ங்கிறே..? அப்போ... நீ என்னை மறந்துட்டே..!"
"சரி... எனக்குத்தெரியலை மா... அக்கா... ராத்தா... நீங்களே சொல்லிருங்க நீங்க...யாருன்னு..."
"அடப்பாவி... இப்படித்தான் கூட படிச்ச புள்ளையை மறப்பியாடா...?"
....என்றதும் எனக்கு செம ஷாக்..!
"நீங்க... நீ... வந்து உங்க... உன் பேரென்ன..?"
"மொகமே நியாபகம் இல்லன்னா பேரு மட்டும் எப்படி நியாபகம் இருக்குமாம்..?
நான் ஜஹபர்நாச்சியா..!"
அமர்ந்திருந்த நான் 'தடால்' என்று எழுந்து நின்றேன்..! ஐந்தாம் வகுப்பு வரை என் கூட படிச்ச பொண்ணு..! சராசரியை விட உயரமாகவும் அனைவரையும் மிரட்டி அதட்டும் கணீர் குரலும், அப்போதே தாவணி எல்லாம் போட்டுக்கொண்டு பெரிய மனுஷி மாதிரி இருந்ததால் டீச்சருக்கு மிகவும் பிடிச்சுப்போய் கிளாஸ் லீடர் ஆக்கிட்டாங்க. ஆனால், எங்க படிப்பாளி குருப்புக்கே இவளை பிடிக்காது..! காரணம் நல்லா படிக்கிரவங்கதான் கிளாஸ் லீடரா வரணும்னு நாலாவது வரை இருந்த ரூல்ஸை ஒடச்சி அராஜகமாக லீடர் ஆனவள். டீச்சரின் அடியாள்.
பேசுறவங்க பேரை போர்டில் டீச்சர் எழுதச்சொல்லிட்டு வேற கிளாசுக்கு பாடம் நடத்த சென்றுவிட்டால்... (என்ன செய்ய... துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை) இந்த லீடர்... முதல் பெயராக என் பெயரை போர்டில் எழுதி அடி வாங்க வைப்பவள். 'பேசாமல் இருக்கும் போதே எழுதறாளே' என்று கடுப்பாகி... 'நான் எங்கேடி பேசினேன்' என்றால்... என் பேருக்கு பக்கத்தில் X போட்டு 1 , 2 , 3 ... என்று எழுத ஆரம்பித்துவிடுவாள். அத்தினிவாட்டி பேசினேனாம்..!
இந்த நம்பர்களை எல்லாம் போர்டில் கண்டபிறகு காலையிலிருந்து தொடர்ந்து ஓய்வின்றி தொண்டை கிழிய பாடம் நடத்த கத்தும் டீச்சரிடம் இருந்து வரும் முதல் அடி ரொம்ப கோபமாகவும் பலமாகவும் இருக்கும். வலியால் துடிப்பது கண்டு அடுத்தடுத்து வருகிறவர்களுக்கு அடியின் வேகம் குறைந்து விடும். இளகிய மனது அவங்களுக்கு..!
இந்த லீடர் என்னை எத்தனை அடி வாங்க வைத்திருக்கிறாள்.அட... அவளா இவள்..? ச்சே...! இவளைப்போயா இவ்வளவு மரியாதையா வாங்க போங்கன்னு... மாமின்னு... எல்லாம் மரியாதை கொடுத்து... ச்சே...!
"ஓ... ஸாரி... ஜஹபர்நாச்சியா... உன்னை அடையாளம் தெரியலை. இப்போ நியாபகம் வருது. நீ அஞ்சாவதுல கிளாஸ் லீடர். ஆனா... எப்படி... நீ... இப்படி... இந்த குழந்தை... உன்னோடதா... உனக்கு கல்யாணம் ஆகிருச்சா..?"
"ம்ம்ம்... ஆகிருச்சு... எம்மகன்தான் இவன். ஒரு வயசு ஆகுது. அவுகளுக்கு தஞ்சாவூரிலே மெடிக்கல் ஷாப் இருக்கு. சரி.. சரி.. நீங்க படிங்க.. உங்களுக்கு உங்க குடும்பத்தை காப்பாத்தற கடமை இருக்கு. அதுக்கு சம்பாரிக்கணும். அதுக்கு நல்லா படிக்கணும்... அப்புறம்... சரி... டைம் ஆச்சு... நான் வாறன்..." என்று 'புத்திமதி' சொல்லிவிட்டு (இன்ன்ன்னும் லீடர்னு நினைப்பு போல...) கிளம்பிச்சென்றதும்...
அப்போதுதான் என் நண்பன் முணுமுணுத்தான்... "அதுக்குள்ளே கல்யாணமாகி அம்மாவும் ஆயிட்டாளா...?" "படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..?" என்று..!
என் காதில் இது விழுந்து விட... "போடா வெண்ணை... நாமதான் கல்யாண வயசுல 'காம்ப்ளக்ஸ் நம்பர்ஸ்' படிச்சிக்கிட்டு இருக்கோம்... அதுகளாவது கரெக்டான வயசுலே கல்யாணம் பண்ணி காம்ப்ளக்ஸ் இல்லாம சந்தோஷமா இருந்தா சரிதான்" என்றேன்.
"எது கரெக்டான வயசு..? தப்பில்லையாடா..! அந்த பொண்ணு ஏறிப்போன ஆட்டோவுக்கு பின்னாடி என்னா எழுதி இருந்துச்சு பார்த்தியில்ல... 'பெண்ணின் திருமண வயது 21'... அரசு ஆணை..! தெர்யும்ல..?"
