அதிர்ச்சி அடைய வேண்டாம்..! மார்ச் மாதம் வந்து விட்டது..! பள்ளி இறுதித்தேர்விற்கு பிள்ளைகள் முழுமூச்சோடு படிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க, வீட்டிலேயே மீள்பார்வை தேர்வுகள் வைக்க, படித்ததை சொல்லச்சொல்லி செவிமடுத்து சரிபார்க்க, அவர்களின் படிப்பிற்கான தக்கவசதிகளை செய்துகொடுக்க... என நாம், நம் பிள்ளைகளோடு ரொம்ப 'பிசி'யாகி விட்டோம்.
"எனக்கு பிள்ளைகள் எல்லாம் இல்லை, நான் எப்பவுமே ஃப்ரீ" என்றால்.....
தம்பி/தங்கை..? அவர்களுக்கு பயிற்சி/பாடம் சொல்லிக்கொடுக்கலாமே....?
"எனக்கு பிள்ளைகள் எல்லாம் இல்லை, நான் எப்பவுமே ஃப்ரீ" என்றால்.....
தம்பி/தங்கை..? அவர்களுக்கு பயிற்சி/பாடம் சொல்லிக்கொடுக்கலாமே....?
அப்படியெல்லாம் யாரும் இல்லை....... என்றாலோ............
"பிள்ளைகள் இருந்தும் எனக்கு நேரம் இருக்கிறது"....... என்றாலோ............
"இல்லை நான் ஒண்டிக்கட்டை, ஃப்ரீயாத்தான் இருக்கேன்"........ என்றாலோ............
வாருங்கள்..! இந்த பதிவை கூர்ந்து படியுங்கள்..!
ஒற்றை ரூபாய் நாணயங்களாய் மொத்தம் ஆயிரம் காசுகளை (1X1000=Rs.1000) ஒரு சாக்கில் கட்டி உங்களிடம் தருகிறேன். அத்துடன் பத்து உண்டியல்களையும் (ஒவ்வொன்றும் ஆயிரம்காசுகள் கொள்திறன் கொண்டவை) தருகிறேன்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்னவென்றால், சாக்கில் உள்ள அனைத்து காசுகளையும், ஒன்று கூட மிச்சம் வைக்காமல், அந்த பத்து உண்டியல்களிலும் பிரித்து போட வேண்டும். எந்த உண்டியலும் காலியாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு உண்டியலிலும் போட வேண்டிய எண்ணிக்கை எத்தனை என்பதே உங்களிடம் இறுதியில் வைக்கப்படப்போகும் கேள்வி.
சரி...
எந்த கணக்கீட்டின் அடிப்படையில்
ஒவ்வோர் உண்டியல்களிலும்
காசு போடுவது என்கிறீர்களா..?
சொல்கிறேன்...
அதாவது, நீங்கள் எல்லா உண்டியல்களிலும் காசு போட்டு முடித்தவுடன், நான் ஒன்று முதல் ஆயிரம் வரை ஏதாவது ஒரு எண்ணிக்கை கொண்ட தொகையை என்னிடம் தரச்சொல்லி ஒரே ஒருமுறை கேட்பேன். அப்போது நீங்கள் உண்டியல்களை உடைத்து காசை எடுத்து எண்ணித்தராமல், நான் கேட்ட தொகையை, ஒன்றோ... ஏழோ அல்லது பத்து உண்டியல்களாகவோ, எத்தனை உண்டியல்களாக வேண்டுமானாலும்... அப்படியப்படியே உடைக்கப்படாத உண்டியல்களாகவேதான்... என்னிடம் நீங்கள் தர வேண்டும்...! எந்தெந்த உண்டியலில் எத்தனை காசு போட்டீர்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
என்னிடம் நான் கேட்ட தொகைக்கேற்ப, எத்தனை உண்டியல் தந்தீர்களோ அவற்றை நான் எடுத்துச்சென்று உடைத்துப் பார்த்து அனைத்தையும் கூட்டினால், நான் உங்களிடம் கேட்ட தொகை மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும்...! காசு எண்ணிக்கை கூடவும் இருக்கக்கூடாது. குறையவும் இருக்கக்கூடாது.
இந்த அடிப்படையில்தான் நீங்கள் உண்டியல்களில் காசு நிரப்ப வேண்டும்..! முடியுமா..? "இதென்ன பெரிய விஷயம்..! என்னால் முடியுமே..!!" என்றால்... அந்த பத்து உண்டியல்களிலும் போட வேண்டிய காசு எண்ணிக்கையை பின்னூட்டத்தில் கொடுங்கள்.
அதற்கு முன்னர், 'அவற்றின் கூட்டுத்தொகை ஆயிரம் வருகின்றதா' என முதலில் சரிபார்த்துக்கொள்ளுங்கள். நான் கேட்ட கேள்வியை நீங்களே பல தொகைகளை (ஒன்று முதல் ஆயிரம் வரை) பலமுறை உங்களிடமே கேட்டுக்கொண்டு, 'விடைகள் சரிதானா' என்று பலமுறை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் மட்டும் மூளையை கசக்கி தேர்விற்கு படித்துக்கொண்டு இருக்க... நாம் மட்டும் இங்கே பதிவுகளில், பின்னூட்டங்களில் மொக்கை போட்டுக்கொண்டு இருந்தால்... இது நியாயமா சகோ...? பதிவர்களும் பின்னூட்டவாதிகளும் கொஞ்சம் யோசித்து கணக்கும் போடலாமே சகோ..!
அதனால்.....
இப்புதிர்க்கணக்குக்கு.....
நான்.....
உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக.....
பதிவுலகிலிருந்து.....
