அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, April 27, 2011

21 நாளைக்கு நீ உயிரோடு இருப்பியாடா..?

முன் கதைச்சுருக்கம் : நான் அப்போது தூத்துக்குடியில்உள்ள ஒரு தனியார் உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். அங்கே, அடுத்த மாத சம்பளத்தை இம்மாதமே சேர்த்து எடுத்துக்கொள்ளும், pay advance என்ற ஒரு வசதி இருந்தது. ஒரே நாளில் கையில் இரண்டு மாத சம்பளம்..! பின்னர், அடுத்த மாத சம்பளத்தில் இருந்து மாதாமாதம் ஒரு சிறுதொகை நம் வசதிப்படி பிடித்துக்கொள்வார்கள். அது முடிந்து விட்டால் மீண்டும் pay advance எடுப்போம். இதற்கு வட்டி கிடையாது.

Sunday, April 24, 2011

30 பதிவுலகில் பிரபலமான டாப் 50 ஹிட்ஸ்

பலருடைய பல பதிவுகளை பலமுறை திறந்து படித்து கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து பல நாட்கள் ஆய்விற்குப்பின் கடைசியாக 'எவை எவை எல்லாம் 'டாப் 50'-யில் இடம்பெறுவதற்கு குதியானவை'  என்று பொறுப்புடன் ஆய்ந்து அறிந்து பொருக்கி எடுக்க மண்டையை உடைத்து, அப்புறம் அடிச்சு துவைச்சி அலசி பிழிஞ்சு உதறி கொடியில காயப்போட்டு கிளிப் மாட்டி விட்டிடுக்கேன்.... ஐ மீன்... வரிசையா நம்பர் போட்டு தொகுத்திருக்கிறேன்..!


எதை..?

Friday, April 22, 2011

9 வறுமையை ஒழித்திடுமா ஜகாத்..?

ஆம்..! ஒழித்திடும்..! ஆனால், இஸ்லாம் சொன்ன முறையில் வழங்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டால்..! முந்தையதொரு பதிவில், //ஜகாத்(கட்டாயதர்மம்), சதகா(தர்மம்)// என்று குறிப்பிட்டு இருந்தேன். அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்ட    9:60 இறைவசனத்தில் 'தர்மம்' என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் நீங்கள் குர்ஆன் அரபி மூலத்தை எடுத்து பார்த்தால் ஜகாத் என்று இருக்காது..! ஸதகா என்றுதான்  வரும்..! (... إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ ) ஆனாலும் எல்லா அறிஞர்களாலும் 'இது ஜகாத்திற்கும் உரிய விளக்கம்' என்று சொல்லப்படுவதற்கு காரணம், அதில் உள்ள அந்த மூன்றாவது பிரிவினரான தர்மங்களை 'வசூலிப்போருக்கும்' என்பதை வைத்துத்தான். 

Wednesday, April 20, 2011

10 தர்மம் செய்வது செல்வந்தருக்கு மட்டுமா உரித்தானது..?

 இவ்வுலகில் மனிதர்கள் அனைவரும் சிந்தனையில் வேறு பட்டவர்கள். அதனால் செயலில் வித்தியாசப்படுகிறார்கள். சிந்திக்காமல் இருப்போர் பிறரைவிட தாழ்ந்து விடுகிறார்கள். சிறந்த முறையில் மூளையை உபயோகித்து சிந்திப்பவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். ஆனால், அவர்களிடையே பொருளாதாரத்தில் மட்டும் ஏன் ஏற்றத்தாழ்வுகள்..? ஆக, என்னதான் உலகமக்கள் சிறந்த புத்திசாலிகளாய் பொருளாதாரத்திற்காக கடுமையாக முயன்றாலும் பலன் கிடைப்பதில் மட்டும் வேறுபாடு உள்ளதே..? அது ஏன்..? 

நன்கு படித்தவர்/உழைப்பவர்/வியாபாரம் செய்பவர் ஏழையாகவும் உள்ளார்; செல்வந்தராகவும் உள்ளார். சரியாக படிக்காதவர்/உழைக்காதவர்/வியாபாரம் செய்யாதவர் ஏழையாகவும் உள்ளார்; செல்வந்தராகவும் உள்ளார். இன்றைய ஏழை, நாளை செல்வந்தர் ஆகிறார்; இன்றைய செல்வந்தர் நாளை ஏழையாகிறார். ஆக, செல்வம் ஒரு வரைமுறையில் வருவதாக இல்லை.

