அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, January 12, 2011

37 பயங்கரவாதம் Vs. அடிப்படைவாதம் : சொல்ல மறைத்த நிஜம்

மாதக்கணக்கில் வருஷக்கணக்கில் தங்கள் குடும்பம், ஆசை இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது உயிரைக்கூட பணயம் வைத்து தெஹல்கா, ஆஜ்தக், ஹெட்லைன்ஸ் டுடே, ரிப்போர்ட்டர்கள் மற்றும் மாலேகான் புகழ் மாவீரர் ஹேமந்த் கார்கரே, தென்காசி டி.ஐ.ஜி. P.கண்ணப்பன்  போன்ற அஞ்சாநெஞ்சம் கொண்ட காவலர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு சிந்தித்து உழைத்து நேர்மையாக வெளிக்கொண்டு வந்த பல RSS, சங்பரிவார ஹிந்துத்துவாக்களின் பயங்கரவாத அட்டூழியங்களை நாம் அறிவோம்.(இவர்கள் போல இன்னும் நிறையபேர் நம் நாட்டில் உருவாக இறைவனிடம் பிரார்த்திப்போம் சகோ..!) 

ஆனால், அவற்றை வெளிக்கொணர எடுக்கப்பட்ட எண்ணற்ற நடவடிக்கைகள், அதனால் விளைந்த பயன்களை விட மிகப் பெரிய பலன் ஒன்று இவ்வாரம் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான பிரபல வெகுஜன ஊடகங்கள் தலைப்புச்செய்தியாய் சொல்ல மறைத்த நிஜம். ஆனால், அது மிக மிக எளிதாக... ஒரு சாதாரண மனிதனால்.... சாத்தியமாகி உள்ளது.  அதேநேரம் ஆழ்ந்து சிந்தித்தால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புலப்படும்.  

சாதனை செய்தது - வெறும் 21 வயதே ஆன அப்துல் கலீம் என்ற கைதி..!
சாதித்த இடம் - சிறைக்கூடம். 
சாதனை - இஸ்லாமிய பண்புகளுக்கு ஒத்து தம் வாழ்வில் அவற்றுக்கு  செயல் வடிவம் கொடுத்து  வாழ்ந்து காண்பித்தது.  
அவ்வளவுதான்...!  அவ்வளவேதான்...!
அதற்கப்புறம் நடந்ததெல்லாம் மிகப்பெரிய சுனாமி..!
 
என் மனமாற்றத்திற்கு காரணம் சக முஸ்லிம் கைதிதான்  ---  RSS பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா..!
அப்துல் கலீம்
ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த சுவாமி அஸிமானந்தா, தான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததற்கு காரணம் இதே வழக்கில் பொய்க்குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு முஸ்லிம் இளைஞருடனான நல்லுறவுதான் காரணம், என தெரிவித்துள்ளார். அந்த இளைஞர்தான் நான் மேலே குறிப்பிட்ட, படத்தில் உள்ள அப்துல் கலீம்.
                                                                                                       
மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அஸிமானந்தா இதுக்குறித்து கூறியதாவது : 

"நான் ஹைதராபாத்தில் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்படும்பொழுது சக கைதிகளில் ஒருவர் அப்துல் கலீம் என்பவராவார்.

சிறைக்குள்ளே வைத்து கலீம் எனக்கு நிறைய உதவிச் செய்துள்ளார். எனது பொருட்களை எடுத்து வைக்கவும், உணவு மற்றும் தண்ணீர் கொண்டு தந்ததும் கலீம் ஆவார். கலீம் போன்ற நிரபராதிகள் சிறையில் வாடுவதைக்கண்டு இவ்வழக்கில் பிராயசித்தம் செய்வதற்காக எனது மனசாட்சி என்னைத் தூண்டியது.
அதனடிப்படையில்தான் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தேன்"----என ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச்சார்ந்த சுவாமி அஸிமானந்தா கூறியுள்ளார்.

அப்படியென்ன அந்த வாக்குமூலத்தில்... சுனாமி... என்று கூறப்படும் அளவுக்கு?

RSS பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம் :  
  
"  இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம். ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.

RSS பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா மற்றும் RSS  பயங்கரவாதங்கள்

குண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார்.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன்.

பா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.

2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால்  ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.

அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார். சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார். 