"அப்படி இருக்காதுடா. ஏன்னா... ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணும் போது 18 வயசு ஆனா மேஜர்னு சொல்லி சட்டப்படி கல்யாணம் பண்ணி வைப்பாங்க..! தெரிஞ்சுக்க..!"
சகோ..! உங்கள் வட்டாரத்தில் இதுபோல பல ஜஹபர் நாச்சியாக்களை பார்த்திருப்பீர்கள். பெண்கல்வி என்பது பெண்ணுரிமை. அது அவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் பொருட்டு நிலைமை இருக்கிறதா..? இப்போது பல விஷயங்களை நாம் தீர அலசி ஆராய வேண்டியுள்ளது.
என் டைரியிலிருந்து : ச்சு... அப்டில்லாம் ஒன்றும் எழுதி வைப்பதில்லை. ஏனெனில்... சில மறக்க முடியா நிகழ்ச்சிகள்... ஒவ்வொருவர் வாழ்விலும்
திருப்புமுனையாக... மற்றும் சில புதிய சிந்தனைகளின் ஆரம்ப அடிச்சுவடுகளாக
இருந்தால்... அவை முக்கிய உரையாடல்கள் வடிவத்துடனேயே பசுமரத்தாணியாய்
மனதின் ஆழத்தில் அப்படியே உறைந்திருக்கக்கூடும். அப்படி ஒன்றுதான்
இப்பதிவு.

-------------------------------------------------------------------------------------------------------------
சகோ..! உங்கள் வட்டாரத்தில் இதுபோல பல ஜஹபர் நாச்சியாக்களை பார்த்திருப்பீர்கள். பெண்கல்வி என்பது பெண்ணுரிமை. அது அவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் பொருட்டு நிலைமை இருக்கிறதா..? இப்போது பல விஷயங்களை நாம் தீர அலசி ஆராய வேண்டியுள்ளது.
முதலாவதாக......
60-களில் கல்லூரியில் வந்த சிலபஸ்... 80-களில் உயர் நிலைப்பள்ளியில்..! அப்போது மேல்நிலைப்பள்ளியில் இருந்த
சிலபஸ்... இரண்டாயிரத்தில் துவக்கப்பள்ளியில்..! ஆனால், படிக்கும்
வருடங்கள் மட்டும் அன்று போலவே என்றும் குன்றா அதே இளைமையுடன் இருப்பது
சரியா..?
ஒருசில பாடங்கள் தவிர... பன்னிரண்டு
வருடமாக பெரும்பாலும் பள்ளிகளில் கீழ் வகுப்புகளில் அரைத்த மாவையேதானே நாம்
மேல் வகுப்புகளில் அறைக்கிறோம்..? பள்ளி சிலபஸ் கல்லூரிகளிலும் தொடர்கிறதா
இல்லையா..? "இடுக்கண்
வருங்கால் நகுக.." ஐந்தாவதில் படித்த அதே திருக்குறள்... கல்லூரியிலும்..! இதேபோல மற்ற பாடங்களிலும் எத்தனை ரிப்பீட்டுகள்..? ஒருவகுப்பில் படித்தது அடுத்த வகுப்பில்..! பள்ளியில் படித்தவை அப்படியே கல்லூரியில்..!
12 வருடம் படிப்பதை, ரிபீட் இல்லாமல் 9 வருடத்திலேயே பள்ளிகளில் சுருக்கி கற்றுத்தர முடியுமா... முடியாதா..?
அதன்பிறகு, கல்லூரிப்படிப்பு 3 அல்லது 4
வருடம். பிறகு 18 வயதிலேயே சுய சம்பாத்தியம்... வேலை என்று ஒரு சிஸ்டம்
நம்மிடம் இருந்திருந்தால்... இந்த ஜஹபர் நாச்சியாக்கள் எல்லாருமே திருமணம்
ஆகும் முன்பே பட்டப்படிப்பு முடித்திருப்பார்களே..?
பிசினஸ் அது
இதுன்னு பொருளாதார ரீதியிலே செட்டில் ஆகிவிட்டால், பசங்களுக்கே சற்று சீக்கிரமாக கல்யாணம்
ஆகிவிடுகிறதே..? இதற்கு பிரபல உதாரணம்: நம்ம சச்சின் டெண்டுல்கர் தன் 17 வயதிலேயே
அதாவது 1990-லேர்ந்தே 'லவ் பண்ணப்பட்டு' விரைவாக கல்யாணம் 'செய்து
கொள்ளப்பட்டாரே'..?அதுவும் ஒரு டாக்டரால்..? இந்த டெண்டுல்கரும் ஒருவகையில்
'ஓர் ஆண் நாச்சியா'தானே..?
இதற்கெல்லாம்... தற்போதைய நம் நடப்பு கல்விமுறைதானே காரணம்..?
இந்த புராதன 'மெக்காலே கல்வி முறையை' நாம் முழுதாக மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா..!?
'பெண்களுக்கு திருமணம்' என்பது
எவ்விதத்திலும் அவர்கள் படிப்பை பாதிக்காமல் இருக்க வேண்டும். அதாவது...
மனிதனின் உடல்கூறுக்கு தக்கபடி படிக்கிற காலம் திருத்தப்பட வேண்டும்.
