மும்பையைச் சேர்ந்தவர் அருணா ராமச்சந்திரா ஷான்பாக். இவருக்கு தற்போது 62 வயதாகிறது. இவர், மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையி(KEMH)ல் நர்சாகப் பணியாற்றி வந்தவர்.
கடந்த 1973ம் ஆண்டு இவர் மாதவிடாய் பருவத்தில் இருந்தும் கூட, தன் சக தொழிலாளியான ஒரு கொடூர (sweeper boy) மிருகத்தினால், கொடூரமான முறையில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டு, தவறான வழியில் (anal sex) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது சங்கிலியால கழுத்தில் இறுக்கி கட்டப்பட்டதால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டது. அதனால் மூளை (Cortex) பாதிக்கப்பட்டு மூளைச்சாவு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவருக்கு அப்போதிலிருந்து எந்த உணர்வும் இல்லை. அன்று முதல் கடந்த 37 வருடங்களாக அதே மருத்துவமனையில் கோமாவில் இருக்கிறார் அருணா.
கடந்த 37 வருடமாக கோமாவில் இருக்கும் 62 வயது அருணா ஷான்பாக் என்ற இந்த நர்சை "கருணைக்(?)கொலை" செய்ய அனுமதிக்குமாறு, ஒரு வட இந்திய எழுத்தாளர் உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது.
காரணம்... இவ்வழக்கில், தன்னை ஒரு நடுக்கடலில்... ஆர்ப்பரிக்கும் அலையில்... திசை தெரியாது தத்தளிக்கும் ஒரு கப்பலாகவும், தனக்கு எந்த மேற்கத்திய நாடாவது டார்ச் லைட் அடித்து வழிகாட்டாதா.... //"Euthanasia is one of the most perplexing issues which the courts and legislatures all over the world are facing today. This court, in this case, is facing the same issue and we feel like a ship in an unchartered sea, seeking some guidance by the light thrown by the legislations and judicial precedents of foreign countries,"//---என்று ஏங்கிக்கொண்டிருந்த உச்சநீதிமன்றம் கடைசியில் ஒரு வழியாய் ஒரு உத்வேகம் பிறந்து தாமே சுயமாய் சிந்தித்து நேற்று 'கருணை(?)க்கொலை' என்பதையே மறுத்து, "நர்ஸ் அருணாவின் மருத்துவ ஆவணங்களைப் பரிசீலித்து பார்த்தபோது, அவர் கருணைக்கொலைக்கு உட்படுத்தக் கூடியவர் அல்ல என்ற முடிவுக்கு கோர்ட் வருகிறது" என்று நேற்று தெளிவாக தீர்ப்பளித்து விட்டது.
சபாஷ்...! உச்ச நீதிமன்றம்...! தாமதமாக வந்த தீர்ப்பானாலும் தரமாக வந்த தீர்ப்பு...! மிக்க நன்றி...!
மேற்கத்திய உலகின் முக்கியமாய், 'அமெரிக்க டார்ச் லைட்டுகளை' அலட்சியம் செய்துவிட்டு, நம் இந்திய மனிதநேய பாரம்பரிய கலாச்சார கலங்கரைவிளக்கம் மூலம் தெளிவுபெற்று தீர்ப்பை அளித்த நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் கூறுகையில், 'கருணை(?)க்கொலை' என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சட்டவிரோதமானதாகும். எனவே, இதை அனுமதிக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டனர்.
(( ஆனால், நமது சென்ற 'மூன்றாம் பாலின தொடர் இடுகைக'ளில் சட்டம் 377-ஐ நீக்கச்சொல்லி அரசுக்கு பரிந்துரைத்துவிட்டு, அச்சட்டத்துக்கு எதிராக ஓரினச்சேர்க்கைக்கு டெல்லி ஹைக்கோர்ட்டு அனுமதி அளித்ததை பார்த்தோம். சும்ப்ரீம் கோர்ட்டில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ))
இவ்விஷயத்தில், அந்த நர்ஸின் குடும்பமே அவரை கைகழுவி 'சீக்கிரமா செத்தால் போதும்' என்று மறந்துவிட்ட நிலையில், அந்த மும்பை KEM மருத்துவமனையின் (முன்னாள் மற்றும் இந்நாள்) Dean-களும் மற்ற பணிபுரியும் சக நர்சுகளும் அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராய் கன்னுங்கருத்துமாய் 37 வருடங்களாய் அதே ஹாஸ்பிட்டலில் மனிதாபிமானத்துடன் கவனித்துக் கொள்வதும், இந்த தீர்ப்பினால் சந்தோஷப்பட்டு வெற்றி பெற்ற மகிழ்வுடன் 'அருணா ஜிந்தாபாத்' என்று அவர்கள் மருத்துவமனையில் கோஷம் போட்டதும், இத்தீர்ப்பை மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் எல்லாருமே வரவேற்றுள்ளதும், 'கருணை(?)க்கொலைக்கு' சட்ட அந்தஸ்து வழங்குவது ஆபத்துக்களை உருவாக்குமென அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதும், நம் நாட்டில் மனிதநேயம் இன்னும் செத்து விடவில்லை என்றே நமக்கு காட்டுகிறது. அதுவரை, இதுபோல நல்ல தீர்ப்புகள் இன்ஷாஅல்லாஹ் வந்துகொண்டேதான் இருக்கும் என்றே நம்புவோம்.
