அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, January 29, 2011

சவூதியில் மழை..! வெட்டுக்கிளி வியாபாரம்..! (Photo Gallery)

முதலில் "சவூதியில் மழை" பற்றி பார்த்து விடுவோம். வெட்டுக்கிளி வியாபாரம் பற்றி கடைசியில்.

சவூதி அரேபியாவில், குறிப்பாக ஜித்தாவில், கடந்த ஒரு மாதமாய் இதுவரை கண்டிராத அளவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த புதன் கிழமை பெய்த மழையளவு ஜித்தாவில் மட்டுமே 111mm...! மில்லிமீட்டர் கணக்கெல்லாம் சொன்னால்... ப்பூ.. இவ்வளவு தானா என்போம்..! 

அதற்கு முதலில் புள்ளிவிபரம் அறிவோம். ஒட்டுமொத்த சவூதி அரேபியாவிற்கே ஆண்டின் மொத்த சராசரி மழை அளவு: 106mm தானாம்..! கடந்த புதன்கிழமை ஒருநாளில் மட்டுமே 111mm ஜித்தாவில் மழை பெய்தது என்றால்...???  சவூதியில் அதற்குப்பெயர் வெள்ளம்..!!! ஆனால், நம்மால் முடிந்த ஒரு சாதாரண விஷயம் அவர்களால் ஏன் சமாளிக்க முடிய வில்லை..?

Monday, January 24, 2011

37 தேசியக்கொடி யாத்திரையும் போலி தேசப்பற்றும்

தேசியக்கொடியும் தேசப்பற்றும்

குடியரசு தினத்தை முன்னிட்டு 'கொடியேற்றும் யாத்திரை' என்ற பெயரில் கல்கத்தாவில் இருந்து கிளம்பி காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இந்திய தேசியக்கொடியை ஏற்றப்போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தையும் அமைதி சீர்குலைவையும் வீண் மதக்கலவரத்தையும் விதைக்க பாஜக சங்பரிவார ஹிந்துத்வா சதிகாரக்கூட்டம் திட்டமிட்டுள்ளது.
'இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள்' என்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தி 'முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை' என்ற நச்சுக்கருத்தை விதைப்பதுதான் இவர்களின் நோக்கம்.

'தேசப்பற்று என்றால் என்ன?' என்ற அரிச்சுவடி கூட தெரியாத மூடர்கள் தான் - அல்லது தெரியாதது போல் நடிப்பவர்கள் தான் - பாஜக தலைவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

Saturday, January 22, 2011

18 26 / 1 : 'குடி' அரசு தினமா இனி...?

டிஸ்கி  :

                  என் இந்திய குடியரசு சார்பாக தமிழக 'குடி'அரசுக்கு ஓர் ஆதங்க மடல்.

டிஸ்கி ஆஃப் டிஸ்கி  :

                                            ( இந்த மடல் உரைநடை வடிவில் எழுதப்படவில்லை...! )

-----------------------------------------------------------------------------------------------------------------

      விடுனர்                                                                                                              பெறுனர்
Wednesday, January 19, 2011

20 சவூதியில் ஒரு புதுவித கடல்வாழ் உயிரினம்?

          சவூதியில் சென்ற வாரம்,  தமாமுக்கும் கதீஃபுக்கும் இடையே ஸிஹாத் என்ற ஊரில் உள்ள மீன்பிடி துறை முகத்தில் ஒரு புதுவித கடல்வாழ் உயிரினத்தை பிடித்து வந்தனர் அவ்வூர் மீனவர்கள். விசேஷம் என்னவென்றால்... பல வருடங்கள் கடலில் மீன்படித்தொழிலில் பணியாற்றிய மீனவர்களுக்கே இது புதுவித உயிரினமாக இருந்துள்ளது..! அவ்வூரிலிருந்து தினமும் ஜுபைல் வந்து எனனுடன் பணியாற்றுபவர்--வார விடுமுறையில் எதேச்சையாக மீன் வாங்க நண்பர்களுடன் அங்கு  சென்றவர், அதனை உடனே தன் mobile camera-வில் படம் பிடித்து வந்து, "இதனை இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா?" என்றார். அவரிடமிருந்து ஈ-மெயிலில் பெற்றுக்கொண்ட சில புகைப்படங்கள்... இதோ உங்கள் பார்வைக்கு..!

Friday, January 14, 2011

26 டில்லியில் DDA இடித்த இரண்டாவது மஸ்ஜித் இது..!


DDA -- என்றால்...  Delhi Development Authority போல தெரியவில்லை..!  

Department of  Demolishing  Authority ...போல தெரிகிறது..!?

இவர்களுக்கு மஸ்ஜிதை இடிப்பதே வேலையா..? 

