மாதக்கணக்கில் வருஷக்கணக்கில் தங்கள் குடும்பம், ஆசை இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது உயிரைக்கூட பணயம் வைத்து தெஹல்கா, ஆஜ்தக், ஹெட்லைன்ஸ் டுடே, ரிப்போர்ட்டர்கள் மற்றும் மாலேகான் புகழ் மாவீரர் ஹேமந்த் கார்கரே, தென்காசி டி.ஐ.ஜி. P.கண்ணப்பன் போன்ற அஞ்சாநெஞ்சம் கொண்ட காவலர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு சிந்தித்து உழைத்து நேர்மையாக வெளிக்கொண்டு வந்த பல RSS, சங்பரிவார ஹிந்துத்துவாக்களின் பயங்கரவாத அட்டூழியங்களை நாம் அறிவோம்.(இவர்கள் போல இன்னும் நிறையபேர் நம் நாட்டில் உருவாக இறைவனிடம் பிரார்த்திப்போம் சகோ..!)
ஆனால், அவற்றை வெளிக்கொணர எடுக்கப்பட்ட எண்ணற்ற நடவடிக்கைகள், அதனால் விளைந்த பயன்களை விட மிகப் பெரிய பலன் ஒன்று இவ்வாரம் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான பிரபல வெகுஜன ஊடகங்கள் தலைப்புச்செய்தியாய் சொல்ல மறைத்த நிஜம். ஆனால், அது மிக மிக எளிதாக... ஒரு சாதாரண மனிதனால்.... சாத்தியமாகி உள்ளது. அதேநேரம் ஆழ்ந்து சிந்தித்தால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புலப்படும்.
சாதனை செய்தது - வெறும் 21 வயதே ஆன அப்துல் கலீம் என்ற கைதி..!
சாதித்த இடம் - சிறைக்கூடம்.
சாதனை - இஸ்லாமிய பண்புகளுக்கு ஒத்து தம் வாழ்வில் அவற்றுக்கு செயல் வடிவம் கொடுத்து வாழ்ந்து காண்பித்தது.
அவ்வளவுதான்...! அவ்வளவேதான்...!
அதற்கப்புறம் நடந்ததெல்லாம் மிகப்பெரிய சுனாமி..!
என் மனமாற்றத்திற்கு காரணம் சக முஸ்லிம் கைதிதான் --- RSS பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா..!
அப்துல் கலீம்
ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த சுவாமி அஸிமானந்தா, தான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததற்கு காரணம் இதே வழக்கில் பொய்க்குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு முஸ்லிம் இளைஞருடனான நல்லுறவுதான் காரணம், என தெரிவித்துள்ளார். அந்த இளைஞர்தான் நான் மேலே குறிப்பிட்ட, படத்தில் உள்ள அப்துல் கலீம்.
மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அஸிமானந்தா இதுக்குறித்து கூறியதாவது :
"நான் ஹைதராபாத்தில் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்படும்பொழுது சக கைதிகளில் ஒருவர் அப்துல் கலீம் என்பவராவார்.
சிறைக்குள்ளே வைத்து கலீம் எனக்கு நிறைய உதவிச் செய்துள்ளார். எனது பொருட்களை எடுத்து வைக்கவும், உணவு மற்றும் தண்ணீர் கொண்டு தந்ததும் கலீம் ஆவார். கலீம் போன்ற நிரபராதிகள் சிறையில் வாடுவதைக்கண்டு இவ்வழக்கில் பிராயசித்தம் செய்வதற்காக எனது மனசாட்சி என்னைத் தூண்டியது.
அதனடிப்படையில்தான் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தேன்"----என ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச்சார்ந்த சுவாமி அஸிமானந்தா கூறியுள்ளார்.
அப்படியென்ன அந்த வாக்குமூலத்தில்... சுனாமி... என்று கூறப்படும் அளவுக்கு?
RSS பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம் :
" இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம். ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.
RSS பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா மற்றும் RSS பயங்கரவாதங்கள்
குண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன்.
குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன்.
பா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.
2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.
அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார். சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன்.
குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன்.
பா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.
2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.
அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார். சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார்.
அசீமானந்தாவால் மாஜிஸ்ட்ரேட் முன் அளிக்கப்பட்ட42 பக்கங்கள் கொண்ட ஒப்புதல் வாக்குமூலம்
2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர், நாம்தான் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம் என தெரிவித்தார். அன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது.
மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது." ---இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது என்.ஐ.ஏ-வின் கஸ்டடியில் உள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------
Source For Photos and News : OUR SINCERE THANKS TO :-
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne150111Coverstory.asp
நன்றி : செய்தி- தேஜஸ் மலையாள நாளிதழ் & பாலைவனத்தூது ( தமிழில்...)
------------------------------------------------------------------------------------------------------------------------
பம்பாய் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு பாகிஸ்தானில் தலைமை வைத்து இயங்குவதாய் சொல்லப்பட்ட அனைத்து இயக்கங்களும் நம் நாட்டில் தடை செய்யப்பட்டன. நல்லது. வரவேற்போம்.
கோவை குண்டுவெடிப்புக்கு அப்புறம் அல்-உம்மா என்ற இயக்கம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டது. நல்லது. வரவேற்போம்.
ஒவ்வொரு குண்டுவெடிப்புகளுக்கும் பிறகு உடனே ஈ-மெயில் அனுப்பி ''நாங்கள்தான் குண்டு வைத்தோம்'' என்ற ''அனானிமஸ் இயக்கங்கள்'' எல்லாம் தடை செய்யப்பட்டன. அட..! ரொம்ப நல்லது. இதையும் கூட வரவேற்று விடுவோமே..!
ஆனால், இப்போது நம் முன் நிற்கும் சந்தேகம் எல்லாம் என்னவென்றால்... ''இங்கே பக்காவாய், பலமுறை, பலர், பலவழக்குகளில் ஆதாரங்கள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்கள் சகிதம் மாட்டி இருக்கும் மேற்படி ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செய்யப்படுமா'' என்பதுதானே? மேலும், ''மகாத்மாக்களை சுட்டால்தான் தடை வருமா? சாதாத்மாக்களை வெடித்துச்சிதறவைத்து கொன்றால் தடை வராதா?'' என்றெல்லாம் கூட சிலருக்கு சந்தேகம் வரலாம்.
