அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts

Tuesday, April 9, 2013

30 தர்கா வழிபாடு எனும் மூடநம்பிக்கை ஒழிக

“பிராத்தனையும் வணக்கமாகும்" :- நபி(ஸல்) (அபூதாவூத், திர்மிதி)
“அல்லாஹ்வே மெய்யானவன். அவனைத்தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும்” :-இறைவன்  (குர்ஆன் 31:30)
சாலையோர கி.மீ. கல்லை எல்லாம் கடவுளாக வணங்குவது அறியாமை என்றால்...  ஒரு மனிதரை அடக்கம் செய்து அதற்கு மேல் கல்லை கட்டி அதை வணங்குவதும் அதனிடம் பிரார்த்திப்பதும் அறியாமேயே..! அந்த கல்லுக்கு பக்கச்சுவரும் கூரையும் போட்டுவிட்டால் அதுதான் தர்காஹ்..! தர்கா வழிபாடு தாங்கொணா வழிகேடு..!
 
நன்றி : ஏகத்துவ அழைப்பாளன்.ஹுசைன்


பிரபலமான பெரிய தர்கா எனில், அங்கே முஸ்லிம் அல்லாத மாற்று மத மக்களும் ஏராளமாக வருவது சகஜம். அப்படியான ஒரு தர்காவுக்கு காரில் வந்து இறங்கி, அங்கே தாடி தொப்பி பச்சை ஜிப்பா வெள்ளை கைலி சகிதம் உட்கார்ந்திருந்த பெரியவரிடம், ஒரு சர்க்கரை பொட்டலம், ஊதுபத்தி பாக்கெட், மூன்று வாழைப்பழம் எல்லாம் தந்து ஃபாத்திஹா ஓத சொல்லி கேட்டு... நேர்ச்சை தாயத்து வாங்கி கட்டி, தர்ஹாவில் அங்க பிரதட்சணம் எல்லாம் செய்து, உண்டியலில் பயக்தியுடன் காணிக்கை செலுத்திவிட்டு, நீண்ட நேரம் சமாதியை கண்மூடி கும்பிட்டு பிரார்த்தித்துவிட்டு, அங்கே ஓரமாக ஒரு கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை நெற்றியில் திருநீறு போல பூசிக்கொண்டு வந்த  ஒரு படு டீக்காக ட்ரெஸ் போட்டிருந்த மாற்று மத நண்பரிடம்... மெல்ல பேச்சு கொடுத்தேன்...... 
.

Monday, August 27, 2012

138 'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்?



எப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..! அதற்காக நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டியது பேரானந்தம்..! இந்த சந்திப்பு சென்னையில் சீரும் சிறப்புமாக அமைய முயற்சி எடுத்த மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது இனிய நன்றிகள்..! என்னால் கலந்து கொள்ள இயலாவிடினும் நேரலையில் காண முடிந்தது..!


இந்த பதிவர் சந்திப்பு பற்றி பரபரப்பு தலைப்பு வைத்து, அதன்மூலம் ஏகப்பட்ட ஹிட்ஸ் அள்ளுவது என்பது இவ்வார பதிவுலக ஹிட்ஸ் நோய் ஆகிவிட்டது..! பொதுவாக அந்தந்த வாரத்தில் என்னன்ன விஷயங்கள் 'ஹாட் டாப்பிக்'கோ அதை வைத்து தங்கள் பதிவுக்கு தலைப்பு போடுவார்கள் நம் பதிவர்கள்..! 

உதாரணமாக... 

Saturday, March 31, 2012

31 Love Lock - ஓர் இத்தாலிய மூடநம்பிக்கை



80-கள்  மற்றும் 90-களின் ஆரம்பத்தில் எல்லாம் தமிழ் சினிமாக்களில் கிராமிய கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வரும். அவற்றில் மிக முக்கியமாக, நாம் கேள்விப்பட்டிராத ஒரு புதுவகையான மூடநம்பிக்கை ஏதேனும் ஒன்று கட்டாயம் இடம்பெறும்..! இப்பதிவுக்கு தொடர்புடைய மூடநம்பிக்கைகளாக... உதாரணமாக... அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

ஒரு ஹீரோயின் மனைவி, தன் அதிதீவிர சாமி பக்தியின் காரணமாக 'வாரத்துக்கு ஏழு நாட்கள் மட்டும்(!?) விரதம்' இருப்பார். இதனால், தன் ஹீரோ(?) கணவனை தன் அருகில் வரவோ (கனவு டூயட் தவிர்த்து மற்ற நேரங்களில்) தொடவோ அனுமதிக்காத நிலையில்,  'சின்னஞ்சிறுசுங்க கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் ஒரு விசேஷமும் இல்லையே' என்று விஷயம் தெரியாமல், வீட்டில் உள்ள சில  பெரிசுகள்... அந்த மனைவியை... 'தொட்டிகட்ட'(?) சொல்வார்கள் சகோ..!

Saturday, February 18, 2012

50 பிறந்தநாள் மூடத்தனம் ஒழியட்டும்..!


உலகின் பற்பல சமூக மக்களிடம் எப்படியோ இப்படி ஒரு மூடப்பழக்க வழக்கம் தொற்றிவிட்டது. அனேகமாக வருடாந்திர காலண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் இந்த மடத்தனம் ஆரம்பித்து இருக்க வேண்டும்..! 

தன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் 2012 - பிப்ரவரி-18 -சனிக்கிழமை  என்ற ஒருநாளை...  அடுத்தவாரம் சனிக்கிழமை வரும்போது அவர் கண்டுகொள்வதில்லை. அதுவே அடுத்த மாதம் மார்ச் 18 அன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால், அடுத்தவருஷம் 2013 - பிப்ரவரி-18 -என்ன கிழமை ஆனாலும், அதை... "தன் குழந்தையின் பிறந்தநாள் இன்று" என்கிறார்..! இது எப்படி சரி..? லாஜிக்கே இல்லாத முட்டாள்த்தனம் அல்லவா..? விளக்கமாக காண்போம்.

குழந்தை பிறந்துதான் ஒருவருஷம் ஆச்சே..? உயிரோடு இருக்கும் அதே குழந்தை ஒரு வருஷம் கழித்து அன்று மீண்டும் ஒருமுறை எப்படி பிறந்தது..? 

இப்படி... கேட்டால்... Birth Day  என்கிறார்..! பெரிய சைஸ் கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்து, மத்தியில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி, அதனை உடனே ஊதி அணைத்ததும் கூடி இருந்த மக்கள் அனைவரும் இந்த சாதனைக்கு கைதட்டி "wish you happy birthday to you" என்று கோரசாக தலையை ஆட்டி ஆட்டி பாட்டு பாடுகிறார்கள்..! அடுத்து பலர் பரிசுகளுடன் வருகிறார்கள்..! கேக் வெட்டி கொடுத்து ஊட்டி விட்டு பரஸ்பரம் கைகுலுக்குகிறார்கள்..! கட்டி அனைத்து முத்தம் இடுகிறார்கள்..! எனில், இங்கே ஏதோ ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளதா..? 

previous home
Related Posts Plugin for WordPress, Blogger...