இந்த 10+2+3 சிஸ்டத்தினால், வயசு கூடுதே என்று.. கல்யாணம்
முக்கியப்பட்டு, பெண்கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு... பெண்கள் பட்டக்கல்வி கற்பது
ரொம்ப குறைவாக போய் விடுகிறது. இதுவே நான் முன்பு சொன்ன 9+3 அல்லது 9+4
சிஸ்டமாக இருந்திருந்தால் 18 வயதுக்குள்ளே நிறைய பெண்கள் ஏதாவது ஒரு
வேலைவாய்ப்புக்குறிய பட்டம் பெற்று இருந்திருப்பார்கள். அவர்கள் கல்வியும்
திருமண வாழ்வும் ஒன்றுக்காக ஒன்று பாதிக்கப்பட்டு இருந்திருக்காது. பெண்கள் தங்களின் திருமணப்பருவத்தை அடையும் முன்பே... அவர்களின் பட்டக்கல்வி காலங்கள் முடியும் படி நாம் நமது கல்வி கற்பிக்கும் கால அமைப்பை முறைமை படுத்தி இருந்தால்..? பெண்கல்வி குறித்து நாம் சற்று வேறொரு புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டிய நேரமிது சகோ..!
உடற்கூறு மாறுபாட்டால் மாணவர்கள் வயசுக்கோளாறில் தடம் மாறுவதற்கு முன்பே
அவர்கள் கல்வி கற்று பள்ளியை & கல்லூரியை விட்டு வெளியேறிட வேண்டும்.
பசங்களும் பள்ளி & கல்லூரி நாட்களில் மனம் பிறழ்ந்து வழிகேட்டில்
வீழ்ந்திட வாய்ப்பில்லை..!
பெண் தன் கல்வியை திருமணம் முடிந்து வீட்டில் இருந்த படியே அஞ்சல் வழிக்கல்வியில் எல்லா பட்டப்படிப்பையும் அப்படி தொடர வசதியில்லையே..? சிலவற்றை... திருமணம் ஆனபின் ஏகப்பட்ட குடும்ப பொறுப்புச்சுமையுடன் படிக்க ஆரம்பித்தாலும், பள்ளி/ கல்லூரியில் இணைந்து படிக்கும் அதே உத்வேகமோ... சுதந்திர உணர்வோ... படிப்பு வேட்கையோ இப்போது இருக்குமா..?
18 வயதில் நாட்டின் தலைவரை ஒட்டுச்சாவடியிலும், வீட்டின் தலைவரை ரெஜிஸ்டர் ஆபீஸிலும் தேர்ந்தெடுக்க அனுமதியளித்து விட்டு... இனியும், 'திருமண வயது 21' என்றுசொல்லிக்கொண்டு இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகாதா..?

யோசனை சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால், போகிறபோக்கை கண்ணுறும்போது... PreKG, LKG, UKG இதெல்லாம் இனி அரசே
கட்டாயமாக்கி காசை கரக்கப்பார்ப்பார்கள்... என்றே தோன்றுகிறது.
முடிந்தால்
இன்ஜினியரிங் 5 வருடம், மெடிக்கல் 7 வருடம் என்று ஃபீஸ் புடுங்க கல்வியின்
வருடங்கள் நீளுமே ஒழிய குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மாணவர்களை
பற்றி இப்போது யாருக்கு கவலை..?
ஒருவேளை...
அப்படி கவலைப்பட்டிருந்தால்... அந்த டீச்சர்ஸ் ஸ்ட்ரைக்கே
நடந்திருக்காதே..? அப்புறம் நான் improvement எழுத வேண்டிய அவசியமே
வந்திருக்காதே..? நானும் இந்த பதிவையும் எழுதி இருக்க மாட்டேனே..?
நீங்களும் இங்கே இதை படித்துக்கொண்டிருக்கவும் மாட்டீர்களே..?
டிஸ்கி: 'எதிர்பதிவு' விளக்கத்திற்கு பின்னூட்டம்# 10, #13 & #15 -ஐ பார்க்கவும்.
36 ...பின்னூட்டங்கள்..:
"குட்டி சுவர்க்கம்" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய "படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்?" --க்கு எதிர்பதிவு இது..!
தலைப்பை பார்த்தவுடன் நான் கூட நினைத்தேன்... வந்து படிக்கிறேன் சகோ...
தலைப்பை பார்த்து பயந்து போய் வந்தேன்,..... நல்ல பகிர்வு பாய். எப்படியோ எல்லாரும் நல்லா படிச்சா சரிதேன்!!
மெக்காலே சிஸ்டத்திற்கு நானும் என்னுடைய ஆறாம் வகுப்பு முதல் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்... யார் கேட்கறா???
ஸலாமுன் அலைகும்!
கல்விக்காலம் குறைக்கப்பட வேண்டும்.
இப்படி நானும் ஆசைபட்டிருக்கிறேன் சகோ. விரைவாக அந்த மாற்றம் ஏற்படட்டும்.
மற்றும் என் சிறுவயது பாடசாலை நாட்களும் ஞாபகம் வருகின்றன.
டீச்சர் இல்லாத போது வகுப்பில் கதைபவர்களின் பெயர்களை black board இல் எழுதும் பழக்கம் இருந்தது. மீண்டும் மீண்டும் கதைபவர்களின் பெயர்களுக்கு பக்கத்தில் (அட) (அட) என்று போட்டுக் கொண்டே போவோம். அதன் அர்த்தம் அடங்கவில்லை.