நாமும் நம் வாழ்வினை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து உண்மையாக வாழ்ந்து காட்டுவோம். அப்படி மற்றவர்களுக்கெல்லாம் உதாரணமாக, எதிரிகளும் நம்மை பின்பற்ற ஆரம்பித்து நல்லோர் ஆகும் விதம் சான்றோர்களாக எவருக்கும் ஒரு சிறு துன்பம் கூட அளித்துவிடாமல் பிறருக்கு உதவிசெய்து அன்பொழுக வாழ்வோம்.
அப்படி வாழ்ந்தால்... இஸ்லாமிய அடிப்படைவாதம் எல்லாவித பயங்கரவாதத்தையும் ஒழித்து விடும். மேலும், எதிர்பாராதவகையில் என்னன்னமோ எப்படியெப்படியோ இப்பதிவில் நடந்திருப்பதை காணும்போது... இன்ஷாஅல்லாஹ்... 'அதுவும்' ஒருநாள் நடக்காமலா போய்விடும்?
***************************************************************************************
ஒரு முக்கிய பிற்சேர்க்கை :-
(13-01-2011, 11:45 am -IST)
சகோதரர்களே...!
நம் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து காத்து அமைதிப்பூங்காவாக்க நம்மால் ஆன ஒரு சிறு முயற்சி.
அதன் அடிப்படையில்.... பயங்கரவாதத்துக்கு காரணமான அனைத்து ஹிந்துத்வா அமைப்புக்களையும் முழுவிசாரனைக்குட்படுத்தகோரியும், (தடைசெய்யக்கோரியும் - இதை தனி comment காலத்தில் நீங்கள் எழுதலாம்), அப்பாவி முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தி சிறையிலடைத்து வழக்கு தொடர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட அனைத்து நிரபராதி முஸ்லிம்களையும் விடுவித்து ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கக்கோரியும் மரியாதைமிகு இந்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை மனு.
உங்கள் அனைவரையும்....
http://www.petitiononline.com/megha00/petition.html
இந்த சுட்டியில் சென்று அந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
***************************************************************************************
ஒரு முக்கிய பிற்சேர்க்கை :-
(13-01-2011, 11:45 am -IST)
சகோதரர்களே...!
நம் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து காத்து அமைதிப்பூங்காவாக்க நம்மால் ஆன ஒரு சிறு முயற்சி.
அதன் அடிப்படையில்.... பயங்கரவாதத்துக்கு காரணமான அனைத்து ஹிந்துத்வா அமைப்புக்களையும் முழுவிசாரனைக்குட்படுத்தகோரியும், (தடைசெய்யக்கோரியும் - இதை தனி comment காலத்தில் நீங்கள் எழுதலாம்), அப்பாவி முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தி சிறையிலடைத்து வழக்கு தொடர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட அனைத்து நிரபராதி முஸ்லிம்களையும் விடுவித்து ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கக்கோரியும் மரியாதைமிகு இந்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை மனு.
உங்கள் அனைவரையும்....
http://www.petitiononline.com/megha00/petition.html
இந்த சுட்டியில் சென்று அந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
Thanks to Brother Pebble for introducing this link here through comment. மிக்க நன்றி சகோ.
***************************************************************************************
36 ...பின்னூட்டங்கள்..:
//''இங்கே பக்காவாய், பலமுறை, பலர், பலவழக்குகளில் ஆதாரங்கள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்கள் சகிதம் மாட்டி இருக்கும் மேற்படி 'டவுசர்பாண்டி' இயக்கம் தடை செய்யப்படுமா'' /
இது மட்டும் அவர்களுக்கு நீரில் எழுதிய எழுத்துக்களாகவே தோணும் போல... எவ்வளவு குற்றங்கள் புரிந்த போதும் சுதந்திரமாகவே நடமாடும் கேவலம் இங்கே மட்டும் தான் நடைபெறும்
நல்ல பதிவு சகோ
மிகவும் விளக்கமாகவும், விபரமாகவும் எழுதப்பட்ட பதிவு. சகோதரர் ஆஸிக் அவர்களுக்கு நன்றி...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
தமிழ் பத்திரிக்கை துறையில் ஒரு நேர்மையாழன் கூட இல்லை போல், அதனால்தான் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் நேர்மையை தேட வேண்டி உள்ளது.
இதைப்பற்றி இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம், வாழ்த்துகள்!
ஸலாம் சகோ ஆஷிக்..
அனைவரது ஆதங்கத்தின் வெளிப்பாடாக தங்களின் இப்பதிவை காண்கிறேன்..நாம் யாரும் பேசுவதில்லை.இப்போதுதானே பேச ஆரம்பித்துள்ளோம்..
இன்ஷா அல்லாஹ் பலன் அடைவோம்.இந்தியாவில் விரல்விட்டு எண்ணும் அளவிலான ஊடகங்களே இவைகளை வெளிகொண்டு வருகின்றன,...
தேஜஸ் மற்றும் தெகல்கா போன்றவை தமிழில் பதிக்கச் செய்ய நாம் ஏதேனும் செய்யனும்..
இன்ஷா அல்லாஹ்..
அன்புடன்
ரஜின்
சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அல்ஹம்துளில்லாஹ்...சுவாமி அசீமானந்தா மனதில் மாற்றத்தை விளைத்த சகோதரர் அப்துல் கலீமை நினைத்து மனம் பூரிப்படைகின்றது..சுபானல்லாஹ்.
அப்படியே அசீமானந்தா மற்றும் அவரை சார்ந்தவர்கள் சத்திய மார்க்கத்தை தழுவ இறைவன் அருள் புரிய வேண்டுமென்று துஆ செய்வோம்...