இவர்களின் மனித நேயத்தை எழுந்து நின்று கைதட்டி போற்றுவோம். இவர்கள்தான் நம் இந்திய கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் தக்க முன்மாதிரிகள்
இவர்களின் மனித நேயத்தை எழுந்து நின்று கைதட்டி போற்றுவோம். இவர்கள்தான் நம் இந்திய கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் தக்க முன்மாதிரிகள்
'கருணைக்கொலை அவசியமானது' என்றும், 'இப்படி சித்ரவதை படுவதை விட கருணைக்கொலையே மேல்' என்றும் கருதி...மனுத்தாக்கல் செய்தவரை... நீதிமன்றம் பின்வருமாறு கேட்டிருக்கலாம்...! கேட்கவில்லை..! ஆனால், நான் கேட்கிறேன்..!
இன்று கோமாவில் இருக்கும் இவர், நாளை ஒருவேளை, திடீர் என்று சுகமாகி, குணமாகி, நினைவு திரும்பி, விழித்து எழுந்து விட்டால் என்ன செய்வது? 'இனி பிழைக்காது' என்று இதற்குபுன்பு மருத்துவர்கள் முடிவு கட்டிய பலர் அதிசமாய் பிழைத்திருக்கின்றனரே..!
சரி... ஏதோ ஒரு நோயினால் "இப்படி சித்ரவதை படுவதை விட சாவதே மேல்" என நம் குடும்பத்து நோயாளி ஒருத்தர் நினைத்து அவரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அது சட்டப்படி குற்றம் தானே..? நீங்களும் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள்தானே..? ஆனால், டாக்டர்கள் கொன்றால் மட்டும் அது கருணைக்கொலையா..? குற்றமில்லையா..? என்ன ஒரு தவறான பார்வை..!
இப்போது இன்னொரு விஷயம் சொல்லியாகவேண்டும். எல்லா பிரச்சினைக்கும் காரணமான, அந்த anal-sex நாய்... ஏழு வருஷம் நம்முடைய காசில் 'மாமியார் வீட்டில்'... மணியடிச்சா சோறு திண்றுவிட்டு, வாரம் ஒரு ஒசிச்சினிமா பார்த்துவிட்டு எப்போதோ வெளியே போய் விட்டதே..! அந்த நாய்க்கு ஒரு மரண தண்டனை அல்லவா கேட்டிருக்க வேண்டும்... பெட்டிஷன் போட்ட அந்த எழுத்தாளர்..! (அவர் பெயர் பதிவில் வேண்டாம்... இவர் பிரபலமாக நாம் உதவிடக்கூடாது)
மேற்கத்திய நவீன கண்டுபிடிப்பான இதை, 'கருணை(?)க்கொலை' என நாம் அன்போடு(!)அழைத்தாலும், மனிதாபிமானத்தோடு நோயாளிகளுக்கு பணிவிடை செய்யும் சிரமத்திலிருந்து தப்பிக்கவும், செலவை மிச்சப்படுத்தவும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கவும் வேண்டி தம் பொறுப்பை தட்டிக்கழிக்க சுயநலவாதிகளால் செய்யப்படும்... யாதொரு கருணையுமில்லாத ஈவிரக்கமற்ற 'கொடூரக்கொலை' தான் அது..! இனி அதற்கு 'அப்பெயர்' வேண்டாமே..!
இறைவன் கூறுகிறான்...
நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்". (அல்-குர்ஆன்:5:32)
நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைபிடியுங்கள். இன்னல்களைச் சகித்துக் கொள்ளுங்கள் (அல்-குர்ஆன் : 3:200)
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும் (அல்-குர்ஆன் 17:31)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பளிகளே உங்கள் பொறுப்புகளை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். மக்களை ஆளும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளி; அவர்களை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்திற்கு பொறுப்பாளி; அவர்களை பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டிற்க்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளி; அவர்களை பற்றி அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளி அவன் அதை பற்றி விசாரிக்கப்படுவான். எச்சரிக்கை நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி உங்கள் பொறுப்புகளைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள். [நூல் - புகாரி 2554]
'ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ் என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். [நூல் - புஹாரி 1364]
ஆகவே, இஸ்லாமிய அடிப்படையில், நம்மிடையே இதுபோல யாரும் நோயாளிகள் இருந்தால், அது மறு உலகத்திற்காக தக்க நன்மைகளை இவ்வுலகில் சேகரித்துக்கொள்ள நமக்கு தரப்பட்ட ஒரு நல்வாய்ப்பாகவே உணர்ந்து, அவர்களுக்கு நாம் மனிதநேயத்துடனும் பொறுப்புடனும் பணிவிடைகள் செய்து, செலவு செய்து காப்பாற்ற நம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும்.
அந்நிலையில் நாம் இருந்தால்... பொறுமையுடன் சகிப்புத்தன்மையுடன் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அது பலனளித்தால் இம்மையில் மகிழ்ச்சி. இல்லையேல் அதற்கான நற்கூலிகளை அல்லாஹ்விடம் மறுமையில் எதிர்பார்த்தவர்களாக பொறுமையுடன் இறுதி வரை வாழ்வோம். தற்கொலையோ கருணைக்கொலையோ அவசியமில்லை... சகோதரர்களே..!
18 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும். மிக அருமையான மற்றும் தரமான ஆக்கம் சகோ. தொடருங்கள் தங்கள் பனியை. நேற்றைய பதிவில் போகப்போகிறேன் என்று சொல்லி டாியல் கிளப்பாதீா்கள். சகோதரன்
இந்த செய்தியை நானும் வாசித்தேன்...நீதிமன்ற தீர்ப்பு இந்த பதிவில்தான் தெரிந்து கொண்டேன்... அருணா விரைவில் நலம்பெற வேண்டுவோம்.
@anban
அலைக்கும் ஸலாம் சகோ.அன்பன்,மிக்க நன்றி சகோ.
//நேற்றைய பதிவில் போகப்போகிறேன் என்று சொல்லி டாியல் கிளப்பாதீா்கள்// --ஆஹாஹா...அடாடா....நீங்க அந்த பதிவை படிக்கவே இல்லையா...?
நான் எங்கே எப்போது "போகப்போகிறேன்"(!?!?!) என்று சொல்லி இருந்தேன்...?
@enrenrum16//அருணா விரைவில் நலம்பெற வேண்டுவோம்.//---இன்ஷாஅல்லாஹ்..அவசியம் இறைவனிடம் துவா செய்வோம் சகோ.
பல வருடங்கள் கோமாவில் இருந்தவர்கள் பிழைத்திருப்பதைப் படித்திருக்கிறேன். ஆனாலும், அருணா விஷயத்தில் 37 வருடங்கள் கடந்த நிலையில், நம்பிக்கை தளர்கிறது. நினைத்துப் பார்க்கக்கூட முடியாத கொடூரத்திற்கு ஆளானதோடு, இந்தத் தண்டனையும்கூட!! அவரின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் மீதும் குற்றம் சொல்ல முடியவில்லை. ஏழை குடும்பத்தாருக்கு, ஒரு கோமா பேஷண்டை வீட்டில் வைத்துப் பராமரிப்பதென்பது பொருளாதார ரீதியில் சிரமமானதே. அவர்கள் அவரைப் போய்ப் பார்க்காததற்கும் காரணம், செலவு பிடிக்கும் பயணமும் காரணமாக இருக்கலாம் ஒருவேளை. பெற்றோர் அல்லது கணவன், பெற்ற பிள்ளைகள் அளவுக்கு சகோதர, சகோதரிகளிடம் பராமரிப்பை எதிர்பார்க்க முடியாதுதானே?
இறைவன் அவருக்கு விரைவில் சுகமளிக்க வேண்டும் - விரைவான மரணத்தைக் கொண்டாவது. இறைவன் மிக அறிந்தவன்.