இப்போதும் நினைத்தால் சிரிப்பு வருகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
முதல் ஆளா வந்திருக்கிறதுனாலே கருத்து சொல்ல விரும்பவில்லை சகோ.
காரணம் ஒரு பதிவர் என்ன கருத்து சொல்கிறார் என்று பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன்.
வெரி இண்ட்ரெஸ்டிங்..
@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஒரு பதிவர் என்ன கருத்து சொல்கிறார் என்று பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன்.//
-----?!?!?
அவரு யாரு சகோ..?
@மாய உலகம் //வந்து படிக்கிறேன் சகோ...//---அதான் வந்துட்டீங்களே சகோ..!
உங்கள் வலைப்பூவில் ஏகப்பட்ட டிங்கரிங் வேலைப்பாடுகள் செய்து வைத்திருப்பது உறுத்தலாக இருக்கிறது...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
சகோ.முஹம்மத் ஆஷிக்,
உடற்கூறு மாறுபாட்டால் மாணவர்கள் வயசுக்கோளாறில் தடம் மாறுவதற்கு முன்பே அவர்கள் கல்வி கற்று பள்ளியை & கல்லூரியை விட்டு வெளியேறிட வேண்டும். பசங்களும் பள்ளி & கல்லூரி நாட்களில் மனம் பிறழ்ந்து வழிகேட்டில் வீழ்ந்திட வாய்ப்பில்லை..!
அருமையான கருத்து.
'பெண்களுக்கு திருமணம்' என்பது எவ்விதத்திலும் அவர்கள் படிப்பை பாதிக்காமல் இருக்க வேண்டும். அதாவது... மனிதனின் உடல்கூறுக்கு தக்கபடி படிக்கிற காலம் திருத்தப்பட வேண்டும்.
கண்டிப்பாய் இந்த மாற்றம் வந்தே ஆகவேண்டும்.
நல்லதொரு சமூக சிந்தனை.
//க்கு எதிர்பதிவு இது..!///
ஓ இது எதிர்பதிவா???
இது எதிர்பதிவுனா ஒரு கட்டுரை எழுதி முடிச்சுட்டு கடைசில 3 பெயர்கள குறிப்பிட்டு நீங்களும் எழுதுங்கன்னு சொல்லுவாகளே?! அதுக்கு பேரு மீள்பதிவா?
ஒருத்தர் கருத்தோட நம்ம கருத்து ஒத்துபோகலன்னா அத அங்கேயே சொல்லாம வேல மெனக்கெட்டு நம்ம ப்ளாக்ல எதிர்ப்பு தெரிவிச்சு ஒரு பதிவு போடுவோமே?! அதுக்கு பேரு தொடர்பதிவா???
//உடற்கூறு மாறுபாட்டால் மாணவர்கள் வயசுக்கோளாறில் தடம் மாறுவதற்கு முன்பே அவர்கள் கல்வி கற்று பள்ளியை & கல்லூரியை விட்டு வெளியேறிட வேண்டும்//
எனக்கு சில வரிகள் புரியல சகோ. அதுனால உங்க பதில பார்த்துட்டு தெளிவாகிட்டு அப்பறமா ஆகா ஓஹோ அருமை அப்படின்னு சொல்றேனே...
என்னா புரியலன்னா...........
டீன் ஏஜ்லையே இப்ப இருக்குற பசங்க மனம் பிறழ்ந்து வழிகேட்டில் போய்டுறாங்களே.... அப்ப டீன் ஏஜ்க்குள்ளேயே பள்ளி கல்லூரி விட்டு வெளியே தொரத்திடணும்னு சொல்றீங்களா??
//இதுவே நான் முன்பு சொன்ன 9+3 அல்லது 9+4 சிஸ்டமாக இருந்திருந்தால் 18 வயதுக்குள்ளே நிறைய பெண்கள் ஏதாவது ஒரு வேலைவாய்ப்புக்குறிய பட்டம் பெற்று இருந்திருப்பார்கள். அவர்கள் கல்வியும் திருமண வாழ்வும் ஒன்றுக்காக ஒன்று பாதிக்கப்பட்டு இருந்திருக்காது. //
9+3 (or)4 சிஸ்ட்டம்னா 18 வயசுக்குள்ளேயே படிப்பு காலம் முடிஞ்சுடும் தான். ஆனா அவங்களுக்கு (ஆண்களாக இருந்தால்) வேலை செய்ய கூடிய பக்குவமும், பெண்களாயிருந்தால் திருமணத்துக்கு தயாராக கூடிய மனநிலையும் கிடைச்சுடுமா? ஏன்னா அந்த காலத்துல 12 வயசுல கல்யாணம் பண்ணாங்கன்னா அப்போ கூட்டு குடும்பம். ஒன்னு தெரியலன்னா அத சொல்லி கொடுக்க பத்து பேர் வருவாங்க. ஆனா இப்பலாம் கட்டாய தனிகுடித்தன சிஸ்ட்டம் பரவிட்டு வருதே..... எல்லாம் சரியா வருமா????