நல்லதொரு பதிவுக்கு நன்றி...ஜசக்கல்லாஹு க்ஹைர்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
--------
நாமும் நம் வாழ்வினை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து உண்மையாக வாழ்ந்து காட்டுவோம். அப்படி மற்றவர்களுக்கெல்லாம் உதாரணமாக, எதிரிகளும் நம்மை பின்பற்ற ஆரம்பித்து நல்லோர் ஆகும் விதம் சான்றோர்களாக எவருக்கும் ஒரு சிறு துன்பம் கூட அளித்துவிடாமல் பிறருக்கு உதவிசெய்து அன்பொழுக வாழ்வோம்.
---------
என்று கூறிய தாங்கள் "ட*** பா**" என்ற சொல்லாடலை பயன்படுத்தி இருப்பது சிறிது நெருடலாக இருக்கின்றது. இறைவன் யாருக்கு எங்கு இதாயத் வைத்திருக்கின்றான் என்று சொல்ல முடியாதல்லவா?. இந்த வார்த்தை அவர்களை மனம் திருந்த விடாமல் செய்யலாமல்லவா?
ஆவண செய்யுங்கள்...
நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சலாம் அழைக்கும் ,
சகோதரர் ஆஷிக் அவர்களே.
நீங்க என்ன விவரம் புரியாத ஆளா இருகிங்கலே, எடுத்த எடுப்புலயே ஆர் எஸ் எஸ் சை தடை செய்யணும் சொன்ன ஆர் எஸ் எஸ் தொ (கு) ண்டர் கள் எல்லாம் அப்புறம் பொழப்புக்கு என்ன பண்ணுவாங்க பாவம்.அப்படி தடை பண்ணின அவங்க குண்டு வச்சி குண்டு வச்சி விளையாடுறதுக்கு ஆள் இல்லாம போய்டும் , இவங்க முஸ்லிம் மக்களா தேடி தேடி கண்டு புடிச்சு கண்டு புடிச்சு ஜெயில போடுறதுக்கு வேல இல்லாம போய்டும் .இந்த வீனா போன புலனாய்வு (???) பத்திரிக்கை காரனுகளுக்கு நியூஸ் கிடைக்காம போய்டும், இப்படி ஒரே தடியா தடை பண்ணின பாவம் ஆர் எஸ் எஸ் கார பய புள்ளைங்களெல்லாம் ஏங்கி போயிடாத என்ன? பாவம் அவிங்களுக்கு சமூக சேவை செய்றதுக்கே நேரம் பத்த மாட்டேன்குதாம்.அதுல நீங்க வேற சின்ன புள்ள தனமா மலையாளம் நியூஸ் எல்லாம் எடுதுபோட்டுகிட்டு அவங்க டவுசர கழட்டி விட்டுகிட்டு இருந்தா , இருகறதோ ரெண்டு கை தான், அதுல கைல வச்சி இருக்குற கம்ப புடிப்பான, டவுசர் கலடாம இருக்க டவுசர புடிப்பான, இல்ல குண்டு வைக்கிறது எடத்த தேடி கண்டு புடிப்பான , என்ன பண்றது பாவம். போங்க சார் போங்க மலம் தின்னி மாமா மலர்மன்னன் வந்து " "தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?" என்று ஒரு பதிவு எழுதிய மாதிரி உங்களுக்கும் '' ஆஷிக் பாய்க்கோ கல்தா ஹை எதாவது பதிவு எழுதிண்ட போறான்.
நன்றி
சகோ ஜே ஜே
புதுடெல்லி,ஜன.11:
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளான சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா, அஸ்வினி சவுஹான் என்ற அசோக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களில் சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா ஆகியோரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் பரிசும், அஸ்வினி சவுஹான் என்ற அசோக் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசும் இவ்வழக்கை விசாரித்துவரும் என்.ஐ.ஏ-வால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் கைதான ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலாகும் இது.
சம்ஜோதா உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்தான் தலைமறைவாகியுள்ளனர் என அஸிமானந்தா நீதிமன்றத்தில் அளித்த தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டுவரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் புதுடெல்லியிலுள்ள என்.ஐ.ஏ அலுவலக எண்ணை(1-29947020, 011-29947021) தொடர்பு கொள்ளவும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
நன்றி சஹோதரர் ஆசிக் அவர்களே
இதைப்போல் ஒரு பதிவு நான் போட வேண்டும் என்று நினைத்திருந்தேன் ,ஆனால் நீங்கள் போட்டு விட்டர்கள்.
//''இங்கே பக்காவாய், பலமுறை, பலர், பலவழக்குகளில் ஆதாரங்கள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்கள் சகிதம் மாட்டி இருக்கும் மேற்படி ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செய்யப்படுமா'//
ஆனால் இது மட்டும் நடக்கவே நடக்காது.ஒன்றி புரிந்து கொள்ளுங்கள் இதைபோல் அல்லது இதை விட அதிகமாக எவ்வளவு ஆதாரம் வந்தாலும் அவர்களை இந்த சட்டம் ஒன்றும் செய்து.
இவர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது நாம்தாம் .அதனால் இனி நமது சமுதாயமும், நீதியை விரும்பக்கூடிய சமுதாயமும் சேர்ந்துதான் முடிவு செய்ய வேண்டும்.
சகோதரர் ஜேஜே,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தயவுக்கூர்ந்து வார்த்தைகளில் கண்ணியத்தை காத்து கொள்ளுங்கள். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நினைவு கூறுங்கள்...
சகோ அஷிக்
சரியான நேரத்தில் வெளிவந்துள்ள அருமையான பதிவு
ரோம் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தானாம்.
