அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, March 7, 2011

16 நான் பதிவுலகிலிருந்து விடைபெற விரும்புகிறேன்.

அதிர்ச்சி அடைய வேண்டாம்..! மார்ச் மாதம் வந்து விட்டது..! பள்ளி இறுதித்தேர்விற்கு பிள்ளைகள் முழுமூச்சோடு படிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க, வீட்டிலேயே மீள்பார்வை தேர்வுகள் வைக்க, படித்ததை சொல்லச்சொல்லி செவிமடுத்து சரிபார்க்க, அவர்களின் படிப்பிற்கான தக்கவசதிகளை செய்துகொடுக்க... என நாம், நம் பிள்ளைகளோடு ரொம்ப 'பிசி'யாகி விட்டோம்.

"எனக்கு பிள்ளைகள் எல்லாம் இல்லை, நான் எப்பவுமே ஃப்ரீ" என்றால்.....
தம்பி/தங்கை..? அவர்களுக்கு பயிற்சி/பாடம் சொல்லிக்கொடுக்கலாமே....?
அப்படியெல்லாம் யாரும் இல்லை....... என்றாலோ............
"பிள்ளைகள் இருந்தும் எனக்கு நேரம் இருக்கிறது"....... என்றாலோ............
"இல்லை நான் ஒண்டிக்கட்டை, ஃப்ரீயாத்தான் இருக்கேன்"........ என்றாலோ............

வாருங்கள்..! இந்த பதிவை கூர்ந்து படியுங்கள்..!

ஒற்றை ரூபாய் நாணயங்களாய் மொத்தம் ஆயிரம் காசுகளை (1X1000=Rs.1000) ஒரு சாக்கில் கட்டி உங்களிடம் தருகிறேன். அத்துடன் பத்து உண்டியல்களையும் (ஒவ்வொன்றும் ஆயிரம்காசுகள் கொள்திறன் கொண்டவை) தருகிறேன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்னவென்றால், சாக்கில் உள்ள அனைத்து காசுகளையும், ஒன்று கூட மிச்சம் வைக்காமல், அந்த பத்து உண்டியல்களிலும் பிரித்து போட வேண்டும். எந்த உண்டியலும் காலியாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு உண்டியலிலும் போட வேண்டிய எண்ணிக்கை எத்தனை என்பதே உங்களிடம் இறுதியில் வைக்கப்படப்போகும் கேள்வி.

சரி... 

எந்த கணக்கீட்டின் அடிப்படையில் 

ஒவ்வோர் உண்டியல்களிலும் 

காசு போடுவது என்கிறீர்களா..?

சொல்கிறேன்...

அதாவது, நீங்கள் எல்லா உண்டியல்களிலும் காசு போட்டு முடித்தவுடன், நான் ஒன்று முதல் ஆயிரம் வரை ஏதாவது ஒரு எண்ணிக்கை கொண்ட தொகையை என்னிடம் தரச்சொல்லி ஒரே ஒருமுறை கேட்பேன். அப்போது நீங்கள் உண்டியல்களை உடைத்து காசை எடுத்து எண்ணித்தராமல், நான் கேட்ட தொகையை, ஒன்றோ... ஏழோ அல்லது பத்து உண்டியல்களாகவோ, எத்தனை உண்டியல்களாக வேண்டுமானாலும்... அப்படியப்படியே உடைக்கப்படாத உண்டியல்களாகவேதான்... என்னிடம் நீங்கள் தர வேண்டும்...! எந்தெந்த உண்டியலில் எத்தனை காசு போட்டீர்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

என்னிடம் நான் கேட்ட தொகைக்கேற்ப, எத்தனை உண்டியல் தந்தீர்களோ அவற்றை நான் எடுத்துச்சென்று உடைத்துப் பார்த்து அனைத்தையும் கூட்டினால், நான் உங்களிடம் கேட்ட தொகை மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும்...! காசு எண்ணிக்கை கூடவும் இருக்கக்கூடாது. குறையவும் இருக்கக்கூடாது.

இந்த அடிப்படையில்தான் நீங்கள் உண்டியல்களில் காசு நிரப்ப வேண்டும்..! முடியுமா..? "இதென்ன பெரிய விஷயம்..! என்னால் முடியுமே..!!" என்றால்... அந்த பத்து உண்டியல்களிலும் போட வேண்டிய காசு எண்ணிக்கையை பின்னூட்டத்தில் கொடுங்கள். 

அதற்கு முன்னர், 'அவற்றின் கூட்டுத்தொகை ஆயிரம் வருகின்றதா' என முதலில் சரிபார்த்துக்கொள்ளுங்கள். நான் கேட்ட கேள்வியை நீங்களே பல தொகைகளை (ஒன்று முதல் ஆயிரம் வரை) பலமுறை உங்களிடமே கேட்டுக்கொண்டு, 'விடைகள் சரிதானா' என்று பலமுறை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகள் மட்டும் மூளையை கசக்கி தேர்விற்கு படித்துக்கொண்டு இருக்க... நாம் மட்டும் இங்கே பதிவுகளில், பின்னூட்டங்களில் மொக்கை போட்டுக்கொண்டு இருந்தால்... இது நியாயமா சகோ...? பதிவர்களும் பின்னூட்டவாதிகளும் கொஞ்சம் யோசித்து கணக்கும் போடலாமே சகோ..! 

 அதனால்.....

இப்புதிர்க்கணக்குக்கு.....

நான்.....

உங்கள் பின்னூட்டங்கள்  வாயிலாக.....

பதிவுலகிலிருந்து.....
 
விடைபெற.....

விரும்புகிறேன்...!


டிஸ்கி: ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். புதிரை சரியாக புரியவே படங்கள்.

16 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...