விடைபெற.....
விரும்புகிறேன்...!
டிஸ்கி: ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். புதிரை சரியாக புரியவே படங்கள்.
16 ...பின்னூட்டங்கள்..:
புதிருக்கு எனக்கு விடை தெரியவில்லை. நாங்கல்லாம் கணக்குல வீக். இருந்தும் விடை அறிந்துகொள்ள வேண்டி ஈமயில் பால்லோ அப் போட்றுக்கிறேன்.
தலைப்பு நல்ல டுவிஸ்ட். நான் வேறு என்னமோ நினைச்சிட்டேன். :)
அஸ்ஸலாமு அலைக்கும்!
'நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன்' என்று கலைஞர் பாணியில் தலைப்பு வைத்தவுடன் என்னவோ ஏதோ என்று ஓடி வந்தால் கணக்கு போட சொல்றீங்களே ஆஷிக். அதற்க்கெல்லாம் நேரமில்லை. பதிலை நீங்களே சொல்லிடுங்க! :-)
@இறைநேசச்செல்வன்//நாங்கல்லாம் கணக்குல வீக்.//--நாங்க மட்டும் என்ன ராமானுஜம் பேரனா..? email subscription போட்டு, விடை அறிந்துகொள்வதற்காக இப்பதிவு போட வில்லை சகோ.இறைநேசச்செல்வன். எல்லாம் ஒரு முயற்சிதான் சகோ. முயன்று பாருங்களேன். அப்போதுதான் உங்களுக்கு வெற்றி சகோ..!
@சுவனப்பிரியன்//அதற்க்கெல்லாம் நேரமில்லை. பதிலை நீங்களே சொல்லிடுங்க! :-)//--நன்றி சகோ.சுவனப்பிரியன். நேரம் கிடைக்கும்போது முயற்சி செய்யுங்கள். வேறு யாராவது விடை சொல்கிறார்களா என்று சிலநாள் காத்திருப்போமே.. !
in first bag 1
second bag 2
third bag 4
fourth bag 8
fifth bag 16
sixth abg 32
seventh abg 64
eighth bag 128
nineth bag 256
tenth bag 512
சகோ.விஜய்.... சபாஷ்...! சூப்பர்..! நல்ல முயற்சி..!
ஆனால்,
நான் உங்களிடம் கொடுத்தது 1000 காசுகள் மட்டுமே. உங்கள் கணக்கில் 1023 காசுகள் எப்படி வந்தன..?
//'அவற்றின் கூட்டுத்தொகை ஆயிரம் வருகின்றதா'//--என்று சொன்னேனே... சகோ.
489 in tenth bag now u ll get 1000 as sum k va
@vijay_dl
That's it. Perfect answers. Well done brother Vijay Denial. Hats off to you. Thanks a lot.
Actually I expected the answers from many corners. But, I surprised that only one has answered and also correctly.
My Hearty Congratulations to You..!
@முஹம்மத் ஆஷிக்
thanks ashik but i am not daniel only vijayakumar , dl is my inital d for my dad's name and l for my mom ,
in my first answer the series 1,2,4,8,16,32,64,128,256,512,1024 we can see the series in Computer RAM and other memory cards usually comes in this series only, even in mobile memory cards also
@vijay_dlஹி...ஹி...ஹி.. அதுனாலத்தானே நான் 1024 காசுகள் என்று சொல்லலை..! விட்டீங்கல்ல தப்பு...? எப்பூடி..!?
('நீங்கள் ஒருவேளை என் கல்லூரி நண்பன் விஜய் டேனியலோ' என்று ஒரு டவுட். அதுனாலத்தான் "கண்டு பிடிச்சிட்டேன் பார்த்தியாடா மாப்ளே"ங்கற மாதிரி அப்படி ஒரு 'இக்' வைத்தேன்.) சரி. இத விடுங்க சகோ...!
//dl is my inital d for my dad's name and l for my mom//---வாவ்..! கிரேட்..! சகோதரா..! நீங்கள்தான் உண்மையான மகளிர் தின சிறப்பு பின்னூட்டவாதி. மாஷாஅல்லாஹ்.
வாழ்த்துக்கள். ஏதோ சொல்லப்போக வேறு ஒரு பெரிய புதுமையான புரட்சி விஷயம் வெளியே வருகிறது..!!!
வாழ்த்துக்கள் சகோ.விஜய்.DL..! உங்கள் விடைகளை விட நான் மிகவும் மகிழ்ந்தது-DL-இதற்குத்தான்..!
கணக்கு பண்றவுங்களையும் கணக்கு பண்ண (போட) சொல்றவுங்களையும் எனக்கு புடிக்காது (எப்படில்லாம் escape ஆக வேண்டி இருக்கு)
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) //எப்படில்லாம் escape ஆக வேண்டி இருக்கு//---விடை தெரிந்த பின்னுமா..?!?!?!?!
@முஹம்மத் ஆஷிக்,
விடை தெரிந்தாலும், எனக்கு தெரியவில்லை என்ரு சொல்கின்றேன். ஹமாம் சோப் போட்டு குளிக்குறோம்ல, அதான்
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)//ஹமாம் சோப் போட்டு குளிக்குறோம்ல, அதான்//--ஸாரி...அபுநிஹான், என்னால் உங்க ஸ்பீடுக்கு பயணிக்க முடியவில்லை... ஹி..ஹி.. நீங்க சொல்றது புரியலை..!
அவரு ரொம்ப நேர்மையனவராம் ( ஹமாம்னா நேர்மையாம் )
@vijay_dlஓஹோ..! பழைய விளம்பரமா..! சர்தான்..! நன்றி சகோ.விஜய்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!