இணையமும் எழுதுகின்ற எழுத்தாற்றலும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை ஒரு சிலருக்கு இது சாத்தியமாகியிருக்கிறது அதுவும் நமது சமூகத்தை சார்ந்த சகோதர சகோதரிகள் மிகவும் அரிதாகவே இணைய வசதி பெற்றிருக்கிறார்கள்
அதையாவது சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்றால் (ஒரு சிலரைத்தவிர)
இல்லவேயில்லை என்றுதான் கூற வேண்டும்
கடந்த இரண்டு வருடங்களாக இந்த பதிவுலகை ஆழமாக கவணித்து கொண்டு வந்தவன் என்ற முறையில் வேதனையே மிஞ்சுக்றது இதை கனத்த இதயத்தொடு பதிவு செய்கிறேன்
தொடர் பாட்டு போட்டி பதிவுகள், என்னை கவர்ந்த பாடல்கள், எனது டைரி குறிப்பு அதற்கு தொடர் எழுத அழைப்பு மார்க்கத்துக்கு முரனான விழா கொண்டாட்ட அழைப்பு என்ன இது?
மேலடி பாட்டு கேட்கிற ரசிக்கிற உங்கள் காதுகளில்
சிறையில் அடைபட்ட நமது சகோதரனின் குடும்ப பெண்களின் அழுகுரல் கேட்டுயிருக்கிறதா?
நாளைய வரலாறு நீரோ மன்னணை சபிப்பது போல் உங்களையும் சபிக்கும் இவ்வளவு பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கும் போது அந்த சமகால சமூகத்தினர் என்ன செய்து கொண்டிருந்தானர் என்று வருங்கால சந்ததி கேள்வி கேட்காதா?
அல்லது ஒவ்வோரு குர்ஆன் வசனத்தை ஒதி முடிக்கும் போது (சமியுல் அலீம்)என்று ஒதுவோமே
சமியுனா நுட்பமாக கேட்பவன் அலீம்ன நுட்பமாக பார்ப்பவன் என்று பொருள்
இறைவன் நமக்கு வழங்கியிருக்கிற அருட்கோடைகளை(இணையம் உட்பட) நுட்பமாக பார்த்து கொண்டுயிருக்கிறான் என்ன பதில் சொல்ல போகிறோம்.
இறைவனுக்காக உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் சமுதாய அக்கறையோடு சரியான முறையில் செயல்படுங்கள்
நான் 8ம் வகுப்பு வரை தான் படித்தவன் எழுத்து பிழை எனும் ஊனம் என்னிடம் இருக்கிறது இருந்தாலும் ஊனத்தொடு செயல்படுகிறேன்
ஆனால் நன்றாக எழுதக்கூடிய சகோதர சகோதரிகள்
வேறு பாதையில் பயனிக்கிறார்கள்...
சகோதரன்
ஹைதர் அலி
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
இந்தியாவில் தீவிரவாதிகளின் உற்பத்திசாலை ஆர்.எஸ்.எஸ் என்னும் இயக்கம் தான். அதிலே எந்த ஒரு சந்தேகமும் ஆர்.எஸ்.எஸ் சின் வரலாற்றை படித்தவர்களுக்கு இருக்காது. வெறுப்பிலும் கால்ப்புனர்விலும் உருவானதொரு அமைப்பு. வலுவானதொரு அடித்தளத்தை மிகவும் திட்டமிட்டு ஏற்படுத்தி, இன்று பல மாநில அரசுகளை ஆட்டி படைக்கும் வல்லமையையும் அதிகார வர்க்கத்தில் உயர் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை தனக்கான உறுப்பினர்களை கொண்டுள்ள இயக்கம். நீதித்துறையில் கூட ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வந்திருப்பதை பாபர் மஸ்ஜித் , தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்குகளில் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் தேச பக்தி இயக்கம் என்ற போர்வையில் அது பெரும்பான்மை இந்துக்களிடத்தில் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. அன்றைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் முதல் நேற்றைய துணை பிரதமர் அத்வானி வரை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் தான். பல காங்கிரஸ் வெள்ளை ஜிப்பாக்களினுள்ளே காவி இருப்பதை குஜராத் காங்கிரஸ்காரர்களின் செயல்பாடுகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.
இப்படி பலமான பின்புலத்தை உருவாக்கி கொண்ட ஆர்.எஸ்.எஸ் என்னும் இயக்கத்தை அவ்வளவு எளிதில் மத்திய அரசு தடை செய்து விடாது. ஆதாரம் கிடைத்த உடன் தடை செய்வதற்கு நேரு போன்ற மதசார்பின்மையின் மீது உண்மையில் நம்பிக்கை கொண்ட பிரதமர் மீண்டும் வர வேண்டும். நேரு அவர்களுக்கே வல்லபாய் படேலை வைத்து குடைச்சலை கொடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். ஆகையால் பொது மக்களிடத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் என்ற உண்மையை எடுத்து சொல்ல வேண்டும். அதுவும் பெரும்பான்மை இந்து மக்களிடத்தில் இத்தகைய விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும். வெகுஜன ஊடகங்கள் இந்த விசயத்தில் அவ்வளவு சீக்கிரம் வாய் திறக்காது. ஏனெனில் ஊடகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தனது அபிமானிகளை உள்நுழைத்து காலங்கள் பலவாகி விட்டன. நேற்றைய தினமணியில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பான ஒரு செய்தியில் சுவாமி அசீமானந்தா வாக்குமூலம் கொடுத்தாராம் என ஏதோ யூகத்தை சொல்வது போல செய்தி வெளியிட்டது. இதே இடத்தில் ஒரு முஸ்லிமின் பெயர் இருந்திருந்தால் இந்நேரம் பத்திரிக்கை உலகமும் பதிவுலகமும் படாத பாடு பட்டிருக்கும்.
ஆனாலும் நாம் மனம் தளராமல் மக்களிடத்தில் நம்மால் முடிந்தவரை உண்மையை எடுத்து சொல்வதன் மூலமாகவே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். குறிப்பாக ஊடகத்துறையினில் முஸ்லிம்கள் உள்ளே வராதவரை இத்தகைய உண்மைக்கு எதிரான இருட்டடிப்புகளையும் கருத்தியல் பயங்கரவாதத்தையும் சந்தித்து கொண்டு தான் இருப்போம். பதிவுலகில் கூட பல முஸ்லிம்கள் இருக்கின்றனர். எத்தனை நபர்கள் இந்த செய்தியை அறிந்து அதை தமது முஸ்லிமல்லாத நண்பர்களிடத்தினில் கொண்டு போய் சேர்த்திருப்பார்கள்? ஆனால் அவர்களுக்கு இதை விட வெவ்வேறு பெரிய வேலைகள் இருக்கின்றன. ஆம் வெட்டி அரட்டையும் வீணாய்ப்போன கவிதைகளுக்கான வெங்காய விளக்கங்களும் கொடுத்துக் கொண்டிருப்பது. பதிவிற்கான மைய பொருளை அதிக சிரத்தை எடுத்து மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். அதற்கான கூலியை இறைவன் மறுமையில் உங்களுக்கு வழங்குவானாக. தொடரட்டும் தங்களின் பணி ஆஷிக்.
