அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, February 18, 2012

50 பிறந்தநாள் மூடத்தனம் ஒழியட்டும்..!


உலகின் பற்பல சமூக மக்களிடம் எப்படியோ இப்படி ஒரு மூடப்பழக்க வழக்கம் தொற்றிவிட்டது. அனேகமாக வருடாந்திர காலண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் இந்த மடத்தனம் ஆரம்பித்து இருக்க வேண்டும்..! 

தன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் 2012 - பிப்ரவரி-18 -சனிக்கிழமை  என்ற ஒருநாளை...  அடுத்தவாரம் சனிக்கிழமை வரும்போது அவர் கண்டுகொள்வதில்லை. அதுவே அடுத்த மாதம் மார்ச் 18 அன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால், அடுத்தவருஷம் 2013 - பிப்ரவரி-18 -என்ன கிழமை ஆனாலும், அதை... "தன் குழந்தையின் பிறந்தநாள் இன்று" என்கிறார்..! இது எப்படி சரி..? லாஜிக்கே இல்லாத முட்டாள்த்தனம் அல்லவா..? விளக்கமாக காண்போம்.

குழந்தை பிறந்துதான் ஒருவருஷம் ஆச்சே..? உயிரோடு இருக்கும் அதே குழந்தை ஒரு வருஷம் கழித்து அன்று மீண்டும் ஒருமுறை எப்படி பிறந்தது..? 

இப்படி... கேட்டால்... Birth Day  என்கிறார்..! பெரிய சைஸ் கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்து, மத்தியில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி, அதனை உடனே ஊதி அணைத்ததும் கூடி இருந்த மக்கள் அனைவரும் இந்த சாதனைக்கு கைதட்டி "wish you happy birthday to you" என்று கோரசாக தலையை ஆட்டி ஆட்டி பாட்டு பாடுகிறார்கள்..! அடுத்து பலர் பரிசுகளுடன் வருகிறார்கள்..! கேக் வெட்டி கொடுத்து ஊட்டி விட்டு பரஸ்பரம் கைகுலுக்குகிறார்கள்..! கட்டி அனைத்து முத்தம் இடுகிறார்கள்..! எனில், இங்கே ஏதோ ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளதா..? 

சாகாமல் ஒருவருடம் உணவுண்டு உயிர் வாழ்ந்தது சாதனையா..? அல்லது, சாகடிக்காமல் ஒரு வருடம் உணவூட்டியது சாதனையா..? எது சாதனை..? சரி, ஒரு வாதத்துக்கு இதுவும் சாதனைதான் என வைத்துக்கொண்டால்... வாழும் ஒவ்வொரு வினாடியும் சாதனைதானே..? அது ஏன் வருஷத்துக்கு ஒருநாள் மட்டும் இந்த சாதனை கொண்டாடப்படுகிறது..? 

பெரியார் சமாதி, காயிதே மில்லத் சமாதி : பிறந்தநாள் வழிபாடு
இந்த குழந்தை வாழ்வாங்கு வாழ்ந்து, சமூகத்தில் பெரிய தலைவராகி, 2092 ஜனவரியில்  இறந்துவிடுகிறது என்று வைப்போம். அடுத்த மாதம் பிப்ரவரி 18ல் கொண்டாடுகின்றனரே... மீண்டும் அவர் 'பிறந்தநாளை'..? முன்னைவிட வெகு சிறப்பாக... வெகு விமரிசையாக... அவர் 'பிறந்தநாளை'(?) '..............ஜெயந்தி' அல்லது '................குருபூஜை' அல்லது 'கிருஸ்துமஸ்' அல்லது 'கந்தூரி-உரூஸ்' அல்லது 'மிலாடி நபி' ......என்ற பெயரில் எல்லாம்..? ஆக, இதுபோல இறந்தவருக்கு பிறந்தநாள் கொண்டாடினால்... 'இது சாதனை என்றபெயரில் கொண்டாடப்படுகின்றது' என்ற வாதமும் அடிபட்டு விடுகிறது..! 