Saturday, April 16, 2011

14 பிச்சைக்காரர்களை வெறுக்கும் இஸ்லாம்

முந்தைய ( ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல் ) பதிவில், நான் எடுத்திட்ட அந்த 9:60 குர்ஆன் வசனத்தில் வரக்கூடிய யாசிப்போர் (ஃபக்கீர்கள்) பற்றி குறிப்பிட்டிருந்தேன். "கூர்ந்து கவனித்தால் அவ்வசனத்தில் மேற்கூறப்பட்ட ஏனைய எட்டு பிரிவினரில் ஒரே ஒரு பிரிவினர்தான் யாசிப்பவர்...! யாசிப்பதால், 'இவர் தர்மம் செய்யப்பட வேண்டியவர்' என்று ஒரு பிரிவினரை மிக இலகுவாக அறியலாம். இதில் ஏழைகளும் இருப்பர்..! ஏழை அல்லாதோரும் இருப்பர்..! ஏனென்றால்... தேவையுடைய ஏழைகள் (மிஸ்கீன்கள்) என்போர் இந்த யாசிப்போர் (ஃபக்கீர்கள்)-ஐ அடுத்து தனியாக அந்த இறைவசனத்தில் சொல்லப்படுகிறார்கள்".

Thursday, April 14, 2011

9 ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
--------------------------------------------------------------------------------------------------------புறநானுறு

மேற்படி வரிகள்... "மனிதனுக்கு தர்மம் செய்யும் சிந்தனை தழைத்தோங்கச் செய்வதற்காக இயற்றப்பட்ட செய்யுட்பா" என என் ஆசிரியர் கூறியபோது, "இல்லை...ஐயா, பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்காகவும் இயற்றப்பட்ட புரட்சிப்பா... என்றுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம் இறுதியில் கூறுவது போல தெரிகிறதே..!" என ஆசிரியருடன் தொடர்ந்து நான் வாதிட்டதால்... பெஞ்சு மேல் ஏற்றப்பட்டேன்.(!?) 

Sunday, April 10, 2011

26 இனி... கடல்நீர் எரிபொருள்..!


 
           ஆமாம்...! அதிசயம்தான்..! ஆனால் உண்மை..! 'கடல்நீரை எரிக்க முடியும்' என்று அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள்..! ஆக, இனி... கடல்நீர்... எரிபொருள்...!

Wednesday, April 6, 2011

19 தமிழக பட்ஜெட்டுக்கு SPONSOR டாஸ்மாக்..! இந்திய பட்ஜெட்டுக்கு..?

ஓர் ஊரில் மேலத்தெருக்கும் கீழத்தெருக்கும் நடுத்தெருவில் அடிதடி சண்டை நடக்கும்போது, வயதிலும் அறிவிலும் முதிர்ந்த ஊர்ப்பெரியவர்கள், 'நாமெல்லாம் ஒரூர்காரங்கப்பா... அடிச்சிக்காதீங்கப்பா...' என்று சமாதானப்படுத்துவார்கள். 

இதேபோலத்தான்... இரு ஊர் அடித்துக்கொண்டால்... 'நாமெல்லாம் ஒரே ஜில்லா காரங்கப்பா...' என்று கலெக்டர் வருவார்..! இரு மாவட்டம் அடித்துக்கொண்டால், 'தமிழேண்டா' என்று  முதல்வர் வருவார்..! இரு மாநிலம் அடித்துக்கொண்டால், 'சாரே ஜஹான்செ அச்சா... ஹிந்துஸ்தான் ஹமாரா...' என்று பிரதமர் வருவார்..! 

இதேபோல... இரு நாடுகள் அடித்துக்கொண்டால்...? 

'Don't fight within us; as, we are all citizens of this world' என்று எவரும் சமாதானம் பேச முன் வருவதில்லையே..! அது ஏன்..?

Sunday, April 3, 2011

25 டோப்பிடஹான் செய்முறை (படங்களுடன் விளக்கமாக)

டோப்பிடஹான்  :-  இப்பெயரை இதற்குமுன் கேள்விப்பட்டதுண்டா...? இது ஒரு நொறுக்குத்தீனி பதார்த்தம். இது தஞ்சை மாவட்டத்தில்... குறிப்பாக  பாபநாசம், ராஜகிரி, பண்டாரவடை, வழுத்தூர், மாங்குடி, அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் மிகவும் பிரசித்தம். வெளிநாட்டில் இருக்கும் தங்கள் குடும்பத்து ஆண்களுக்கு இவ்வூர் பெண்களால் சிரத்தையுடன் செய்து, விடுமுறைக்கு வந்து செல்லும் அவர்களின் வெளிநாடுவாழ் நண்பர்கள் மூலம் கூட பெரிய டின்களில் பார்சல் அனுப்பப்படும் அளவுக்கு மக்களிடம் இதற்கு என்று ருசியில் தனி கிரேஸ் உண்டு. (இதன் பெயர்க்காரணம் தெரிந்தவர் சொல்லுங்கள்...அறிய ஆவலாய் உள்ளேன்..!)
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...