சகோ.ஆமினா...
உங்கள் ஆற்றாமைதான், தண்டனைகளில் சமநீதியையும் நியாயத்தையும் விரும்பும் நம் அனைவருக்குமே உள்ளது.
//இது மட்டும் அவர்களுக்கு நீரில் எழுதிய எழுத்துக்களாகவே தோணும் போல... எவ்வளவு குற்றங்கள் புரிந்த போதும் சுதந்திரமாகவே நடமாடும் கேவலம் இங்கே மட்டும் தான் நடைபெறும்//
---மிக அருமையாக சொன்னீர்கள் சகோ.
சகோ.ரஹீம்கசாலி,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்!
சகோ.ஃபாரூக்,
//தமிழ் பத்திரிக்கை துறையில் ஒரு நேர்மையாழன் கூட இல்லை போல், அதனால்தான் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் நேர்மையை தேட வேண்டி உள்ளது.//--ஆமாம்... ரொம்ப ரொம்ப ரொம்ப கொஞ்சம்...
//இதைப்பற்றி இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம், வாழ்த்துகள்!//---ஊடக மறைத்தல் பற்றியா? நமக்கு இதெல்லாம் முன்பே தெரிந்ததுதானே...?
வ அலைக்கும் ஸலாம்...
சகோ.ரஜின் அப்துல் ரஹ்மான்,
மிக அருமையானதொரு சிந்தனை சகோ. ஏன் நீண்ட நாள் உள்ளக்கிடைக்கையும் இஃதே. //தேஜஸ் மற்றும் தெகல்கா போன்றவை தமிழில் பதிக்கச் செய்ய நாம் ஏதேனும் செய்யனும்..இன்ஷா அல்லாஹ்..//---எப்படி செய்யலாம்?
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்!
சகோ. ஆஷிக் அஹ்மத்,
//அல்ஹம்துளில்லாஹ்...சுவாமி அசீமானந்தா மனதில் மாற்றத்தை விளைத்த சகோதரர் அப்துல் கலீமை நினைத்து மனம் பூரிப்படைகின்றது ..சுபானல்லாஹ்.//---ஆமாம். சகோ. மிகவும் பூரிப்படைகின்றது ..சுபானல்லாஹ்.
அதனால்தான்...
எந்த குற்றத்தை தான் செய்ததாக கருதப்பட்டு விசாரணைக்கைதியாய் சிறைவாசம் அனுபவிக்கிறாரோ...
அதே குற்றத்தை உண்மையிலேயே செய்த இன்னொரு ஆர்.எஸ்.எஸ்.விசாணைக்கைதிக்கு...
சிறையில் அவர் வயோதிகர் என்ற முறையில் அவருக்கு தினமும் தொண்டாற்றிய இந்த முஸ்லிம் நிரபராதியின் நற்செயல்தான்...
அக்குற்றவாளியின் மனதில் மாற்றத்தை உருவாக்கி ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்கு காரணமாகி விட்டது என்றால்...
அது... அப்துல் கலீமின் நற்செயல்...
இவருக்கு மட்டுமா விடுதலை பெற்றுத்தரப்போகிறது..?
இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் முன்பு ஊடகங்களால் தலைப்புச்செய்தியாய் தரப்பட்ட 'பயங்கரவாதி' பட்டத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தருகிறதே..?
அதுதான் முக்கியப்படுத்தப்படல் வேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவே.
அதுவே தலைப்பு.
அதுவே உட்பொருள்.
"ட*** பா**"---பின்னூட்டம் படித்த உடனேயே மாற்றிவிட்டேன் சகோ.
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.
சகோ.ஜே.ஜே., அலைக்கும் ஸலாம் வரஹ்...
பல ஆண்டுகளாய் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரால் மிகவும் நொந்து போயுள்ளீர்கள்-போயுள்ளோம்.
ஆனால், அப்துல் கலீமை விடவா நாம் அனுபவித்துவிட்டோம்?
நம் நற்குணங்கள், மகா கொடிய பயங்கரவாத குணம் கொண்ட கொலைகாரர்களின் மனத்திலும் மாற்றம் ஏற்படுத்தி விடும், என்பது அவர்மூலம் நமக்கு மிகச்சிறந்த படிப்பினை.
மற்றபடி, ஆர்.எஸ்.எஸ். இனி ஒரு 'சரிந்து வரும் சீட்டுக்கட்டு கோபுரம்'. அது தானாகவே முழுக்க கலைந்து தரையோடு தரையாவதற்கு எனக்கென்னவோ நிறைய ஆண்டுகள் ஆகாது போலத்தான் தோன்றுகிறது. அதுவரை காத்திருப்போம்.
அதுகலையுமாறு முதலில் சுண்டிவிட்டவர் கார்கரே. அப்புறம் தொடர்ந்து பலர். ஆனால் கலைய கலைய மீண்டும் முன்பு(இந்தியாவின் துருப்பிடித்த மனிதர்)போல அடுக்கி கட்ட இப்போது ஆளில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அதேநேரம்... சுண்டிவிடத்தான் நிறைய கைகள் காத்திருக்கின்றன. இதில் பொதுமக்களின் கைகள் மிக மிக நிறைய என்பதே இப்போதைய நிறை.
அதில் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் கைகள் குறைவு என்பதே குறை. அவையும் சேர்ந்தால்... இன்ஷாஅல்லாஹ்... தடை உறுதி.