அத்தா கூட அடிக்கடி சொல்லுவாங்க. மலேசியால படிப்பு காலம் கம்மின்னு (ஜப்பானிலும் அப்படி தான்) அங்குள்ளவங்களுக்கு ஒத்து போகும்னா கண்டிப்பா இங்கேயும் சரிவரும்னு தான் நான் நினைக்கிறேன். ஆனா பசங்களோட மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலேயொழிய இந்த சிஸ்ட்டம் வெற்றிபெறாது (இன்னும் மேல்படிப்பு மேல்படிப்புன்னு உசுர விடுற பேரன்ட்ஸ் இதுக்கெல்லாம் ஒத்து வருவாங்களான்னு தெரியல).
வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை குறைத்து காட்ட மட்டுமே நம் நாட்டில் படிப்பின் கால அளவு நீட்டிக்கஅப்பட்டுள்ளது வருத்தத்துக்குரிய விஷயமே.... கல்வி காலம்,கல்வி முறை & மனப்பாட முறை கல்வி ஆகியவற்றிலும் ஒருங்கே மாற்றம் வந்தால் கண்டிப்பாக சமுதாயத்தில் ஒரு மகத்தான மாற்றம் ஏற்படும்
@ சகோ.ஆமினா...
'ஆண்பால்' இதன் எதிர்ப்பத வார்த்தை 'பெண்பால்'...
சர்தானே..?
அப்டீன்னா...
"படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்..?" இதன் எதிர்ப்பத பதிவு "படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..?"
சர்தானே..?
இங்கே ஒரு விஷயம் என்னன்னா...
'எதிர்ப்பத பால் பதிவு' என்பதை சுருக்கி
'எதிர்பால் பதிவு' என்பதையும் சுருக்கி
'எதிர்பதிவு' என்று சொல்லி இருக்கேன்..!
அவ்ளோதான்... சகோ.ஆமினா. :-)
இதை நீங்க தவறாக புரிந்து பல்பு வாங்கியதோடு மட்டுமல்லாமல்... இன்னும் 'எதிர்பதிவு'...'மீள்பதிவு'... 'தொடர்பதிவு'...
பற்றி எல்லாம் கூட நீங்கதான் கடுமையான குழப்பத்தில் இருக்கீங்க சகோ..!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
//என் பேருக்கு பக்கத்தில் X போட்டு 1 , 2 , 3 ... என்று...//
நான் பள்ளியில் படிக்கும் போது, டீச்சர் இல்லன்னா இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று, லீடர் பேசுபவர்களின் பெயர்களை போர்டில் எழுதுவார். அதிகம் பேசினால் பெயருக்கு பக்கத்தில் T,T,T,T... என்று எழுதுவார். T என்றால் Talk என்று அர்த்தம். பேச பேச T அதிகரிக்கும்.
இன்னொன்று, யாராவது ஒருவரை டீச்சர் நிற்க சொல்லிவிட்டு போய்விடுவார். வேறு யாராவது பேசினால், நிற்பவர் அவரை நிற்க சொல்லிவிட்டு அவர் உட்கார்ந்துவிடுவார். இப்படி சுழற்சி முறையில் நடக்கும். (அப்படி நிற்பதற்காகவே நாங்கள் பேசுவோம்.. :) :) :))
நகைச்சுவையாக ஆரம்பித்து பெண் கல்வியின் அவசியத்தை பற்றி பகிர்ந்துள்ளீர்கள். ஆனால், எனக்கு கல்வியின் கால அளவில் எந்த பிரச்சனை இருப்பதாக தோணவில்லை. மாறாக, கற்று கொடுக்கப்படும் கல்வியில் மாற்றம் வர வேண்டுமென நினைக்கிறேன்.
டிஸ்கில இந்த வெவரத்த சொல்லியிருக்கலாம். தேவையில்லாம அத அனாதையா விட்டதுக்கு. ஏன்னா..........
நீங்க மனசுக்குல்ளையே சுருக்கி எதிர்பால எதிர்பதமாக்கி அதையும் எதிர்பதிவாக்கி அச்சச்சச்சோ....... நீங்க சொன்ன காரணத்த கேட்டு நா பல்ப் வாங்குனேனோ இல்லையோ இத படிச்ச உங்க கோடி கணக்கான வாசகர்களும் என்னைய மாதிரி பல்ப் வாங்கிட்டு போயிருப்பாங்க. ஏன்னா நீங்க மனசுக்குல்ள ஏற்படுத்திகிட்ட அர்த்தம் உங்க பின்னூட்டம் வரலன்னா யாருக்கும் தெரிஞ்சுருக்காது. ஓர் உதாரணம்
//காரணம் ஒரு பதிவர் என்ன கருத்து சொல்கிறார் என்று பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன்.//
ஹி...ஹி...ஹி.....
என்னோட சேர்ந்து 128 பாலோவர்ஸும், பின்னூட்டகாரர்களும், இதனை படித்தவர்களுக்கும் பல்ப் கொடுத்து மகா சாதன படச்சுட்டீங்க சகோ
வாழ்த்துக்கள்
ஆஹா...........
ஓஹோ...........................
அருமை.................................
அடடடடா.....................................
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்..
நடப்பு கல்வியில் மாற்றம் அவசியம் தேவை, பாடத்திட்டங்களிலும் சரி, பயிற்றுவிக்கும் முறையிலும் சரி,நடப்பு கல்வியில் 90% தேவையற்றதாகவும் 10% மட்டுமே வாழ்க்கைக்கு தேவையானதாகவும் உள்ளது. ஆரம்பக் கல்வியிலே ஒரு மாணவருடைய எதிர்காலத்தை கணித்து அவருக்கு தேவையான ஆர்வமுள்ள கல்வியை பெற்றோரும் ஆசிரியரும் இனைந்து வழங்க வேண்டும் என்பது எனது என்னம். இதற்கு சுயநலமில்லாத கல்வியாளர்கல் பெறுக வேண்டும். இன்ஷா அல்லாஹ்!