பெரியார் சாமி பிறந்தநாள் : புகைப்பட மற்றும் சிலை வழிபாடு
ஆனால், அந்த வருடம் ஜனவரியில் இறக்கும் அவருக்கு அடுத்த வருடம் "இறந்தநாள்" என்று கொண்டாடப்படுகிறதா..? இல்லை..! அதை, "நினைவுநாள்" என்கின்றனர்..! ஆங்கிலத்தில் தெளிவாக Annual Death Anniversary என்பர்..! செத்த பிறகுதான் ஞானம் பிறக்குமோ..? 'இறந்தநாள்' எப்படி அடுத்த வருடம் ஆகுமோ 'வருடாந்திர நினைவுநாளாக'... அதேபோலத்தானே 'பிறந்தநாளும்' அடுத்த வருடம் ஆகும்.... 'வருடாந்திர நினைவுநாள்' என..?  

இரு இறைத்தூதர்கள்  பிறந்த நாள் தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு நாளை கணித்து கொண்டாட்டங்கள்


"பதிவு முழுமை பெறவில்லை" என்று பின்னூட்டத்தில் குறைபட்டுக் கொண்ட சகோ. கவிதாவுக்காகவும் கூடவே, சகோ. தி எலைட் குரூப்புக்கும்  ஃபோட்டோவுடன் கூடிய  ஒரு பிற்சேர்க்கை : - 

இதுபோன்ற பிறந்த / இறந்த நினைவு நாட்கள், இறந்த தலைவர்களுக்கு விமரிசையாக அரசியல் பின்புலத்துடன் அனுசரிக்கப் படுவதால், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அவ்வபோது கலவரம், டென்ஷன் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு, என மக்களின் மாமூல் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது..!.
'ஜெயந்திகள்', 'குருபூஜைகள்' ...என பல இருந்தாலும் இவற்றுக்கு உதாரணமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் (ஒரேநாளில் பிறந்த தேதியும் இறந்த தேதியும் கொண்ட) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி & குருபூஜை மற்றும்  தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜை போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு சொல்லலாம். இதுபோன்ற விழாக்களுக்கு எல்லாம் ஓட்டுக்காக அரசியல் தலைவர்கள் முன்னின்று ஆதரவு தருவது இப்போதைக்கு உடனே குறைய வேண்டும் என்பதே மக்களில் நடுநிலை விரும்பிகளின் ஆவல்..! (பிற்சேர்க்கை முற்றும்)

"பிறந்தநாள்" என நாம் தவறாக சொல்வது... "பிறந்ததினத்தின் வருடாந்திர நினைவுநாள்" என்பதே சரியாக இருக்கும் என நான் சொல்கிறேன். பார்ப்போம் இன்னொரு உதாரணம்..!

நீங்கள் ஒரு ஞாயிறு அன்று திருமணம் புரிந்து உள்ளீர்கள் என்று வைப்போம். அடுத்த வாரம் அதே ஞாயிறு வருமா..? வரும்..! இன்னிக்கு உங்கள்  'கல்யாண நாளா'...? இல்லை..! "வாராந்திர திருமண நினைவு நாள்". (ஒவ்வொரு வாரமும்  துட்டு செலவாகும்னு இதை கொண்டாடுவதில்லையோ)..!

அடுத்த மாதம் அதே தேதி
வருமா..? வரும்..! இன்று 'கல்யாண நாளா'..? இல்லை..! "மாதாந்திர திருமண நினைவு நாள்".(ஒவ்வொரு மாதமும் துட்டு செலவாகும்னு இதையும் கொண்டாடுவதில்லையோ)..!

அடுத்த வருடம் அதே மாதம்.. அதே நாள்.. வேறு கிழமையில் வரும்..! இது 'கல்யாண நாளா'..? இல்லையாம்..! வேறு என்னவாம்..? "வருடாந்திர திருமண நினைவு நாள்". [பிப்ரவரி 29 விதிவிலக்கு :-( 'லீப் வருடாந்திர திருமண நினைவு நாள்'.-இப்படி வந்தா நான்கு வருஷத்தில் ஒருமுறை கொண்டாட்டம். பணம் ரொம்ப மிச்சம்... ஆனால், வருஷா வருஷம் வயசு மட்டும் ஏறுமாம்..! :-)) But, rich people celebrate every year...no logic..!] ஆனால்... முன்பு கல்யாணத்தன்று சொன்ன "wish you happy wedding day..." ஐ தம்பதிகளுக்கு இன்று எவரும் சொல்வதில்லை...! கவனியுங்கள் சகோ..! இதை உலகமே சரியாக புரிந்து வைத்து இருக்கிறது. அதனால்தான்..."wish you happy annual wedding anniversary..!" என்கிறார்கள்...!