உங்களுக்கு சகோ. ஆஷிக் அஹ்மத் அளித்த பதிலை... //இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நினைவு கூறுங்கள்... //--வழிமொழிகிறேன்.
(ஃபிளாஷ் நியூஸ்)கொடுத்த சகோ.
பின்னூட்டத்திலே இன்னொரு பதிவு. இந்த இடுகைக்கு பலம் சேர்க்கிறது. இதுவும் தேஜஸ்-இலிருந்து தானா? மிக்க நன்றி சகோ...
சகொ.நெல்லை தமிழன் அவர்களே...
வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி.
//ஆனால் இது மட்டும் நடக்கவே நடக்காது.ஒன்றி புரிந்து கொள்ளுங்கள் இதைபோல் அல்லது இதை விட அதிகமாக எவ்வளவு ஆதாரம் வந்தாலும் அவர்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாது.//--சகோ.ஜே.ஜே. அவர்களுக்கு கொடுத்த என் மறுமொழிதான் உங்களுக்கும் பதில்.
பொதுமக்கள்தான் அரசை தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் மனநிலைதான் அரசு.
பொதுமக்களை வைத்துத்தான் ஊடகங்கள். அவர்களின் மனநிலை மாறிவிட்டால் அதற்கேற்ப ஊடகங்களும் மாறித்தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.
இவை இரண்டும் நடந்துவிடும் போலத்தான் இப்போதைய சூழ்நிலை மாற்றங்கள் நமக்கு காட்டுகின்றன. அவை நடந்துவிட்டால்... தடைக்கு இனி தடையே இல்லை சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ. ஹைதர் அலி...
எல்லாருமே ஒரே விஷயத்தையே ஒரே மாதிரி எழுதிக்கொண்டு இருந்தால்... "ச்சே.. இந்த முஸ்லிம்கள் பதிவுகள் எல்லாமே இப்படித்தான் இருக்கும்" என்று ஆகிவிடும்.
நம் இருவர் எண்ணங்களும் பதிவுலகில் ஏறக்குறைய ஒன்றே என்றாலும்... மாற்று எண்ணங்கள் கொண்ட மற்றவர்களை நாம் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரவர்க்கு அவரவர் துறை, அவரவர் எண்ணங்கள், அவரவர் நோக்கங்கள் அவரவர் விருப்பங்கள்.
நமக்கு 'இறப்பு துக்கமே' மூன்று நாள்தானே? எல்லா நாளும் எல்லாரும் ஒரேவிஷயத்தையே எழுதினால் ஒருத்தர் இடுகையே படித்தாலே போதும் என்றாகிவிடுமே? அப்புறம், படிப்பவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா? யாருமே படிக்க வராவிட்டால்... அப்புறம் எதை எழுதி என்ன பயன்? நாம் மற்றவர்க்காக எழுதுகிறோம் என்பதுதானே பதிவு? நாம் மட்டும் படிப்பதானால். ஒரு பேனாவும் A4 தாளும் போதுமே..!
அதேநேரம்...
சொன்னீர்களே...! //இறைவனுக்காக உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் சமுதாய அக்கறையோடு சரியான முறையில் செயல்படுங்கள்//--என்று,---நூறு சதம் இக்கருத்தை நான் வழி மொழிகிறேன்... சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
ஜசக்கல்லாஹு க்ஹைர்...
அசத்தியம் என்றுமே நிலைக்காது, இறைவன் நாடினாலன்றி....அது தான் rss விசயத்திலும் நடந்துள்ளது. அந்த இயக்கம் என்னை பொறுத்தவரை ஒரு மாயையே. ஒரு இயக்கம் வளர அடிப்படை என்பது வலிமையாக இருக்க வேண்டும். இஸ்லாத்தை பொறுத்தவரை இயக்கங்கள் இல்லாவிடிலும் குரான் என்னும் அதிசய அடிப்படை இருக்கும் வரை யாருடைய உதவி இல்லாமலும் அது வளரும். ஆனால் rss சை பொறுத்தவரை விஷயமே வேறு. தேசம், பண்பாடு என்பதை காட்டியல்லாம் ஒருவறுடைய சுய தேடலை தடுக்க முடியாது. இது குறித்து சற்று நிதானித்து சிந்தித்தோமானால் இந்த இயக்கங்கள் தோல்வியையே தழுவ போகின்றன என்பது தெளிவாகும்.
சத்தியம் வந்தது...அசத்தியம் அழிந்தது....நினைவுபடுத்தி கொள்வோம்...தொடர்ந்து போராடுவோம்...வெற்றி தர வேண்டியது இறைவன் நாட்டம்...இன்ஷா அல்லாஹ்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதர் ஹைதர் அலி,
அஸ்ஸலாமு அலைக்கும்
சக முஸ்லிம் பதிவர்கள் குறித்த உங்களது எண்ணங்களை என்னால் முழுமையாக உள்வாங்கி கொள்ள முடிகின்றது. என்னுடைய சில கருத்துக்களை சொல்ல விரும்புகின்றேன். உங்களுக்கு தெரியாதது அல்ல, இஸ்லாமிய தாவாஹ் பணியில் ஈடுபட்டிருக்கும் பல பதிவர்கள் நம்முடன் இருக்கின்றார்கள், அதிலும் இளைஞர்கள் அதிகம். நான் உங்கள் பதிவில் கூட சொல்லி இருக்கின்றேன், இஸ்லாமிய பதிவர்களின் தாவாஹ் குறித்த செயல்பாடுகள் மனநிறைவாக உள்ளதென.
சரி, மற்ற முஸ்லிம் பதிவர்களை பற்றி?...இஸ்லாமிய வரையறைக்குள் இறைவன் கொடுத்த வாழ்வை மகிழ்ச்சியாக செலவழிப்பதில் என்ன தவறு? நான் அறிந்தவரை, நீங்கள் குறிப்பிடும் முஸ்லிம் பதிவர்கள் இஸ்லாம் குறித்து அதிகமாக எழுதுவதில்லை என்றாலும் இஸ்லாமிய வரையரைக்குட்பட்டே எழுதுகின்றார்கள் என்று எண்ணுகின்றேன். அவர்களுக்கு நாம் பாரத்தை ஏற்றாமல் அவர்களால் நம் உம்மத்துக்கு, சமூகத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதை அவர்கள் செய்யட்டும். சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன..இன்ஷா அல்லாஹ் இது குறித்து ஒரு பதிவு எழுதலாமென்று இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ், எனக்காக துஆ செய்யுங்கள்...