மற்றபடி வாழ்க்கையில் அனுபவம் என்பது அவர்களை சுற்றி இருக்கும் சூழ்னிலையை பொருத்து, அதாவது ஒரு மாணவருக்கு சிறு வயது முதல் அவர் கற்க வேண்டிய பாடத்தை வாய் வழியாகவும், செயல் முறையாகவும் கற்றுக் கொடுக்கும் பட்சத்தில் வெகு விரைவாக கற்று சாதனை புரிய முடியும்.
இவர்கள் பாலியல் துறைக்கு தேர்ச்சி பெரும்பொழுது (13-15 வயது) ஏற்கனவே கற்று இருக்கும் பாடத்தின் விளைவாக அதில் அவர்கள் கவனம் அதிகமாக செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது மேலும் அந்த சூழ்னிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த விடலைப் பருவத்தில் வரக்கூடிய ஹார்மோன் உந்துதலை கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏதுவாக இருக்கும். இந்த வயதில் அவர்களுக்கு சூழ்னிலை சாதகமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அதாவது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனியாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக அங்கு ஒரு சைத்தான் (கெட்ட எண்ணம்) இருக்கும் அதுதான் அவர்களை வழி கெடுக்கிறது. இந்த இஸ்லாமிய போதனையை மறந்ததால் தான் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக மட்டும் இருப்பவர்கள் அதில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@அன்னு//மெக்காலே சிஸ்டத்திற்கு நானும் என்னுடைய ஆறாம் வகுப்பு முதல் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்//---தொடர்ந்து எதிர்ப்போம் சகோ.அன்னு.
இப்படி எதிர்ப்பவர்கள் பெருகினால்... கல்வி முறையில் ஒரு நல்ல மாற்றம் நடக்க வாய்ப்புண்டு, இன்ஷாஅல்லாஹ்.
@zalhaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//கல்விக்காலம் குறைக்கப்பட வேண்டும்.//---அதே தரத்துடன்..!
//அடங்கவில்லை//---ஒரேதிரியா அடக்கம் பண்ணிடாம... பார்த்துக்கோங்க. :-)
@Philosophy Prabhakaranஅவை யாவை என்று குறிப்பிட்டிருக்கலாமே சகோ.பிரபா.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//கண்டிப்பாய் இந்த மாற்றம் வந்தே ஆகவேண்டும்.//---வந்தால் பல நன்மைகள் உள்ளன சகோ.ஜபருல்லாஹ்.
@ஆமினா//டீன் ஏஜ்லையே இப்ப இருக்குற பசங்க மனம் பிறழ்ந்து வழிகேட்டில் போய்டுறாங்களே....//
---விதிவிலக்குகள் நிச்சயம் இருக்கும் சகோ.ஆமினா.
//அப்ப டீன் ஏஜ்க்குள்ளேயே பள்ளி கல்லூரி விட்டு வெளியே தொரத்திடணும்னு சொல்றீங்களா??//
---ஆம்..!
//9+3 (or)4 சிஸ்ட்டம்னா 18 வயசுக்குள்ளேயே படிப்பு காலம் முடிஞ்சுடும் தான். ஆனா அவங்களுக்கு (ஆண்களாக இருந்தால்) வேலை செய்ய கூடிய பக்குவமும், பெண்களாயிருந்தால் திருமணத்துக்கு தயாராக கூடிய மனநிலையும் கிடைச்சுடுமா?//
---கிடைக்க வைக்க வேண்டும். அந்த கல்வியும் அவசியம் புகுத்தப்பட வேண்டும்.
//ஏன்னா அந்த காலத்துல 12 வயசுல கல்யாணம் பண்ணாங்கன்னா அப்போ கூட்டு குடும்பம். ஒன்னு தெரியலன்னா அத சொல்லி கொடுக்க பத்து பேர் வருவாங்க.//
---இவர்கள் ஆசிரியர்களாக பள்ளியில் பாடம் நடத்த வர வேண்டும்..!
அஸ்ஸலாமு அலைக்கும்,
சரிதான் சகோ. இந்த கல்விமுறையை மாற்றி அமைத்தல் தான் நல்லது என்று தோன்றுகிறது, இந்த கல்வி முறையினால் படிப்பை முடித்து வேலை கிடைக்கவே 30 வயதை தொட்டு விடுகிறது, இதனால் பலருக்கு வாழ்கையில் ஒரு விரக்தி ஏற்பட்டு விடுகிறது, 23 25 வயதிலேயே கல்யாணம் கல்யாணம் என்று திருந்தவர்கள் 35 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்.
இதற்கு பிறகு எதற்கு திருமணம் என்று கூறி முழு வாழ்க்கையிலும் திருமனமில்லாமல் வாழ பக்குவப்படுத்தி கொண்டவ்ர்களும் உள்ளனர்.
@ஆமினா
//எல்லாம் சரியா வருமா????//
---வெறும் கணித-அறிவியல்-கணினி-கலை-இலக்கிய பாடங்களை மட்டும் கற்பித்தால் போதாது சகோ.ஆமினா.
