தீபாவளி, பொங்கல், பூஜா, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் என்று நம் அரசு பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கின்றது. அதோடு அதன் பொறுப்பு முடிந்துவிட்டதா..? மக்கள் உண்மையிலேயே பண்டிகைகளை திருப்தியாக கொண்டாடுகிறார்களா, அந்த தினத்தில் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை பற்றி எல்லாம் எந்த அக்கறையும் கொள்வதில்லை. தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் அந்த ஊழியர்கள் அந்த பண்டிகையை கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் 'மதச்சார்பற்ற அரசுகள்' தீபாவளி போனஸ் வழங்கி விடும். எந்த சமயத்தினர் ஆனாலும் அதனை பெற்றுக்கொள்வார்கள். பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். இவ்வளவு ஏன்..? 'மதமே இல்லை ; கடவுளே இல்லை; தீபாவளியே இல்லை' என்போர் கூட கொடி- கோஷம்- உண்ணாவிரதம்- வேலைநிறுத்தம் என்றெல்லாம் முன்னின்று நடத்தி அடித்துபிடித்து 8.34% யாவது தீபாவளி போனஸ் வாங்கிவிடுவர்..!
நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts
Monday, August 29, 2011
10 பண்டிகை அகதிகள்
தேடுகுறிச்சொற்கள் :-
இஸ்லாம்,
ஃபித்ரா,
சமூகம்,
சரியான புரிதல்,
தர்மம்,
நிகழ்வுகள்
Friday, April 22, 2011
9 வறுமையை ஒழித்திடுமா ஜகாத்..?
ஆம்..! ஒழித்திடும்..! ஆனால், இஸ்லாம் சொன்ன முறையில் வழங்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டால்..! முந்தையதொரு பதிவில், //ஜகாத்(கட்டாயதர்மம்), சதகா(தர்மம்)// என்று குறிப்பிட்டு இருந்தேன். அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்ட 9:60 இறைவசனத்தில் 'தர்மம்' என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் நீங்கள் குர்ஆன் அரபி மூலத்தை எடுத்து பார்த்தால் ஜகாத் என்று இருக்காது..! ஸதகா என்றுதான் வரும்..! (... إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ ) ஆனாலும் எல்லா அறிஞர்களாலும் 'இது ஜகாத்திற்கும் உரிய விளக்கம்' என்று சொல்லப்படுவதற்கு காரணம், அதில் உள்ள அந்த மூன்றாவது பிரிவினரான தர்மங்களை 'வசூலிப்போருக்கும்' என்பதை வைத்துத்தான்.
Wednesday, April 20, 2011
10 தர்மம் செய்வது செல்வந்தருக்கு மட்டுமா உரித்தானது..?
இவ்வுலகில் மனிதர்கள் அனைவரும் சிந்தனையில் வேறு பட்டவர்கள். அதனால் செயலில் வித்தியாசப்படுகிறார்கள். சிந்திக்காமல் இருப்போர் பிறரைவிட தாழ்ந்து விடுகிறார்கள். சிறந்த முறையில் மூளையை உபயோகித்து சிந்திப்பவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். ஆனால், அவர்களிடையே பொருளாதாரத்தில் மட்டும் ஏன் ஏற்றத்தாழ்வுகள்..? ஆக, என்னதான் உலகமக்கள் சிறந்த புத்திசாலிகளாய் பொருளாதாரத்திற்காக கடுமையாக முயன்றாலும் பலன் கிடைப்பதில் மட்டும் வேறுபாடு உள்ளதே..? அது ஏன்..?
நன்கு படித்தவர்/உழைப்பவர்/வியாபாரம் செய்பவர் ஏழையாகவும் உள்ளார்; செல்வந்தராகவும் உள்ளார். சரியாக படிக்காதவர்/உழைக்காதவர்/வியாபாரம் செய்யாதவர் ஏழையாகவும் உள்ளார்; செல்வந்தராகவும் உள்ளார். இன்றைய ஏழை, நாளை செல்வந்தர் ஆகிறார்; இன்றைய செல்வந்தர் நாளை ஏழையாகிறார். ஆக, செல்வம் ஒரு வரைமுறையில் வருவதாக இல்லை.
தேடுகுறிச்சொற்கள் :-
இஸ்லாம்,
சமூகம்,
தர்மம்,
தவறான புரிதல்,
ஸதகா
Saturday, April 16, 2011
14 பிச்சைக்காரர்களை வெறுக்கும் இஸ்லாம்
முந்தைய ( ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல் ) பதிவில், நான் எடுத்திட்ட அந்த 9:60 குர்ஆன் வசனத்தில் வரக்கூடிய யாசிப்போர் (ஃபக்கீர்கள்) பற்றி குறிப்பிட்டிருந்தேன். "கூர்ந்து கவனித்தால் அவ்வசனத்தில் மேற்கூறப்பட்ட ஏனைய எட்டு பிரிவினரில் ஒரே ஒரு பிரிவினர்தான் யாசிப்பவர்...! யாசிப்பதால், 'இவர் தர்மம் செய்யப்பட வேண்டியவர்' என்று ஒரு பிரிவினரை மிக இலகுவாக அறியலாம். இதில் ஏழைகளும் இருப்பர்..! ஏழை அல்லாதோரும் இருப்பர்..! ஏனென்றால்... தேவையுடைய ஏழைகள் (மிஸ்கீன்கள்) என்போர் இந்த யாசிப்போர் (ஃபக்கீர்கள்)-ஐ அடுத்து தனியாக அந்த இறைவசனத்தில் சொல்லப்படுகிறார்கள்".
Thursday, April 14, 2011
9 ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்
ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
--------------------------------------------------------------------------------------------------------புறநானுறு
மேற்படி வரிகள்... "மனிதனுக்கு தர்மம் செய்யும் சிந்தனை தழைத்தோங்கச் செய்வதற்காக இயற்றப்பட்ட செய்யுட்பா" என என் ஆசிரியர் கூறியபோது, "இல்லை...ஐயா, பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்காகவும் இயற்றப்பட்ட புரட்சிப்பா... என்றுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம் இறுதியில் கூறுவது போல தெரிகிறதே..!" என ஆசிரியருடன் தொடர்ந்து நான் வாதிட்டதால்... பெஞ்சு மேல் ஏற்றப்பட்டேன்.(!?)
Subscribe to:
Posts (Atom)