இவை என்னுடைய கருத்துக்கள்...தவறாக இருப்பின் இறைவனுக்காக மன்னிக்கவும்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
வ அலைக்கும் ஸலாம்...
சகோ.ஷேக் தாவூத்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றி மிக ஆழமாக புகுந்து ஆய்ந்து எழுதி உள்ளீர்கள். அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிர்ப்பும் ஆதரவும்... --குழந்தைகள் விளையாடுவார்களே 'seesaw'(fallon sidebar)---... இருபுறமும் அமர்ந்து உள்ளன.
பயங்கரவாத இயக்கம் என்று தெளிவாக அவர்கள் வாயாலேயே இப்போது அசிங்கப்பட்ட பின்னர்... இனி ஆதரிப்போர் பக்கம் உட்காரவும் யாரும் வர மாட்டார்கள்... ஏற்கனவே அமர்ந்திருப்போரும் எழத்துவங்கி விட்டனர்...
அதேநேரம் நிறையப்பேர் அவ்வமைப்பை எதிர்க்கும் பக்கத்தில் உட்காரத்துவங்கி விட்டனர்.
ஆதரிப்போரைவிட எதிர்ப்போர் (ஆரசியளிலும், ஊடகத்திலும்) அதிகமானதும்... ஒருகட்டத்தில் 'சீசா' தன் சமநிலையை கடக்கும்.
இன்ஷாஅல்லாஹ்... நிச்சயம் அப்போது தடை வந்தே தீரும். அதற்கப்புறம் அதன் சுவடே இல்லாத நிலை நம் ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களால் ஏற்படுத்தப்படும்.
பொறுத்திருப்போம். அதேநேரம் செயல்பட்டுக்கொண்டே...!
அப்புறம்...
மன்னிக்கவும்...
சகோ. ஷேக்தாவூத் மற்றும் அனைவரும்,
மலையாள ஃபாண்டே இல்லாத கணினி மற்றும் மலையாளம் தெரியாத என்னை, //மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்.//---என்றவுடன் அப்படியே அதிர்ச்சி அடைந்து மீண்டும் பதிவை பார்த்த போதுதான்... என்னை யாரோ ஓங்கி அறைந்தது போல இருந்தது. பெரிய 'பல்பு'.
அசீமானந்தா வாக்குமூலம் மற்றும் அப்துல் கலீம் என இவை இரண்டு தனிச்செய்திப்பதிவுகளாக பாலைவனத்தூதில் வந்தவை.
இவற்றில், அப்துல் கலீமுக்கு முன்னுரிமை கொடுத்து முதலிலும், ஒப்புதல் வாக்குமூலத்தை அடுத்தும் பதித்தேன். அதன் தலைப்புக்களில் இருந்து பாலைவனத்தூதுக்கு லிங்க்-கள் கொடுத்திருந்தேன்.
அப்புறம், திடீரென்று வந்த ஒரு எண்ணத்தில், தலைப்புக்களில் ஒன்றை பச்சையாகவும் மற்றதை சிகப்பாகவும் மாற்றி விட்டு தனியே கீழே தெஹல்கா மற்றும் தேஜஸ் உடன் லிங்க்-கள் கொடுக்க நினைத்து அப்புறம் வேலைப்பளுவில் சுத்தமாய் மறந்தே போய்விட்டேன். உங்கள் பின்னூட்டம் பார்த்தவுடன், உடனே 'நன்றி பெட்டி'யில், "பாலவனத்தூது" & "(தமிழில்...)" என்று சேர்த்து விட்டேன். இவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்திப்பதிவிற்கான தனித்தனிச்சுட்டிகள்.
அப்துல் கலீம் பற்றி அறியப்படவேண்டும் என்பதற்காக முன்னுரை பகுதியும், தடை பற்றி பேசப்பட வேண்டும் என்பதற்காக இறுதிப்பகுதியும் தான் நான் எழுதியவை.
//அதற்கான கூலியை இறைவன் மறுமையில் உங்களுக்கு வழங்குவானாக.//---என்னக்கில்லை, மொழிபெயர்த்த அந்த நல்லோருக்கு வழங்குவானாக... ஆமீன்...!
அல்ஹம்துலில்லாஹ்...
என்னை 'பதிவுத்திருட்டு' என்ற குற்றப்பெயரிலிருந்து காப்பாற்றிய தங்களுக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
///சரி, மற்ற முஸ்லிம் பதிவர்களை பற்றி?...இஸ்லாமிய வரையறைக்குள் இறைவன் கொடுத்த வாழ்வை மகிழ்ச்சியாக செலவழிப்பதில் என்ன தவறு? நான் அறிந்தவரை, நீங்கள் குறிப்பிடும் முஸ்லிம் பதிவர்கள் இஸ்லாம் குறித்து அதிகமாக எழுதுவதில்லை என்றாலும் இஸ்லாமிய வரையரைக்குட்பட்டே எழுதுகின்றார்கள் என்று எண்ணுகின்றேன். அவர்களுக்கு நாம் பாரத்தை ஏற்றாமல் அவர்களால் நம் உம்மத்துக்கு, சமூகத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதை அவர்கள் செய்யட்டும். சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன..இன்ஷா அல்லாஹ் இது குறித்து ஒரு பதிவு எழுதலாமென்று இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ், எனக்காக துஆ செய்யுங்கள்...///
கண்டிப்பாக உங்களுக்காக துஆ செய்கிறேன்
நான் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதிவிட்டேன் இறைவனுக்காக நீங்களும் பதிவுலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளும் மன்னிக்கவும் மற்றபடி யாரையும் இழிவுப்படுத்த வேண்டும் என்கிற என்னம் இறைவன் மீது சத்தியமாக எனக்கு இல்லை
///இவை என்னுடைய கருத்துக்கள்...தவறாக இருப்பின் இறைவனுக்காக மன்னிக்கவும்...///
நீங்கள் தான் இந்த படிக்காதவனை உணர்ச்சிவசப்பட்டு நிதானம் இழக்கக்கூடியவனை மன்னிக்க வேண்டும்
சகோ முஹம்மது அஷிக் மற்றும் அஹமது அஷிக்
இருவரும் தக்க சமயத்தில் சுட்டி காட்டீனிர்கள்
நன்றி
சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...