'வாழ்வியல் ஒழுக்கம்' என்ற ஒரு பாடம் நிகழ்-எதிர்கால சமூக வாழ்க்கைக்கான முக்கிய கல்வியாக கற்பிக்கப்பட வேண்டும் சகோ. இது நடந்தால்... அக்கேள்விக்கு இடமில்லை.
//ஆனா பசங்களோட மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலேயொழிய இந்த சிஸ்ட்டம் வெற்றிபெறாது//
---சரியாக சொன்னீர்கள் சகோ.ஆமினா. இம்மாற்றத்தைத்தான் 'வாழ்வியல் ஒழுக்க கல்வி' கொண்டு வர வேண்டும்.
//கல்வி காலம்,கல்வி முறை & மனப்பாட முறை கல்வி ஆகியவற்றிலும் ஒருங்கே மாற்றம் வந்தால் கண்டிப்பாக சமுதாயத்தில் ஒரு மகத்தான மாற்றம் ஏற்படும்//
---மாற்றத்துக்கான முயற்சிகள் செவ்வனே எடுக்கப்பட்டால் இன்ஷாஅல்லாஹ் மாற்றம் ஏற்படுவது உறுதி சகோ. மிகவும் அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்
அட நீங்கள் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர் தானா?
உங்களின் எழுத்துகளைப்பார்த்து வேற மாதிரி நினைத்திருந்தேன். improvement எழுதி engineering கிடைத்ததா?
கல்விமுறை பற்றிய உங்களது கருத்து மிகச்சரியானது.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//எனக்கு கல்வியின் கால அளவில் எந்த பிரச்சனை இருப்பதாக தோணவில்லை.//---ஆணுக்கு அவ்வளவாக பிரச்சினை இல்லைதான் சகோ.அப்துல் பாஸித்..!
//கற்று கொடுக்கப்படும் கல்வியில் மாற்றம் வர வேண்டுமென நினைக்கிறேன்.//---வந்தாக வேண்டும்.
//அப்படி நிற்பதற்காகவே நாங்கள் பேசுவோம்.. :) :) :)// ...ஹூம்...
மைக் புடிச்சு அரசியல்வாதியாக வேண்டிய ஆளை எல்லாம் பிளாக்கர் நண்பனா வச்சு கட்டி மேய்க்க வேண்டி இருக்கே... விதி..! :-)
@ஆமினா
//டிஸ்கில இந்த வெவரத்த சொல்லியிருக்கலாம். தேவையில்லாம அத அனாதையா விட்டதுக்கு.//
ம்... ஆரம்பிச்சாச்சு...
"அன்னை ஆமினா அனாதை ஆசிரமம்" [அ.ஆ.அ.ஆ]
(பார்க்கவும் டிஸ்கியிலே...)
//இத படிச்ச உங்க கோடி கணக்கான வாசகர்களும் என்னைய மாதிரி பல்ப்(#1) வாங்கிட்டு போயிருப்பாங்க.//---இது பல்ப்#2
காரணம்:
இவ்வலைப்பூவுக்கு இதுவரை அஞ்சாயிரம் பேர் வந்திருந்தாலே அதிகம்..! அதிலும் இப்பதிவுக்கு நூற்றுக்கணக்கிலே தான் ஹிட்ஸ்.
//..ஓர் உதாரணம்... ஹி...ஹி...ஹி.....//--அதை அவர் மறுத்தால்... அது பல்ப்#3
//என்னோட சேர்ந்து 128 பாலோவர்ஸும், பின்னூட்டகாரர்களும், இதனை படித்தவர்களுக்கும் பல்ப் கொடுத்து மகா சாதன படச்சுட்டீங்க சகோ//---ஆதாரம்..? எல்லாரும் உங்ககிட்டே வந்து சொன்னாங்களா..? இது பல்ப்#4
அப்படியே ஒவ்வொருத்தரயா நீங்க அதட்டி மிரட்டி கன்வின்ஸ் பண்ணி ஒப்புக்க்க வச்சாலும்... 128 பல்புக்கு சான்ஸே இல்லை. maximum 127 தான்..!
காரணம் :
அதில் ஒரு ஃபாலோவர், அடியேன்..! அவ்வ்வ்வ்வ்வ்..!
இது பல்ப்#5
ஹைய்ய்ய்... ஒரே பின்னூட்டத்திலே சகோ.ஆமினாக்கு ஃபைவ் பல்ப்ஸ்..!
வாழ்த்துக்கள்
ஆஹா...........
ஓஹோ...........................
அருமை.................................
அடடடடா.....................................
@M. Farooqஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சிந்திக்க வைக்கும் பல நல்ல கருத்துக்களை கூறியமைக்கு மிக்க நன்றி சகோ.ஃபாரூக்.
நாம் இவ்வுலகில் பொருள் ஈட்டுவதற்கான அடிப்படைக்கலவியையே பள்ளி மற்றும் கல்லூரியில் பெறுகிறோம்.
ஆனால்,
சமூகம் சார்ந்து பிற சக மனிதனுக்கு தீங்கிழைக்காமல் ஒரு நல்லொழுக்க குடும்பஸ்தனாக வாழ அவசியப்படும் 'வாழ்வியல் நெறிமுறை சட்டதிட்ட கல்வியை' பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்திற்கு வெளியே மதரசாக்களிலோ... தனியே வேறு ஏதாவது புத்தகங்களிலோ... அறிஞர்களின், பெரியார்களின் அறிவுரைகளிளிருந்தோதானே பெறுகிறோம்..?