ஆனால், ஏனோ... வருஷா வருஷம் 'பிறந்த நினைவு நாளுக்கு'... "wish you happy birth anniversary" என்று ஒருவரும் சொல்வதில்லை..! "wish you happy birthday" என்கிறார்கள்..! ஏதோ... 'அன்று அவர் மீண்டும் பிறந்துவிட்டார்' என்பது போல..! இதை ஆயுசுக்கு ஒருமுறைதான் ஒருத்தர் கிட்டே சொல்ல முடியும். அதாவது அவர் பொறந்த அன்றைக்கு மட்டும்..!

வேண்டுமானால்... ஒவ்வொரு வருஷமும் சென்று... உங்கள் குழந்தையின் "annual birth anniversary" அன்று, குழந்தை பிறந்த மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு மருத்துவரை அணுகி, "இன்னிக்கி எம்புள்ளைக்கு பொறந்தநாளு... birth certificate கொடுங்கன்னு" கேட்டால் என்ன நடக்கும்...?

ரெண்டு வருஷம் திட்டி அனுப்பிட்டு... மூணாவது வருஷம் போயி கேட்டீங்கன்னா மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுவார்கள். இல்லையா..? ஹா...ஹா...ஹா... ஆக, பிறப்புச்சான்றிதழ் வருஷா வருஷம் தருவதில்லை..! உங்கள் birth day பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில்... மறக்காமல் நீங்கள் பிறந்த ஆண்டைத்தான் போடுவீர்களே அன்றி, "இந்த வருஷத்திய
(?)பிறந்தநாளை" போடுவதில்லை..!

அதேபோல, ஒருவர் இறந்த வருடாந்திர நாளை "நினைவுநாள்" என சரியாக சொல்கிறார்கள்..! "இறந்தநாள்" .... 'Death Day' என்பதில்லை..! 'Annual Death Anniversary' என்றுதான் ஆங்கிலத்திலும் சொல்வார்கள்..!

அதேபோல, பிறந்த தேதியும் "வருடாந்திர நினைவு நாள்" தானே...? இப்போது புரிகிறதா..?

ஆகஸ்ட் 15 அன்னிக்குத்தான் independence day..! அடுத்த வருஷத்திலேருந்து... 'Anniversary' என்றுதான் சொல்ல வேண்டும்....! அதேபோலத்தான், ஒவ்வொருவருடமும் 'Republic Day' என சொல்லாமல் "குடியரசுபிறந்த நினைவுநாள்" என்று சொல்ல வேண்டும்..! நாம்தான் தப்பான பெயர் வைத்துகொண்டு சரி என்று நினைக்கிறோம்..! என்றைக்கு சிந்தித்து சரி செய்து கொள்ளப்போகிறோம்...?

ஆகவே... ஒரு மனிதருக்கு வாழ்வில் ஒரே ஒருநாள்தான் பிறந்தநாள் வரமுடியும். அதேபோல ஒரே ஒருநாள் மட்டுமே இறந்தநாள் வரமுடியும். இறந்தநாளின் நினைவுநாள் அனுஷ்டிப்பது போல பிறந்தநாளின் நினைவுநாள் அனுஷ்டிப்பதே லாஜிக்..! அல்லாது... "பிறந்தநாள்" என்றால் அது லாஜிக் மீறிய மூடத்தனமே..!


சரி, இனியாவது... "இன்னிக்கு எனக்கு பிறந்தநாள்" என வருஷா வருஷம் முட்டாள்த்தனமாக சொல்லிக்கொண்டு இருக்காமல்... "பிறந்தநாளின் நினைவுநாள்" என அதைகொண்டாடுவோர் சொல்லட்டுமாக..! 


ஆக மொத்தத்தில்... உயிரோடு வாழ்வதே சாதனையாக நினைப்போர்... அதை ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் கொண்டாடாமல் வருஷாவருஷம் மட்டுமே கொண்டாடுகிறார்கள் என வைத்துக்கொண்டால்... 