சகோ.ஆஷிக் அஹ்மத்,
//கண்டிப்பாக உங்களுக்காக துஆ செய்கிறேன்
நான் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதிவிட்டேன் இறைவனுக்காக நீங்களும் பதிவுலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளும் மன்னிக்கவும் மற்றபடி யாரையும் இழிவுப்படுத்த வேண்டும் என்கிற என்னம் இறைவன் மீது சத்தியமாக எனக்கு இல்லை.
நீங்கள் தான் இந்த படிக்காதவனை உணர்ச்சிவசப்பட்டு நிதானம் இழக்கக்கூடியவனை மன்னிக்க வேண்டும்//---இப்போது சொல்லுங்கள்...!
நம் சகோ.ஹைதர் அலி அவர்கள் நம்மைவிட எல்லாம் மிக மிக உயர்ந்த நிலைக்கு தனது இந்த ஒரே பின்னூட்டம் மூலம் உயர்ந்து விட்டார்.
ஜஸாக்கல்லாஹு க்ஹைர்... மீண்டும் பதிவில் இணைந்து மறுமொழி அளித்தமைக்கு மிக்க நன்றி, சகோ.ஹைதர் அலி.
குறுகிய காலத்தில் பதிவுலகில் இணைந்து வெகுவிரைவில் தனி வலைப்பூ துவங்கி, மிகவும் நுண்ணிய ஆராய்ச்சிகளை செய்து பலரும் அறிந்திராத விஷயங்களை பதிவிடுகிறீர்கள். பல மாற்று கொள்கை சகோதர தளங்களுக்கெல்லாம் சென்று கேள்விகள் கேட்டு சூறாவளியாக சுழன்று வருகிறீர்கள். கம்யுனிஸ தோழர்கள் கூட பாலோவர் ஆகும் அளவிற்கு உங்கள் எழுத்துக்களால் ஈர்த்து மிகவும் பெரிய அளவிற்கு சாதித்துள்ளீர்கள். அப்புறம் என்ன... //இந்த படிக்காதவனை//... என்றெல்லாம்? இதெல்லாம் ஒரு பொருட்டா... உம்மி நபியின் உம்மத்துக்கு?
உங்கள் எளிமைக்கும் அறிவிற்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையில் மேன்மைப்படுத்தி வைப்பானாக...ஆமீன்.
ஆசிக்!
அழகாக செய்தியைக் கொடுத்திருக்கிறீர்கள். இந்த பத்திரிக்கைகளை எல்லாம் தமிழில் கொண்டு வர நம்மவர்கள் முயற்ச்சிக்க வேண்டும்.
Thank you very much brother Pebble for introducing the link to me.
தாங்கள் தந்த சுட்டியை பதிவில் தனி பிற்சேர்க்கையாக சேர்த்து நம் நாட்டை அமைதிபூங்காவாக காண அனைவரையும் கையொப்பமிட அன்புடன் கோரியுள்ளேன்.
மிக்க நன்றி சகோ.
சகோ.சுவனப்பிரியன்,
//இந்த பத்திரிக்கைகளை எல்லாம் தமிழில் கொண்டு வர நம்மவர்கள் முயற்ச்சிக்க வேண்டும்.//---நிச்சயமாக..! (இதுதான் மேலே சகோ.ரஜின் அப்துல் ரஹ்மானும் கூறினார்)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
\\சகோதரர் ஜேஜே,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தயவுக்கூர்ந்து வார்த்தைகளில் கண்ணியத்தை காத்து கொள்ளுங்கள். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நினைவு கூறுங்கள்...//
அஸ்ஸலாமு அலைக்கும்,
மிகவும் உண்மையே சகோதரர் அஹ்மத் ஆஷிக் அவர்களே, என்ன செய்வது எனது இஸ்லாமிய சகோதரன் செய்யாத குற்றத்திற்கு சிறை சென்று இன்னல் பட்டுகொன்டு இருக்கிறான் என்பதை நினைக்கும் பொது இதை போன்ற தடிமனான வார்த்தைகள் என்னை அறியாமலே வந்து விடுகின்றது. தவறை சுட்டி காமிதமைக்கு மிகவும் நன்றி எல்லாம் வல்ல ரஹ்மான் உங்களுக்கு ரஹ்மத்தை தருவானாக ஆமின்.
என்றும் அன்புடன்
சகோ ஜே ஜே
சகோதரர்கள் ஹைதர் அலி மற்றும் ஜேஜே...
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ஜசக்கல்லாஹு க்ஹைர்...
வஸ்ஸலாம்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதியான அப்துல் கலீமுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
read more in the link...
http://paalaivanathoothu.blogspot.com/2011/01/blog-post_713.html
thowfeeq
அல்ஹம்துலில்லாஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.தவஃபீக்.
நானும் படித்தேன். நல்லதொரு சுட்டியை பின்னூட்டத்தில் இணைத்த தங்களுக்கு நன்றி.
ஜாமீன்தானே வழங்கியுள்ளது. நிரபராதி என தீர்ப்பளித்து உடனடியாக வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுவிக்க வேண்டும் நீதிமன்றம். அதுதான் இந்த மருத்துவ கல்லூரி பட்டப்படிப்பு பாதிக்கப்பட்ட இளம் மாணவருக்கு அவசியமான தக்க தீர்ப்பாக இருக்க முடியும். விரைவில் அது நடக்க துவா செய்வோம்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!