'முக்கியமான இக்கல்வி எதற்கு நம் பாடத்திட்டத்தில் இல்லை..?' என்றும் யோசிக்க வேண்டிய தருணம் இது.
@கார்பன் கூட்டாளிஅலைக்கும் சலாம் வரஹ்...
//இந்த கல்வி முறையினால் .... ... 35 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்.//----ஆமாம் சகோ.கார்பன் கூட்டாளி.
மூன்று/நான்கு வருட இள நிலை பட்டப்படிப்பு படித்து முடித்தவுடன் நல்லதொரு வேலை கிடைத்து விட்டது என்றால்... உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்.
ஆனால், மருத்துவம்... பேராசிரியர் பணி... இவற்றுக்கெல்லாம் சிலர் முனைவர் பட்டம் படித்து முடித்து வாழ்க்கையில் செட்டில் ஆகும்போது நரையடித்து கிழடு தட்டி விடுவதை நானும் பார்க்கிறேன்..!
இதற்கெல்லாம் அரசிடம் இருந்து ஒரு முடிவு வரவேண்டும். அதாவது... 25 வயதுக்கு மேலே வேலை வாய்ப்பின்றி உயர் / முனைவர் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு அரசே திருமண வாழ்விற்கான நிதி உதவியை வழங்கி திருமணம் செய்ய ஊக்குவித்து பின்னர் வேலை கிடைக்கும் வரை அல்லது அதிகபட்சமாக ஏழெட்டு ஆண்டுகள் வரை நிதியுதவி வழங்கலாம்..!
இவர்கள் ஒரு நாட்டின் மனிதவளங்கள். இவர்கள் உருவாக அரசின் உறுதுணையும் அவசியம் அல்லவா..?
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அட நீங்கள் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர் தானா?
உங்களின் எழுத்துகளைப்பார்த்து வேற மாதிரி நினைத்திருந்தேன்//---எதுமாதிரி சகோ..? :-)
//engineering கிடைத்ததா?//---என்ன சகோ.ரப்பானி..? profile பார்க்கவில்லையா..?
விதி..! :-)
அதிராம்பட்டினம் to பட்டுக்கோட்டை வெறும் 12 km தான்..! தேர்வுக்கு இரண்டு மணிநேரம் முன்பே cent-um இலக்குடன் பட்டுக்கோட்டைக்கு பரீட்சை எழுத கிளம்பினாலும்... இடைப்பட்ட கிராமத்தார் திடீரென காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ததால்... வந்தவழியே பேருந்து திரும்பி... உள்ளூர் புதுகோட்டை... மகிழங்கோட்டை சென்று 20 km சுத்தி முத்துப்பேட்டை சாலை வழியாக பட்டுக்கோட்டை அடைந்து எக்ஸாம் ஹாலில் உட்காரும்போது விலைமதிப்பில்லா 18 நிமிடங்கள் தொலைந்து போயிருந்தன.
பின்னர் அதனால் வந்த வீண் பதட்டம் காரணமாக அவை என் முப்பத்தெட்டு மதிப்பெண்களை முழுங்கி விட்டன..!
மூன்றரை மணிநேரம் கழித்து traffic clear ஆன சாலையில் நான் சென்றபோது, அந்த கிராமத்தினர்... தங்களின் கோரிக்கை நிறைவேறி இருந்த மகிழ்ச்சியில் சாலை ஓரத்தில் நின்றுகொண்டு பேருந்துகளுக்கு டாட்டா காட்டினர்.
எல்லாம்... எழுதி வைக்கப்பட்ட விதி..!
//கல்விமுறை பற்றிய உங்களது கருத்து மிகச்சரியானது.//---ஆதரவுக்கு நன்றி சகோ.ரப்பானி.
@ஹைதர் அலி
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும்,
@மாய உலகம்,
@அன்னு,
@zalha,
@அந்நியன் 2,
@asiya omar,
@Philosophy Prabhakaran,
@மு.ஜபருல்லாஹ்,
@ஆமினா,
@Abdul Basith,
@M. Farooq,
@கார்பன் கூட்டாளி,
@Rabbani...
தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோஸ்..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கல்விமுறை குறித்த மொத்த ஜனங்களின் ஆதங்கமும் உங்கள் ஆக்கத்தின் ஒரே வரியில்
//12 வருடம் படிப்பதை, ரிபீட் இல்லாமல் 9 வருடத்திலேயே பள்ளிகளில் சுருக்கி கற்றுத்தர முடியுமா... முடியாதா..? //
முடியும்.. முயற்சிப்போம் இறை நாட்டத்தால்!
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//முடியும்.. முயற்சிப்போம் இறை நாட்டத்தால்!//
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.குலாம்..!
பகிர்வு மிக அருமை
/இந்த கல்வி முறையினால் .... ... 35 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்./
ம்ம் மருத்துவர்கள் படித்து முடித்து திருமணம் ரொம்ப லேட், இதில் பெண்களும் என்று பார்க்கும் போது சில பேருக்கு 35 வயதுக்கு மேல் என்பதால் குழந்தை பாக்கியமும் இல்லை என்று கேள்வி பட்டேன்
பெண்களுக்கு படித்து கொண்டு இருக்கும் போது பாதியில் திருமணம் கடைசியில் படிப்பை தொடர்வதில்லை,இது சரியே இல்லை.
@Jaleela Kamalமிக நல்ல கருத்துக்கள் சகோ.ஜலீலா கமால். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!