ஃப்ளாஷ் பேக்
![]() |
| 1992 December - 6 அதிகாலை |
1949 டிசம்பர் 22 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் 'இஷா' எனும் இரவுத் தொழுகையை தொழுதுவிட்டு வீடுகளுக்கு சென்றனர். வைகறை ஃபஜ்ர் தொழுகைக்காக அன்று பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி..! கதவு உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. 'ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார்' என்று ஒரு கும்பல் வெளியே கலாட்டாவில் இறங்கியது.
"வன்முறைக்கும்பல் ஒன்று பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக" ஃபைஸலாபாத் காவல் நிலையத்தில் 'முதல் தகவல் அறிக்கை' (FIR) பதிவு செய்யப்பட்டது. அப்போது, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத்தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