இஸ்லாத்தில் இதுபோல இறப்புக்கும் பிறப்புக்கும் 'வருடாந்திர நினைவு நாள்' துக்கமாக இருப்பதோ அல்லது கொண்டாடுவதோ கிடையாது. இறந்த அன்றும் அடுத்த இரண்டு நாள் மட்டும் துக்கம் அனுஷ்டிக்கலாம். குழந்தை பிறந்த அன்று ஆடு அறுத்து 'அகீகா' விருந்து போட்டு (மூன்றில் ஒரு பங்கை ஏழைக்கு கொடுத்து ) கொண்டாடலாம்..!

ஆனால், 'அடுத்த வருடம் மீண்டும் ஆடு அறுக்கனுமா' என்றால்... கிடையாது..! ஏன்..? 


இவ்விஷயத்தில் இஸ்லாம் தெளிவாகவே இருக்கிறது. மனிதனுக்கு பிறந்தநாள் ஆயுளுக்கு ஒருமுறைதான் வரும் என்று..! அதேபோல... மனிதனுக்கு ஆயுளுக்கு இறந்த நாள் என்பதும் ஒரே ஒரு முறைதான்..!

இஸ்லாத்தில், பிறந்ததுக்கு நினைவு நாள் இல்லாதது போலவே இறந்ததுக்கும் நினைவு நாள் கிடையாது..!

.
பகுத்தறிவாளர்களுக்கான மிகவும் தெளிவான வாழ்வியல் மார்க்கம் இஸ்லாம்..!

எனவே... வருஷாவருஷம் பிறந்தநாள் என்பது... முட்டாள்த்தனம் என்பதால்... அறிவாளிகள் எவருமே பிறந்தநாள் கொண்டாடக்கூடாது. பிறந்ததுக்கும் இறந்தந்துக்கும் வருடாந்திர நினைவுநாள் அனுஷ்டிப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது என ஏற்றுக்கொண்டாலும்.... இதை முஸ்லிம்கள் மட்டும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். காரணம், இது இஸ்லாத்தின் வழிகாட்டால் இல்லை என்பதால்..!


பின்னூட்டமிடுமுன்... ஒரு முக்கிய டிஸ்கி :- 
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை எகிப்தை ஆண்ட ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால், இஸ்லாத்தின் பெயரால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறந்தநாளான ரபியுல் அவ்வல் 12-ஐ அப்பாவி முஸ்லிம் மக்களை 'மகிழ்ச்சியாக(?) கொண்டாட' வைக்கும் பொருட்டு, மிக நயவஞ்சகமாக "பிறந்த நாள் விழா" அல்லது "மிலாடி நபி" என்ற பெயரில் பித்அத் புகுத்தப்பட்டது. (ஆதார நூல் : பிதாயா வன் நிஹ்யா பாகம் 11 பக்கம் 172).

ஆனால், இன்றுள்ள விபரம் அறியாத முஸ்லிம்கள் நபியின் இறந்த நாளை, பிறந்த நாள் எனத்தவறாக எண்ணிக்கொண்டு, மவ்ளூது பாடி.. பெரியசட்டி ஹந்திரி புலவ் சோறாக்கி.. 'சந்தோஷமாக'(!) வருடா வருடம் கொண்டாடும் மட்டமான மூடத்தனத்துக்கும்.... இஸ்லாமிற்கும் துளிக்கூட சம்பந்தம் கிடையாது..! சிலர் இது இறந்த நாள் என்று தெரிந்து அதற்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினாலும் அல்லது அன்று துக்க தினம் எனக்கூறி கருப்பு சட்டை போட்டு/கருப்பு ரிப்பன்துண்டை சட்டையில் குத்தி கண்ணை கசக்கி மூக்கை சிந்தினாலும் அதுவும் இஸ்லாத்தில் இல்லாத மூடத்தனமே..!

இதைவிட  பெரிய மூடத்தனம்தான்... முஸ்லிம்கள்... கிரிகோரியன் ஆண்டில் 365 அல்லது 366 நாட்கள் ஆன பின்னர் தங்களுக்கு ஒரு வயசு முடிந்ததாக நம்புவது என்பது, அல்லாஹ் சொன்ன காலண்டருக்கு முற்றிலும் எதிரானது மட்டுமின்றி இறைவசன மறுப்பாகும். ஏனெனில், முஸ்லிம்களின் வயது குறித்த தம் நம்பிக்கை  சந்திர காலண்டர் அடிப்படையில்தான் அமைந்ததாக இருத்தல் வேண்டும்..!

50 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...