ஆனால், அந்த கொடியவன் வால்மீகி (முழுப்பெயர் ஞாபகமில்லை)யை விட்டுவைத்திருப்பது கொடூரமானது. சொன்னதுபோல அவனுக்கு மரணதண்டனை கேட்டு ஏன் யாரும் வழக்குப் போடவில்லை என்ற கேள்விதான் எழுகிறது. ஆண்டவன் போதுமானவன். அவனுக்கு என்ன விதமான தண்டனைகள் அவன் வாழ்வில் கிடைத்ததோ?
அவங்களுக்கு அமைதியான, நிம்மதியான வாழ்க்கை அமைய ப்ரார்த்தனைகள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். கண்ணுக்கு தொியாத அந்த சகோதாி நலம் பெற பிராா்த்திக்கும் சகோதரா்களுடன் நானும் ஒருவனாக. மற்றும் தங்களின் போன பதிவின் தலைப்பை பாா்தது தான் கமென்டினேன். இன்று படித்தால்!!!! கணக்கு என்றால் எனக்கு ஒவ்வாமை. பனிரென்டாம் வகுப்பு தோ்வில் என் நிலைமையை பாா்த்து அடுத்தவாின் பேப்பரை வாங்கிக் கொடுத்து தான் பாஸ் செய்ய வைத்தாா் ஆசிாியா். அதனால் சொல்லிப்போட்டேன் நான் இந்த வெளாயாட்டுக்கு வரலை வரலை வரலை.சகோதரன்
சகோ.முஹம்மத் ஆஷிக்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
37வருடங்களாக தன்னலம் பாராமல்,சேவைசெய்த மும்பை KEM மருத்துவமனையின் (முன்னாள் மற்றும் இந்நாள்) Dean-கள மற்ற பணிபுரியும் சக நர்சுகள் ம்ற்றும் ஊழியர்களின் பணி மகத்தானது. மனிதநேயம் ஜொலிக்கிறது.
@ஹுஸைனம்மா தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ. ஹுசைனம்மா. நாம் நன்மையையே நாடுவோம்.
@Lakshmi தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.லக்ஷ்மி.
@anban அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹ். சகோ.அன்பன், இதுபோன்ற ரகசியங்களை எல்லாம் வெளியே சொல்லாதீங்க. பாவம் அந்த அப்பாவி ஆசிரியர்..! தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்... இனியும் அவர்கள் சேவை மேலும் நன்கு ஜொலிக்கட்டும்... அவர்களின் விடாமுயற்சிக்கு சிஸ்டர் அருணா கோமா நிலையில் இருந்து திரும்பினால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. மகத்தான அவர்கள் மனிதநேயத்துக்கான பாராட்டே எனது இப்பதிவு சகோ. தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.ஜபருல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும்!
சிறந்த ஒரு மனித நேய பதிவை அளித்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
நேற்றைய செய்தி பேப்பரில் இந்த செய்தி படித்தேன் சகோ.யாருக்கும் அந்த நிலைமையை வரக்கூடாது.அந்த கொடியவனுக்கு அல்லாஹ் தண்டனையை கொடுப்பானாக.அருணாவுக்கு நினைவ வருவதற்கு நாம் அனைவரும் துஆ செய்வோம்.
@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் எண்ணங்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.ஆயிஷா அபுல்.
சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அருணா அவர்கள் குணமடைய வல்ல இறைவனை பிரார்த்தித்தவனாய்...
நேற்று NDTVயில் ஒரு நிகழ்ச்சி...Death for rape? என்பதுதான் விவாத பொருள்.
இதில் என்ன கேள்வி
வன்***** போன்ற செயல்களில் ஈடுபடும் நா*களுக்கு என்ன இரக்கம் வேண்டியிருக்கின்றது? போட்டு தள்ள வேண்டியதுதான்.. இப்போ தான் இந்த ஊடகங்களுக்கு இது தெரியுது போல...
சரியான நேரத்தில் இடப்பட்ட பதிவுக்கு என்னுடைய நன்றிகள்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
@Aashiq Ahamed
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. ஆஷிக் அஹ்மத்.
//இப்போ தான் இந்த ஊடகங்களுக்கு இது தெரியுது போல...// ---இதெல்லாம் புதுசா சகோ நமக்கு..?
"காலம் கடந்த ஞானோதயம்..."
"தும்பை விட்டு வாலை பிடித்தல்..."
"கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்..."
"நிலை தட்டி குனி..."
---இதுபோன்ற பல 'பெருமைமிகு' பழமொழிகளுக்கு சொந்தக்காரர்களாயிற்றே நாம்...?
..."பட்டுத்தானே திருந்துவோம்..?!"
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!