டில்லி வளர்ச்சி ஆணையம் (DDA) டில்லி வளர்ச்சிக்கு என்ன செய்கிறது? 

முதலில் சாலைகளை அடைத்துக்கொண்டும் வழியை மறைத்துக்கொண்டும் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தினாலேக்கூட ஏகப்பட்ட இடம் சாலைகளில் கிடைக்கும். அப்புறப்படுத்த முடியாது இவர்களால். கார் காரர்கள்-டில்லியில் பெரும்பாலும் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள்-அவர்கள் கேட்பார்களே...'எங்கே தருகிறாய் எங்களுக்கு பார்க்கிங்' என்று ஒரு கேள்வி..!

Wednesday, January 12, 2011

37 பயங்கரவாதம் Vs. அடிப்படைவாதம் : சொல்ல மறைத்த நிஜம்

மாதக்கணக்கில் வருஷக்கணக்கில் தங்கள் குடும்பம், ஆசை இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது உயிரைக்கூட பணயம் வைத்து தெஹல்கா, ஆஜ்தக், ஹெட்லைன்ஸ் டுடே, ரிப்போர்ட்டர்கள் மற்றும் மாலேகான் புகழ் மாவீரர் ஹேமந்த் கார்கரே, தென்காசி டி.ஐ.ஜி. P.கண்ணப்பன்  போன்ற அஞ்சாநெஞ்சம் கொண்ட காவலர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு சிந்தித்து உழைத்து நேர்மையாக வெளிக்கொண்டு வந்த பல RSS, சங்பரிவார ஹிந்துத்துவாக்களின் பயங்கரவாத அட்டூழியங்களை நாம் அறிவோம்.(இவர்கள் போல இன்னும் நிறையபேர் நம் நாட்டில் உருவாக இறைவனிடம் பிரார்த்திப்போம் சகோ..!) 

ஆனால், அவற்றை வெளிக்கொணர எடுக்கப்பட்ட எண்ணற்ற நடவடிக்கைகள், அதனால் விளைந்த பயன்களை விட மிகப் பெரிய பலன் ஒன்று இவ்வாரம் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான பிரபல வெகுஜன ஊடகங்கள் தலைப்புச்செய்தியாய் சொல்ல மறைத்த நிஜம். ஆனால், அது மிக மிக எளிதாக... ஒரு சாதாரண மனிதனால்.... சாத்தியமாகி உள்ளது.  அதேநேரம் ஆழ்ந்து சிந்தித்தால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புலப்படும்.  

Sunday, January 9, 2011

33 அடிப்படைவாதம் : மாற்று மாதவராஜ்

பதிவுலக சகோதரர்களே...!

எனது பரோஃபைலில் நீங்கள் பார்த்திருக்கலாம். என்னை நான் ஒரு //CITIZEN OF WORLD என்றும், (I'm) following the fundamentals of islam to live as a 'better human' (muslim) in the society. (on that basis... I'm an 'islamic fundamentalist என்றும், Nobody should be harmed by me at any cost, any where, any time... as, I can't escape from Allah, the only God என்றும், எழுதி வைத்திருக்கிறேனே? எதற்காக?

Thursday, January 6, 2011

28 இந்தியாவில் தொலைந்த நீதி தேவதை ஆஸ்திரேலியாவில்...!இந்தியாவில் எல்லாமே ஒழுங்காகத்தான் போய்க்கொண்டு இருந்தது. 1992 டிசம்பர்-6 வரை..! அன்றுதான்... எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியவில்லை... ஆயிரக்கணக்கில் 'கரசேவகர்கள்' என்றபெயரில் ஷைத்தான்கள்..! ஒரே நாளில் இடித்துத்தள்ளினார்கள். தரையோடு தரையாக... மண்ணோடு மண்ணாக... எதை...? ஒட்டுமொத்த இந்தியாவின் அமைதியை..!

Saturday, January 1, 2011

27 2010-ல் உலகின் டாப் டென் பென் -- ஒரு கண்டனம்..!

வருடக்கடைசி ஆகிவிட்டால், ஏதாவதொரு 'டாப்-டென்' பதிவு ஒன்று போடுவது என்பது தற்போது எங்கும் பிரபலமாகிவிட்டதால்... அந்த டாப்-டென் ஜுரத்தில் நானும் சிக்கிக்கொண்டு விட்டேன்.

உலகின் மிகவும் விலையுயர்ந்த பேனாக்களின் சென்ற வருடத்திற்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதிலிருந்து முதல் பத்து இடங்களை பிடித்த பேனாக்களை அதன் விலையுடன் உங்கள் காட்சிக்கு இங்கே வைக்கிறேன்.
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...