 அசீமானந்தாவால் மாஜிஸ்ட்ரேட் முன் அளிக்கப்பட்ட42 பக்கங்கள் கொண்ட ஒப்புதல் வாக்குமூலம்

2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர், நாம்தான் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம் என தெரிவித்தார். அன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது.

மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது." ---இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது என்.ஐ.ஏ-வின் கஸ்டடியில் உள்ளார்.

------------------------------------------------------------------------------------------------------------------------

Source For Photos and News : OUR SINCERE THANKS TO :-
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne150111Coverstory.asp

நன்றி : செய்தி- தேஜஸ் மலையாள நாளிதழ்  &  பாலைவனத்தூது   ( தமிழில்...)

------------------------------------------------------------------------------------------------------------------------


பம்பாய் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு பாகிஸ்தானில் தலைமை வைத்து இயங்குவதாய் சொல்லப்பட்ட அனைத்து இயக்கங்களும் நம் நாட்டில் தடை செய்யப்பட்டன. நல்லது. வரவேற்போம்.

கோவை குண்டுவெடிப்புக்கு அப்புறம் அல்-உம்மா என்ற இயக்கம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டது. நல்லது. வரவேற்போம்.

ஒவ்வொரு குண்டுவெடிப்புகளுக்கும் பிறகு உடனே ஈ-மெயில் அனுப்பி ''நாங்கள்தான் குண்டு வைத்தோம்'' என்ற ''அனானிமஸ் இயக்கங்கள்'' எல்லாம் தடை செய்யப்பட்டன. அட..! ரொம்ப நல்லது. இதையும் கூட வரவேற்று விடுவோமே..!

ஆனால்,  இப்போது  நம்  முன்  நிற்கும்  சந்தேகம்  எல்லாம்   என்னவென்றால்... ''இங்கே பக்காவாய், பலமுறை, பலர், பலவழக்குகளில் ஆதாரங்கள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்கள் சகிதம் மாட்டி இருக்கும் மேற்படி ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செய்யப்படுமா'' என்பதுதானே?  மேலும், ''மகாத்மாக்களை சுட்டால்தான் தடை வருமா? சாதாத்மாக்களை வெடித்துச்சிதறவைத்து கொன்றால்  தடை வராதா?'' என்றெல்லாம் கூட சிலருக்கு  சந்தேகம்  வரலாம்.

நாமும் நம்  வாழ்வினை  இஸ்லாமிய  அடிப்படையில் அமைத்து உண்மையாக வாழ்ந்து   காட்டுவோம். அப்படி மற்றவர்களுக்கெல்லாம் உதாரணமாக, எதிரிகளும் நம்மை பின்பற்ற ஆரம்பித்து நல்லோர் ஆகும் விதம் சான்றோர்களாக எவருக்கும் ஒரு சிறு துன்பம் கூட அளித்துவிடாமல் பிறருக்கு உதவிசெய்து அன்பொழுக வாழ்வோம்.

அப்படி வாழ்ந்தால்... இஸ்லாமிய அடிப்படைவாதம் எல்லாவித பயங்கரவாதத்தையும் ஒழித்து விடும். மேலும், எதிர்பாராதவகையில் என்னன்னமோ எப்படியெப்படியோ இப்பதிவில் நடந்திருப்பதை காணும்போது... இன்ஷாஅல்லாஹ்...   'அதுவும்' ஒருநாள் நடக்காமலா போய்விடும்?

***************************************************************************************
ஒரு முக்கிய பிற்சேர்க்கை :-
(13-01-2011, 11:45 am -IST)

சகோதரர்களே...!

நம் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து காத்து அமைதிப்பூங்காவாக்க நம்மால் ஆன ஒரு சிறு முயற்சி.

அதன் அடிப்படையில்.... பயங்கரவாதத்துக்கு காரணமான அனைத்து ஹிந்துத்வா அமைப்புக்களையும் முழுவிசாரனைக்குட்படுத்தகோரியும், (தடைசெய்யக்கோரியும் - இதை தனி comment காலத்தில் நீங்கள் எழுதலாம்), அப்பாவி முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தி சிறையிலடைத்து வழக்கு தொடர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட அனைத்து நிரபராதி முஸ்லிம்களையும் விடுவித்து ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கக்கோரியும் மரியாதைமிகு இந்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை மனு.

உங்கள் அனைவரையும்....

http://www.petitiononline.com/megha00/petition.html

இந்த சுட்டியில் சென்று அந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

Thanks to Brother Pebble for introducing this link here through comment. மிக்க நன்றி சகோ.
***************************************************************************************

37 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...